07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 3, 2014

தளிர் சுரேஷின் சுயதம்பட்டம்!

வலைச்சரம்! அறிமுகம்! தளிர் சுரேஷின் சுயதம்பட்டம்!


வலைகள் பலவுண்டு வகைகளும் சிலவுண்டு!
ஆழியில் உலவுகின்ற மச்சங்களை மிச்சமின்றி
பிடித்திடும் மீன்வலை!
புழக்கமில்லா வீட்டினில் புகுந்து
புதிதாய் கூடு அமைத்திடும் சிலந்திவலை!
கொடுமையான நோய் பரப்பும் கொசுக்களை
குடிபுகவிடாமல் தடுத்திடும் கொசுவலை!
உலகமெலாம் பரவிக்கிடக்கும் தகவல்களை
ஒரு நொடியில் தந்திடும் இணையவலை!
எங்கோ யாரோஎழுதிவரும் இணையப்பக்கங்களையும்
எளிதாக எல்லோரையும் சென்றடையவைக்கும்
வலைச்சரம் எனும் அன்புவலை!

இணையத்தில் எழுதும் எல்லோருக்கும்
என்றாவது ஒருநாள் வலைச்சரத்தில் இடம்பிடிக்கவேண்டும்
என்பதே ஆசை! இடம்பிடித்தபின் அதன்
ஆசிரியர் ஆகும் நாள் என்னாளோ என்பது பேரவா!
எல்லோர்க்கும் அது கிட்டச்செய்வது வலைச்சரக் குழுவின்
ஈடில்லா பெறுமுயற்சி!

இச்சரத்தில் இடம்பிடிக்க துடித்தவர்களில் நானும் ஒருவன்!
முதன் முதலாய் இச்சரத்தில் என்னை கோர்த்தவர்
மேலையூர் ராஜா! ராஜபாட்டையில் பயணிப்பவர்! ஓராண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் என்னை அறிமுகம் செய்தார் சிவஹரி! அதன்பின் பல அன்பர்கள் என்னை பரிந்துரை செய்தனர்! இந்தவாரமும் மணிமாறனால் நான் சுட்டப்பட்டேன்!
வலைச்சரத்தில் நான் கட்டப்பட்டேன்! பூவோடு சேர்ந்து நாறும் மணப்பது போல இந்த நாறும் இன்று மணக்கிறது
இச்சரத்தில் பல முறை பலரால் இடம்பிடித்ததில் மகிழ்ந்தவன்.
இந்நாளில் இதன் ஆசிரியராய் பலரை சரத்தில் கோர்க்க உள்ளேன்!

இப்பொறுப்பை எனக்கு நல்கிய அன்பின் சீனா ஐயாவிற்கும்
என்னை பரிந்ந்துரை செய்தோருக்கும் என் அன்பான நன்றிகள்!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அமைந்துள்ளது என்கிராமம். பொழில் சூழ எழிலாக இருந்து இன்று சற்றே மாறிவருகிறது பொட்டல்காடாய்!
கிராமத்தின் இறுதியில் அமைந்துள்ள வாலீஸ்வரர் கோயில் அருகே என் வீடு! வாலீஸ்வரரை பூஜிப்பதே என் தொழில்! இடையில் சில காலம் தனியார் பள்ளியில் ஆசிரியர் தொழில்! பத்தாண்டுகள் கல்விநிலையம் நடத்தினேன்! பள்ளியில் பல முதல் மாணாக்கர்களை உருவாக்கினேன்! அவர்கள் படிப்பில் மட்டுமல்ல ஒழுக்கத்திலும் முதல்வர்கள்!
எழுத்து என்னை ஈர்த்தது என் பதின்ம வயதில்! பள்ளிக்காலத்தில்
நண்பர்களோடு இணைந்து கையெழுத்து பிரதி படைத்தது உண்டு.
இளந்தளிர் என்பது அதன் பெயர்! அக்காலத்தே என் வட்டத்தில் அது பிரசித்தம்! அது எனக்கு தந்தது எழுத்துப்பயிற்சி! வளர்ந்ததும் முளைத்தது தேன்சிட்டு என்ற மற்றொரு இதழ்! அதில்தான் முதன்முதலில் கவிதைகள் படைத்தேன்!
கோகுலம் என்னும் சிறுவரிதழில் ஒன்றிரண்டு கதைகள் பிரசுரமானதும் உண்டு.
  பின்னர் சிறிது இடைவெளி! 2011ல் இணைய வெளி எனக்கு அறிமுகமானது! தளிர் என்ற வலைப்பூ உதயமானது! தளிரில் எழுதும் சமயம் தமிழ்தோட்டம் என்ற தளம் அறிமுகமானது அதில் கவிஞர் ரமேஷின் அறிமுகம் உதயமானது! என்  ஹைக்கூக்கள் அதில் பூத்தது. பூவின் களைகள் ரமேஷால் திருத்தமானது.
இதுவரை  தளிரில் இடுகைகள் 1400க்கும் மேல்! இடையில் சில களைகள் கலையப்பட்டன! இதனால் இன்று தளிர் தழைத்துவருகிறது! இத்தனை இடுகைகள் இருப்பினும் நான் எழுதிய சில இடுகைகள் எனக்கு திருப்தி அளித்தவை சில!
எல்லோரும் ஒன்றிரண்டு இடுகைகளை சொல்வார்கள்! என்
சுயதம்பட்டம் கொஞ்சம் பெரிது! அரிது இங்கு என் படைப்புக்களை பகிர்வது! அதனால் என் படைப்புக்களின் வரிசை பெரிது!
அவற்றை பட்டியல் இடுகிறேன் கீழே! படியுங்கள்! களியுங்கள்!
கருத்துக்களை நிரப்புங்கள்! நாளை முதல் என் வலைச்சரத்தில் மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் பூக்கும்! வாசம் பரப்பும்!


 சிறுவர்களுக்கு எழுதுவது ஒரு கலை! நான் முதலில் சிறுவர் எழுத்தாளனாகத்தான் உதயமானேன்! கோகுலம் இதழில் பிரசுரமான கதை ஒன்றினை தளிரில் பாப்பாமலர் என்ற தலைப்பில் கொடுத்தேன்! அண்ணன் தம்பிகள் அடித்துக்கொள்ளக்கூடாது என்று சொல்லும் இந்தக்கதை மரியாதையாக் கொடுத்திடு!
காதல் யாரையும் விட்டுவைப்பதில்லை!காதலுக்குகாக எதை எதையோ செய்கிறார்கள்.இதோ இவர் என்ன செய்கிறார் என்று பாருங்கள்! இதில் ஒரு எழுத்துபிழை செய்து பிலாசபி பிரபாகரால் குட்டும் வாங்கினேன் அவள்சொன்னாள் என்பதற்காக நகைச்சுவை எல்லோரும் ரசிப்பது! நானும் நகைச்சுவையாக எழுத முயற்சித்தேன்! சிரிப்பு வருகிறதா என்று பாருங்கள் தமன்னாவிற்கு பிடிக்காத தமிழ்மாதம் எது?நான் எழுதிய சில கதைகளில் எனக்குப் பிடித்தமான கதை! என் சிறுவயதில் நடந்த சம்பவம் ஒன்றை கொஞ்சம் கற்பனை கலந்து வடித்தேன். எனக்கு மிகவும் பிடித்தமான கதை நீயுமா?ஹைக்கூ கவிதைகள் எனது ஸ்பெஷல்! தமிழ் தோட்டத்தில் 500 ஹைக்கூக்கள் வரை எழுதியிருப்பேன்! என் ஹைக்கூவில் கூர்மை அதிகம் என்று நிகழ்காலம் எழில் பாராட்டியதை மறவேன்! இதோ உங்கள் பார்வைக்கு சில ஹைக்கூக்கள் தளிர் ஹைக்கூ கவிதைகள் நான் எப்படி பிகரை மெயின்டெய்ன் பண்ணியிருக்கேன்னு பாருங்கள் நான் ‘பிகர்’ மெயிண்டெய்ன் பண்ண கதைஇதுவும் ஒரு மொக்கை பதிவு கொஞ்சம் காமெடியும் கலந்த பதிவு கலா சிஸ்டர்ஸை பார்த்து காளையன் ஜொள்ளுவிட்ட கதை  நான் எழுதிய உருப்படியான பதிவுகளில் இதுவும் ஒன்று. பெரியவங்க சொன்னதையும் புத்தகத்தில் படிச்சதையும் கலந்து எழுதினது. குழந்தைகளுக்கு திருஷ்டிவந்தா என்ன செய்யறதுன்னு தெரிஞ்சிக்க உதவும் திருஷ்டிகளும் பரிகாரங்களும்என்னை கொஞ்சம் புகழ் ஏணியில் ஏற்றிவிட்ட தொடர்! ஒரு சின்ன செய்தியை பெரிய தொடராக மாற்றினேன். இதன் முடிவை சரியாக எழுதவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு பேய்கள் ஓய்வதில்லை!  பாராட்டுக்கு எல்லோரும் ஏங்குவார்கள்! நான் எப்படி ஏங்கறேன்னு கொஞ்சம் படிச்சு பாருங்கள்  எக்ஸ்க்யுஸ்மீ கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்!  என் பள்ளிக்காலத்து நினைவுகளை சொல்லும் இந்த தொடர்கொஞ்சம் பரபரப்பு ஏற்றியது  சரவணன் - மீனாட்சி  நான் எழுதிய கதைகளில் சரித்திரக்கதை இது.கலிங்கத்துப்பரணியின் சிலவரிகள் படித்தமையால் எழுந்தது இந்தக் கதை  குலமகள்!  பிரதோஷம் பற்றிய ஆன்மீகத்தகவல்கள் இங்கே! பிரதோஷம் கும்பிடப்போறவங்க தெரிஞ்சிக்கங்க! சமீப காலமாக எனக்கு பெரிதும் பெயர் சொல்லும் பதிவு இது! ஒரு ரகசியம் சொல்லட்டுமா? இதை புத்தகமா வெளியிடலாமான்னு ஒரு யோசனையும் இருக்கு! புகைப்பட ஹைக்கூ 63  வலைப்பூ ஆரம்பித்த காலத்தில் எழுதிய கவிதை எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதை! நீங்களும் படிச்சு பாருங்களேன்!   குழந்தை! அப்பாவின் கட்டில்!

 சீனா ஐயா வானமே எல்லைன்னு சொன்னதாலே
சொல்லிக்கிட்டே இருந்தால் அனுமார் வால் போல நீண்டுகிட்டே போகும்! அதனால இத்தோட நிறுத்திக்கிறேன்! என் சுயதம்பட்டம் கொஞ்சம் அதிகமா… இல்ல.. இல்ல நிறையவே அதிகமா ஆயிடுச்சு! கொஞ்சம் மன்னிச்சுக்கங்க! அப்பாடா!ன்னு நிம்மதி பெருமூச்சு விடறது இங்கே கேட்குது! சரி! சரி! நாளைக்கு நிறைய நண்பர்களோட பதிவுகளோட சந்திக்கிறேன்! உங்க கருத்துக்களை பகிர்ந்துகொண்டு உற்சாகப்படுத்துங்கள்! நன்றி! வணக்கம்!

25 comments:

  1. வணக்கம்

    சிறப்பான சுய அறிமுகத்துடன் இன்று வலைச்சரத்தை சிறப்பித்துள்ளிர்கள்... தங்களின் வலைச்சர பணி சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

  2. அருமையான அறிமுகம் ... ஒரு ஆசிரியரே ஆசிரியப் பொறுப்பேற்கிறார்...! வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  3. சுரேஷ் அவர்களுக்கு நல்வரவு!..
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்..

    ReplyDelete
  4. ரசிக்க வைக்கும் சுய அறிமுகம்... எனது இனிய நண்பரே, அசத்துங்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. தளிர் மூன்றாம் முறையாய் வலைச் சரத்தில் துளிர் விடுவதற்கு வாழ்த்துக்கள் !
    த ம 5

    ReplyDelete
  6. பணி சிறக்க நல்வாழ்த்து!

    ReplyDelete
  7. வாங்க வாங்க
    நல்ல பெயரும் புகழும்
    வாங்க , நீங்க வாங்க..

    தாங்க தாங்க
    தென்னை மர இளநீர் போல்
    தாகத்தை துரத்திடும்
    தமிழ்க் கவிதைகளை
    தாங்க தாங்க.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  8. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சுரேஷ்

    ReplyDelete
  9. ஆசிரியர்க்கு ஆசிரியர்
    பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அன்பின் சுரேஷ் = அருமையான துவக்கம் - சுய அறிமுகம் நன்று - தமிழ் மணம் 7 என்னுடையது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  11. வாழ்த்துகள் சுரேஷ்!அழகிய சரத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  12. ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.
    சுய அறிமுகம் அருமை.

    ReplyDelete
  13. சுய தம்பட்டம் அருமை!! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. உள்ளதை உள்ளபடிக் கூறுவது
    தம்பட்டம் ஆகுமா ?
    அருமையான அறிமுகம்
    வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. வருகை தந்து வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனங்கனிந்த நன்றி! காலை முதல் வேளைப்பளுவால் இணையம் வர இயலவில்லை! இப்போதுதான் வந்துள்ளேன்! உங்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கையுடன் இந்த பணியை துவக்கியுள்ளேன்! நன்றி!

    ReplyDelete
  16. பணி சிறந்து விளங்க என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
    சகோதரா .சுய அறிமுகம் அருமை !....

    ReplyDelete
  17. பணி சிறக்க நல் வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  18. தங்களின் மனதிற்கு மிகப் பிடித்த சில பதிவுகளோடு சுய தம்பட்டம் நன்று. பணி சிறக்க நல்வாழ்த்துக்கள் சுரேஷ் சார்!

    தமிழ்மணம் 10 என்னுடையது!

    ReplyDelete
  19. வித்தியாசமான அறிமுகம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  20. தங்களின் சுயறிமுகம் கண்டு வியந்தேன். தொடரட்டும் தங்களது ஆசிரியப்பணி

    ReplyDelete
  21. சிறப்பான தொடக்கம் சுரேஷ். வலைக் கவிதை அருமை .வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  22. பணி சிறக்க வாழ்த்துகள் சுரேஷ்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது