07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, February 18, 2014

பொறந்த வீட்டுப் புராணம்

வாம்மா நளினி! எப்படி இருக்கே!? என்ன இந்தப் பக்கம்!?

ஒண்ணுமில்ல சித்தி. சும்மாதான் உங்களைலாம் பார்த்து ரொம்ப நாளாச்சே! அதான் பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன்.

நீ சும்மாலாம் வர்ற ஆளு இல்லியே! இந்தா, இந்தக் காஃபியைக் குடிச்சுட்டு சொல்ல வந்த விசயத்தைச் சொல்லு.

அது வந்து..., அது வந்து...,

அதான் வந்துட்டியே! சொல்லு!!

வேணாம் சித்தி! அப்புறம் உங்க வீட்டுல என்னால பிரச்சனை வர வேணாம். நான் கிளம்புறேன்.

உன் சித்தப்பாவைக் கவனிக்குற மாதிரி, உன்னையும் கவனிச்சாதான் ஒழுங்கா இருப்பேன்னு நினைக்குறேன்.

ஐயோ சித்தி! என் சித்தப்பாப் போல என்னால அடித்தாங்க முடியாது. வந்த விசயத்தைச் சொல்லிடுறேன். நேத்து சித்தப்பா எங்க வீட்டுக்கு வந்திருந்தார்.

சரி, அதுக்கென்ன!?

நீங்க அவரை சரியாவே கவனிச்சுக்குறதில்லையாம். எப்பப்பாரு கம்ப்யூட்டர்லயே உக்காந்திருக்கீங்களாம். குறையாச் சொன்னார்.

அதான் ஊருக்கேத் தெரியுமே! அதுக்கென்ன வந்துச்சு இப்ப!?

அவரால வீட்டு வேலையும் செஞ்சுக்கிட்டு ஆஃபிசுக்கும் போய் வர முடியலியாம் சித்தி. அதனால, நீங்க கொஞ்சம் வீட்டைப் பார்த்துக்கிட்டா சித்தப்பா நிம்மதியா ஆஃபீஸ் போய் வருவார்.

என்னது!? நான் வீட்டு வேலையைப் பார்க்கனுமா!?

ஆமா, சித்தி போன வாரம் நீங்க குடிக்க சுடுதண்ணிக் கேட்டீங்களாம். சித்தப்பா கொண்டு வந்து கொடுத்திருக்கார். ஆனா, பாருங்க பதமா இல்லேன்னு திட்டுனீங்களாமே!!

(நல்ல வேளை! அடிச்சதை சொல்லல) பின்ன என்ன!? ஒரு சுடுதண்ணி வைக்க துப்பில்லே! எப்படிதான் இந்தாளுக்குலாம் கவர்ன்மெண்ட்ல வேலைக் கொடுத்தாங்களோ! இவரை விடப் பதினஞ்சி வயசுச் சின்னப் பையன் என் தம்பி சீனு அவன் என்ன அழகா, பதமா, ருசியா சுடுதண்ணி வைக்குறான்னு உன் சித்தப்பாவை போய் பார்க்கச் சொல்லு.

ம்க்கும். உன் தம்பி சுடு தண்ணி வைக்கதான் சொல்லி இருக்கார். ஆனா, சமையல் எவ்வளவ் கஷ்டம்ன்னு பொண்ணாய் பொறந்த உங்களுக்குத் தெரியாதா!?

அப்படி என்ன பெரிய சமையல்!? குளோப் ஜாமூன் ல முந்திரி பார்த்திருப்பே! திராட்சைப் பார்த்திரிப்பே! அட, பாதாம் கூடப் பார்த்திருப்பே! ஆனா, சிக்கன் பார்த்திருப்பியா!?  என் தம்பி ஆவி குளோப் ஜாமூன்ல சிக்கன் வச்சு ருசியா சமைப்பான். 

முட்டையை எப்படி அவிக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா!? அதிகமா தண்ணி ஊத்தினா கேஸ் வேஸ்டாகும். கொஞ்சமா தண்ணி ஊத்தினா முட்டை ஒரு பக்கம் வேகும். இன்னொரு பக்கம் வேகாது. தீ அதிகமா வச்சா முட்டை உடைஞ்சு பார்க்கவே கன்றாவியா இருக்கும். ஆனா, என் தம்பி பிரகாஷ் ஈசியா முட்டையை வேக வைப்பான்.

அதேப்போலதான் டீப் போடுறதும் ரொம்ப கஷ்டம்.

ம்க்கும் பேர் சொல்லிக் கூப்பிட்டாலே கும்மாங்குத்து குத்துறீங்க. இதுல உங்களை டீ போட்டு கூப்பிட்டா அவ்வளவ்தான்.

அடியே! அந்த ”டி” இல்லடி. குடிக்குற ”டீ”.அதை என் தம்பி ஹரி அசால்டா ப்ப்ட்டுத் தருவான். 

சிக்கன் பிரியாணில தம் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, தலைப்பாக்கட்டி, மொகல் பிரியாணின்னு ஆயிரம் வெரைட்டி இருக்கு. ஆனா, அதை எம்புட்டு ஈசியா சட்டுன்னு என் தம்பி ஆரூர் மூனா செந்தில் சமைக்குறான்னு தெரியுமா!? 

சமைக்குறது ஈசின்னு ஒத்துக்குறேன் சித்தி. ஆனா, சாமான்லாம் கழுவுறது இருக்கே! அது கஷ்டமான வேலைதானே!?

யார் சொன்னது!? என் தம்பி ராஜா பாத்திரம் எப்படி கழுவுறதுன்னு பதிவுப் போட்டிருக்கான். படிச்சுப் பார்த்து தெரிஞ்சுக்க சொல்லு. உன் சித்தப்புவை!!

சரி சித்தி! இனி சித்தப்பா இதுப்போலவே ஒழுங்கா நடந்துப்பார். ஒரு நாலு நாளைக்கு எங்க வீட்டுக்கு சித்தப்பாவை அனுப்பி வைங்க சித்தி. ரெஸ்ட் எடுத்துட்டு ஃப்ரெஷ்ஷா வந்து வீட்டு வேலைலாம் கரெக்டா செய்வார்.

என்னது!? உன் சித்தப்பாவை அனுப்புறதா!? அதெல்லாம் வேலைக்காது. நான் எங்கம்மா வீட்டுக்குப் போகப்போறேன்.

உங்கம்மா வீடுதான் பக்கத்து தெருவுல இருக்கே! போய்ட்டு அரை மணி நேரத்துல வந்துடப் போறீங்க!! அப்புறம் எதுக்கு இந்த பில்டப்!?

ஹலோ! அதெல்லாம் அந்தக்காலம். இப்ப என் அம்மா வீட்டுக்கு போக கிளம்பினா எப்ப வருவேன்னு தெரியாது!! அத்தனை வீடு இருக்கு எனக்கு!! உங்க சித்தப்பு ஏ.டி.எம் கார்டு எடுத்துக்கிட்டு கிளம்புனா எப்ப வருவேன்னு தெரியாது.

என்ன சித்தி உளர்றே!?

நான் ஒண்ணும் உளரலை. இங்கிருந்து நேரா சென்னைப் போவேன். அங்க என் தம்பி ஸ்கூல் பையன் வீட்டுல ரெண்டு நாள் தங்குவேன். அவனோடு சோழா ஹோட்டல் போய் காஃபி சாப்பிட்டு வருவேன்.

எப்பவுமே ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லயே சாப்பிட்டுக்கிட்டு இருந்தா எப்படி!? அதனால, தம்பி ரூபக் ராம்கூட போய் தள்ளுவண்டில வித்தாலும் செம டேஸ்டா இருக்கும் காளான் ஃப்ரை, சிக்கன் லாலிபாப்லாம் சாப்பிட்டு வருவேன்.

அங்கிருந்து நேரா ஈரோடு போய் சதீஷ் சங்கவி வீட்டுல தங்கி ஆனியன் ரோஸ்ட் சாப்பிட்டு ஊர் சுத்திப் பார்ப்பேன்..

ஈரோடு போய்ட்டு கோவைல ஜீவா வீட்டுக்குப் போகாட்டி அவன் கோச்சுப்பான். அதனால, அவங்க வீட்டுல ரெண்டு நாள் தங்கி ச்சீ ஜீவாவோடு ரெண்டு நாள் தங்கினால் பத்தாது. அதனால, எப்படியும் ஒரு பதினைஞ்சு நாள் தங்கி, கோவை சுத்துவட்டாரத்துல இருக்கும் ஹோட்டல், மால், கோவில், குளம்லாம் பார்த்துட்டு...,

அங்கிருந்து ஃப்ளைட் பிடிச்சு பெங்களூர் போய் சுரேஷ் குமார் வீட்டுல ரெண்டு நாள் தங்கி ஊரெல்லாம் சுத்தி பார்த்து இட்லி சாப்பிட்டு வருவேன்,

அங்கிருந்து ஃப்ளைட் பிடிச்சு பக்ரைன் போய் மனோ அண்ணாவைப் பார்த்து உங்க அண்ணன் மேல ஒரு பிராதுக்கொடுத்துட்டு அவர் ஹோட்டல்ல கொஞ்ச நாள் தங்கி, அண்ணனோட ஃப்ரெண்ட் மொரோக்காக்காரியைப் பார்த்துட்டு...,

ஃப்ளைட் பிடிச்சு வியட்நாம் போய் விக்கியண்ணா அவர் பையன்கிட்ட வாங்குற பல்ப்லாம் எப்படி பிரகாசமா எரியுதுன்னு பார்த்துட்டு...,

அங்கிருந்து ஃப்ளைட் பிடிச்சு அமெர்க்கா போய் கொஞ்ச நாள் தங்கியிருந்து மதுரை தமிழன் அண்ணா எப்படி பொண்டாட்டி கையால அடிவாங்குறார்ன்னுப் பார்த்துட்டு ஃப்ளைட் பிடிச்சு சென்னை வந்து இறங்கி வீட்டுக்கு வரும் வழியில்  கணேஷ் அண்ணாப் பார்த்துட்டு உடனே வந்துடுவேன். ஏன்னா, என் அண்ணி சரிதா பொல்லாதவ. எப்ப பாரு எங்கண்ணனை ஏசிக்கிட்டே இருப்பா. நான் வேற அவ ஏச்சை வாங்கனுமா!? அதான்.

எல்லாம் சரி, உங்களையும் மதிச்சு, பிளாக்குக்கு முதல் ஆளாய் வந்து கமெண்ட் போடும் திண்டுக்கல் தனபாலன் அண்ணனை மறந்துட்டீங்களே!

மறக்கல! ஆனா, ஒரு வாரம் வலைச்சரத்துல ஆசிரியரா இருந்துப் பதிவு தேத்தி, பதில் சொல்லி வீக்காப் போன என் உடம்பைத் தேத்திக்கதான் என் அம்மா வீட்டுங்களுக்குப் போறேன். திண்டுக்கல் தனபாலன் அண்ணா வீட்டுக்கு போனா என்ன கிடைக்கும். ரகம், ரகமா, விதம் விதமா பாட்டு சிடிதான் கிடைக்கும்.

வேற ஒண்ணும் கிடைக்கும் சித்தி.

என்னதுடி அது!?

திண்டுக்கல் பூட்டு.

அதை வச்சு என்னப் பண்ணுறது!?

உங்கண்ணன்க்கிட்ட சொல்லி ரெண்டுப் பூட்டை வாங்குங்க. ஒரு பூட்டை உங்க வாய்க்கு போடுங்க. இன்னொருப் பூட்டை உங்க பிளாக்குக்குப் போடுங்க. குடும்பம் உருப்படும்.

அடியே!! உன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னை..............................,,

76 comments:

  1. சகோஸ்லாம் சீர் கொண்டு வாங்க!

    ReplyDelete
  2. ஹா.... ஹா... எனது தளம் அறிமுகத்திற்கு நன்றி சகோதரி... அறிமுகங்களுக்கு ஓர் ரவுண்டு சென்று வருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நம்ம ஆளுங்கதான் அண்ணா!

      Delete
    2. கடந்த ஒரு வாரமாக காலையில் 1 அல்லது 2 மணி நேரம் மின் வெட்டு... இன்று 6.30 to 8.15 அனைவருக்கும் தகவல் சொல்லியாச்சி சகோ... தம்பி ரூபன் அவர்களுக்கும் புதிய தளங்களை அறிந்து கொள்வார்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

      Delete
  3. ஹாஹா.. அப்படியே பெங்களூர்ல என் வீட்டுக்கும் வாங்க..
    தனபாலன் அண்ணாகிட்ட சிடி வேணா வாங்கிக்கோங்க..பூட்டு வாங்கி போட்றாதிங்க...

    ReplyDelete
    Replies
    1. நானா பூட்டு வாங்கிக்குறேன்னு சொன்னேன். நான் ரொம்பப் பேசுறேன்னு என்னை வாங்க சொல்றாங்கப்பா.

      நீங்க பெங்க்ளூர்லயா இருக்கீங்க!? என் பெரிய பொண்ணு பெங்க்ளூரு ஏர்போர்ட்லதான் வேலை செய்யுறா.

      Delete
    2. அதான்..யார் சொன்னாலும் குடுத்தாலும் வாங்கிடாதீங்க.. :)
      பெங்களூரேதான்...பாத்துடலாம்...உங்க மின்னஞ்சல எனக்கு அனுப்புங்க..

      Delete
    3. கண்டிப்பாய் சந்திக்கலாம். இருங்க மெயி ஐடி உங்க பதிவுல வந்துச் சொல்றேன்

      Delete
  4. வணக்கம்

    ஆகா.........ஆகா,,,,,,,,,,,,,,,,,, என்ன சிறப்பு........ தலையை குடைந்து எடுத்திருக்கும் போல அப்படி எழுதியிருக்கிறீங்கள்
    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை அத்தோடு வாழ்த்திட்டு வருகிறேன்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்
      என்னுடைய அண்ணா (தனபாலன் )அவர்கள் தெரியப்படுத்தி விடுவார்... நான் வாழ்த்திட்டு வருகிறேன்...சகோதரி

      Delete
    2. அப்படிலாம் ஒண்ணுமில்ல சகோ! எனக்கு ஆரம்பம்தான் திணறும். ஆரம்பிச்சுட்டா தானா வார்த்தைகள் வந்து விழும்.

      Delete
    3. வணக்கம்
      எல்லாத் தளங்களும் நான் செல்லும் தளங்கள் தான்... இருந்தாலும் (நாஞ்சில் மனோ) அவர்களின் தளம் புதியவை அறிமுகப்படுத்தியமைக்கு பாராட்டுக்கள்..சகோதரி...
      த.ம 4வது வாக்கு

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      Delete
  5. எம்மை நினைவு கூர்ந்ததற்க்கு நன்றிகள்...ஹாஹா சகோதரி ஒருத்தர பாக்கி விடல போல...எம்பையன் எனக்கு கொடுக்குற பல்பையுமா அவ்வ்....வாழ்க வளமுடன்...நலமுடன்....

    ReplyDelete
    Replies
    1. உங்களைலாம் மறக்க முடியுமா அண்ணா!? நீங்களும் நானும் ஒண்ணாச்சே பசங்கக்கிட்ட பல்ப் வாங்குறதுல!!

      Delete
  6. ஆஹா எனது தளமும் அறிமுகம் ஆனது கண்டு மகிழ்ச்சி..... எப்போ பெங்களூர் வரீங்க சொல்லுங்க !! உங்களுக்காகவே நிறைய இடம் யோசிச்சி வைச்சிருக்கேன் !

    ReplyDelete
    Replies
    1. வரும்போது சொல்றேன் சகோ! டெபிட் கார்டு, ஏடிஎம் கார்டுலாம் ரொம்ப வெயிட்டாக்கி வைங்க. பெங்களூரை ஒரு கலக்கு கலக்கிடலாம்.

      Delete
  7. எல்லாவற்றையும் விட திண்டுக்கல் தனபாலன் சாரை சொன்னதுதான் சூப்பர்! (தனபாலன் சார் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எல்லாம் ஒரு ஜாலிக்குத்தான்)

    ReplyDelete
    Replies
    1. நம்ம டிடி தான் கோவிச்சுக்க மாட்டார்.

      Delete
  8. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்!

      Delete
  9. எல்லோருமே நம்மூட்டு புள்ளைக தான்... எல்லோருக்கும் என் அன்பு வாழ்த்துகள்.

    ரெண்டாவது நாளும் செம்ம களக்கட்டுதே ராஜி :) இப்டியா ஆனாலும் பாவம்ல சித்தப்பா?

    திண்டுக்கல் பூட்டு வீட்டை பூட்ட மட்டும் தான் யூஸ் ஆகுதுன்னு நினைச்சேன். இப்பதானே தெரியுது வாயையும் பூட்ட என்று. :) சுவாரஸ்யமான இரண்டாவது நாள் புள்ள...

    ReplyDelete
    Replies
    1. தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு சொல்லுவாங்க. நான் தம்பிகளோடு, அண்ணன்கள், சகோதரிகள் அன்பை சேர்த்து வச்சிருக்கேனே! அப்புறம் ஏன் களைக் கட்டாது!?

      Delete
  10. த.ம. போட்டேன் ஆனா நம்பர் நோட் பண்ணாம விட்டுட்டேனே.

    ReplyDelete
    Replies
    1. நம்பர் நோட் பண்ணாதான் ஆச்சு, மறுபடியும் ஒரு ஓட்டு போடுங்க மஞ்சுக்கா!

      Delete
  11. எக்கா நம்மாளுங்க எழுதின எல்லா சமையல் பதிவுகளையும் அடிச்சி தொம்சம் பண்ணிடீங்க போல.. நேத்து தான் தெரியும் பூரா சரம் தொடுக்கது நீங்கதான்னு.. சூப்பரு. வாழ்த்துக்கள் க்கா :-)))

    ReplyDelete
    Replies
    1. என் சகோதரர்கள் படைப்புகளை மறப்பேனா சீனு. வாழ்த்துகளுக்கு நன்றி!

      Delete
  12. அசத்தலான அறிமுகத்துடன் சகோக்கள் அனைவரையும் ஒன்றாக சொன்ன விதம் சிறப்புங்க நாத்தனாரே....வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசி

      Delete
  13. சுவாரஸ்யமான இரண்டாவது நாள் .. கலக்கலான அறிமுகங்கள்..
    அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

      Delete
  14. இன்றைய வலைச்சர அறிமுகங்கள்
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி அம்மா!

      Delete
  15. பதிவு செம ரகளை.. சூப்பர்.. சாப்பாடு களை கட்டிடும்.. அடுப்பு பத்த வைக்ரதுல இருந்து பாத்திரம் துவைக்கிற வரைக்கும் நம்மாளுங்களுக்கு இவ்ளோ திறமை இருக்குதுன்னு இந்த ஊரு ஒலகம் இனிமேலாவது தெரிஞ்சுக்கட்டும்.. சூப்பர் அக்கா கலக்குங்க.. நாளைக்கு வர்றேன்.. :-)

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு வாராட்டி முட்டை மந்திரிச்சு வைப்பேன் ஹாரி.

      Delete
  16. அனைவரும் தெரிந்தவர்கள் என்றாலும். கதையோடு சேர்த்து. அவர்களை அறிமுகம் செய்த விதம் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி தினேஷ்

      Delete
  17. கடைசி ரெண்டு லைன் தான் மொத்த பதிவுக்கே ஹைலைட்.. அது மட்டும் நடந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சிட்டே உற்காந்துட்டேன்.. நெம்ப சூப்பரா இருக்கும் க்கா.. ;-)

    த ம எல்லாம் போட்டாச்சு!!

    ReplyDelete
    Replies
    1. அக்கா வாய்க்குப் பூட்டுப் போட நினைக்கும் நீயெல்லாம் ஒரு தம்பியா!? நல்ல வேளை உன் வீட்டுக்கு வரனும்ன்னு நினைக்கல.

      Delete
  18. ஆஹா அப்படியே பாரிசும் வாங்க ராஜி அக்காளுக்கு இல்லாத இடமா??:))) அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. பார்சுதானே! வந்துட்டாப் போச்சு!

      Delete
  19. பிறந்த வீட்டுப் புராணத்த அழகா பாடி இருக்கீங்க ரீச்சர் !
    அது என்ன திண்டுக்கல் பூட்ட வாங்கி மத்தவங்கள மட்டும்
    பூட்டச் சொல்லுறீங்க இது நியாயமா ?..ஒரு ரீச்சர கேள்வி மேல
    கேள்வி கேக்குற உனக்கும் வாங்கித் தாரன் அம்பாளடியாள் முதல்ல
    கண்ணக்குப் பாடத்த முடி . :))))) வாழ்த்துக்கள் சகோதரி .வாழ்த்துக்கள்
    இங்கே அறிமுகமான அனைத்து உள்ளங்களுக்கும் .

    ReplyDelete
    Replies
    1. ஹலோ அக்கா! நல்லா படிங்க என் மச்சினர் பொண்ணு என் வாய்க்குப் பூட்டுப் போட்டுக்க சொல்றா.

      Delete
  20. புதுமுறை அறிமுகம்! அருமை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா!

      Delete
  21. யக்கோவ்... ச்சே, இந்தப் பசங்களோட சேர்ந்து அப்படியே வாய்ல வருது... லேட்டா வந்ததுக்கும் ஸாரி தங்கச்சி...! நம்ப ஒறம்பொறையில யாரையும் வுட்டு வெக்காம சரம் தொடுத்துக் கோத்து வுட்டு அசத்திட்ட போம்மா...! அடுத்தடுத்து வர்ற நாளுக்கு அறிமுகங்கள் ஸ்டாக் இருக்கா? (நானும் போட்டாச்சு... போட்டாச்சு...!)

    ReplyDelete
    Replies
    1. அரசன், வெங்கட் நாகராஜ் அண்ணா, சிவக்குமார், கவியாழி அண்ண, சௌந்தர்ன்னு நம்ம ஆளுங்கலாம் பெண்டிங் இருக்குண்ணா!

      Delete
  22. இவ்ளோ டேலண்ட இருக்காங்களா மக்கா!
    நோட் பாரேன் blog ஐ அப்புறம் நோட் பண்ணச்சொல்லுறேன் என் வீடுகாரரை. செம peppy யான அறிமுகம். நன்றி மேடம் !

    ReplyDelete
    Replies
    1. இதுக்கே வாயைப் பொளந்தா எப்படி!? இன்னும் தொடரும்...,

      Delete
  23. வலைச்சர ஆசிரியப்பணிக்கு வாழ்த்துக்கள் தோழி....எழுத்துநடையை ரசித்தேன்...கொடுத்து வச்சவங்க நீங்க,இது அப்படியே என் வீட்ல நடந்தா எப்படி இருக்கும்னு கற்பனை மட்டும் செய்துக்குறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! எனக்குப் போட்டியா!?

      Delete
  24. ஆஆகா..... பொறந்த வீட்டுப்புரானம்னு சித்தப்புவோட எங்களையும் காலை வாரி விட்டுடிங்களே அக்கா....

    ReplyDelete
    Replies
    1. எம்புட்டு புகழ்ச்சியா உங்களைலாம் பேசி இருக்கேன். காலை வாரி விட்டதா சொல்றீங்களே!

      Delete
  25. அசத்தலான அறிமுகங்கள். எல்லோரும் அறிந்த முகங்கள்...அறிய வேண்டிய முகங்கள். வாழ்த்துக்கள் தங்கள் பணி சிறக்க.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!

      Delete
  26. எல்லோருடைய வீட்டுக்கும் போய் நல்லா சாப்பிட்டு வந்திடுவீங்களா? எங்க நிஜாம் பக்கம் வந்தால்
    ஜிகிர்தண்டா (செய்யச் சொல்லித்) தருவேன்.

    http://nizampakkam.blogspot.com/2010/11/75jiljil-jigirthanda.html

    ReplyDelete
    Replies
    1. இன்னும் ஜிகர்தண்டா ருசிச்சதில்லை. ஆனா, சாப்பிடனும்ன்னு ஆசை இருக்கு. அதை உங்க வீட்டுல வந்து சாப்பிட்டுக்குறேன்

      Delete
  27. நீங்க எப்ப நம்ம வீட்டு பக்கம் வந்தாலும் கொஞ்சம் முன் கூட்டி சொல்லிட்டு வாங்க அப்பதான் என்னனென்ன சீர் எல்லாம் கொண்டு வரலாமுன்னு லீஸ்ட் அனுப்ப முடியும். ஏதுக்கும் இந்த லிஸ்ட் அட்வான்ஸ் வைச்சுகோங்க... 1.பதிவர்கள் யாரெல்லாம் புக் வெளியிட்டு இருக்காங்களோ அவங்க புக் எல்லாம் எனக்கு வாங்கி வாங்க.. 2. என்னனென்ன கலர் புடவை எல்லாம் வருதோ அதை எல்லாம் வாங்கி அதில் அழகான உங்க கைவேலையெல்லாம் காட்டி புடவை எடுத்துவாங்க என் மனைவிக்கு 3 அது போல டாப்ஸ் எல்லா கலரிலும் வாங்கி அதிலும் உங்க வேலையை காண்பித்து என் குழந்தைக்கு வாங்கி வாங்கி வாங்க... அப்புறம் மறக்காம அரிசி பருப்பு சமையல் ஜட்டங்கள் வாங்கி வாங்க... அதுமட்டுமல்லாமல் பலகாரம் சுட்டு வாங்க அதுக்கும் மேல் நீங்க ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கி வாங்க...

    இப்ப சொல்லுங்க நீங்க எப்ப வருவீங்க என்று

    ReplyDelete
    Replies
    1. இம்புட்டுதானா!? எல்லாமே வாங்கி வரேன். திரும்பி வரும்போது என் இடுப்புக்கு வைரத்துல வேணாம் தங்கத்துல ஒரு ஒட்டியாணம் செஞ்சு போட்டுடுங்க .போதும்!

      Delete
  28. இத்து கோச்சுகினு போறா மாறி தெர்ல்லம்மே...! ஒயகம் சுத்தும் வாலிபி மாறில்ல கீது...?
    இன்றோடூசு ஆய்க்கின அல்லாருக்கும் வாய்த்துக்கள்பா...!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு ரொம்ப டாங்க்சு நைனா!

      Delete
  29. எப்படியோ எனக்கு இன்று அறிமுகமானவர்களில் பெரும்பாலோரைத் தெரியும் என்பதே மிகப் பெரிய மகிழ்ச்சி. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. முதல்ல நம்ம சொந்த பந்தங்களுக்கு மரியாதை செய்யனுமில்ல எழிலக்கா!

      Delete
  30. ரொம்ப நன்றி சகோ ... தொடர்ந்து கலக்குங்கள் ...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜா!

      Delete
  31. பொறந்தவீட்டுப்புராணம்! செம கலக்கல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி சகோ!

      Delete
  32. பொறந்த வீட்டு புராணம் கலக்கல்... ஒரு ரவுண்ட் போயிட்டு வந்தா நல்லா தான் இருக்கும்,.

    அசத்துங்க..

    ReplyDelete
    Replies
    1. ம்ம் அதுக்குலாம் கொடுத்து வச்சிருக்கனும். இப்படி கற்பனைல போனால்தான் உண்டு!

      Delete
  33. அண்ணன் ரொம்ப லேட்டு, அறிமுகத்துக்கு நன்றி தங்கச்சி"ம்மா !

    ReplyDelete
    Replies
    1. நாட்டாமையே லேட்டா வந்தா என்னப் பண்ணுறது!?

      Delete
  34. வாங்க...வாங்க வெல்கம்....

    ReplyDelete
    Replies
    1. வந்தப் பிறகு ஏன்க்கா வந்தேன்னு கேக்கப்படாது!!

      Delete
  35. சென்னைக்கு வரேன் வரேன்னு பில்டப் மட்டும் கொடுக்கறீங்க.... வந்தா கண்டிப்பா சோழா ஹோட்டலுக்குப் போகலாம் அக்கா...

    ReplyDelete
  36. ராஜி நீங்க ரொம்பதான் பேசிறீங்கம்மா ஆனால் இப்படி கலகலப்பா பேசிறவங்கள தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர் தான் இருந்தாலும்.எனக்கு உங்களை பார்க்கவேண்டும் போல் இருப்பதால் அமெரிக்கா வரும் போது பக்கம் தானே கனடா வந்து என்னையும் பார்த்துவிட்டு போங்கள். சரிதானா
    வருவீங்க இல்ல எனக்கு தெரியும் வருவீங்க. ஏன்னா செல்லமான வாயாடி தான் ஆனால் தங்கமான மனசு என்று பேசிக்கிறாங்க எல்லோரும்.(எல்லாம் ஜோக்) சீரியசா எடுக்க வேண்டாம்.
    வாழ்த்துக்கள் தோழி ....! அசத்துகிறீர்கள்.!
    அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
  37. அசத்துங்க..

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. சித்தப்பு பாவம்! :)))))

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.....

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது