அன்பின் பூ - ஆறாம் நாள்
➦➠ by:
மஞ்சு பாஷினி
அன்பு வணக்கங்கள் எல்லோருக்கும்
இப்பவும் ராத்திரி குழந்தைகளுக்கு கதை சொல்லித் தூங்கவைக்கும் பழக்கம் எங்காவது இருக்கிறதா? ஆமாம் என்றால் அந்த குழந்தை கண்டிப்பாக சிறு வயதில் இருந்தே க்ரியேட்டிவிட்டியோடு நல்ல பண்புகளும் புத்திக்கூர்மையுமாக வளரும் என்பது கியாரண்டி. அப்படின்னா கதைக்கேட்காத பிள்ளைகள் எல்லாம் கெட்டுப்போகும் பிள்ளைகளா என்று கேட்கக்கூடாது. பிள்ளைகள் சிறுவயதில் நாம் சொல்லும் கதைகளை விஷனாக்கி கண்முன் ஒரு கற்பனை உலகத்தை சிருஷ்டித்துக்கொண்டு ராஜா ராணி டைனோசர் இப்படி நாம் சொல்லும் கதைகளின் கதாப்பாத்திரத்தை கண்முன் கொண்டு வந்து களிக்கும். கதையின் முடிவில் நாம் சொல்லும் மாரல் ஆஃப் த ஸ்டோரி கண்டிப்பாக குழந்தைகள் மனதில் நிலைத்து நிற்கும். நல்ல பண்புகள் சொன்னால் புரிந்துக்கொள்ள வயதில் இல்லாத குழந்தைகளுக்கு எப்படி ஊட்டுகிறோம்? அமுதுடனா? இல்லை நல்ல கதைகளுடன். நாம் நல்ல கதைச்சொல்லியாக இருந்தால் பிள்ளைகள் அதைவைத்து இன்னும் அட்வான்ஸ்டாக செயல்படும் புத்திக்கூர்மையை வளர்த்துக்கொள்வார்கள் என்பது உறுதி. விளையாட வெளியே விட்டால் குழந்தைகள் அழுக்காக வரும் என்று விளையாட விடுவதில்லை ஒருசில பெற்றோர் குழந்தைகளை. விளையாடினால் குழந்தைகளுக்கு மெமரி பவர் அதிகரிப்பதாக நான் ஒரு புத்தகத்தில் படித்தேன். அதோடு மட்டுமல்ல. தோழமை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளும் ஏற்படும். அதை விட்டு வீட்டுக்குள் முடங்கிக்கொண்டு கம்ப்யூட்டர், ஐபோட் லேப்டாப் முன்பு குழந்தைகள் கேம்ஸ் ஆடிக்கொண்டு வளர்ந்தால் மூளை மழுங்கித்தான் போகும் குழந்தைகளுக்கு.
இன்றைக்கு ஒரு சிலரை அறிமுகப்படுத்த இருக்கிறேன். பார்ப்போமா?
1. வே.நடனசபாபதி
அனுபவங்கள் இங்கே பதிவாகி அருவிகள் படங்களாகி இருக்கிறது.
2. சீனி கவிதைகள்
சீனி கவிதைகள் இங்கு சீரிய பதிவுகள் ஆனது.
3. அருணாசெல்வம்
காதல் திருநாளில் இவர் எழுதிய அழகு கவிதை.
4. நிஜாம் பக்கம்
மாறிவரும் உணவுவகையையும் மடிந்துவரும் ஆரோக்கியம் பற்றி எழுதி இருக்கிறார்.
5. அதிரா
அதிராவின் கைவண்ணம் கண்டிப்பாக பார்க்கவேண்டிய வலைப்பூ.
6. சென்னைப்பித்தன்
நான் பேச நினைப்பதெல்லாம் என்று சொல்லி முகமூடி வாழ்க்கைப்பற்றி எழுதி இருக்கிறார்.
7. கவிதை வீதி
இவர் படும் அவஸ்தையை ரொம்ப அழகா கவிதையா எழுதி இருக்கார்.
8. நிலாமகள்
செவிப்பறை கவிதையின் வரிகள் உரத்த உரைக்கும் உண்மை.
9. தமிழ் மயில்
பிரபல எழுத்தாளர் இந்துமதியின் எழுத்துப்பயிற்சிப்பற்றி ரொம்ப அருமையா சொல்லி இருக்காங்க.
10. சமையல் அட்டகாசம்
சமையல் கலாட்டா என்று பெயருக்கு மட்டுமல்ல உள் நுழைந்துப்பார்த்தால் கலாட்டாவே தான். ஆனால் இனிய கலாட்டா.
11. ஸ்ரவாணி
மார்கழிக்கோலங்கள் கண்களில் ஒற்றிக்கொள்ள வைக்கிறது.
12. இமாவின் உலகம் , அறுசுவை
நம்மை கைப்பிடித்து அழைத்துச்செல்கிறார் தன் உலகிற்கே.
13. வீடு திரும்பல்
ரசனையான சினிமா விமர்சனம் எழுதி இருக்கார்.
14. ராதாஸ் கிச்சன்
சமையல் பக்குவமும், மருத்துவமும் , வீட்டுக்குறிப்புகளும் பொக்கிஷமாய் இருக்கிறது இங்கே.
15. கோவை டு தில்லி
கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்க புரிதல்கள் எப்படி இருக்கவேண்டும் என்று சொன்ன கருத்துகள் தங்க மங்கை இதழில் வெளி வந்திருக்கிறது. அன்பு வாழ்த்துகள் ஆதி வெங்கட்.
16. சிவகுமாரன் கவிதைகள்
சொல்லாடல் நிறைந்த அழகிய கவிதைகளுடனான வலைப்பூ.
17. தமிழ்வாசி
மெக்கானிக்கல் துறையினருக்கான பயனுள்ள தொடர்.
18. முனைவர் குணசீலன்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்று சொல்கிறார்.
19. நீரோடை
துரோகியாகும் தோழமைகள் பற்றிய அருமையான கவிதை ஒன்று.
20. வானவில் மனிதன்
தத்த்தி அப்டின்னு அழுத்திச்சொல்லி ஒரு கதை எழுதி இருக்கார்.
21. மகிழம்பூச்சரம்
மீனாட்சியின் பிரியாவிடை ப்ரியங்களை ரொம்ப அழகா சொல்லி இருக்கார்.
22. மாயவரம் குரு
மஹா பெரியவாளுக்கு ஒரு கவிதை.
23. காகிதப்பூக்கள்
வாழ்த்து அட்டைகள் எல்லாமே இவரின் கைவண்ணம்.
24. சங்கவி
பேயும் நண்பர்களும் பற்றி அருமையா எழுதி இருக்கிறார்.
25. ஹரணி பக்கங்கள்
அலைகிற மனதைப்பற்றி கவிதை இயற்றி இருக்கிறார்.
26. ராஜப்பாட்டை
இந்த பகிர்வை படித்தால் மனம் உருகும் உண்மை.
27. கோவை நேரம்
மாஹி புதுச்சேரி பற்றிய ஒரு புதுப்பார்வை.
|
|
வணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ரூபன்.
Deleteரூபன் தம்பிக்கு : அனைத்து தளம் தகவல் சொன்னதற்கு நன்றி... (இங்கு காலை 7 to 8 வரை மின்வெட்டு...!
Deleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் தனபாலன் சார், ரூபன் இருவருக்குமே.
Deleteஎன்னையும், எனது பதிவையும் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி திருமதி மஞ்சுபாஷினி சம்பத் குமார் அவர்களே!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஐயா..
Deleteவணக்கம்
ReplyDeleteஎல்லாம் நான் தொடரும் தளங்கள்தான்..... த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களது அறிமுகங்களில் நானும் இடம் பெற்றிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி..
ReplyDeleteஅறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ஆதி.
Delete//கதையின் முடிவில் நாம் சொல்லும் மாரல் ஆஃப் த ஸ்டோரி கண்டிப்பாக குழந்தைகள் மனதில் நிலைத்து நிற்கும்.//
ReplyDelete//நாம் நல்ல கதைச்சொல்லியாக இருந்தால் பிள்ளைகள் அதைவைத்து இன்னும் அட்வான்ஸ்டாக செயல்படும் புத்திக்கூர்மையை வளர்த்துக்கொள்வார்கள் என்பது உறுதி.//
அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள் மஞ்சு.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா..
Deleteஇன்றும் காட்டியுள்ள மூன்று படங்களும் அருமை. அதுவும் 2 + 3 வெகு ஜோர்.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களில் 1/3 [One Third] மட்டுமே எனக்குப் பரிச்சயமானவர்கள்.
ஆறாம் நாளான இன்றைய தினத்தையும் அழகாக முடித்துள்ளதற்கு பாராட்டுக்கள், மஞ்சு.
பிரியமுள்ள கோபு அண்ணா
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா..
Deleteஅருமையான அறிமுகங்கள்..பாராட்டுக்கள்..!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா இராஜராஜேஸ்வரி.
Deleteநன்றி
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சௌந்தர்.
Deleteஅன்பிற்கு நன்றி
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா மோகன்குமார்.
Deleteஎன் வலைப்பூ அறிமுகத்துக்கு நன்றி
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் சார்.
Deleteதங்களது அறிமுகங்களில் நானும் இடம் பெற்றிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி..
ReplyDeleteஅறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சீனி.
Deleteதங்களது அறிமுகங்களில் நானும் இடம் பெற்றிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா அருணா செல்வம்.
Deleteசில அறியாமுகங்கள். நன்றி.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா அப்பாதுரை.
Deleteநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. என் குழந்தைகள் தினமும் கதை கேட்பார்கள். சில நேரங்களில் நமக்குத் தான் சிரமம்மாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு அந்த நீதி எளிதாக புரிகிறது. அருமையான அறிமகங்கள்
ReplyDeleteகுழந்தைகள் அதி புத்திசாலிகள்பா... நம்மைப்போல் இல்லை. நாம எல்லாம் சிறுவயதில் அம்மா அப்பா சொல்லும் கதைகளை கேள்விகள் கேட்காமல் அப்டியா என்று கண்கள் விரிய கேட்போம். இப்போதுள்ள குழந்தைகளிடம் இதெல்லாம் நடக்காது. நாம் சொல்லும் கதைகளில் நிறைய கேள்விகள் கேட்கும்.. அதுவே குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை காட்டும் விஷயம்.. நாம பதில் தெரியாம மூச்சுத்திணறுவோம் அது வேற விஷயம். எங்க வீட்ல நான் இபானிடம் இப்படித்தான் சொல்லி மாட்டிப்பேன் :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சொக்கன் சுப்பிரமண்யன்.
Deleteஅன்பின் - மஞ்சுபாஷிணி சம்பத்குமார் அவர்களுக்கு வணக்கம்.
ReplyDeleteநேற்றைய வலைச்சர தொகுப்பில் எனது தஞ்சையம்பதி தளத்தின்
பதிவை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி!..
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா துரை செல்வராஜூ.
Deleteகுழந்தை வளர்ப்பு பற்றிய அறிவுரைகள் சிறப்பு! கதை சொல்லியும் விளையாடவிட்டும் வளர்க்க வேண்டும் என்பது100% உண்மை! சிறப்பான தளங்கள் அறிமுகம்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சுரேஷ்.
Deleteஇந்த சிறுவனின் வலை பூவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோ ....
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ராஜா
Deleteசிறியோர் வளர்ப்பு பற்றிய அருமையான கருத்துடன் இன்றைய நாள் . அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சகோ.
Deleteவலைச்சரத்தின் மூவாயிரமாவது பதிவினை எழுதி வெளீயிட்ட சகோதரி மஞ்சு பாஷினிக்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete//வலைச்சரத்தின் மூவாயிரமாவது பதிவினை எழுதி வெளீயிட்ட சகோதரி மஞ்சு பாஷினிக்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //
Deleteஅன்பின் திரு சீனா ஐயா, அவர்களுக்கு வணக்கம்.
வலைச்சரத்தின் 3000 மாவது [மூவாயிரமாவது பதிவு] பதிவு என் அன்புத்தங்கை மஞ்சுவுக்கு அமைந்துள்ளதா ?
மகிழ்ச்சி. மிக்க மகிழ்ச்சி.
என் பரிந்துரையில் இந்த வார வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்ற 'மஞ்சூஊஊஊஊஊ' வுக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்
இதைக்கொண்டாடும் விதமாக எனக்கும் மஞ்சுவுக்கும் ஓர் பஞ்சு மிட்டாயாவது வாங்கித்தரக்கூடாதோ ?
அன்புடன் VGK
அன்பின் திரு சீனா ஐயா அவர்களுக்கு மீண்டும் வணக்கம்.
Deleteவலைச்சரத்தின் வெற்றிகரமான 2500 ஆவது பதிவினைத்தந்த என் அன்புக்குரிய உஷா டீச்சரும், என் பரிந்துரையில் வலைச்சர ஆசிரியராக நியமிக்கப்பட்டவரே என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்கு இன்று கொண்டுவந்து மகிழ்கிறேன். அந்த நாள்: 25.12.2012
இணைப்பு இதோ:
http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_7102.html
திருமதி உஷா அன்பரசு வேலூர் அவர்களுக்கும், திருமதி மஞ்சுபாஷிணி குவைத், அவர்களுக்கும் மீண்டும் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
என் பரிந்துரையில் தங்களிடம் வலைச்சர ஆசிரியர் ஆகியுள்ள அனைவருமே சுத்தமான வைரங்களாக்கும்.
ஜொலித்திடும் அந்த வைரங்களின் பட்டியல் காண இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2013/09/45-1-6.html
அன்புடன் கோபு
மிக்க நன்றி சார்!
Deleteஅன்பின் திரு சீனா ஐயா அவர்களே !
Deleteமீண்டும் வணக்கம்.
மேலும் நான் மேற்கொண்ட ஆராய்ச்சியில், கிடைத்த பொக்கிஷமான அரிய தகவல் ஒன்றினை தங்களின் தகவலுக்காகக்கொடுக்கிறேன்.
வலைச்சரத்தின் 2000 மாவது [இரண்டாயிரமாவது] பதிவினை அளிக்கும் பாக்யம் பெற்றவரும், நான் பரிந்துரை செய்துள்ள என் அன்பு மகள் ‘கற்றலும் கேட்டலும்’ திருமதி ராஜி அவர்களே.
அன்றைய தேதி: 18.10.2011
இணைப்பு இதோ:
http://blogintamil.blogspot.in/2011/10/blog-post_18.html
தாங்களும் இதனை சரி பார்த்துக்கொள்ளுங்கள், ஐயா.
அன்புடன் VGK
அன்பு வாழ்த்துகள் 3000 பதிவைத்தாண்டி வெற்றிநடை போடும் வலைச்சரத்திற்கும் வலைச்சர ஆசிரியர்களுக்கும், கலந்துக்கொண்டு பதிவுகளால் சிறப்பிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் நம் அனைத்து நண்பர்களுக்கும்..
Deleteவலைச்சரத்தின் மூவாயிரமாவது பதிவு !
ReplyDeleteவாழ்த்துக்கள் மேடம் !
கதை கேட்கும் குழந்தையின் மனோவியல் விவரிப்பு அருமை !
பல பயனுள்ள தளங்களை தெரிந்துகொண்டேன்! மிக்க நன்றி !
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா மைதிலி கஸ்தூரி ரெங்கன்.
Deleteஎன் வலைப்பூ அறிமுகத்துக்கு நன்றி
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா நிலாமகள்.
Deletemikka nandri . anaivarukkum vaazhthukkal.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ஸ்ரவாணி.
Deleteசென்ற 13/02/2014 அன்று நான் வாழ்த்து சொல்லிவிட்டேன். அதனால்தான் இன்று சொல்லவில்லை!!!
ReplyDelete//அ. முஹம்மது நிஜாமுத்தீன்Thu Feb 13, 09:58:00 PM
நாளை 2999-ஆவது பதிவு!
மறுநாள் 3000-ஆவது பதிவு!
வாழ்த்துக்கள்!//
முகவரி: http://www.blogintamil.blogspot.com/2014/02/blog-post_13.html
ஆமாம் நீங்க அட்வான்ஸாவே சொல்லி இருந்தீங்கப்பா.. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா நிஜாமுத்தீன்.
Delete//cheena (சீனா)Sat Feb 15, 05:10:00 PM
ReplyDeleteவலைச்சரத்தின் மூவாயிரமாவது பதிவினை எழுதி வெளீயிட்ட சகோதரி மஞ்சு பாஷினிக்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா// இந்த வாய்ப்பை நல்கியதற்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா..
வலைசரத்தின் 3000 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் .மிக்க நன்றி மஞ்சு தாமத வருகைக்கு மன்னிக்கவும் மஞ்சு .
ReplyDelete.இன்றைய பதிவில் அறிமுகமானோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
Angelin.
எனக்கு தகவல் தந்த சகோதரர் ரூபனுக்கும் மிக்க நன்றி
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வலைச்சரத்தின் மூவாயிரமாவது பதிவினை எழுதி வெளீயிட்ட மஞ்சுவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவலைச்சர மூவாயிரம் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இன்று சிறப்பான நாள் . குழந்தைகளுக்கு நல்ல கதைகள்சொல்வது, நன்றாக விளையாட விட வேண்டியதின் அவசியத்தை அருமையாக கூறினீர்கள் மஞ்சு. படங்கள் எல்லாம் அழகு.
ஒரு சிறு விளக்கம்.
ReplyDelete(இங்கு 4-ஆவதாக 'நிஜாம் பக்கம்' என்று ஓர் அறிமுகம் உள்ளதல்லவா?)
'நிஜாம் பக்கம்' என்ற தலைப்பில் வலைப்பூ வைத்து நான் நடத்திவருகிறேன். முகவரி: www.nizampakkam.blogspot.com
இங்கு காணப்படும் 'நிஜாம் பக்கம்' - இதன் முகவரி:
http://nijampage.blogspot.com/
ஆனால், வலைப்பூவின் தலைப்பு: "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்". இது என்னுடையதல்ல; நண்பர் 'சேக்கனா M. நிஜாம் உடையதாகும்.
ஆகவே தலைப்பு 'சமூக விழிப்புணவு பக்கங்கள்' என்று இருக்கவேண்டும். (நேற்றே இந்த விளக்கம் அளிக்க வாய்ப்பில்லாமற்போயிற்று.)
தங்களது அறிமுகங்களில் நானும் இடம் பெற்றிருப்பது மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி..
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
http://ootynews.wordpress.com/
ReplyDeleteஎன்னில் பாதி - ஆதி தளத்தினையும் இங்கே அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோ.....
ReplyDeleteமற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
என்னையும் ஞாபகமாய் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி.
ReplyDelete