அன்பின் பூ - முதல் நாள்
➦➠ by:
மஞ்சுபாஷினி
அன்புக்காலை வணக்கங்கள் எல்லோருக்கும்…
வலைச்சர் ஆசிரியராய் பொறுப்பேற்க பரிந்துரை செய்த கோபு அண்ணாவுக்கும் வாய்ப்பளித்த சீனா அண்ணாவுக்கும் என் முதல் வணக்கங்கள்.
நான் மஞ்சுபாஷிணி… என் கணவர் சம்பத்குமார், என் குழந்தைகள் விக்னேஷ்ராம், இபானேஷ்ராஜ், அம்மா, தம்பி தீபக்ராஜேஷ் (குடும்பம்) எல்லோருடனும் குவைத்தில் வசிக்கிறேன். கதை, கவிதை, பாடல் எல்லாமே இஷ்டம் எனக்கு. மனிதராய் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் ரசனை கண்டிப்பாக இருக்கும். ரசனை இல்லாத வாழ்க்கையை நினைத்துப்பார்க்கவே முடியாது. இல்லைன்னா பிறந்து இத்தனை வருடங்கள் ஒவ்வொரு நொடியும் ஒரு அட்வென்ச்சர் போல் அடுத்து என்ன நடக்கும் என்று அறியாமல் நாம் நாட்களை நகர்த்திக்கொண்டு இருப்போமா??? அப்ப நான் சொன்னது சரி தானேப்பா?
என் தளத்தில் நான் என் படைப்புகள் பதிவதை விட பிறரின் படைப்புகள் வாசித்து நான் எப்படி உணர்கிறேன் அவர்கள் வரிகளை படித்து என்பதை என் கருத்தாய் சமர்ப்பிப்பதில் எனக்கு கூடுதல் விருப்பம்.
முதல் நாள் என்பதால் எனக்கு பிடித்த என் எழுத்தில் இருக்கும் கவிதைகள் கதைகள் கொஞ்சம் தருகிறேன்.
கதைகள்
கவிதைகள்
சமையல்கூடம்
நாளை மீண்டும் உங்களை என் மனம் கவர் பதிவுகளோடு சந்திக்கிறேன்..
அன்பு நன்றிகள் அனைவருக்கும்….
|
|
உங்களின் ரசனையான பதிவுகளோடு சுய அறிமுகம் நன்று... சில பதிவுகளை வாசிக்க வேண்டும்... நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..
Deleteஒரு பதிவுக்கே உங்க கமென்ட் ரசனையான பதிவா இருக்குமே...வாழ்த்துக்கள் வருக வருக...
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..
Deleteரசனை இல்லாத வாழ்க்கையை நினைத்துப்பார்க்கவே முடியாது./
ReplyDeleteரசனையான கலகல்ப்பான அறிமுகம் ..
வலைச்சர வருகைக்கு வாழ்த்துகள்..!
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ராஜேஸ்வரி.
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சரவணன்.
Deleteஅதீத அன்பு கவிதை நன்றாக இருந்தது.சோயா-65 இது என்ன நீங்களே வைத்த பெயரா? ஆசிரியப்பணிக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஆமாம்.. நான் வைத்தப்பெயர் தான் தினேஷ்.. என் கணவர் ஒரு நாள் மாலை எதாவது சூடாக செய்து தரச்சொன்னார் க்ரிஸ்பியாக. அப்போது சோயா மீல்மேக்கர் இருந்தது வீட்டில். செய்துப்பார்த்தேன். அன்று செய்தது முதல் முயற்சி.. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா தினேஷ்.
Deleteமேடம் ராஜராஜேஸ்வரி அவர்கள் அன்னை
ReplyDeleteமதுர பாஷிணி பற்றி விளக்க
வலைச் சாரத்திலே
மஞ்சு பாஷிணி பிரசன்னம்.
மதுரம் இனிமையான
மஞ்சு இதமான மிருதவான
அன்னை என்பவள் அவள் தானே.
All the best.
சுப்பு தாத்தா.
அன்பு வணக்கங்கள் அப்பா.. ரொம்ப நாளாச்சு உங்களிடம் பேசி. பேசவேண்டும். இன்று மாலையே ஆபிசுல இருந்து வந்ததும் அழைக்கிறேன் அப்பா.. அம்மாவுக்கு அன்பு நமஸ்காரங்கள். மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அப்பா..
Deleteஅக்கா, கலக்குங்க..!!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஆனந்த்.
Delete"//என் தளத்தில் நான் என் படைப்புகள் பதிவதை விட பிறரின் படைப்புகள் வாசித்து நான் எப்படி உணர்கிறேன் அவர்கள் வரிகளை படித்து என்பதை என் கருத்தாய் சமர்ப்பிப்பதில் எனக்கு கூடுதல் விருப்பம்.//" - தங்களின் சுய அறிமுகம் அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சொக்கன் சுப்பிரமணியன்.
Deleteவணக்கம். உங்கள் அறிமுகம் கண்டேன்...வாழ்த்துகள்! பதிவுகளைப் படிக்கிறேன்..நன்றி!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்.
Deleteசுய அறிமுகத்தைக் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் அக்கா
ReplyDeleteமென்மேலும் அறிமுகங்கள் சிறந்து விளங்கட்டும் .
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தங்கை.
Deleteரசனை இல்லாத வாழ்க்கையை நினைத்துப்பார்க்கவே முடியாது. //
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மை மஞ்சு.
அறிமுகம் அருமை, வாழ்த்துக்கள்.
.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கோமதி மேம்.
Deleteவாழ்த்துகள். கலக்குங்க.
ReplyDeleteம்ம் வாங்க வாங்க :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ஸ்ரீராம்.
Deleteவருக! தருக! வாழ்த்து!
ReplyDeleteஅன்பு வணக்கங்கள் அப்பா. மனம் நிறைந்த அன்பு நன்றிகள். சௌக்கியமா அப்பா?
Deleteஅருமையான அறிமுகம்! பிறரது படைப்புக்களை வாசிக்க வேண்டும் என்ற உங்கள் அவா புரிகிறது! தொடரட்டும் உங்களின் சிறப்பான ஆசிரியர் பணி! நன்றி!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சுரேஷ்.
Delete//ஒவ்வொருவருக்கும் ரசனை கண்டிப்பாக இருக்கும். ரசனை இல்லாத வாழ்க்கையை நினைத்துப்பார்க்கவே முடியாது. இல்லைன்னா பிறந்து இத்தனை வருடங்கள் ஒவ்வொரு நொடியும் ஒரு அட்வென்ச்சர் போல் அடுத்து என்ன நடக்கும் என்று அறியாமல் நாம் நாட்களை நகர்த்திக்கொண்டு இருப்போமா??? அப்ப நான் சொன்னது சரி தானேப்பா?//
ReplyDeleteஅன்பின் ‘மஞ்சு’ எது சொன்னாலும் அது சரியாகவே தான் இருக்க முடியும். ;)
ஆஹா அண்ணா ரொம்பவே மிரட்டிட்டேனோ? :)
Deleteபொடி வெள்ளரிப்பிஞ்சு போன்ற குழந்தைப்பிள்ளையாரும், குட்டியூண்டு [கோபால] கிருஷ்ணனும், கடைசியில் காட்டியுள்ள குட்டியம்மாவும் நல்ல படத்தேர்வுகள், மஞ்சு.
ReplyDeleteமகிழ்ச்சி ;)
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete//வலைச்சர் ஆசிரியராய் பொறுப்பேற்க பரிந்துரை செய்த கோபு அண்ணாவுக்கும் வாய்ப்பளித்த சீனா அண்ணாவுக்கும் என் முதல் வணக்கங்கள்.//
ReplyDeleteதவித்த வாய்க்குத் தண்ணீர் கிடைத்ததுடன் ஸ்வீட்டான இளநீரும் சேர்ந்து கிடைத்தது போல பெரு மகிழ்ச்சியடைந்தோம்.
கேட்டதும் உடனே மறுப்பேதும் சொல்லாமல், கோபு அண்ணாவின் மேல் உள்ள பாசம் + பிரியத்திற்காக மட்டுமே, பதவி ஏற்றுக்கொண்ட மஞ்சுவுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு ___________ [நன்றிகள் எனச் சொன்னால் மஞ்சுவுக்குக் கோபம் வரும்] வாழ்த்துகள் என பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
ஆஹா அண்ணா மிக்க மகிழ்ச்சி :)
Delete//என் தளத்தில் நான் என் படைப்புகள் பதிவதை விட பிறரின் படைப்புகள் வாசித்து நான் எப்படி உணர்கிறேன் அவர்கள் வரிகளை படித்து என்பதை என் கருத்தாய் சமர்ப்பிப்பதில் எனக்கு கூடுதல் விருப்பம்.//
ReplyDeleteஅப்படித்தான் நம்பினோம், இப்போதும் நம்புகிறோம், இனியும் நம்புவோம். மஞ்சுவின் இந்தக் கூடுதல் விருப்பம் நிறைவேற ஆண்டவன் அருள் புரியட்டும்.
நம்பிக்கை தானே அண்ணா வாழ்க்கை? :)
Deleteசுய அறிமுகத்தில் கொடுத்துள்ள கதைகள் + கவிதைகள் + சமையல் கூடம் சாம்பிள்கள் அனைத்தும் அருமை. பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
ReplyDeleteஇந்த வாரம் முழுவதும் மஞ்சுவுக்கு வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்.
துவங்கிய முதல் நாளே முஹூர்த்த நாளாக அமைந்து விட்டது. ஸ்ரீரங்கத்தில் ஓர் கல்யாணம். மாப்பிள்ளைப்பையர் துபாய். என் மூத்த பிள்ளையின் நண்பர். அங்கு துபாய்க்குப் போய்விட்டு, வடை பாயஸத்துடன் சாப்பிட்டுவிட்டு இங்கு குவைத்துக்கு வந்ததில் சற்றே தாமதமாகி விட்டது. ;))))) ALL THE BEST MANJOOOO
பிரியமுள்ள கோபு அண்ணா
ஆஹா அண்ணா கல்யாண சாப்பாடா? அதான் லேட்டா குவைத் வர. இருக்கட்டும் இருக்கட்டும். நல்லது அண்ணா.
Deleteவணக்கம்
ReplyDeleteஇரத்தினச்சுருக்கம் போல சுய அறிமும் மிக நன்றாக உள்ளது.. இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரூபன்.
Deleteஅன்பு மஞ்சு, உங்களுக்கு அறிமுகம் தேவையா... தேன் தடவிய வார்த்தாஇகளை அனுப்பி மனதைவருடும் வரம் பெற்ற பாக்கியசாலி. மனம் நிறைந்த வாழ்த்துகள் அம்மா.
ReplyDeleteஉங்கள் ஆசீர்வாதம் என்றும் வேண்டுகிறேன் வல்லிம்மா... தங்கள் தொலைபேசி எண் என் மெயிலுக்கு அனுப்ப இயலுமா அம்மா?
Deleteதொடக்கமே அருமை
ReplyDeleteதொடருங்கள்
இனிய
நல் வாழ்த்துக்கள்
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சார்.
Deleteகலக்கலான வாரமாக அமைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா குமார்.
Deleteவாழ்த்துகள் மஞ்சு
ReplyDeleteஆஹா கிரிதரன் உங்க வலைதளத்தில் கவிதைகள் எதுவுமே காணோமே. என்னால் பார்க்க இயலவில்லை. காக்கா ஊச்?
Deleteகலக்குவதற்கு என் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் கலையன்பன்.
Deleteவருக வருக.
ReplyDeleteஆஹா அப்பாதுரை எஸ் ஆகிட்டீங்க. :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..
Deleteபின்னூட்டங்களால் எம்மை சபையேற்றிய
ReplyDeleteஎம் அன்பு சகோதரியே..
மணமிக்க மலர்களால்
வலைச்சரம் தொடுத்திடுங்கள்...
நித்தமும் வருகிறேன்
அதன் சுகந்தம் நுகர்ந்திட..
வாழ்த்துக்கள் சகோதரி...
அழகிய தமிழால் எழுதிய விதம் மிக அருமை மகேன். மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தம்பி.
Deleteஇனிய நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..
Deleteபுரட்சித் தலைவர் தமிழக மக்களிடம்
ReplyDeleteதன்னை அறிமுகம் செய்து கொள்வது போலத்தான்
நீங்கள் உங்களை பதிவர்களுக்கு அறிமுகம்
செய்து கொள்வதுவும்....
இந்த வார வலைச்சர வாரம் சிறப்பாக அமைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அச்சச்சோ ரமணி சார். உங்கள் எல்லோரின் ஆசீர்வாதத்திலும் தான் நான் எழுதுவதே. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரமணி சார்.
Deleteசற்று தாமதமாகவே கவனித்திருக்கிறேன். மன்னிக்க! வலைச்சர வாத்தியார் மஞ்சுவுக்கு என் உற்சாகமான வரவேற்பு! அசத்தப் போகும் இந்தப் பயணத்தில் உடன்வர ஆர்வமுடன் நானும்!
ReplyDeleteமன்னிப்பா? என்னிடமா? என்னப்பா கணேஷா இது. ஆஹா வாத்தியாரா ஹை கேட்கவே நல்லாருக்கேப்பா.. வாங்க வாங்க உடன் பயணிப்போம். ஆனா மன்னிப்பு கேட்டுராதீங்கப்பா.. :)
Deleteதாமதமாக வருவதற்கு என்னையும் மன்னியுங்க அக்கா.
ReplyDeleteஎன்ன சசி மன்னிப்பு வேண்டாமேப்பா.
Deleteரசனை அறிமுகம் ..
ReplyDeleteவாழ்த்துகள்..!
Vetha.Elangathilakam.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் வேதாம்மா
Deleteதங்களின் அறிமுகம் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஐயா.
Deleteவணக்கம் அக்கா... சுய அறிமுகம் சுருக்கமாயினும் சிறப்பு.... கலக்குங்க....
ReplyDeleteவலைச்சர ஆசிரியப் பணிக்கு என் வாழ்த்துக்கள்...
ReplyDeleteசிறப்பான சுய அறிமுகம்......
ReplyDeleteவலைச்சரத்தில் ஆசிரியர் பணி.... வாழ்த்துகள் சகோ.