07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, May 10, 2013

ஹிஹிஹி!


லோகத்தில பல விஷயங்கள் நமக்கு பிடிக்காததா நடந்துகிட்டு இருக்கு. அதைப்பத்தி எல்லாம் எப்பவும் பொங்கிகிட்டு இருக்கிறதுல அர்த்தமில்லை. வாழ்கையில ஒரு சென்ஸ் ஆப் ஹ்யூமர் வேணும். அப்படி இருந்தா எப்படிப்பட்ட கஷ்டமும் தாங்க எளிதா ஆயிடும். பின்ன வலைக்கு எதுக்கு வரோம்? அழுகறதுக்கா வரோம்?

சாதாரணமா ஒரு சென்ஸ் ஆப் ஹ்யூமர் இருந்தா போதும், அவங்களோட ப்ரெண்ட் ஆயிடலாம். ஹ்யூமர் பதிவுகளே போட்டா?
ஹ்யூமர் பதிவுகளில கலக்குற இளைஞிகள் இட்லி மாமி என்று அன்புடன் அழைக்கப்படும் ஏடிஎம் என்கிற அப்பாவி தங்கமணி என்கிற புவனி கோவிந்த் உம் அனன்யா மஹாதேவனும். ஏடிஎம் இப்பத்தான் சில நாட்களுக்கு முன்னே இந்த வலைப்பதிவரா இருந்தாங்க. அறிமுகம் தேவையில்லை.
அபுதாபி சிங்கி அனன்யா இப்ப சென்னைவாசியாயிட்டாங்க. கொஞ்ச நாள் காணாமல் போய் அப்புறம் போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்து இப்ப ஒழுங்கா பதிவு போட்டுக்கிட்டு இருக்காங்க.
இந்த இட்லி மாமியும் அனன்யாவும் சேந்த்து கொட்டம் அடிக்க ஆரம்பிச்சாச்சுன்னா பஸ்ல வலையுலகே தாங்காது! அதான் கூகுள் பஸ்ஸை இழுத்து மூடிட்டாங்கன்னு சிலர் அபிப்ராயம்! இவங்க பண்ணற ரவுசு இருக்கே.....! 'நல்ல' காலமா ரெண்டு பேரும் இடம் பெயர்ந்ததாலே இப்ப கொஞ்சம் கொயட்டா இருக்கு!

கடுகு கடுகு ன்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா? ஆமாம், பத்திரிகைகளில நிறைய நகைச்சுவை கட்டுரை, கதைகள் எழுதினவர். அவருக்கு வலைப்பூவும் இருக்கறது எவ்வளோ பேருக்கு தெரியுமோ?
இப்ப படிச்சு மகிழுங்க!
ஆரம்ப காலத்திலேயே ஹ்யூமர் வலைப்பதிவுகள் தேடினப்ப அகப்பட்டது ஹாஸ்யரசம். இதை எழுதிகிட்டு இருக்கிற கோமதி நடராஜன் பல வருஷங்களா குமுதம் போன்ற பத்திரிகைகளில ஜோக் எழுதிகிட்டு இருந்தாங்க. சில மாதங்களா அதிக பதிவுகளை காணலை. இதையு படியுங்க!  http://haasya-rasam.blogspot.com/2012/03/blog-post.html

சமீபத்திய தொடர்பு தம்பி பாலாஜி. ரயில்வேயில 'பெரிய' உத்யோகம். இவர் கையெழுத்து போட்டாத்தான் ரயில்வேல காசே கிடைக்கும்ன்னா பாத்துக்குங்களேன்! நல்ல மனுஷன்! செம காமெடியா பதிவு போடறதுலேயும் கெட்டிக்காரர்
டச்சிங்ஸ்பதிவு போடறதுலேயும் கெட்டிக்காரர்! கேரக்டர் ன்னுபோட்ட சீரியலுக்கு நிறைய விசிறிகள்!

16 comments:

  1. கடைசிப் பதிவரோட பாமரன் பக்கங்கள் மட்டும் எப்போவோ படிச்ச நினைவு. மத்தவங்க தெரிஞ்சவங்க தான். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    டிடிக்கு என்ன ஆச்சு இன்னிக்கு? காணோமே? :(

    ReplyDelete
  2. அநன்யா, அப்பாவி, பாலாஜி எல்லோரையும் தெரியும். ஆமாம்... தக்குடுவை விட்டு விட்டீர்களே...! சேட்டைக்காரரை உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை!

    ReplyDelete
  3. அய்யா... ஜாலி இன்று நான்தான் ஃபர்ஸ்ட் என்று சந்தோஷப் பட்டு கமென்ட் சேர்க்க எண்ணினால் கீதா மேடம் முந்திக் கொண்டு விட்டார்களே...

    ReplyDelete
  4. அம்பியைக் கூடத் தான் விட்டுட்டார். அப்புறமா அம்பியோட அண்ணா டுபுக்கு. குடும்பமே பதிவு உலகிலே இருந்துச்சு. இப்போ டுபுக்குவும், தக்குடுவும் மட்டும் இருக்காங்க போல! இவங்க ரெண்டு பேரையும் பார்த்துத் தானே இந்தச் சீடிகளெல்லாம் எழுதறாங்க. :))))))

    ReplyDelete
  5. இதோ வந்துட்டேன்... வந்துட்டேன்... ஹிஹி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வணக்கம்

    இன்று வலைச்சரத்தில் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. @கீ.அக்கா, அதானே டிடி இன்னிக்கு கடமை தவறிட்டார்!
    @ஸ்ரீராம் அம்பி, சேட்டைக்காரரை விடலை, அப்புறமா வருவார்!
    @அருள், நன்றி
    2008 ரூபன் நன்றி!அம்பி, சேட்டைக்காரரை விடலை, அப்புறமா வருவார்!

    ReplyDelete
  8. பாமரன் பக்கங்கள் தவிர அனைத்தும் எனக்கு புதியவை.அறிமுகங்கள் நன்று

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete

  10. என் ஹாஸ்யவலைப்பூவை வலைச்சரத்தில் தொடுத்தமைக்கு நன்றி 
    தொடர்ந்து ஹ ஹ ஹ்ஹா எழுத முயற்சிக்கிறேன் அன்புடன்
    கோமா

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. எனக்கு இப்படி ஒரு அஷ்டோத்திர ஸஹஸ்ரநாம அர்ச்சனை... ச்சேச்சே, சாரி, அறுமுகம் கொடுத்த திவா அண்ணாவுக்கு சிரம் தாழ்த்திய நமஸ்காரமுலு! ரொம்ப நன்றி திவா அண்ணா.. நானும் புவனாவும் புதுசா சேர்ந்து ஒரு ப்ளாக் எழுதலாம்ன்னு இருக்கோம்.. ஹி ஹி! பூமி தாங்காதுன்னு யாருப்பா அங்கே சவுண்டு வுடுறது? போங்கப்பா...

    ReplyDelete
  13. ஐ... நானும் இருக்கனா. ஆனா அறிமுகம் தேவை இல்லைனு சொல்ற அளவுக்கெல்லாம் இல்ல திவாண்ணா...:)


    //அதான் கூகுள் பஸ்ஸை இழுத்து மூடிட்டாங்கன்னு சிலர் அபிப்ராயம்//

    அவ்வ்வ்வ்வ்.... நாங்க ரெண்டு பேரும் இருக்கற இடம் தெரியுமா சொல்லுங்க... அப்படி ஒரு அடக்கம் அமரருள் உய்க்கும் ஆச்சே...இல்லையா அனன்யா...:)



    //நானும் புவனாவும் புதுசா சேர்ந்து ஒரு ப்ளாக் எழுதலாம்ன்னு இருக்கோம்//

    ஆமா ஆமா... ப்ளாக் பேரு "அசமஞ்சம்" whole square ...:)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது