பெண்மை போற்றுவோம்! வலைச்சரத்தில் பெண்பூக்கள்!
➦➠ by:
தளிர் சுரேஷ்
பெண்மை போற்றுவோம்!
பெண்ணும் பூவும்
ஒன்றுதான்!
மென்மையானவர்கள்!
பெண்ணும் இரும்பும்
ஒன்றுதான்!
வலிமையானவர்கள்!
பெண்ணும் கடலும்
ஒன்றுதான்!
ஆழம்
அறியமுடியாதவர்கள்!
பெண்ணும் பனியும்
ஒன்றுதான்!
இலகுவாய் கரைபவர்கள்!
பெண்ணும் நிலவும்
ஒன்றுதான்!
குளிர்ச்சியானவர்கள்!
பெண்ணும் கண்ணும்
ஒன்றுதான்!
போற்றப்படவேண்டியவர்கள்!
பெண்ணும் நிலமும் ஒன்றுதான்!
பொறுமையானவர்கள்!
ஆயிரம்தான் ஆண்
சம்பாதித்து போட்டாலும்
பெண்ணில்லா வீடு
நீறில்லா கேணி போலத்தான்!
இக்காலத்தே
ஆண்களுக்கு நிகராய் மட்டுமல்ல! அதற்கும் மேல்
பெண்கள் உழைக்கிறார்கள்!
குடும்பத்தை காக்கிறார்கள்!
தவமாய் தவமிருந்து
பெற்ற பிள்ளையைக் கொஞ்சக்கூட
நேரமின்றி பணிக்கு
சென்று குடும்பம் வளர்க்கும்
பெண்களை நானறிவேன்!
பெண்களையும்
பெண்மையையும் போற்றுவோம்!
வலையுலகில்
கலக்கிவரும் சில பெண் வலைப்பதிவர்களை
இனி காண்போம்!
ஜெசீலாவின்கிறுக்கல்கள் என்ற தளத்தில் திரைவிமர்சனம், புத்தகவிமர்சனம், என்று பல்சுவை தகவல்களை எழுதுகிறார் ஜெசீலா பானு. அவரது இந்த புத்தகவிமர்சனம் எளிமையாக இருக்கிறது! படியுங்கள் படியுங்கள்இவரது திரைவிமர்சனம் ஒன்று திரைவிமர்சனம்
வலையுலகில் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி வருகிறார் துளசி கோபால்! இது ஒரு சாதனையான விசயம்! எழுத்து ஒருசமயம் கசக்க ஆரம்பித்துவிடும் சிலருக்கு! வற்றாத ஆர்வம் கொண்டவரால் இவ்வாறு பத்தாண்டுகளாய் எழுத முடியும். இவரைப்பற்றி கேள்விப்பட்டு இருந்தாலும் இந்தப்பதிவிற்காகத்தான் இவரது தளம் நாடிச்சென்றேன்! இதோ இவரது இந்தப்பதிவை வாசியுங்கள்!
நாச்சியார் தளத்தில் எழுதிவருகிறார் வல்லிசிம்ஹன்! பலவிருதுக்களுக்கு சொந்தக்காரர். இவரின் இந்த பதிவினை படித்து ரசிக்காமல் இருக்க முடியாதுஎதுக்கும் எச்சரிக்கையோடு இந்தப்பதிவை படியுங்கள்
ஆதிவெங்கட் சாப்பிட வாங்க என்ற வலைப்பூவில் சூப்பர் சமையல் குறிப்புக்கள் எழுதிக்கொண்டிருந்தார். இப்போது ஏனோ எழுதுவது இல்லை! தற்சமயம் கோவை டூ டெல்லி வலைப்பூவில் பல்சுவை எழுதுகிறார் அவரது இந்தப்பதிவை படியுங்கள்! புகைப்படக்காரர்
முத்துச்சரம் என்ற வலைப்பூவில் பல்சுவை விசயங்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறார் ராமலெஷ்மி அவரது இந்தப்பதிவை ரசியுங்கள்
பூந்தளிர் என்ற வலையில் தியானா கைவினைப்பொருட்கள் செய்து கலக்குகிறார் உதாரணத்திற்கு ஒன்று கைவினை
எண்ணங்கள் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார் கீதா சாம்பசிவம்! பயணக்கட்டுரை, ஆன்மீகம், அனுபவங்களை சுவாரஸ்யமாக பகிர்கிறார் இதோ இதை படியுங்கள்!
தமிழ் சுஜாதா தளத்தில் எழுதி வந்த சுஜாதா புத்தகவிமர்சனங்கள் அதிகமாக எழுதியுள்ளார் சிறுவர்களுக்கான கதைக்களங்கள் குறித்த இந்தப்பதிவு என்னைக்கவர்ந்தது
மழை என்ற தளத்தில் எழுதி வந்த அமிர்தவர்ஷினி அம்மா இப்போது எழுதுவதில்லை! சாமி சாமிசாமிதான் என்ற இந்தப்பதிவு சரளமாக இவருக்கு எழுதவருவதை உணர்த்துகிறது
சாஷிகா என்ற தளத்தில் எழுதிவரும் மேனகா சத்யா இங்கு ஹார்ட் ஷேப் முறுக்கு சுட கற்றுத்தருகிறார் ஹார்ட்ஷேப் முறுக்கு!
நேசம் என்ற வலைப்பூவில் புற்றுநோயை கண்டறிந்து கலைவோம் என்ற வாசகங்களோடு எழுதிவந்த விஜி மயில் வலைப்பூவில் காமெடியில் கலக்கிவந்தார் இப்போது எழுதவில்லை இவரது இந்தப்பதிவை வாசியுங்கள்!
வலையல் பெண் என்ற தளத்தில் எழுதி வரும் உதயகுமாரி கிருஷ்ணனின் இந்த சிறுகதை சுடுகிறது!
மழைமேகம் என்ற
தளத்தில் எழுதிவரும் சுந்தராமுத்துவின்
பதிவுகள் ரசிக்கவைக்கின்றன இதோ கூட்டாஞ்சோறு!
ரம்யம் என்ற வலைப்பூவில் எழுதிவருகிறார் மாதேவி இவரது இந்த இடுகையை படித்துப் பாருங்கள்!
வனப்பு என்ற தளத்தில் எழுதி வரும் சந்திரகவுரி
வீட்டுக்குறிப்புகள் யோசனைகள் நிறைய தருகிறார் இதோ சில வீட்டுக்குறிப்புக்கள்! சோறு பற்றிய இவரின் பதிவு இது முழுமையான உணவு!
திருமதி
ரஞ்சனி நாராயணன் வேர்ட்பிரஸ் தளத்தில் எழுதிவருகிறார் செல்வக்களஞ்சியமே! தொடரில்
இவர் எழுதும் குழந்தை வளர்ப்பு முறைகள் இளைய தம்பதியினருக்கு உதவும்.
இவரது இன்னொரு பதிவு இது!
விஜிக்குமாரி சின்னு ஆதித்யா என்ற தளத்தில் எழுதுகிறார். இவரது பதிவெழுதும் வேகம் வியக்க வைக்கிறது. என்னால்தான் படிக்க முடிவதில்லை! இதோஒன்று!
சித்ராசுந்தர்ஸ் ப்ளாக்கில் எழுதும் இவரது பதிவுகள் நகைச்சுவை ததும்புகிறது இதைப்படியுங்கள் கார் ஓட்டத்தெரியுமாவா?
எண்ணத்தூரிகை தளத்தில் எழுதி வரும் மீரா லக்ஸ்மன் கவிதைகளும் கதைகளும் வடிக்கிறார் இதோ இதைப்படியுங்கள்!
உஷா அன்பரசு வேலூரில் இருந்து எழுதுகிறார் தினமலர் வாரமலர் பெண்கள் மலரில் இவரது படைப்புக்கள் பிரபலம்! பல்சுவை எழுத்தாளர் இவரது இந்தப்பதிவு சிரிக்கவைக்கும்!
நினைவுகள் தளத்தில் எழுதும் அபயா அருணாவின் இந்த லாஜிக்கை புரிஞ்சுக்க முடியலை!
காணாமல் போன கனவுகள் தளத்தில் எழுதும் ராஜி அவர்கள் பல்துறை வித்தகர்! அனைத்திலும் அசத்துவது இவர் சிறப்பு! பயணக்கட்டுரை, சமையல், கைவினை, கவிதை, ஆன்மீகம் என அசத்துகிறார் இவரது இந்த தொடர் படிக்கத்தவறாதீர்கள் மௌன சாட்சிகள்
இன்னும் நிறைய சொல்ல ஆசைதான்! பிறிதொரு சந்தர்ப்பம் கிடைத்தால்
பார்ப்போம்! இவர்களின் தளங்களுக்கு சென்று உற்சாகப்படுத்துங்கள்! வாழ்த்துங்கள்!
மீண்டும் நாளை சந்திப்போம்!
|
|
வளையல் பெண் - உதயகுமாரி கிருஷ்ணன் தளம் மட்டும் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
தமிழ்மணம் இணைத்தாகி விட்டது... +1 நன்றி...
தமிழ் மணம் இணைத்தமைக்கு நன்றி நண்பரே! எந்த தளம் சென்றாலும் அங்கு உங்கள் பின்னூட்டம் இருக்கும்! நீங்கள் இல்லாத இடமெது அன்பரே! நன்றி!
ReplyDeleteஎன்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தில் எனது செல்வ களஞ்சியமே தொடரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
ReplyDeleteஎத்தனை எத்தனை பெண்கள் வலைபதிவு எழுதுகிறார்கள், அவர்களது திறமை வியக்க வைக்கிறது. பாதி தெரிந்தவர்கள்; மீதி உங்கள் மூலம் இன்று அறிமுகமாகியிருக்கிறார்கள். சீக்கிரம் எல்லோரையும் படித்து வருகிறேன்.
செய்தி சொன்ன DD அவர்களுக்கு நன்றி!
மிக நன்றி. செய்தியைத் தருவதில் திண்டுக்கல் தனபாலனை மிஞ்ச முடியாது. நன்றி உங்களுக்கும் அவருக்கும். மிக சுவையான அறிமுகங்கள்.
Deleteஎன்னை அறிமுகபடுத்திய வலைச்சர ஆசிரியருக்கும்,தெரியபடுத்திய டிடி அவர்களுக்கும் மிக்க நன்றி,அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள். எனது வலைப்பூவின் அறிமுகத்துக்கு நன்றி. தகவல் தந்த தனபாலன் அவர்களுக்கும் நன்றி.
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்.... வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்னுடையை வலைத்தளத்தை இங்கு அறிமுகபப்படுத்திய ஆசிரியர் தளிர் சுரேஷ் அவர்களுக்கும், அதனைத் தெரியப்படுத்திய தனபாலன் அவர்களுக்கும் நன்றி பல. அறிமுகமான அனைத்து பெண் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete+1 நல்ல அறிமுகம்!
ReplyDeleteஎன் வலைத்தளத்தின் அறிமுகத்திற்கு நன்றிகள் தளிர் சுரேஷ்!
ReplyDeleteதகவலுக்கு நன்றிகள் தனபாலன் சார்!
.நிறைய புதிய தளங்கள்,தொடர்ந்து கலக்குங்கள் சுரேஷ் அண்ணா
ReplyDeleteஇன்றைய பெண்கள் சிறப்பு சரத்தில் அறிமுகமான அனைவருமே நல்ல சிறந்த பதிவர்கள். நன்றி!
ReplyDeleteதமிழ்மணம் +1
ஆடம்பர அலங்காரச் சொற்கள் இல்லாமல், உண்மையை உரைத்தபடி வலைச்சரத்தில் பெண் பூக்கள் அறிமுகம் சிம்பிள் அண்ட் ஸ்வீட்.
ReplyDeleteநன்றிகள்.
என் வலைத்தளத்தின் அறிமுகத்திற்கு நன்றிகள் சுரேஷ்
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கள்...
அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி சுரேஷ். செய்தியைக் கொடுத்த டிடிக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஎனதுபதிவுகளை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி தனபாலன்
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் அனைவருக்கும்...
ReplyDeleteஇன்றைய அறிமுக வலைப்பூவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள், தங்கள் வழியாக.
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள் ! அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும்
ReplyDeleteவாழ்த்துக்களும் .மிக்க நன்றி சகோதரா பகிர்வுகளுக்கு .
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஎனது துணைவியின் தளத்தினையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
மிக்க நன்றி நண்பரே..நன்றி திண்டுக்கல் தனபாலன் :)
ReplyDelete