வலைச்சரத்தில் தொழில்நுட்பம்!
➦➠ by:
தளிர் சுரேஷ்
வலைச்சரத்தில் தொழில்நுட்பம்!
விஞ்ஞானம் மேலே விண்ணையும்
கீழே பூமியையும் முட்டி நிற்கிறது!
விண்ணில் செலுத்தும் கோள்கள்
அங்கு இருக்கும்
கோள்களை ஆள்கின்றன!
விவசாயத்தில் புரட்சியை
ஏற்படுத்திய விஞ்ஞானம்
இன்றோர் வீழ்ச்சிக்கும்
வழிவகை செய்துவிட்டது!
மரபுமாற்றி பயிரிடப்படும்
பயிர்களால் அழிகிறது
தொல்லினம்! தொலைகிறது
நோயில்லாவாழ்வு!
அனுதினம் ஓர் புதிய நோய்!
அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது
உலகினை! மருந்துகள் ஆயிரம்
கண்டறிந்தாலும்
மன அமைதியில்லா ஓர்
வாழ்க்கை!
அன்று நோய்கள் மனிதரை
பயப்படுத்தின! இன்றோ
மருந்துகளும்
மருத்துவமனைகளும் பயப்படுத்துகின்றன!
இயற்கையோடு இயைந்த வாழ்வு!
செயற்கையாகி போனதால் தாழ்வு!
இணையமும் தொழில் நுட்பமும்
இணைந்தவை!
ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை!
இதில்
எந்த மாற்றமும் இல்லை!
இதோ இணையத்தில் தொழில்நுட்ப
மருத்துவர்கள்!
இவர்களை இன்று சந்திப்போம்!
நம் வலையின்
நோய்களை தீர்த்துக் கொள்வோம்!
தொழில்நுட்பம் என்ற தளத்தில்
தங்கம் பழனி எழுதும் கட்டுரைகள் மிகவும் பயனுள்ளவை! உங்கள் ப்ளாக்கின்
டெம்ப்ளேட்களை மாற்றி அமைக்கணுமா? இதைப்படியுங்கள்! புதிய டெம்ப்ளேட்டுகள்
தமிழ்நுட்பம் என்ற தளத்தில்
படித்த இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை! கூகுள் கண்ணாடி இதே தளத்தில் ஓர் எச்சரிக்கை செய்தி!
கல்விக்களஞ்சியம் என்ற
தளத்தில் படித்தது இது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன் பிற மொழிகளில் டைப் செய்யஆங்கிலம்
தவிர பிறமொழிகளில் டைப் செய்யஉதவும் கலாம் கற்றபாடமாக ஒரு இடுகை! கலாம் கற்றபாடம்
புத்திசாலி என்ற தளத்தில்
புதிர்கள் போடுகிறார் இவர் நண்பருக்கு சவால்!உங்கள் நண்பரை சவாலுக்கு அழையுங்கள்!
தகவல்தொழில்நுட்பம் என்ற
தளத்தில் நிறைய தகவல்கள் விரவிக்கிடக்கின்றன உதாரணத்திற்கு ஒன்று!
கணித்துளி என்ற தளத்தில்
எழுதிவரும் அமிர்தராஜ் பலரின் சந்தேகத்தை தீர்த்துவைக்கிறார் மாயமாகும் மெகா பைட்டுக்கள்
குனு-லினக்ஸ் தளத்தில்
எழுதும் கதிர்வேல் லினக்ஸ் ஆர்வலராம் லினக்ஸ் பற்றி நிறைய எழுதுகிறார்!
பொன்மலர் பக்கங்களில் நிறையக்
கற்றுக்கொள்ளலாம்! கூகுள்பிளஸ் பற்றி அறிந்துகொள்ள கூகுள் பிளஸ் அப்டேட்ஸ்
தமிழ்கணிணிக் கல்லூரி
தளத்தில் சிறப்பான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன பதிவு திருட்டினை தவிர்க்க இதை படியுங்கள்! சோதிட மென்பொருள்கள் பற்றி அறிய
அன்பைத்தேடி என்னும் தளத்தில்
வலைப்பூ தொழில்நுட்பத்தை அள்ளித்தருகிறார் அன்பு இதோ ஒன்று!
எளிய தமிழில் கணிணி தகவல்
தளத்தில் இந்த தகவலை அறிந்தேன்! அறிந்தேன்! Anasgrafix என்ற தளத்தில்
எழுதிவரும் அனாஸ் அப்பாஸ் ஆண்ட்ராய்ட்இல் தமிழ் எழுதப்படிக்க கற்றுத்தருகிறார்
இங்கு
ஆண்ட்ராய்டில் தமிழ் எழுத இது நிறைய பேருக்கு உதவும் என்று
நினைக்கிறேன்! எப்படி? இண்டர்நெட் மோடம் அன்லாக் செய்வது ?
எளியதமிழில் டேலி
கற்றுத்தரும் ராஜாவின் இந்தப்பதிவை படித்து பாருங்கள்! எளிய தமிழில் டேலி!
விண்மணி தளத்தில் படித்த இந்த
தகவல் பயனுள்ளது!
கற்போம் என்ற இணைய மாத இதழில்
பிரபு கிருஷ்ணா கூறும் இந்த பத்து தவறுகள் உங்களிடம் இருந்தால்
பதிவர்கள் செய்யும் பத்து தவறுகள்திருத்திக்கொள்ளுங்கள்!
இவர் ப்ளாக்கர்களின் நண்பர்
எத்தனை தகவல்கள் இவரிடம் கொட்டிக்கிடக்கின்றன தமிழ் வலைப்பூ எழுதி சம்பாதிக்க
வேண்டுமா? இதைப்படியுங்கள்! நீங்கள் ப்ளாக்கரில் டொமைன் வைத்திருந்தால் இந்தப்பதிவை படியுங்கள்! டொமைன் பிரச்சனை!
தமிழில் புகைப்பட கலை என்ற
தளத்தில் புகைப்படக் கலையை கற்றுத்தருகிறார்கள் இதோ!
தமிழ்வாசி பிரகாஷ் இனிய
நண்பர்! வலைச்சர ஆசிரியக்குழுவினர். இவரது பதிவுகள் சிறப்பானவை வலைச்சரத்தில்
வாரம் ஒருவர் எழுதுகிறோம் எப்படி? சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறார் இங்கே! வலைச்சரத்தில் எழுதுவது எப்படி?
பொங்கல்வாழ்த்து அட்டையை
இணைப்பது எப்படி? கற்றுத்தருகிறார் இங்கே!
புதிதாக வலைப்பூ தொடங்க
ஆசையா? இந்தத்தொடர் உதவும்!
சுதந்திரமென்பொருள் தளத்தில்
எழுதும் பிரபு நிறைய தொழில்நுட்ப தகவல்கள் தருவார் கூகுள்+ல் நிறைய எழுதுகிறார்
இவரது இதை படித்துப்பாருங்கள்!
நவ்சின் கானின் தமிழ்
கம்ப்யூட்டர் டிப்ஸ் மிகவும் பயனுள்ளவை இதோ ஒன்று தமிழ் எழுத்துருக்கள்
இந்த தளங்கள் உங்கள் கணிணி தொழில்நுட்பத்தை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்! இந்த தளங்களுக்கு சென்று கருத்துக்களை தெரிவியுங்கள்! ஊக்கப்படுத்துங்கள்! மீண்டும் அடுத்தபதிவில் சந்திப்போம்! அநேகமாக அது இன்று மாலையில் இருக்கலாம்! நன்றி!
|
|
வணக்கம்
ReplyDeleteஅனைவருக்கும் பயன் பெறும் வகையில் இன்று நல்ல வலைத்தளங்கனை அறிமுகம் செய்துள்ளிர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகினே் பதிவுகளை.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல பதிவு: தமிழ்மணம் +1
ReplyDeleteபுதிய நோக்குடன் நல்லப் பதிவு
ReplyDeleteஅறியாத சில தளங்கள்...
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
சுதந்திரமென்பொருள் தள இணைப்பையும் மட்டும் சிறிது சரி செய்து விடுங்களேன்... நன்றி...
ReplyDeleteநன்றி டிடி! தவறு சரிசெய்துவிட்டேன்! கவனத்தில் கொண்டுவந்தமைக்கு நன்றி!
Deleteதமிழ் நுட்பம் தளத்தையும், ப்ளாக்கர் நண்பன் தளத்தையும் அறிமுகப்படுத்துயதற்கு நன்றி நண்பரே!
ReplyDeleteவலைச்சரத்தில் தங்கள் பதிவில் என் தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி..
ReplyDelete-அன்புடன்-
S. முகம்மது நவ்சின் கான்.
tamilinfotech தளத்தை அறிமுகப்படுத்திய அன்பருக்கு நன்றி !!!
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுப செய்தியை கொண்டுவந்த சகோதரர் திண்டுக்கல் தனபாலனுக்கும் தகவல் தொழில்நுட்பத்தின் நன்றிகள்.
எல்லாமே பயனுள்ள தளங்கள். பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteசிறப்பான தளங்களை அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கும்
ReplyDeleteஅறிமுகமான அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .மிக்க
நன்றி சகோதரா .
த.ம. 4
ReplyDeleteதொழில் நுட்பத் தகவல்கள் நிரம்பிய பதிவுகளை அறிமுகப்படுத்தினீர்கள். நன்றி!
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteபயனுள்ள தளங்கள்.
பதிவில் இடம்பெற்றிருக்கும் அனைத்து தளங்களும் பயனுள்ளவை. தொழில்நுட்பம் தளத்தினையும் பதிவில் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி திரு. "தளிர்" சுரேஷ் சார்..
ReplyDeleteவாழ்த்துக்கள்...!!
வலைச்சரத்தில் என்னுடைய வலைப்பூவை அறிமுகப்படுத்தி தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteசில தொழிற்நுட்ப வலைப்பூக்கள் எனும் தலைப்பில் ஏற்கனவே என்னுடைய வலைப்பூவை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். இப்பொழுது இரண்டாவது முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. தங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.
என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
ReplyDelete