07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, February 28, 2014

என் வீட்டுத் தோட்டத்தில்

ஆறறிவு ஜீவன்களைப் பற்றியும், ஐந்தறிவு ஜீவன்களான ஊர்வன, பறப்பன, நீந்துபவைப் பத்தி பதிவுப் போட்டு அசத்திய நம்மாளுங்க ஓரறிவு ஜீவன்களான செடி, கொடியை மட்டும் விட்டுடுவாங்களா!? என்ன!?

இதோ அவற்றைப் பற்றி பதிந்தவர்களின் தளங்கள்...,

மனிதன், ஐந்தறிவு ஜீவன்கள் மட்டுமில்லை.., மரம் செடி, கொடிகளுக்கும் மனம் உண்டென்பதை சரவணன் குமார் அனுபவத்திலிருந்துத் தெரிஞ்சுக்கலாம்.

அக்கம் பக்கம் வீட்டினர் கொடுக்கும் முருங்கைக்காய்களைச் சமைச்சுச் சாப்பிட்டுப் பழக்கமான நமக்கு ஒரு முருங்கைக் காய் 7  இல 10 ரூபாய் கொடுத்து வாங்கினா எப்படி இருக்கும்!? அதை பகுத்தறிவு பக்கங்களில் சொல்றாங்க.

சிறு வயதில் புளியம் பழத்தைப் பறித்து விளையாடிய பித்தனின் வாக்கு அனுபத்தைப் படிச்சுப் பாருங்க.

கல்யாணத்துல வாழை மரம் ஏன் கட்டுறாங்க!? கட்டி வைக்கலைன்னா கீழ விழுந்துடும்லன்னுதான் என்னை மாதிரி ஆட்கள் ஜோக்கடிப்பாங்க. ஆனா, அதுக்கான காரணத்தை பிரபாதாமு சொல்றாங்க.

பெரியவங்களை ஆலமரம்ன்னு சொல்ற வழக்கம் நமக்குண்டு. ஆலமரமும், நம் பெத்தவங்களைப் போல செய்யும் தியாகங்களை விழுதுகள் வெளிச்சம் 
கவிதையாக நம்மோடு பகிர்கின்றார்.

எங்க ஊர்களில் கெட்ட விசேசத்துக்கு மட்டும்தான் அகத்திக்கீரை சமைப்பாங்க.ஆனா, அடிக்கடி அகத்திக் கீரை சேர்த்துக்கச் சொல்றாங்க டாக்டர்கள். காஞ்சனா ராதாக்கிருஷ்ணன் அகத்திக்கீரை சூப் செய்யுற விதத்தைச் சொல்றாங்க.

மல்லிகை பூக்குப் பேர் போனது மதுரை. மதுரை மல்லியின் அழகையும், வாசத்தையும் லதாகுப்பா சொல்றாங்க.

கருவேல மரம் நிலத்தடி நீரை உறிஞ்சிடுது. அது தீமையானது, நம்ம நாட்டைவிட்டுப் போகும்போது வெள்ளைக்காரங்க ஹெலிகாப்டர்ல தூவி இந்த விசத்தை நம்மூர்ல பரப்பிட்டுப் போய்ட்டாங்கன்னு ஆயிரம் கதைசொ சொல்லப்படும் கருவேல மரத்தைப் பத்தி டெர்ரர் கும்மி ஆளுங்க என்னச் சொல்றாங்கன்னு ஒரு எட்டுப் பார்த்துட்டு வந்திருங்களேன்.

பழங்களின் அரசனான மாம்பழத்தைப் பற்றி மொஹைதீன் பாஷா சொல்கிறார். இவர் தளத்தில் தாவரங்களைப் பற்றி நிறைய குறிப்பு இருக்கு.

தன் வீட்டில் முதன் முதலாய் காய்த்த அவரைக்காயைப் பற்றி சின்னக் குழந்தையின் குதூகலத்தோடு இளங்கோ படத்தோடு பகிர்கிறார்.

வேப்பம்பூவின் மருத்துவ குணங்கள், அதை பாதுகாத்து வைப்பது, அதனைக் கொண்டு என்னென்ன சமைக்கலாம்ன்னு நம்ம மாதேவி அக்கா போட்டிருக்கும் பதிவைப் பாருங்க.

பலாமரமும், காதலியின் மனமும் ஒண்ணுன்னு கப்லர் பாடல் மூலம் விளக்குகிறார் ஆதிகண்ணன்.

வெற்றிலைப் போட்டால் பட்டிக்காடு, பீடா சாப்பிட்டா அடங்காப் பிடாரின்னு சொல்லும் ஊர் நம்ம ஊர். ஆனா, வெற்றிலைப் போடுவதன் பலங்களை ராஜா
 சொல்றார். கேட்டுக்கோங்க.

புதினாக்கு நிறைய மருத்துவ குணம் இருக்கு. விலையும் மலிவு. அதனால, அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும் விதமா அனிதா மோகன்ராஜ் புதினா சட்னி செய்வது எப்படின்னுச் சொல்லித் தர்றாங்க.

மருதாணியுடனான தன் அனுபவத்தையும், கால மாற்றத்தில் மெகந்தி வைக்கக் கற்றுக்கொண்டு தான் போட்ட மெகந்தி டிசைன்களை நமக்கு காட்டுகிறார் சுபத்ரா
சுண்டைக்காயின் மருத்துவ குணங்களை P.L.சும்பரம்ணியன் நமக்கு நினைவூட்டுகிறார்.

எல்லா சீசன்களிலும், எல்லா இடத்திலயும் கிடைக்கும் ஏழைகளினாப்பிளான பப்பாளி பழத்தின் அற்புதத்தை health ல சொல்றாங்க.

இப்ப தக்காளி சீசன். தக்காளி சாதம் செய்றது எப்படின்னு புதிய தென்றல் சொல்லித் தர்றாங்க.

என்ன சகோஸ் பதிவுகளைப் படிங்க, செடி கொடிகளையும் நேசிங்க. முடிஞ்ச அளவுக்கு ஒரு செடியாவது உங்க வீட்டில் வளருங்க. 

மின்வெட்டு காரணமாகவும், மயானக் கொள்ளை பண்டிகை காரணமாகவும் பதிவு தாமதமா வந்ததுக்கு மன்னிச்சு சகோஸ்.





மேலும் வாசிக்க...

Thursday, February 27, 2014

காக்கையும் குருவியும் எங்கள் ஜாதி

”காக்கையும் குருவியும் எங்கள் ஜாதி”ன்னு பாரதிப் பாடினார். நாடு,இனம், ஜாதி, மதம் பார்க்காம தாயாய், பிள்ளையாய் இருக்கும் வலை உறவு பாரதி சொன்ன காக்கை, குருவியை மட்டும் விட்டுடுமா!? என்ன!? 

யானை, முதல் எலி வரைப் பதிவுல கொண்டு வந்து ஜாமாய்ச்சிருக்காங்க. வாங்க பதிவுக்குள் போலாம்.....,

ஆசைப்பட்டு நாய் வளர்க்கப் போய் தான் பட்ட இன்னல்களையும், பின் அதுவே விருப்பமாகிப் போனதையும் தேசிகன் சொல்றார்.

மாட்டுச் சந்தையைப் பற்றி விளக்கி, மாட்டுச் சந்தைக்கும், வேற ஒரு துறைக்கும் சம்பந்தம் இருக்குறதா சதங்கா சொல்றார். அது நிஜமா!? இல்லையான்னு படிச்சுப் பார்த்துச் சொல்லுங்க.

வானில் பறந்துத் திரியும் காக்கைக்கும் ஒரு கனவு உண்டென்று முனைவர்.நா.இளங்கோவன் தன் கவிதை மூலம் சொல்கிறார்.

சும்மா இருந்தாலே மயில் அழகு. அதுலயும் மயில் தோகை விரிச்சுக்கிட்டிருந்தா செம அழகு. அத்தகைய அழகுகளைப் படம் பிடித்து நமக்காக பதிவிட்டிருக்கிறார் அபுஅனு  .

ஆறு மாதமாய் எலியால் அவஸ்தைப் பட்டு, அதை ஒழிச்சுக்கட்டியப் பின் எலியை நேசிக்கத் தொடங்கியதை கதையாய் ப.செல்வக்குமார்  சொல்கிறார்.

யானை ஏன் காதுகளை அசைச்சுக்கிட்டே இருக்குன்னு  
திமிங்கலம் தெரியும். நீலத்திமிங்கலம்!? அதைப் பற்றி முத்துக்குமாரசாமி என்னச் சொல்றர்ன்னு பார்க்கலாம்.

செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவி அழிஞ்சுப் போச்சுன்னு ஆதங்கப்பட்டு சொல்றார் துரை செல்வராஜு

ஆஸ்திரேலியா சின்னமான கங்காருவைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை வெங்கடேசன் விளக்குகிறார்.

எல்லோருக்கும் திமிங்கலம் தெரியும். நீலத்திமிங்கலம்!? தெரிஞ்சுக்கனும்ன்னா ரத்னா சொல்றதைக் கேளுங்க.

தும்பி பிடிச்சு அதன் வாலில் நூலைக் கட்டி பறக்க விடுவேன். அதைப் பார்க்கும் பெரிசுகள்லாம், ராஜி! தும்பிப் பிடிச்சா உன் அம்மாக்கு தலையை வலிக்கும்ன்னு சொல்லி பயமுறுத்துவாங்க. அப்படியும் திருட்டுத்தனமா தும்பிப் பிடிப்பேன். என்னைப் போலவே தும்பிப் பிடிச்ச கதையை மதுரகன்  சொல்றார்.

நாம் வேடிக்கைப் பார்க்கும் குரங்கைப் பற்றி மனம் கனக்க வைக்கும் கவிதை முருகானந்தன் சொல்கிறார். இதுவரை இவர் ஒரு டாக்டர்ன்ற அளவில்தான் தெரிந்து வைத்திருந்தேன். இப்பதான் தெரியுது ஐயா கவிதையும் எழுதுவார்ன்னு.

பாம்பென்றால் படையும் நடுங்கும். அந்த பாம்பைப் பற்றி இந்த அன்புப் படைக்கு வால்பையன் சொல்றார்.

மயிலுக்கு அடுத்தப்படியா அழகுக்கு பட்டாம்பூச்சிதான்.மயில் போல இல்லாம பட்டாம்பூச்சியை எல்லா இடத்திலயும் பார்க்கலாம். அந்த அழகுப் பட்டாம்பூச்சிகள் பற்றி சிவ சங்கர் படங்களோடு சொல்றார்.

பாம்புகள் பழிவாங்காதுன்னு சொல்லி நம்மை நிம்மதியடைய வைக்கிறார்கள் சிந்திக்க உண்மைகள் தளத்தில்.

சிறு வயது முயல் வேட்டையின் நினைவுகளைப் பற்றி மதிவாணன்  பகிர்கிறார்.

வாய் பேசாத இந்த ஜீவன்களெல்லாம் பாட்டுப் பாடினா! என்னப் பாட்டுப் பாடும்ன்னு பர்ஹான்  நகைச்சுவையாய் பதிவிட்டிருக்கிறார்.

என்னங்க ஐந்தறிவு ஜீவன் களைப்பற்றி நம்மாட்கள் பகிர்ந்தைப் படிச்சீங்களா!? இனி ஐந்தறிவு ஜீவன்களை நேசிப்பீங்கதானே!!??

மின்வெட்டுக் காரணமாகவும், சிவராத்திரிங்குறதால கோவிலுக்குப் போய் வந்ததாலும் லேட்டா பதிவிட்டமைக்கு மன்னிச்சு சகோஸ்.

மேலும் வாசிக்க...

Wednesday, February 26, 2014

தைரியசாலிகள் மட்டும் வந்து இந்தப் பதிவைப் படிங்க!

பேய் இருக்கா!? இல்லியா!?ன்னு ஆராய்ச்சிகள், விவாதங்கள் செஞ்சிக்கிட்டு இருக்கு ஒரு இனம். கொல்லிவாய் பிசாசு, ரத்தக் காட்டேரி, பே, பிசாசு, பூதம், குட்டிச்சாத்தான்னு பேர் வச்சு பயப்பட்டுக்கிட்டு இருக்கு இன்னொரு இனம்.

விடை நல்லாத் தெரிஞ்ச ஒரு விசயத்தையே, இன்னும் கொஞ்சம் அலசி, ஆராய்ஞ்சு புதுப் புது அர்த்தங்கள் கண்டுப்பிடிக்குற நம்மாளுங்க விடைத் தெரியாத அமானுஷ்யமான பேய், பிசாசு டாபிக்கை மட்டும் விட்டுடுவாங்களா, என்ன!? அதையும் பின்னிப் பெடலெடுத்திருக்காங்க. 

பேய் பிசாசுகள் பத்தி, யாரு!? என்னப் பதிவிட்டிருக்காங்கன்னு இனிப் பார்க்கலாம்..., வாங்க! பதிவுக்குப் போகும் முன் திருநீறு பூசிக்கிட்டு காலில் செருப்புப் போட்டுக்கிட்டு, பக்கத்துல தொடைப்பம் முறம் எடுத்து வச்சுக்கிட்டு பதிவுகளைப் படிங்க.

தப்புப் பண்ணால் சாமிக்குப் பயப்படலாம். தப்பு செய்யாத போதும் பேய், பிசாசுக்குப் பயப்படலாம். ஆனா, பேயா!? சாமியான்னு பயந்திருக்காரே! சுரேஷ் அவரை என்னச் சொல்லலாம்!?

கொள்ளிவாய் பிசாசுடன் கொஞ்ச நேரம் செலவழிச்ச சின்னக்குட்டியின்  தைரியத்தை என்னச் சொல்ல!?

ராமு ரத்தக்காட்டேரியாய் மாறிப்போனக் கதையை ஜெயேந்திரன் சொல்றார்.

பாலபாரதிக்கு வெளிநாட்டுப் பேய்களைவிட நம்ம ஊர் பேய்கள்தான் பிடிச்சிருக்காம். அதுக்கு அவர் சொல்லும் காரணங்கள் சரியாதான் இருக்கு.

கொள்ளிவாய் பேய் செய்முறையை தென்பாண்டி நாட்டான் நமக்காகப் பகிர்ந்திருக்கார்.

பேய் ராத்திரில மட்டும் வருவது ஏன்!? தொடைப்பம், செருப்பு கண்டு ஏன் பேய் பயப்படுது!? பேய்ன்னா என்னன்னு உதய சங்கர் விளக்குகிறார்.

மகாலட்சுமி விஜயன் ரசிக்கும்படி பேய்ப்படம் வரனுமாம். அம்மணியோட பேய்ப்பட வரலாற்றை நம்மக்கிட்டச் சொல்றாங்க.

வெளிநாட்டில் கொண்டாடும் பேய்த்திருவிழாவின் ஃபோட்டோக்களைக் காட்டி பயமுறுத்துறார் ராஜ்கமல் .

ஆவி இருக்கா!?இல்லியான்னு ஆவியேச் சொன்னக் கதையைச் சொல்றார் அருண் 

பேய் ஓட்டும் முறையையும், பேய் ஓட்டத் தேவையானப் பொருட்களையும் MCX GOLD SILVER விளக்கமா சொல்லி இருக்கார்.

செத்துப் போனவங்கலம் பேயாய் அலைவாங்கன்னு சொல்றதுலாம் சும்மாங்கன்னு விஞ்ஞான விளக்கத்தை சுதர்ஷன் விளக்குகிறார்.

பேய் ராத்திரில மட்டும் இல்ல பகலிலும் வரும்ன்னு விஜயின் ஜனனம் தான் தெரிஞ்சுக்கிட்டதாச் சொல்றாங்க.

ஆவிகளுடனான தன் அனுபவங்களைத் தொடராகவே எழுதி இருக்கார் செல்லப்பா குட்டிச்சாத்தானைப் பார்த்தாரா இல்லியான்னு தெரிஞ்சுக்கோங்க.

பேய், பிசாசுலாம் ஏன் வெள்ளை உடை மட்டும் உடுத்துதுன்னு செந்தழல் ரவி கேக்குறார்

தான் ரொம்பவும் நேசிக்கும் தன் நண்பனின் ஆவி தன்னைச் சந்திக்க வந்ததை பிரபாகர் கதையாய் சொல்கிறார்.

பேய் கதை பேசும்போது மந்திரவாதி வரலைன்னா எப்படி!? மந்திரவாதிகள் செய்யும் வேலைகள் பற்றி சேக்கனா M.நிஜாம் பகிர்கிறார்.

பேயை நீங்க பார்த்திருக்கீங்களான்னு கேட்டு பேய்கள் மீதான தன் சந்தேகங்களை நம்மக்கிட்ட கேட்கிறார் பாலா 

அப்பாவுடன் தான் கொள்ளிவாய்ப் பிசாசைப் பார்த்த அனுபவத்தை ரவி பிரகாஷ் பகிர்ந்துக்கிறார்.

அவியுடன் பேசுவது எப்படின்னு கிருத்திகன் குகேந்திரன் சொல்லித் தர்றார்.

இந்த பதிவுலாம் படிச்சுட்டு யாராவது பயந்தால் அதுக்கு கம்பெனை பொறுப்பல்ல. பேய், பிசாசு, ஆவிகள் பத்திய பதிவுகளைப் படிச்சு பயத்துல நைட்டெல்லாம் துங்கலை. இப்ப விபூது பூசிக்கிட்டு, பக்கத்துல துடைப்பம்,செருப்புலாம் போட்டுக்கிட்டு தூங்கப் போறேன்.

பேய்ட்டு  சாரி போயிட்டு தூங்கி எழுந்து வரேன்.
மேலும் வாசிக்க...

Tuesday, February 25, 2014

கல்யாணம் ஆகாதவர்களுக்கான பதிவு!

ராஜி! என் ஃப்ரெண்ட் வீட்டுக் கல்யாணத்துக்குப் போய் வந்தோமே! கல்யாணம் எப்படி இருந்துச்சு!!?

ரொம்ப செலவு பண்ணி கல்யாணம் செஞ்சிருக்காங்க. நாம குறைச் சொல்லக்கூடாது. ஆனா, அதிலிருந்து நம்ம வீட்டுக் கல்யாணத்தை எப்படி நடத்தலாம்ன்னு ஐடியா பண்ணிக்கலாம்.

குறைச் சொல்லச் சொல்லல ராஜி! ஆனா, எப்படி இருந்துச்சுன்னு பகிர்ந்துக்கலாமில்ல!

அதுக்கு ஏன் உங்க ஃப்ரெண்ட் வீட்டு கல்யாணத்தைப் பத்திப் பேசனும்!?

கல்யாணம்ங்குறது ஆயிரங்காலத்துப் பயிர். அதை அவசர, அவசரமா பெத்தவங்களை மதிக்காம கல்யாணம் கட்டிக்கிட்டு நம் பசங்கக்கிட்ட அல்லல்படாம இருக்க அட்வைஸ் பண்றார் சேவியர் .

பெண் பார்க்க வரும்போது எப்படி உடைகள், நகை அணியனும்ன்னு வாசுகி மகாலில் டிப்ஸ் கொடுக்குறாங்க.

பெண் பார்க்கப் போகும் மாப்பிள்ளை வீட்டார் நினைவில் கொள்ள வேண்டியவைகளை ரவி பட்டியலிடுகிறார்.

நம்ம ஊர்லலாம் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டாருக்கு வெல்லத்தால் செஞ்ச பானகம்தான் தருவாங்க. அதுக்கப்புறம்தான் டீ,காஃபி, கூல் ட்ரிங்க்ஸ்லாம். அந்த பானகத்தை எப்படி செய்யுறதுன்னு சித்ரா சுந்தர் சொல்றாங்க.

இப்பலாம் கல்யாண விருந்துல பூசணிக்காய்ல செய்ய்ற காசி அல்வா கண்டிப்பா இருக்கு. அதை எல்லோராலும் நல்லா செய்ய முடியறதில்ல. அந்த அல்வா செய்முறையை வாசன் சொல்றார்.

ருசியானதும், உடலுக்கு வலுவான காளான் சாதம் செய்யுறது எப்படின்னு கார்த்திக்கேயன் சொல்றார். அதுப்போலதான் சாப்பாட்டைத் தேர்ந்தெடுக்கனும்.

கல்யாணம் மண்டபம் புக் செய்யுறதுக்கு முன்னாடி கவனிக்க வேண்டியவைகளை கௌதம் ராம் நினைவூட்டுகிறார்.

காதல் திருமணமோ! இல்ல நிச்சயக்கப்பட்ட திருமணமோ எதுவாயிருந்தாலும் பொருத்தம் பார்க்கனும்ன்னு ஜிரா சொல்றார்.

இப்பலாம் ஒரு கார்டு 300 நானூறு ரூபாய்ன்னு கூட அழைப்பிதழ் அச்சடிக்குறாங்க. ஒரு சில நாள் சொந்தக்காரங்க வீட்டு டேபிள்ல இருந்துட்டு குப்பையில் வீசி எறியும் தாளுக்கு எதுக்கு எம்புட்டு செலவு செய்யனும்ன்னு கேட்டு, மாதிரிக்கு சில வித்தியாசமான அழைப்பிதழ்களை முத்துலெட்சுமி காட்டுறாங்க.

ஒரு வீட்டுக்கு கல்யாண அழைப்பிதழ் கொடுக்க சரியான நேரம் எதுன்னு உஷா சொல்றாங்க.

அலங்காரமென்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆணகளுக்கும் கூட இருகுங்கன்னு ஆண்களுக்கான அழகு டிப்ஸ்களை தமிழ்ஜோதி அள்ளி விடுறார்.

திருமணத்துக்கு முன் என்ன நகை வாங்கனும்!? என்ன முக, கூந்தல் அலங்காரம் பண்ணனும், நகம்,கைக்கால் பராமரிப்பதெப்படின்னு பிரபாதாமு சொல்றாங்க.

திருமனத்துக்குப் போடுவதற்குண்டான அழகான மெகந்தி டிசைன்களை அன்புடன் மலிக்கா படம் போட்டு காட்டுறாங்க.

திருமணத்தில் அரசானிக்கால் ஏன் நடப்படுதுன்னு மயில்வாகனம் பிரபா சொல்றாங்க.

அம்மி மிதிக்குறது எதுக்குன்னா வூட்டுக்காரரைத் தூக்கிப் போட்டு மிதிக்குறதுக்கான ஒத்திகைன்னு என்னைப் போல எடக்கு மடக்கா யோசிக்காம சந்தானம் சொல்லுறதைப் படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க.

அருந்ததி பாருன்னா கல்யாணத்துக்கு வந்திருகும் யாரோ ஒரு அருந்ததியை இனி வரும் மாப்பிள்ளைகள் சைட்டடிக்காம இருக்க அருந்ததி பார்த்தல்ன்னா என்னன்னு சிவ ஆணந்த் சொல்றதை மனசுல வாங்கிக்கனும்.

இரு உயிர்களை இணைக்கும் திருமணத்துக்கு ஆடம்பரம் அவசியமான்னு உஷா அன்பரசு முணுமுணுக்குறதை என்னன்னு கேளுங்க.

தாலி கட்டும் சடங்கு ஏன்னு நாராயணசாமி ஜெகதீசன் விளக்குறதைப் படிச்சுப் பாருங்க.

திருமணத்தைப் பதிவு செய்வதன் அவசியத்தை ராஜேஷ் சொல்லுறதை நாமெல்லாம் நினைவு வச்சுக்கனும்.

அழகான ஆரத்தித் தட்டுகளை  தென்றல் சரவணன் நமக்காக பதிவிட்டிருக்கிறார்.

நா ஊறும் கல்யாண சீர் பலகாரங்களை ஸாதிகா அக்கா பட்மாக்கிருக்காங்க.

கல்யாணம்னா மொய் இல்லாமலா!? திருமணங்களில் மொய் எழுத உக்காருவங்க நிலையை தங்கராசு நாகேந்திரன் புலம்புறார்.

பாடுப்பட்டு சேர்த்த பணத்துல லட்சம் லட்சமா கொட்டி பட்டு, நகைன்னு வாங்கி பொண்ணுக்கு சீர் செய்யுறோம். அதை எப்படி பராமரிக்குறதுன்னு ஹாதிம்சஹா டிப்ஸ் தர்றாங்க.

கல்யாணமான பெண் மாமியார் வீட்டுக்குப் போறதுக்கு எப்படி பயப்படுவாளோ! அதுப்போலதான் மாப்பிள்ளையும் பெண்வீட்டுக்கு மற்வீடு போறதுக்கு பயப்படுவாப்ல. மச்சினிச்சி கிண்டல், மாமியாரின் உபசரிப்பு, மாமனாரின் தயக்கம், மச்சினன்களின் கேலின்னு ஒரு வழிப் பண்ணிடுவாங்க. மறுவீட்டுக்குப் போகும் மாப்பிள்ளை எப்படி நடந்துக்கனும்ன்னு சின்னப்பையன் எச்சரிக்கிறார்.

மேல சொன்னதுலாம் இல்லாமச் செய்யும் புரட்சித் திருமனம்ன்னா என்னன்னு சீனிவாசன் சொல்றார்.

தாம்பூலப் பை கொடுப்பதன் அறிவியல் காரணம் சொல்கிறார் சாஸ்திர சர்மா.

என்னங்க இதெல்லாம் நினைவுல வச்சுக்கோங்க. நம்ம பசங்க கல்யாணத்துக்கு உதவும்.

ம்ம்ம்ம் இதெல்லாம் நம்ம கல்யாணத்துக்கு முந்தியே யாராவது எனக்குச் சொல்லியிருந்தா நான் தப்பிச்சிருப்பேனே!!

ஒரு சின்ன விளம்பரம்:
எங்க வீட்டு கல்யாண நிகழ்ச்சிகளைக் காண இங்க போங்க.

மேலும் வாசிக்க...

Monday, February 24, 2014

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!

பாட்ட்ட்ட்ட்டி!

வாம்மா இனியா!? இந்தா பட்டாணி சாப்பிடு.

வேணாம் பாட்டி.

ஏன்ம்மா!? சிப்ஸ், பிஸ்ஸா, மிக்சர்லாம் சாப்புடுறதுப் போல இதையும் சாப்பிடு. இது எங்கக் காலத்து நொறுக்குத் தீனி. பல்லுக்கும் நல்லது. காசும் கம்மி, உடம்புக்கும் ஒண்ணும் பண்ணாது.

அதுக்காக சொல்லலப் பாட்டி. பல் வலிக்குது. அதான் வேணாங்குறேன்.

ம்ம்ம்ம் இந்த காலத்துப் புள்ளைங்க வாழ்க்கை முறையே மாறிட்டதால சிறு வயசுலயே கண்ணாடி போட்டுக்குறதும், பல்லைப் புடுங்குறது சகஜமாகிட்டுது.

என்னப் பாட்டி சொல்றே!?

ஆமாம்மா! எங்கக் காலத்துல உடல் உழைப்பு அதிகமா இருந்தது. சத்தானப் பொருட்கள் விளைந்தது. அதனால நல்ல உணவுகளை நாங்க சாப்பிட்டோம். அதுமில்லாம, நாங்கலாம் மிக்சில அரைக்காம, அம்மில அரைச்சும், குக்கர்ல சமைக்காம பாத்திரத்துல சமைச்சதால சத்துகள் வீணாகாம பார்த்துக்கிட்டோம். இப்பலாம் அப்படி முடியலை. எங்காவது ஊருக்கு போகனும்ன்னா நடைப்பயணம் இல்லாட்டி மாட்டு வண்டி பய்ணம். இப்ப அப்படியா!? புகையைக் கக்குற வண்டிப்பயணம்தான்

இந்த அவசர யுகத்துல இதெல்லாம் அத்தியாவசியம்தான் இருந்தாலும் வாரத்துல ஒரு நாள் பழைய கால வாழ்க்கைப் போல மாட்டு வண்டி பயணம், அம்மில அரைச்ச சாப்பாடுன்னு இருக்கலாம்ல!!??

அம்மா நீங்கச் சொல்றது சரிதான்மா. அதனாலதான் நம்ம வீட்டுல அம்மி,உரல் வாங்கிப்போட்டு  எப்பவாவது பசங்களை அரைக்கச் சொல்றேன். தயிர் கடைஞ்சு மோராக்கி வெண்ணெய் எடுக்கச் சொல்றேன். நான் எப்படி வளர்ந்தேனோ! அதுப்போலதான்மா என் பசங்களையும் ஓரளவுக்கு வளர்க்குறேன். அதுக்காக, கொஞ்சம் மெனக்கெட்டாலும் சரிதான்னு இருக்கேன்.

உனக்குத் தெரியுது ராஜி! ஆனா, மத்தவங்க தன் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கனுமில்ல. பல வீட்டுல அம்மாக்களுக்கே அம்மி அரைக்குறது, மோர் கடையுறதுலாம் தெரியாதே!! அதுக்கு என்னப் பண்ணுறது!?

இதானா உங்கக் கவலை!? இப்பவே ஒரு பதிவுப் போட்டு எல்லோருக்கும் பழைய நினைவுகளை நினைவுப் படுத்திட்டாப் போச்சு!!

முதல்ல மாட்டு வண்டிப் பயணம்:
மாட்டு வண்டில மூடு போட்ட வண்டி, மூடு போடாத வண்டி, டயர் வச்ச வண்டி இது மூணுதான் எனக்குத் தெரிஞ்சது. சின்ன வயசுல பஸ் வசதி இல்லாத ஊர்களுக்குப் போது சின்ன பைள்ளைங்க, வயசானவங்க, சுமைகள்லாம் ஏத்தி விட்டுட்டு பெரியவங்கலாம் நடந்து வருவாங்க. அந்த சந்தோசத்தை தம்பி ஆதிமனிதனின் பதிவு கண் முன் கொண்டு வந்தது.

அம்மி அரைத்தல்:
அம்மில துவையல் அரைச்சு வழிச்சுட்டு அம்மில ஒட்டி இருக்கும் துவையலில் சூடான சாதத்தைப் போட்டு நெய் விட்டு பிசைஞ்சுக் கொடுப்பாங்க. அதோட சுவைக்கு ஈடா எதுமில்ல. அம்மி அரைப்பது எப்படி!? அம்மி அரைப்பதன் பலன்களை பார்வதி ராமச்சந்திரன் பட்டியலிட்டிருக்கிறார்.

கல்சட்டி:
என்னதான் இன்னிக்கு விஞ்ஞான வளர்ச்சியினால நாந்ஸ்டிக் பாத்திரங்களும், டப்பர்வேர் டப்பாக்களும் வந்து நாம சமைக்கும் சாப்பாட்டை ஃப்ரெஷ்ஷா வச்சாலும்,  அன்னிக்கு கல்சட்டில சமைச்ச சாப்பாடும், தண்ணி ஊத்தி வைக்கும் பழையக் கஞ்சியும் ருசிக்கு மட்டுமில்ல ஆரோக்கியத்துக்கும் நல்லதுன்னு கீதா சாம்பவசிவம் சொல்லும் செய்தி.

மரப்பாச்சி:
ஸ்பைடர் மேன், ஆங்கிரி பேர்ட், டாம் அண்ட் ஜெர்ரின்னு விதம் விதமா பொம்மைகள் இன்னிக்கு இருந்தாலும் அவையெல்லாம் உடலுக்கு தீங்கானது. குழந்தைகள் உடலுக்கு நன்மை செய்யும் பொம்மையான மரப்பாச்சியை காண நாகராஜி தளத்துக்குப் போங்க.

நுங்கு வண்டி:
இன்னிக்கும் கீரோ ஹோண்டா பிளசர் வண்டில 80கிமீ வேகத்துல போனாலும் அன்னிக்கு நுங்கு வண்டில காடு மேடுலாம் சுத்துன சுகம் வருமா!? பைசா செலவில்லாம நுங்கு வண்டி செய்யும் முறை பத்தி ஈரோடு கதிர் சொல்லுறதைக் கேளுங்க. சகோதரரைப் பத்தி அறிமுகப்படுத்த நான் எதுமே சொல்லத் தேவையில்ல. எல்லோருக்கும் தெரிந்தவர்தான். நான் ரசிச்சுப் படிக்கும் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.

தாயக்கட்டை:
முன்னலாம் விடுமுறை நாட்களில் பொழுது போக விளையாடும் விளையாட்டுகளில் தாயக்கட்டைக்கு இடம் உண்டு. சில சமயம் ஆண்கள் காசுக்கட்டி விளையாடுவாங்க. பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள்ன்னு எல்லோரும் விளையாடும் தாயக்கட்டையை எப்படி விளையாடுறதுன்னு கிருத்திகாதரன் சொல்லி தர்றார்.

பல்லாங்குழி:
முன்னலாம் நம்ம ஊருல பெண்கள் பூப்ப்பெய்தி ஓய்வா இருக்கும்போது அவங்களுக்குப் பொழுதுப் போக பல்லாங்குழி ஆடக் கொடுப்பாங்க. அதனால எல்லோர் வீட்டுலயும் இருக்கும். ஆண்பிள்ளைகள் இந்த விளையாட்டை விளையாடினால் என்னடா! சமைஞ்சப் பொண்ணு மாதிரி இந்த விளையாட்டுலாம் விளையாடுறேன்னு சொல்லிக் கிண்டல் செய்வாங்க.பல்லாங்குழி ஆடும் முறையை சுபாஷினி சிவா சொல்றாங்க.

பம்பரம்: 
பக்கத்துல இருக்கும் பெண்கள் தொப்புள்ல பம்பரம் விடும் அளவுக்கு இல்லாட்டியும் ஓரளவுக்கு பம்பரம் விளயாட கத்துக்கொடுக்கிறார் ஆனந்த் ஆரோக்கியராஜ்.

சிலம்பம்:
எங்க ஊர் திருவிழாக்களில் சாமி ஊர்வலத்தின்போது சிலம்பம் சுத்துவாங்க. இதுக்காக இளவட்டப் பசங்க சிலம்பம் சுத்த கத்துவாக்குவாங்க. என் வீட்டுக்காரர்(நல்லவேளை,இதுவரைக்கும் என்கிட்ட சிலம்பம் சுழட்டி வீரத்தைக் காட்டல), மச்சினர்களுக்குலாம் தெரியும். அப்புக்கு சிலம்பம் சுத்த ஆசை. ஆனா, உரிய வயசு வராததால கத்துக்கல. சிலம்பத்தின் வகைகள், சுழட்டுறது எப்படின்னு பட்டதும், சுட்டதும்ல சொல்றாங்க.

பட்டம் விடுதல்:
படிச்சு பட்டம் வாங்காட்டியும் சின்ன வயசுல நான் நிறைய பட்டம் வாங்கி விட்டிருக்கேன். பழைய நியூஸ் பேப்பர்ல பட்டம் செஞ்சு ஏரிக்கரையில் நண்பனோடு பட்டம் விட்ட சுகத்தை கண் முன் கொண்டு வந்தது நான் ஆதவன் பதிவு.

கிட்டி புள்:
 ஐபிஎல், ட்வெண்டி ட்வெண்டின்னு இன்னிக்கு கிரிக்கெட் வளார்ந்திருக்கு. கிரிக்கெட்டோட தாத்தாவான கிட்டிபுள்ளை விளையாடி பக்கத்து வீட்டுலலாம் அம்மாக்கிட்ட சண்டைக்கு வந்து, ஓடி ஒளிஞ்ச காலத்தை நினைவூட்டியது முரளி கிருஷ்ணா பதிவு. கூடவே பப்பர மிட்டாய் சுவையையும் பகிர்ந்திருக்கார்.

கோலி:
சின்னச் சின்ன கண்ணாடி உருண்டை. அதைக் கைக்குள் வச்சிருந்தால் சூடு. எடுத்து கன்னத்தில் வைத்துக் கொண்டால் குளிர்ச்சின்னு இரு முகம் காட்டும் கோலி. கோலி விளையாட்டு எனக்கு அதிகம் பரிச்சயமில்ல. ஆனா, கோலியை இப்படியும் விளையாடலாம்ன்னு தியானா புதுசா என்னவோ சொல்றாங்க.

காகிதக் கப்பல்
பாடம் படிக்க உதவுச்சோ இல்லியோ! என் புத்தகங்கள். ஆனா, மழைக்காலத்தில் கப்பல் செஞ்சு விட உதவுச்சு. என்னை மாதிரியான இன்னொரு ஆளான கிருஷ்ணப்பன் பதிவு.

தட்டாங்கல்:
இதுவும் பெண்கள் ஆட்டம்தான். சில சமயம் ஆண்களும் ஆட வருவாங்க. ஒரே மாதிரியான வட்ட வடிவ கற்களைப் பொறுக்கி வந்து சேர்த்து வச்சிருப்போம். இதென்னடி குப்பைன்னு அப்பா, அம்மா திட்டிக்கிட்டே தூக்கிப் போடுவாங்க. தட்டாங்கல்லின் வகைகளை சில்வண்டு சொல்றாங்க.

கண்ணாமூச்சு ரே! ரே!
பொனுட் பொடுசுகளுடன் ஆடிய, கண்ணாமூச்சி ரே!ரே!  விளையாட்டுப் பற்றி சே,குமார் சொல்லும் தகவல்கள்.

குச்சி ஐஸ்:
 நம்ம பசங்களுக்கு என்னதான் பிராண்டட் ஐஸ்க்ரீம் லாம் வாங்கிக் கொடுத்தாலும் சளிப் பிடிச்சு, காய்ச்சல் வருது!! ஆனா, தெருவில் வித்த குச்சி ஐஸையும், சேமியா ஐஸையும் சாப்பிட்ட நமக்கு எதுமே ஆகலியே!ன்னு சுகுமார் ராஜேந்திரன் ஆதங்கப் படுகிறார்.

தேன் மிட்டாய்:
சின்ன வயசுல எல்லாக் குழந்தைகளின் தேடலும் தேன் மிட்டாய்லயே முடிஞ்சுடும். தேன் மிட்டாயின் சுவைக் குன்றாம அனத்தலாம் வாங்கல சொல்லி இருக்காங்க.

மண் சொப்புகள்:
மன் இட்லி, கருவேங்க மர இலை துவையல், இட்லிப்பூ சட்னின்னு மண் சொப்புல சமைச்சு, எல்லோருக்கும் பசியாறி விளையாடி இருக்கோம். ஆனா, இன்னிக்கு ஆயிரத்தெட்டு விளையாட்டுகள் இருந்தும் பசங்களுக்கு போரடிக்கும் கதையை கவிதை மூலம் சொல்றாங்க .  மரியா

நம் சந்தோசங்கள்:
கால ஓட்டத்தில் நாம் தொலைத்த அத்தனை சந்தோசங்களையும் ஒரே இடத்தில் நம் கண்முன்னே கொண்டு வந்திருக்காங்க 

பூம் பூம் மாடு:
ராமராஜனுக்குப் போட்டியா கலர் கலர் ட்ரெஸ் பண்ணிக்கிட்டு பெருசாப் மைப் பொட்டு வச்சிக்கிட்டு கிருஷ்ணருக்குப் போட்டியா குழலூதிக்கிட்டும், தில்லானா மோகானாம்பாள் பத்மினிப் போல சலங்கைக் குலுங்க நடந்து வரும் மாட்டைப் பிடிச்சுக்கிட்டு இவர் வந்தாலே ஊர் பிள்ளைகள் அத்தனையும் இவர் பின் தான். பழைய நினைவுகளை கவியரசன் அசைப் போடுவதைப் பாருங்க.

கோலி சோடா: 
என்னதான் பெப்சி, கோக்ன்னு கலர் கலரா குடிச்சாலும் அதெல்லாம் உடம்புக்கு கெடுதி.  சின்ன வயசுல பன்னீர் சோடாவை குடிக்கத் தெரியாம குடிச்ச ருசி எதுலயும் இல்லன்னு அனன்யா சொல்றாங்க.

போதும் நிறுத்தும்மா ராஜி! நீ சின்ன வயசு நினைவுகள் எதையும் மறக்கலைன்னு தெரியுது. ரொம்ப சந்தோசம்தான். ஆனா...,

என்னம்மா ஆனா!?

இன்னும் விளையாட்டுப் பிள்ளையாவே இருக்கியே!! இனியாவது மாத்திக்கோ!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்






மேலும் வாசிக்க...

Sunday, February 23, 2014

வலைச்சர ஆசிரியராகப் பணீயாற்றும் ராஜி நாளை துவங்கும் வாரத்திற்கும் ஆசிரியராகப் பணீயாற்றுகிறார்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றிருக்கும் ராஜி தான் ஏற்ற பொறுப்பினைச் முழு ஈடுபாட்டுடனும் சிறப்புடனும் செய்து முடித்திருக்கிறார்.

அவரது திறமைகளைப் பாராட்ட சொற்களே இல்லை.

அவரை நாளை துவங்கும் வாரத்திற்கும் ஆசிரியராகப் ப|ணியாற்றவும் - வலைச்சரக் குழுவினில் உதவிப் பொறுப்பாசீரியராகப் பணியாற்றவும் மகிழ்வுடன் தீர்மானித்திருக்கிறோம்.

இதன் படி நாளை முதல் பதிவிடத் துவங்குவார்

நல்வாழ்த்துகள் ராஜி

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

மூத்தோருக்கு மரியாதை


ஹலோ தூயா!

அம்மா! எப்படிம்மா இருக்கே!? பாப்பா, தம்பி, அப்பாலாம் எப்படி இருக்காங்க!? தாத்தா, பாட்டி எப்படிம்மா இருக்காஅங்க!? அவங்க உடம்புக்கு ஒண்ணுமில்லியே!

எல்லோரும் நல்லா இருக்காங்கம்மா!  நீ எப்படி இருக்கே!? சாப்பிட்டியா!? 

சாப்பிட்டேன்மா! என்ன விசயம்!? போன் பண்ணி இருக்கே!!

என் அப்பாக்கு அறுபது வயசு முடியப் போகுது. அதனால, அவருக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணனும், என் மாமனாரான உன் இன்னொரு தாத்தாக்கு என்பது வயசு தொடங்கப் போகுது அவருக்கும் என்பதாம் கல்யாணம் பண்ணனும். இப்படி அறுபது, என்பது கல்யாணம்லாம் பண்ணனும்ன்னா அவங்க பசங்களைலாம் படிக்க வச்சு, வேலையில் அமர்ந்து கல்யாணம் கட்டிக்கொடுத்து பேரப்பிள்ளைகளையும் பார்த்திருக்கனும். பிள்ளைகள், பேரப்பசங்க வ்ருமானத்துலதான் இந்த விசேசத்தை செய்யனும்ன்னு பெரியவங்கலாம் செய்யுறாங்க. அதனால,

அதனால என்னம்மா!?

உன்னால முடிஞ்ச காசை நீ தரனும். இப்பவே சொல்லி வச்சாதானே நீ பைசாக்கு ஏற்பாடு பண்ண முடியும்ன்னு சொன்னேன்.

என்னால பைசாலாம் தர முடியாதும்மா!

ஏன்மா இப்படி சொல்லிட்டே! ஒரு ஐயாயிரம் கூடவா தர முடியாது!

ஒத்தை பைசா தர முடியாதும்மா! வேற எதுக்காவது காசு கேளு தரேன். 

ஏன் தூயா!? அவங்க மேல என்னக் கோவம்!?

அவங்க மேலல்லாம் எனக்கு கோவமில்லம்மா. கோவம்லாம் உன் மேலதான்.

என் மேலக் கோவமா?! வெளங்கலியே! ஏன்?! என்னக் கோவம்!?

நீயும் பிளாக்குல இருக்குறவங்களும் ஒரு குடும்பம் போல பழகுறது எனக்குத் தெரியும். இந்த வாரம் முழுக்க வலைச்சரத்துல நீதானே பொறுப்பாசிரியர். ஒரு பெரியவங்களையாவது நீ அறிமுகப்படுத்தினியா!? அவங்களுக்கு மரியாதைச் செஞ்சியா!? உன் அப்பா, மாமனார்ன்னு மட்டும் பாசம் காட்டுறே. ஆனா, பிளாக்குல இருக்கும் பெரியவங்களை மட்டும் ஒதுக்கி வைக்குறே! வெளில ஒரு வேசம், வீட்டுக்குள் ஒரு வேசம் போடுறேம்மா நீ!!

அப்படிலாம் இல்ல தூயா! அவங்க பதிவைலாம் தனியா போடலம்ன்னு நினச்சிருந்தேன். என்மேல சந்தேகம்ன்னா சசி ஆண்டியைக் கேட்டுப் பாரு. அவக்கிட்ட இந்த விசயத்தை சொல்லி இருக்கேன்.

அப்படியாம்மா! நாந்தான் அவசரப்பட்டுட்டேனோ!  சாரிம்மா! . ரெண்டு தாத்தா, பாட்டி கல்யாணத்தை அசத்திப் பதிவுப் போடலாம். யார் யாரெல்லாம் அறிமுகப்படுத்தப் போறேம்மா!

இன்னிக்கு வலைச்சரத்துல சொல்லப்போறவங்களுக்கு அறிமுகம் தேவை இல்லம்மா!  மரியாதைச் செய்யுறதுக்குதான் பதிவுப் போடப் போறதே!

முதல் வணக்கத்துக்குரியவர் நம்ம புலவர் இராமாநுசம் ஐயா! தள்ளாத வயதில்கூட கணினியையும், வலை நட்புகளையும் தள்ளாதவர். தமிழ் பதிவர் சங்கம் உருவாகக் காரணமானவர். மினி பதிவர் சந்திப்பு நடக்க தன் வீட்டை கொடுப்பவர். இப்பக்கூட ஐரோப்பாவுக்கு சுற்றுப்பயணம் போய் வந்தார்.

அடுத்து உன்னோட பாய் ஃப்ரெண்டான அடையார் அஜீத்ன்னு சொல்ற சென்னைப் பித்தன் ஐயா! ரொம்பவும் ஸ்மார்ட்.நகைச்சுவை, துணுக்குகள், நீதிக்கதைகள் சொல்பவர். சில சமயம் மொக்கையும் போடுவார்.

46வது திருமண நாளைக் கொண்டாட வடை, பாயாசத்துடன் விருந்து சாப்பிட்டு, வூட்டுக்காரக் கிழவியை இன்னும் கொஞ்ச நேரம் பக்கத்தில் இருன்னு கேட்டு மொத்து வாங்கியதைக் கூட பகிரும் சுப்பு தாத்தா.

50 வயதை நெருங்கிட்டாலே தலைவலி, இடுப்பு வலிப் போன்ற சின்ன சின்ன வியாதிகளைக்கூட அலட்சியம் பண்ணக்கூடாதுன்றதை தன் நன்பனின் இழப்பு மூலம் பாடம் கற்றதை டி.பி.ஆர்.ஜோசப் ஐயா சொல்றார்.

அறிமுகத்துக்கே அறிமுகமான்னு கேட்டாலும் பதிவர்களின் திறமைகளை பதிவர்கள் வாயிலாகவே அறிமுகப்படுத்த வலைச்சரத்தைத் தோர்ற்றுவித்த சீனா ஐயா. உங்களுக்குலாம் ஐயா! எனக்கு மட்டும் அப்பா! என்னை அவர் மகளாய் தத்தெடுத்து ரொம்ப நாள் ஆச்சு. தான் கணினி கற்றதை சொல்றதைக் கேளு.

மதுரைச் சேர்ந்தவர் ரமணி அப்பா! சின்ன சின்ன விசயத்தைக்கூட கருபொருளாக்கி கவிதை எழுதுபவர். தமிழர்களின் அடையாளமான வெள்ளை வேட்டி சட்டையில் அழகான மீசையோடு ப்ரொஃபைல் படம் போட்டுட்டு டி ஷர்ட்,ஜீன்ஸ் போட்டு மீசையில்லாம இருக்கும் காரணம் என்னன்னுதான் தெரியலை. தேர்தல் பற்றி அழகா சொல்கிறார்.

அடுத்து உனக்கு அறிமுகமானவர்தான். போன பதிவர் சந்திப்புல கலந்துக்கிட்ட லட்சுமி பாட்டி. உனக்குப் பிடிச்ச வெஜிடபுள் புலாவ் செய்யுறது எப்படின்னு சொல்றாங்க. குறிச்சு வச்சுக்கோ. நாளைக்கு கல்யாணமாகிப் போகும்போது உதவும்.

எனக்கு புருசனா வரப்போறவருக்குதானே! அவர்தானே கிச்சன் டிபார்ட்மெண்டைப் பார்த்துக்கப் போறவர்.

அடிப்பாவி, என் பேரை ரிப்பேர் ஆக்காம விடம்மாட்டேப் போல!! அடுத்து ராஜராஜேஸ்வரி அம்மா. ஊர்ல இருக்கும் எல்லா கடவுள்களைப்பற்றியும் பதிவாக்கியவர். அழகான படங்களைத் தேடிப் பிடிச்சு பதிவாக்குவார்.


திருமணத்தின் போது பெண் வீட்டுக்காரர் ஃபோட்டோகிராஃபரா இருந்தா அவங்க வீட்டு ஆளுங்க அதிகமாகவும், மாப்பிள்ளை வீட்டார் ஃபோட்டோகிராஃபரா இருந்தா இவங்க வீட்டு ஆளுங்களும் புகைப்படத்தில் மின்னுறதால வந்த சங்கடத்தை வல்லிசிம்ஹன் அம்மா சொல்றாங்க.
இவங்கதானேம்மா பதிவர் சந்திப்புல வந்த பெண்களுக்கு பூ கொடுத்த பாட்டி!?

ஆமா தூயா! நல்லா நினைவு வச்சிருக்கியே! அடுத்து உலகம் சுற்றும் வாலிபியான துளசிப் பாட்டி தான் கடலைப் போட்டக் கதையை சொல்றதைப் படிச்சுப்பாரு. 

வாடிய பயிரைக் கண்டப் போதெல்லாம் மனம் வாடும் வே.நடனசபாபதி ஐயா  முதுமை வந்தால் மூளை மழுங்கிப் போகுமான்னு நம்மையே கேக்குறார்.

இருபத்தி நாலும் மணிநேரமும் இணையத்தில் இருப்பாரான்னு தெரியலை.தனபாலன் மாமாக்கு அடுத்தபடியா இவர்தான் அதிக மறுமொழி இட்டிருப்பார்ன்னு நினைக்குறென். ஆன்மீகப் பஹ்டிவுல இவரை அதிகம் பார்க்கலாம். நான் அதிகம் மொக்கைப் போடுறதால என் பக்கம்  வர்றதில்லைன்னு நினைக்குறேன் வை.கோபாலக்கிருஷ்ணன் ஐயா.

அடுத்து பதிவுலக நாகேஷ்ன்னு சொல்லப்படுற சேட்டைக்காரன் ஐயா. இவரைப் பத்தி நான் சொல்லித்தான் தெரிஞ்சுக்கனும்ன்னு இல்ல. இஅவரோட பதிவைப் பார்த்தே இவரின் நகைச்சுவை உணர்வைத் தெரிஞ்சுக்கலாம்.

90வயசானாலும் தனக்கு வயசாகிட்டதை யாரும் ஒத்துக்க மாட்டாங்க. ஆனா, தருமி ஐயா தனக்கு 70வயது நெருங்குதுன்னு பெருமையா சொல்றார்.

துடித்துக் கொன்றிருக்கும் கன்றுக்குட்டியின் வேதனையை காணுவதை விட கொன்றுவிடுவதே மேல்ன்னு காந்திஜி சொல்லி இருக்கார். ஆனாலும், நம் இந்தியச் சட்டம் அதை ஒத்துக்குறதில்லை. கருணைக்கொலை செய்திருப்பேன்ன்னு ஜி.எம்.பாலசுப்ரமணியன் ஐயா சொல்றார்.

அடுத்து ரஞ்சனி நாராயணன் பாட்டி. இவங்களைப் பத்தியும் நான் சொல்லி தெரிஞ்சுக்க ஒண்ணுமில்ல. தினம் ஒரு பதிவு போடுபவர். தினமும் பதிவுப் போட்டாலும் பயனுள்ல பதிவுகளா இருக்கும். பெரும்பாலும் குழந்தை வளர்ப்பு பற்றிதான் பதிவு இருக்கும்.

தான் இஸ்ரேலுக்குப் போன கதையை சொல்கிறார் பழனி.கந்தசாமி ஐயா! பேங்கில் பணம் போடும் எல்லா வழிகளையும் சொல்லும் ஐயா, பணத்தை சம்பாதிக்க வழிச் சொன்னால் நல்லா இருக்கும்!

அம்மா! எனக்கு கிருஷ்ணன் கதைகள் புத்தகம் பரிசளித்தாங்களே! அந்த பாட்டியைப் பத்தி சொல்லவே இல்லியே!

அவங்க பேரு ருக்மணி சேஷாயிப் பாட்டி. டிவில வந்து குட்டிகளுக்கு கதை சொன்னவங்க. இப்ப இணையத்துலயும், புத்தகம் வாயிலாகவும் நீதிக் கதைகள் சொல்லி அசத்துறாங்க.

நாமலாம் வெளிய எங்காவது டூர் போகும்போது உங்க பெரியப்பா, சித்தப்பாலாம் திடீர்ன்னு அடுப்பு மூட்டி சமைச்சுத் தருவாங்க. கைக்குக் கிடைச்சதை போட்டு ஆண்கள் சமைச்சுத் தரும் பண்டத்துக்கு கொஞ்சம் ருசி அதிகம்தான். வேலூர்ல இருக்கும் ராமன் ஐயா காளிஃப்ளவர்ல பொரியல் செஞ்சு அசத்தி காட்டுறார். ஆனா, ஐயாவோட தளத்துக்குப் போகனும்னாலே எனக்கு கொஞ்சம் பயம். ஏன்னு தெரியலை. 

அம்மாடி! இத்தனைப் பேர் மூத்தப் பதிவர்கள் இருக்காங்களாம்மா!? இன்னும் இருக்காங்க. கரண்ட் கட் நேரம் வருது. இன்னொரு சமயத்தில் அவர்கள் பதிவுலாம் சொல்லுறேன்.

சரிம்மா! நான் போய் வேலையைப் பார்க்குறேன். நீ தாத்தாக்களின் கல்யாணம் நாள் என்னிக்குன்னு ஒரு மாசம் முன்னாடி சொன்னால் நான் பணம் ரெடிப் பண்ண வசதியாய் இருக்கும். 

சரிம்மா தூயா!! பை!












மேலும் வாசிக்க...

Saturday, February 22, 2014

தேனிலவு செல்ல அழகான இடங்கள்.

வாம்மா புதுப் பொண்ணு!! நல்லா இருக்கியா!?

நல்லா இருக்கேன்க்கா. நீங்க எப்படி இருக்கீங்க!? மாமா, பசங்கலாம் சௌக்கியமா!?

நல்லா இருக்காங்க. இந்தா ஸ்வீட். சாப்பிடு. கல்யாணம் முடிஞ்சு முதன் முதலா எங்க வீட்டுக்கு வரும்போது நீ மட்டும் தனியாய் வரலாமா!? எங்க உன் வீட்டுக்காரர்!?

அவர் ஆஃபீஸ் போயிருக்கார்க்கா. உங்கக்கிட்ட ஒரு உதவி கேக்கச் சொன்னார்க்கா.

என்ன உதவிம்மா!? முடிஞ்சா செய்றேன்.

ஒண்ணுமில்லக்கா. ஹனிமூன் போலாம்ன்னு இருக்கோம். அதான் எங்க போறதுன்னு தெரியல! நீங்கதான் பிளாக்லாம் எழுதிறீங்களே! அதுமில்லாம மாமாவோடு நிறைய இடம் போய் வந்திருக்கீங்களே! உங்களை கேட்டா சரியா இருக்கும்ன்னுதான் வந்தேன்.

ம்ம்ம் எங்க போனாலும் ஃபோட்டோ எடுக்குறேன்னு என் பசங்களும், என் சகோக்களும் கிண்டல் பண்ணுவாங்க. ஆனா, அதுக்கு இப்படி ஒரு யூஸ் வரும்ன்னு அவங்களுக்குலாம் தெரியுமா!? நாங்க டூர் போனபோது எடுத்தப் படம்லாம் காட்டுறேன். அதுல எந்த இடமாவது உனக்குப் பிடிக்குதாப் பாரு. இல்லாட்டி சில இடத்தோட லின்க் கொடுக்குறேன். நீயும் உன் வீட்டுக்காரரும் பார்த்து முடிவு பண்ணி போய் வாங்க.

சரிக்கா.

முதல்ல கரண்ட் இருக்கும்போதே லிங்க்லாம் உன் வீட்டுக்காரருக்கு மெயில் தட்டி விடலாம் வா!

வெளியே டூர் போகும்போது எப்பவுமே பிளான் பண்ணிக்கிட்டுதான் போகனும். திடுதிப்ன்னு அங்கப் போய் அவஸ்தைப் படக்கூடாது. எத்தனை நாள், எங்க தங்குறது, என்னலாம் பார்க்கனும்ன்னு முதல்லியே பிளான் பண்ணிக்கனும்ன்னு என் அண்ணா மோகன்குமார் சொல்றார். மனுசன் குளுமணாலி தொடங்கி நம்ம ஊர் ஏலகிரி வரை ஒரு இடம் பாக்கி விடாம சுத்தி பார்த்திருக்கார். அழகான புகைப்படங்களோடு தன் அனுபவத்தை சொல்லி இருப்பார். அவர் பதிவுகளை வாசிச்சுப் பார்.

ஆறு ஓடும் ஊரில் குடியிருக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமென சொல்லி, தேனி சுற்றி நிறைய சுற்றுலா தலங்கள் இருக்கு. அவை என்னலாம்ன்னு பட்டியலிட்டு, தன் பயண அனுபவத்தை முரளி குமார் சொல்றார்.

மூணாற்றை அழகியப் படங்களோடு நமக்கு சுத்திக் காட்டுகிறார் மகுடேஸ்வரன். ஆனா, ஊர் உலகமே போகனும்ன்னு ஆசைப்படுற ஊட்டி மேல இவருக்கு ஏன் இப்படி ஒரு ஒவ்வாமை!?

புகை மண்டலமா இல்ல நீர்த்துளியான்னு சந்தேகத்தோடு துவாந்தார் நீர்வீழ்ச்சியை சுத்திப் பார்த்தோடு இல்லாம எங்களையும் தன் படங்களின் வழியாய் கூட்டி சென்றது வெங்கட் நாகராஜ். அண்ணனோட வலைப்பக்கம் போனால் காசி, சபரிமலை, டில்லி ரோட்டோர உணவுத்திருவிழான்னு செமையாக் கலந்துக் கட்டி இருப்பார். எங்காவது போனோமா! இடத்தை ரசிச்சுப் படமெடுத்தோமான்னு இல்லாம அடுத்தவங்க பேசுறதையெல்லாம் ஒட்டுக் கேட்டு பதிவா போடுவார் இந்த தலைநகர தளபதி.

தேக்கடி படகு வீட்டில் ஒரு நாள் முழுக்க தன் நண்பர்களுடன் தங்கியிருந்த தன் அனுபவத்தை கிரியேஷ் பகிர்ந்திருப்பதைப் பார்த்து முடிவெடு. எனக்குக் கூட இப்படி ஒரு படகு வீட்டில் போய் தங்கனும்ன்னு ஆசை. இந்த வருச லீவில் போக முடியுதான்னு பார்க்குறேன்.

கர்நாடக மாநிலத்து கூர்க், தலைக்காவிரி, தங்கக்கோவில் சுத்திப் பார்த்த அனுபவத்தை குரு சொல்லி இருக்கார். அவரும் அவர் நண்பர்களும் சாப்பிட்ட இடம் போர்க்களம் போல காட்சியளிக்குதுன்னு சொல்றார். படத்தைப் பார்க்கும்போது எனக்கும் அப்படிதான் தோணுது.

ஆசியாவின் மிக நீளமான மாத்தூர் தொட்டிப் பாலத்துக்கு போய் வந்த வித்யா புகைப்படங்களுடன் பகிர்ந்திருக்காங்க.

தேனிலவுக்கு கோவா போகலாமான்னு தெரியல. வெளிநாட்டுக்காரர்லாம் நிறைய பேர் வருவாங்க. எதுக்கும் நம்ம வீடு சுரேஷை கெட்டு சொல்றேன். ஏன்னா அவர் கோவா போய் வந்ததா ஜொள்ளி இருந்ததா நினைவு.

எனக்குத் தெரிஞ்சவங்க எண்ணெய் மசாஜ்+குளியல்+சூடான, சுவையான சாப்பாடு+தூக்கம். மீண்டும் குளியல்+சாப்பாடு+தூக்கம்ன்னு குற்றாலத்துக்குப் போய் நாலு நாள் தங்கிட்டு வருவாங்க. குற்றாலம் போய் வந்திருந்தாலும் அதுப்போல தங்கி குளிக்கனும்ன்னு ஆசை.தன் குற்றால அனுபவத்தை செ.நாகராஜ் சொல்றார்.

நம்ம ஊருக்கு பக்கம்தான் இருக்கு. ஒரு நாள் இல்ல ரெண்டு நாள்ன்னா ஒகேனக்கல் போய் வாங்க. என் தம்பி கோகுல் போய் வந்து பதிவு போட்டிருக்கார். தம்பி பிசி போல! முன்போல பதிவுப் பக்கம் வருவதில்லை.

பெங்களூர்ல பொட்டானிக்கல் கார்டன் இருக்குன்னு தெரியும். ஆனா, கோட்டை இருக்குறது வசந்தக்குமார் சொல்லித்தான் தெரியும்.

எங்க ஊர் பக்கத்துல ஆறு, கடல், நீர்வீழ்ச்சின்னு ஏதுமில்ல. அதனால, என் கடைசி காலத்தில் நான் இருக்கும் வீட்டுப் பக்கத்தில் எதாவது ஒரு நீர் நிலை இருக்கனும்ன்னு ஆசைப்படுவேன். என் கனவு வீட்டை கானப்பிரபா எனக்கு காட்டி இருக்கார். 

இந்தியாவில் தெற்கு பகுதிக்கு ஊட்டி, வடக்கிற்கு குலுமனாலி, கிழக்கில் டார்ஜிலிங் என்றால் மேற்குக்கு மகாபலேஷ்வர்ன்னு புது தகவல் சொல்லும் விஜிகுமாரி பதிவு.

காதல் சின்னமான தாஜ் மகால் சாய்ஞ்சுக்கிட்டே வருதுன்னு பயமுறுத்துறார் முத்துக்கிருஷ்ணன். 

திருமயம் மலைக்கோட்டைப் பற்றி முழுதகவலையும்,படத்தோடு ஸ்ரீ சொல்லி இருக்கார்.

எனக்கு பிடித்த இடங்களுள் மதுரை நாயக்கர் மஹாலும் ஒண்ணு, எனக்கு பிடிச்ச வலைப்பூ எழுத்தாளர்களில் சகோ கலாக்குமரனும் ஒருவர்.பிடித்த ஒருவர் மூலம் பிடித்த இடத்தைப் பற்றி அறிய வருவது எவ்வளவு சுகம்!?

நீலகிரி மலையில் உள்ள சுற்றுலா இடங்களையும், மலையின் சிறப்புகள் மற்றும் அங்கு வாழ் மக்களைப் பற்றி ஒட்டக்கூத்தன் பகிர்ந்திருக்கிறார்.

பிச்சாவரம் ஏரியின் அழகையும், படகு சவாரியையும் மலர்விழி சொல்லுறதை படிச்சுப் பாரு.

நம்ம ஊரிலிருந்து அதிகப்பட்சம் நூறு கிலோ மீட்டர்க்குள் இருக்கும் செஞ்சிக்கோட்டையைப் பத்தி தஞ்சாவூரான் பதிந்த பதிவைப் படிச்சுப் பாரு.

எனக்குப் பிடித்த ஊர்களில் முதன்மையான இடம் தஞ்சாவூருக்குண்டு. தஞ்சைப் பெரிய கோவிலின் தரையில் விழுமா!? விழாதான்னு புகைப்பட ஆதாரத்தோடு சொல்கிறார் ஜெகதீஸ்வரன்.

பொதிகை மலைப் பயணத்தையும், அகத்தியரின் வழிப்பாட்டையும் போகர்
என்ற பதிவர் சொல்லி இருக்கார்.

 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பாபநாசம். இங்க போனா ஒரேக் கல்லில் ரெண்டு மாங்கா. ஒண்ணு அகத்தியருக்குத் திருமணக்கோலத்தில் காட்சி தந்த இடத்தைப் பார்க்கலாம். மலை மேல அழகிய நீர்வீழ்ச்சியும், படகு சவாரியும் உண்டு தேனிலவைக் கொண்டாடின மாதிரியும் ஆச்சு!! அங்க போறதுக்கு முன் எறும்பு சொல்றதைப் படிச்சுட்டுப் போங்க.

கோவா பீச் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களைப் பற்றி குறிஞ்சிக்குயில் தளத்துல படிச்சிக்கப்பா!.

பெங்களூரு லால்பாக் எப்பவுமே பூக்களால் களைக் கட்டும். விசேசத்தினங்களில் இன்னும் அழகா இருக்கும்// அந்த அழகையெல்லாம் தன் மூன்றாவது கண்ணால் ராமலஷ்மி அழகாப் படம் பிடிச்சு வந்திருக்கார்.

பெங்களூருவின் அழகான குண்டலஹள்ளி ஏரியையும், அதன் மறுபக்கத்தையும் வனிலா பாலாஜி பகிர்கிறார்.

கொல்லி மலையில் தன் நட்புகளுடன் ஆட்டம் போட்டதை அழகான படத்தோடு ரசிக்கும்படி சங்கர் சொல்லி இருக்கார்.

நான் சொன்ன பதிவுகளைப் படிச்சும், படங்களைப் பார்த்தும் எதாவது ஒரு இடத்தை செலக்ட் செஞ்சு தேனிலவுக்குப் போய் சந்தோசத்துடனும், பாதுகாப்புடனும் திரும்பி வாங்க. ஆல் தி பெஸ்ட்.

நன்றிக்கா! நான் போய் எங்க வீட்டுக்காரர்கிட்ட இதெல்லாம் சொல்றேன்.

மேலும் வாசிக்க...

Friday, February 21, 2014

இவர்கள்லாம் இருக்கும் வரை தமிழ் அழியாது!!

தாயே! வணக்கம்!
தாயே! வணக்கம்
அம்மா! தாயே!

ம்ம்ம்ம்ம்ம் வா நாரதா! வந்து நேரமாகியதா!?  நான் கவனிக்கவில்லையப்பா! 

நான் வந்ததைக் கூட கவனிக்காமல் அப்படியென்ன தாயே யோசனை!?

நாரதா!?  நான் யார்!?

இதென்னக் கேள்வி!? கல்விக்கே அதிபதியான சரஸ்வதி தேவி.

ம்ம்ம். எத்தனையோ மொழிகள் நான் படைத்திருந்தாலும் கூட , தமிழ் மொழி மீது மட்டும் எனக்கு அலாதிப் பிரியம்.

அது உலகத்துக்கே தெரிந்ததுதானே தாயே! அதனால் தான் தமிழர்கள் உங்கள் மேல் அலாதிப் பற்று வைத்துள்ளார்கள்.

ம்ம்ம் கோவை, மதுரை,நெல்லை,சென்னைன்னு வட்டாரத்துக்கேற்றவாறு தமிழில் பேசினாலும் ஒவ்வொன்றிலும் ஒரு அழகு இருக்கு. ஏன் வெளி மாநிலத்தவர் தங்கள் மொழியோடு தமிழ் பேசுவதும் கூட ஒரு அழகுதான். ஆனா, எல்லா வட்டாரத்திலயும் இப்ப ஒரு புது தமிழ் பேசுறாங்க. அதை கேக்கும்போதுலாம் ஈயத்தைக் காய்ச்சி காதுல ஊத்தின மாதிரி இருக்கு.

அப்படியா!? ஊர் ஊரா சுத்தும் எனக்கு இது தெரியாமப் போய்டிச்சே தாயே! அதென்ன தமிழின் புது அவதாரம்!?

அதுவா!? ”பண்ணி” தமிழ்.

என்னது ”பண்ணித்” தமிழா!? விளங்கவில்லை தாயே!! நீங்கள் ஆங்கிலச் சொல்லான funnyயை சொல்றீங்களா!?

பலதரப்பட்ட ஆட்களுடன் பேசும்போது அவர்கள் மொழிச் சொற்களைக் கலந்து பேசுறவங்களைக் கூட நான் பொறுத்த்துப்பேன். ஆனா, சமையல் பண்ணி...,, ஃபோன் பண்ணி...,  மேக்கப் பண்ணி..., ரெடி பண்ணி...,ன்னு பேசும் பண்ணித்தமிழைப் பேசும்போது எரிச்சல் வருது நாரதா.

உங்கள் ஆதங்கம் சரிதான் தாயே! நானும் இந்த ”பண்ணி” தமிழைக் கேட்டிருக்கேன்.

விரைவில் தமிழ் அழிஞ்சிடுமோன்னு எனக்குக் கவலை வந்திட்டுது. இதுக்கு நாம என்னச் செய்யலாம்!? நீதான் ஊர் ஊராச் சுத்துறவன். என்ன பண்ணலாம்ன்னு சொல்லேன்!!

எனக்கும் விளங்கவில்லை தாயே! ஒண்ணு செய்யலாம்..., பூலோகத்தில் ராஜின்னு ஒரு பொண்ணு இருக்கு. அவ கவிதை, ஆன்மீகம்லாம் எழுதி நல்லா எழுதுறதா கொஞ்சம் நல்ல பேர் வாங்கி இருக்கா. அவக்கிட்ட கேட்டுப் பார்க்கலாமா!?

ம்ம் உன் யோசனைப்படியே செய். இப்பவே பூலோகம் சென்று ராஜியை அழைத்து வா!

ம்ம்ம் இதோ ஒரு நொடியில் வந்துவிடுகிறேன் தாயே!!

தாயே சரஸ்வதி! என் குடும்பத்தை காப்பாத்து. என் பசங்க நல்ல மனிதர்களாய் வளர்ந்து, நல்லாப் படிச்சு.., நல்ல பேர் வாங்கனும். என் பிளாக் நல்லா ஹிட்டடிக்கனும். இன்னொரு குடும்பமாய் அன்புக் காட்டும் என் வலைத்தள சகோதர, சகோதரிகள் அனைவரும் நல்லா இருக்கனும்.

அப்படியே அருள் செய்தோம் ராஜி!

நன்றி தாயே! ஏன் சோகமா இருக்கீங்க!? ஏதோ மன உளைச்சலில் இருப்பதாய் நாரதர் கூட சொன்னாரே!

அவங்கவங்க கவலை அவங்கவங்களுக்கு. உனக்கு உன் பிளாக், குடும்பம், வலைத்தள குடும்பம் பற்றிய நினைப்புப் போல, எனக்கு என் தமிழ் மீது கவலை. சீக்கிரம் அழிந்து விடுமோன்னு.

கவலைப்படாதீர்கள் தாயே! தமிழ் அவ்வளவு சீக்கிரம் அழியாது.

கேக்கவே சந்தோஷமா இருக்கு. ஆனா, எப்படி சொல்றே ராஜிம்மா!

இப்படி வாங்க. இந்த லேப்டாப்புல சில பதிவுகளைக் காட்டுறேன். அதைப் படிச்சுப் பார்த்தப் பின் உங்க கவலையைப் பற்றிச் சொல்லுங்க தாயே!

பொன்னியின் செல்வன் புத்தகம் படித்த மற்றும் ராஜராஜ சோழன் படம் பார்த்த அனைவருக்கும் மனசுக்குள் சோழனின் பிம்பம் ஓங்கி வானுயர நின்றிருக்கும். ஆனா, தமிழனாய் பிறந்த ஒரே குற்றத்திற்காய் அவனின் சமாதியின் இன்றைய நிலையை படிக்க நேர்ந்த போது மனசு கனத்தது. வெறும் பதிவாய் நாலஞ்சு படம் பார்த்த எனக்கே இந்த உணர்ச்சி என்றால் நேரில் சென்றுப் பார்த்த கரந்தை ஜெயக்குமார் ஐயாவின் மனநிலை எப்படி இருகும். கணித ஆசிரியரான இவர் தமிழ் மேல் கொண்ட காதலால் தூய தமிழில் பதிவெழுதி  வருகிறார். கண்ணகி, அகத்தியர் இல்லம்ன்னு இவரின் தமிழ் தேடலின் பட்டியல் நீளும். கரந்தைன்ற சொல்லுக்கு எனக்கு அர்த்தம் தெரியலை. அதை மட்டும் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.

ஊருக்குப் பெயரிடுவதற்கே நூத்தியெட்டு மரபு இருக்கு. ஆனா, நாம ஃபேஷன் என்ற பெயரால் வாயில் நுழையாதப் பெயர்களை வச்சுப் பசங்களைக் கூப்பிடுறோம். பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கும்போது நினைவில் கொள்ள வேண்டியவற்றை முனைவர்.இரா.குணசீலன் அழகா சொல்லி இருக்கார். கூடவே தமிழில் வெளியான வித்தியாசமான திருமண பத்திரிக்கை மாதிரிகளையும் கொடுத்துள்ளார்.

யவனராணி, கடல்புறா, கங்கைக் கொண்ட சோழபுரம் புத்தகம்லாம் படிக்கும்போது தமிழனின் கப்பல் கட்டும் திறனையும், கடற்பயணத்தையும் பார்த்து வியந்திருக்கேன்.  அதெல்லாம் ஜுஜுபின்னு சொல்லாமல் சொல்லுது வர்ணஜாலதின் படைப்பு .

பாலை, நெய்தல், குறிஞ்சின்னு எந்த இடத்துக்கு எந்த உடை அணியனும்!? துணியின் வகைகள் என்னன்னு நம் முன்னோர்கள் அழகாப் பட்டியல் இட்டிருப்பதை நமக்காக தமிழ் நிலா பகிர்ந்திருங்காங்க.

மது, மாது, சூதுடன் நடக்கும் இன்றைய விளையாட்டுகள் போலில்லாமல், யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே அண்ணன், தம்பி, மாமன், மச்சான், அக்கா, பாட்டியுடன் விளையாடும் தமிழர் விளையாட்டான தாயம் பற்றி கவிதா பகிரும் நினைவு.

பக்கத்து வீட்டு தாத்தா சாயந்தரமானா, திண்ணையில் உக்காந்து ஒரு விளக்கிலிருந்து கண்ணாடியை துடைச்சி, மண்ணென்னெய் ஊற்றி எரிய வைப்பார். அதிகமா வச்சா கண்ணாடிலாம் கருப்பாகிடும். அந்த விளக்கின் வெளிச்சத்தில் கைவிரலில் நாய்ப் போல விசிறிப்போல செஞ்சுப்பார்ப்பேன். அந்த நினைவுகளை தி.தமிழ் இளங்கோ ஐயாவின் பதிவு விசிறிவிடும். ஐயாவைப் பற்றிச் சொல்லனும்ன்னா தமிழ்ல முதுகலைப் பெற்றவர்.

முன்னலாம் பெண்கள் பசும் மஞ்சளை உரசி தாலிக்கயிறிலும், முகத்தில், கால்களில் பூசிப்பாங்க. இப்பலாம் மஞ்சளும் காணோம். தாலிக்கயிற்றையும் காணோம். தாலிக்கயிறுக்கு பதிலா செயின்ல மாங்கல்யத்தைக் கோர்த்துக்குறாங்க. சிலர் வெளில போகும்போது எடுத்து கழுத்துல மாட்டிக்கிட்டு, வீட்டுக்கு வந்ததும் கழட்டி வச்சுடறதுலாம் கூட நடக்குது. இந்த காலத்துப் பெண்களுக்கு தாலிக்கயிறின் மகத்துவத்தை சிவா வேல்சன் அழகா சொல்லி இருக்கார்.

நான் படிக்குற காலத்துல கட்டுரை எழுதி, மனப்பாடம் பண்ணி எப்படியோ பாஸ் பண்ணிட்டேன். ஆனா, தேமா, புளிமாலாம் வந்தா வயத்துல புளியைக் கரைக்கும். ஆனா,  ஐங்குறுநூறு, குறுந்தொகைக்குலாம் அனாயசமா மொழிப்பெயர்ப்பு பண்றாங்க கிரேஸ். இத்தனைக்கும் இந்தம்மணி சாஃப்ட்வேர் இஞ்சினியர். இப்பத்திய நிலவரப்படி இந்தம்மாதான் என் கடைக்குட்டி சகோதரி.

நாம் அன்றாடம் உபயோகிக்கும் சமையல் பொருட்களின் ஆங்கிலப் பெயர்களுக்கு அழகான தமிழ் பெயர்களைப் பட்டியலிட்டு சொல்கிறார் தேவமதி. இவர் ஒரு ஆசிரியர். எங்க ஊர்க்காரர்.

தமிழர்கள் பயன்படுத்திய காசுகளைப் பற்றியும், அதன் பெயர்கள், வரலாறுகள், அதை வெளியிட்ட மன்னன்களைப் பற்றி விளக்கி இருக்கார் நிர்மல்குமார் .

 கரகாட்டம்னாலே ஆபாசமாகிவிட்டது இன்றையக் காலக்கட்டத்தில்.., ஆனா அப்படியில்லன்னு அடிச்சு சொல்லி அதன் அருமை பெருமைகளை அழகான படத்தோடு கவிதையாக்கி தந்திருக்கார் மகேந்திரன் அண்ணா. வெளிநாட்டு வாழ் தமிழர். வித்தியாசமான கருப்பொருளோடு தமிழ்ல கவிதை வடிப்பார். ஆனா, இப்ப கொஞ்ச நாளா ஆளையேக் காணோம்.

கேர்ள், லேடின்னு இரண்டு வகையில் இருக்கும் பெண்ணின் பருவங்களை தமிழில் ஏழாய் பிரித்து எங்களுக்குச் சொல்கிறார் கம்மங்குடி

பெண்ணின் பருவ நிலையைப் போலவே ஆண்களின் பருவ நிலையையும்  வரலாற்று ஆதாரத்தோடு அலெக்ஸ் பகிர்கிறார்.

ஒரே கல்லில் வடிக்கப்பட்ட யானை, கல்லால் ஆன சங்கிலி என தமிழர்களின் சிற்பக்கலை தமிழகமெங்கும் நிறைந்து கிடக்கின்றது. அவற்றையெல்லாம் நாங்க பாதுக்காக்குறதில்லைன்னு குறைப்பட்டு அதை அழகான கட்டுரை மூலம் ஜெகநாதன் எங்களுக்கு நினைவுக் கூர்கின்றார்.

எங்க கஷ்டத்தை உங்களைப் போன்ற கடவுள்கிட்டச் சொல்ல கோவிலுக்குப் போவோம். அங்கப் போயும் மாமியார் கொடுமை, மச்சினன் தொந்தரவு, பக்கத்துவீட்டுக்காரி புடவைன்னு கதை பேசுவோம். இல்லாட்டி இந்தக் கோவிலுக்குப் போனா இது நடக்கும், அது நடக்கும்ன்னு பயந்து அந்தக் கோவிலுக்குப் போறதையே விட்டுடுவோம். ஆனா அது தப்புன்னுஅகிலேஷ்வரன் தங்கமணி பகிர்ந்துள்ளார். இவர் தளத்தில் நிறைய ஆன்மீக கருத்துகள் மற்றும் நல்ல விசயங்களைச் சொல்கிறார்.

தமிழர்கள் விருந்தோம்பலுக்குப் பேர் போனவங்க. அவங்க விருந்தோம்பலில் அறுசுவை உணவு கண்டிப்பாய் இருக்கும். அறுசுவை உணவினை வாழை இலையில் பரிமாறுவதுதான் அவர்களின் மரபு. வாழை இலையின் மகத்துவம், சாப்பாடு பரிமாறும் மற்றும் சாப்பிடும் முறைகளை சொல்லி இப்ப வாழையிலையின் விலைக் கண்டு மலைத்து நிற்கிறார் ஜி ஜி.

பெண் பார்ப்பதில் தொடங்கி மறுவீடு வரை தமிழர்களின் திருமண முறையில் பல சடங்குகள் உண்டு. அவற்றை வருங்கால சந்ததியினருக்கு நினைவூட்ட பதிந்திருக்கார் கதிரவன். கதை கவிதைன்னு செமையா கலக்குறார் இவர்.

நல்ல விசயங்களுக்கும், பெரிய மனிதர்கள் யாராவது வந்தாலும் ஆரத்தி எடுத்து வரவேற்பது நம் தமிழர்களின் மரபு. ஆரத்தி எதனால் செய்யப்படுவதுன்னு தொடங்கி ஆரத்தி எடுப்பதன் முறைகளை ஹரிஹரன் சொல்கிறார்.

வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா!? பெண்ணா! என்பதை அறிய ஆயிரக்கணக்கில் செலவு செய்து இன்று நாங்கள் தெரிந்துக் கொள்கின்றோம். ஆனா, எங்க முனோருகள் கர்ப்பிணியின் வயிறு, அவள் படுக்கும் முறை வச்சே என்னக் குழந்தைன்னு கண்டுப்பிடிச்சாங்கன்னு சசிதரன் வியந்திருக்கார். அவர் தளத்தின் தமிழனின் சிற்பக் கலை, கட்டிடக்கலையின் அழகை விவரித்திருக்கார். வெளியில் வர விருப்பமே இல்லை எனக்கு!! தொடர்ந்து எழுதுங்க சகோதரா!!

முருகன், விநாயகர், அம்பாள், பெருமாள்ன்னு ஆயிரம் இஷ்டத் தெய்வங்கள் உலகமெங்கும் இருந்தாலும் கூட ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனிப்பட்ட தெய்வங்கள் இருக்கும். அங்குதான் குழந்தைக்கு முஹ்டல் மொட்டை அடிப்பது, காதுக் குத்துவதுலாம் நடக்கும். அந்தக் குலத்திற்கான தெய்வங்களை வழிப்படும் முறைகளை ஜெயபாலன்   சொல்கிறார்.

எல்லா நாட்டு பெண்கள் கூடியிருக்கும் கூட்டத்தில் மூக்கு, காது குத்தி ஆபரணங்கள் அணிந்திருக்கும் விதத்திலேயே தமிழ் பெண்களை சீக்கிரம் கண்டுப் பிடிச்சுடலாம். பெண்கள் ஏன் காது, மூக்கு குத்தனும்ன்னு மணிகண்டன் சொல்றார்.

நான் சுட்டிக்காட்டிய பதிவுகளைப் படித்தப் பின்னுமா, தமிழ் சீக்கிரத்தில் காணாமல் போகும்ன்னு நினைக்கின்றீர்கள் தாயே!

இல்ல ராஜிம்மா! இந்த பதிவர்களின் தமிழ் சேவைக் கண்டு உளம் மகிழ்ந்தேன். தமிழ் இனி புத்துயிர் பெற்று வளரும்ன்னு நம்பிக்கைப் பெற்றுவிட்டது. உள்ளம் குளிர்ந்திருக்கும் வேளையில், என்னை மகிழ்வித்த உனக்கு என்ன வரம் வேண்டும். கேள் ராஜி!!

இன்று ”அனைத்துலக தாய் மொழி தினம்” தாயே! என் தமிழ் என்றும் மாறா அழகுடனும் இளமையுடனும் இருக்கனும். கூடவே தமிழ் போல நானும் இளமையா இருக்கனும்!! என் குடும்பத்தார், வலை உலக நட்பு உட்பட உலகத்தார் அனைவரும் சண்டைச் சச்சரவு இல்லாம ஒத்துமையா நோய் நொடி இல்லாம எல்லா வளமும் பெற்று வாழனும் தாயே!

ஒரு வரம் தவிர எல்லா வரமும் தந்தேன் ராஜி!

ஏன் தாயே அந்த ஒரு வரத்தை விட்டுவிட்டாய்!!?? அந்த வரம் என்ன!?

தமிழ் போல என்றும் நீ இளமையாய் இருக்க வேண்டும் எனக் கேட்ட வரத்தைதான் சொன்னேன். மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் மூப்பு வரும் இது இயற்கையின் நியதி.

அந்த இயற்கையின் நியதியையும் உடைக்கும் ஆற்றல் எங்கள் வலை உலக நட்புக்குண்டு. அவர்கள் என்னை என்றும் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பர். அதனால் எனக்கு என்றும் மூப்பு வராது!

ஆஹா! ராஜி உங்கள் ஒற்றுமை கண்டு மனம் மகிழ்ந்தேனம்மா!

நீ கேட்ட அத்தனை வரத்தோடும் பூலோகம் சென்று என்றும் இளமையோடு வாழம்மா!

வருகிறேன் தாயே!
மேலும் வாசிக்க...

Thursday, February 20, 2014

வருங்கால சினிமா பாடலாசிரியர் யார்!?

ட்ரிங்..., ட்ரிங்...., ட்ரிங்....,

ஹலோ!  ராஜி பேசுறேன்.

ராஜியக்கா! நான் சங்கர் பேசுறேன்.

சங்கர்ன்ற பேர்ல யாரையும் தெரியாதே! நீங்க புதுசா பிளாக் ஆரம்பிச்சிருக்கீங்களா!? வலைப்பூவோட பேர் என்ன!? வலைச்சரத்துல உங்க பிளாக்கை அறிமுகப்படுத்தச் சொல்லி இப்படிலாம் போன் போட்டு இம்சிக்கக்கூடாதுப்பா!

ம்க்கும், இந்த லொள்ளுதானே வேணாங்குறது!! நான் சினிமா டைரக்டர் சங்கர் பேசுறேன். ஜெண்டில்மேன், ஜீன்ஸ், சிவாஜி ப்டம்லாம் எடுத்தவன். இப்பத் தெரியுதா நான் யார்ன்னு!?

அடடா! நீங்களா!? நான் யாரோ பிளாக்கர்ன்னு நினைச்சுட்டேன். உங்கப் படத்துல ஹீரோயினா நடிக்கனுமா!? அழகும், திறமையும் இருந்தாலும் வயசு ஒத்து வரலியே! அக்கா, அண்ணி வேசத்துக்குன்னாலும் வீட்டுல ஒத்துக்க மாட்டாங்களேப்பா!

நினைப்புதான் பொழைப்பைக் கெடுக்குமாம். பாட்டி கேரக்டருக்கும்கூட நீங்க ஒத்து வரமாட்டீங்க.

அப்புறம் ஏன் எனக்கு போன் பண்ணீங்க!?

ஒரு உதவி வேணும் . அதான் போன் பண்ணேன்.

என்ன உதவி!? என்னால முடிஞ்சதைச் செய்யுறேன்.

அதாவது, நான் அடுத்து எடுக்கப் போகும் படத்துக்கு பாட்டெழுத ஆள் வேணும். அதான் உங்கக்கிட்ட கேக்கலாம்ன்னு வந்தேன்.

சாரிப்பா! இப்பலாம் எனக்குக் கவிதை எழுத மூடே வர மாட்டேங்குது. இதுல சினிமாப் பாட்டு எப்படி எழுதுறது!??

(இது எப்பவுமே இப்படிதானா!? தப்புத் தப்பாவே புரிஞ்சுக்குது!!) ஐயோ! ராஜியக்கா, நான் கேட்க வந்தது, உங்க சர்க்கிளில் நல்லா கவிதை எழுதுற ஆள் யாராவது இருந்தா சொல்லுங்கன்னு கேக்க வந்தேன்.

ஓ! அப்படியா!! எனக்குத் தெரிஞ்சு நிறையப் பேர் நல்லா கவிதை எழுதுவாங்க. எல்லோரும் எனக்கு வேண்டப்பட்டவங்களே! இதுல யாரைன்னு நான் சிபாரிசுப் பண்ண!? ஒருத்தரை சொன்னால் அடுத்தவங்களுக்குக் கோவம் வரும். அதனால, நான் நல்ல கவிதைகள் லின்க் தரேன். நீங்க போய் பார்த்து உங்களுக்கு பிடிச்சமானவங்களைச் செலக்ட் பண்ணிக்கோங்க.

ம்ம்ம் இது நல்ல ஐடியாக்கா! எங்க சொல்லுங்க. நான் குறிச்சுக்குறேன்.

மெத்தப் படித்த படிப்பாளிகள் கூட கைநாட்டு பேர்வழியாய் மாறிப்போன சோகத்தைச் சொல்லும் மோகனனின் கவிதைகள்.

புரோட்டான் நியூட்ரான் ன்னு சைன்ஸ் சம்பந்தமா முத்துக் கண்ணன் எழுதி இருக்கும் கவிதைகள்.

கொசுவை பாட்டுடைத் தலைவியாக்கி கவிதைவீதி சௌந்தர் எழுதிய கவிதை. இவர் ஜோக் மற்றும் நகைச்சுவைப் படங்களைலாம் கூட போடுவார். சண்டையும் நல்லா போடுவார். நீங்க பார்த்த லொக்கேஷன் சரியில்லாட்டி நல்ல நல்ல லொகேஷன்லாம் சொல்வார்.

கவிதைன்னா கவியாழி கண்ணதாசன் அண்ணன். மகிழ்ச்சியான இல்லற வாழ்வுக்கு அண்ணன் தரும் டிப்ஸைப் படிச்சுப் பாருங்க.

சின்ன வயசானாலும் முதியோர் இல்லத்தை பத்தின ரஞ்சித்மோ கவிதைகள்.

100 கிலோ வெயிட்டான காதலியை இருக்குறவன் கூட, சுகமான சுமைன்னு வர்ணிச்சு கவிதை எழுதுவான். ஆனா, என் தம்பி அரசன் மட்டும்தான் பாரம் கனக்குதுன்னு கவிதை எழுதி இருக்கான். வித்தியாசமா இருக்கும். படிச்சுப் பாருங்க. கூடவே சொந்தக் கிராமத்தைப் பத்தின அவனோட அனுபவங்களையும் பகிர்ந்திருப்பான். அதையும் படிச்சுப் பார்த்து உங்கக் கதைக்குத் தேவையானதா இருந்தா பயன்படுத்திக்கோங்க.

தமிழ் தேவதையையும், ஆங்கில தேவதையையும் ஒரு சேர விரும்பும் சிமரிபாவின் சாமர்த்தியம்.


அப்பா, அம்மாவைக்கூட மதிக்காத இந்தக் காலத்துல பாட்டியம்மாவைப் பற்றி கவிதாயினி சத்யா எழுதியக் கவிதை.

சொன்னால்தான் காதலா!?ன்னு கேட்குற ஆட்களுக்கு காதல்ன்னா சொல்லித்தான் ஆகனும்ன்னு ஓங்கி நச்சுன்னு மண்டையில் அடைச்ச மாதிரி  சொல்லும் சுகுமாரின் கவிதை.

உறவுகளின் உன்னதத்தை ஒரு கவிதையில் அடக்கிய பிரஷா எழுதிய கவிதை.

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தாகம். அந்த தாகத்தை அழகாய் பட்டியலிட்ட சிவக்குமாரனின் கவிதை

ஆயிரம் இம்சை இருந்தாலும் காதல் செய்யனும், கல்யாணம் செய்யனும்ன்னு நினைச்சு கடவுளை வேண்டுவோர் மத்தியில் பிரம்மச்சரியாய் வாழ விடுன்னு கடவுள்கிட்ட கெஞ்சும் நடராஜனின் கவிதை

விஞ்ஞான வளர்ச்சியினால் அதிக நன்மையா!? தீமையான்னு கேட்டு நம்மை குழம்ப வைக்கும் சுதர்சனின் கவிதை.

பெண்களுக்கு இள வயது ஆண்களை விட, வயது முதிர்ந்த பெருசுகளால் தான் அதிகத் தொல்லை. இதை கன்னத்தில் அறையுற மாதிரி சொல்லும் பிறைநிலா 

காகிதத்துல கவிதை எழுதுறதைப் பார்த்திருப்பீங்க. ஆனா, காகிதத்தைக் கவிதையாக்கிய அதிசயம் செய்தவர்தான் இந்த ராம்பிரசாத்.

காதலி மேல் என்னக் கோவமோ தெரியலை!! முகம் துடைக்க கார் துடைத்த துணியைக் கொடுத்ததுமில்லாம அதை கவிதையாக்கிய தைரியசாலி சுகப்பிரியன்

மேலதிகாரிக்குக் கீழ்படியும் ஊழியரும், சாவிக் கொடுத்தால் ஆட்டம் போடும் நாய் பொம்மையும் ஒண்ணுன்னு சொல்லாமல் சொல்லும்   என்.விநாயக முருகனின் கவிதை.

ஒரு இழவு வீட்டினை நம் கண் முன்னே படம் பிடித்துக் காட்டும் மயாதியின் கவிதை.

சுதந்திர இந்தியாவைக் குழந்தையாக்கி அதை எப்படிலாம் பார்த்துக்கனும்ன்னு யாழினி சொல்லும் அறிவுரைகளைக் கேட்டு அதன் படி நாம நடக்கலாம்.

என்னதான் பசங்கலால பல இம்சைகள் பட்டாலும் உறவு முறை அல்லாது மற்றவர் குழந்தைகளின் மழலைகள் கூட நம்மால் ரசிக்கப் படுது. மழலையின் தேன் சிந்தும் மழலைப் பேச்சை அழகான சின்ன சின்ன கவிதையாய் சொல்லி இருக்கார் பூங்குன்றன்.

பெண்ணாய் பிறப்பதே பாவம், இனி பெண்ணய் பிறக்கக் கூடாதுன்னு நாம அலுத்துக்குறோம். சாதாரணப் பெண்ணுக்கே இந்த நிலைன்னா!! விலை மகளிருக்கு!?  தன்னை மீட்க கடவுளிடம் வரம் கேட்கும் விலை மகளிரின் உணர்வை உருக்கமாய் வடித்திருப்பாங்க. தேன் மொழி.

ஒவ்வொரு பெண்ணும் பல அவதாரமெடுக்கிறாள். அதிலும் மனைவியானவள்!? மனைவியின் முப்பரிமாணத்தை சொல்லிச் செல்லும் தம்பி சாய்ரோஸின் கவிதை.

சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்கு பின் மாத்திரைகளை சாப்பிடும் ஆட்களையும், மணிக்கொரு முறை மாத்திரை சாப்பிடுறவங்களையும் பார்த்து, ஐயோ பாவம்ன்னு நினைச்சிருக்கேன். அதையே, கவிதையா வடிச்சிருக்கார்  ராமகுருநாதன். 

என்னதான் படோபடமா இருந்தாலும் நீங்க மனசால அழுக்குள்ளவஙக்ன்னு கன்னத்தில் அறைந்து சொல்லும் கவிதைக்கு சொந்தக்காரர் சக்தி .

கண்ணும் கருத்துமாய் பெற்று வளர்த்தப் பிள்ளைகளை தூர தேசம் அனுப்பி பெருமைப்பட்டுக்கொண்டே, மனசுக்குள் வருந்தும் பெற்றோரின் அவல நிலையை சொல்லும் ஒருவனின் கவிதை.

இந்த நாளாஇ எப்படிச் செலவழிச்சோம்ன்னு நமக்கு மட்டுமே தெரியும். நாம் வீணடித்த நாள் நம்மை ஊசிப்போல குத்துவதை கிழிக்கப்பட்டு எறிந்த நாட்காட்டியின் வாயிலாய் சொல்கிறார் தேவதூதன்.

வயாதான காலத்திலயும் வேலை செய்து வயத்துப் பாட்டைக் கவனிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கும் முதியோர்களை பார்த்து நான் தமிழன் வடித்த கவிதை.

தன் இணையோடு எப்படியெல்லாம் வாழனும்ன்னு ஆசைப்பட்டு கண்ணன் பெருமாள் எழுதிய கவிதை.

வலி, இழப்பு, பிரிவுன்னு ஆயிரம் கஷ்டங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றும் மரணத்தை நாம ஏன் தவறா புரிஞ்சுக்கனும்ன்னு கேள்விக் கேக்கும் காலப்பைரவனுக்கு நீங்களாவது படிச்சுப் பதில் சொல்லுங்க.

அடுத்து..,

அக்கா! ராஜியக்கா! போதும் போதும்  இப்பவே எனக்கு கண்ணைக் கட்டுது. ஏற்கனவே நான் ஒரு படத்தை முடிக்க நாலு வருசம் ஆகுது!! இவங்களையெல்லாமே நான் படிச்சு, அர்த்தம் புரிஞ்சு, அதுல நல்லா எழுதுற ஆளை நான் தேர்ந்தெடுக்குறதுக்குள்ள என் ஆயுசே முடிஞ்சுப் போகும்.

உங்க உதவிக்கு ரொம்ப நன்றிக்கா! கூடிய சீக்கிரம் யார் அந்த அதிர்ஷ்டசாலின்னு சொல்றேன். பைக்கா! போனை வச்சுடுறேன்.

சரிப்பா!  எனக்கும் பதிவு போட டைம்மாச்சு! பை!

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது