07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, February 14, 2014

அன்பின் பூ - ஐந்தாம் நாள்

அன்பு வணக்கங்கள் எல்லோருக்கும்
காரியத்துக்காக காதல், பணம் பார்த்து அழகுப்பார்த்து சொத்துப்பார்த்து வரும் காதல் நிலைப்பதில்லை.  எதையும் விட்டுக்கொடுத்து காதலை தக்கவைத்துக்கொள்ள முனைவோர் காதல் கண்டிப்பா நிலைக்கும். காதலை விட்டுக்கொடுத்து வேறு எதைப்பெற?  இப்ப வரும் சினிமாவில் ஸ்கூல் போகும் பிள்ளைகள் கூட காதல் கடிதம் கொடுக்க தொடங்கிவிடுகிறார்கள். இதைப்பார்த்து பிள்ளைகளும் கற்றுக்கொள்கிறார்கள்…சினிமா, சீரியல் செய்யும் வேலை இது. காதல் வரும்போது வரட்டும். அதுவரை பெற்றோர் மனதை புண்படுத்தாமல் படிப்பதில் கவனத்தை செலுத்தி நன்றாக படித்து எதிர்க்கால வாழ்க்கையை திட்டமிட்டு அதன்படி வேலையில் அமர்ந்து வாழ்க்கையை ஜெயித்தால் காதல் தேடி வரும் நம்மை.

நிறைய படங்களில் காதலன் காதலி சேர நிறைய பாடுப்பட்டு அடி வாங்கி வீட்டில், காதலர்களுக்குள் ஈகோ, சண்டை கோபம் டூயட் செண்டிமெண்ட் இப்படி எல்லாமும் முடிந்து இறுதியில் இருவரும் சேர்ந்துவிடுவார்கள் அதோடு படம் முடிந்துவிடும்.  அதனால் தான் பிள்ளைகளுக்கு காதல் என்றால் வெறும் சந்தோஷம் மட்டுமே என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். உண்மையான காதல் கல்யாணத்தில் முடியவேண்டும். ரகசிய திருமணமாகவோ, அல்லது ரெஜிஸ்ட்ரார் துணைக்கொண்டோ அல்ல. பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணத்தில் முடிந்து அதன்பின்னும் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறந்தது போல் நேசித்து வாழ்க்கையின் இறுதி கட்டம் வரை காதல் இருக்கவேண்டும் இருவரின் மனதிலும்..

காதல், அதன்பின் கல்யாணம், அதன்பின் குழந்தைப்பெறுதல், குழந்தை வளர்ப்பு, வளர்ந்த பிள்ளைகளுக்கு கல்யாணம், மூப்பு, இப்படி வாழ்க்கையின் எல்லா கட்டங்களிலும் காதல் உயிர்த்து இருக்கவேண்டும் இருவர் மனதிலும்…உடன் இருக்கும் உறவுகளும் புதிதாய் சேரலாம், இருக்கும் உறவுகள் மறையலாம். ஒரு சில விலகலாம். ஆனால் இறுதி வரை நிலைத்து நிற்கும் உறவு நேசம் பிறாந்த இரு உறவுகள் மட்டுமே.. ” உனக்கு நான் எனக்கு நீ “ என்று நேசிக்கும் இரு உள்ளங்கள் மூப்பு வந்து கண் மங்கி காது கேட்காமல் கைக்கால் நடுக்கத்திலும் கைவிடாது காதலை பொத்தி வைத்திருப்பார்கள் எங்கோ ஒருசில உண்மையான காதலர்கள் கணவன் மனைவியாக. இது தான் காதல்.

காதல் என்றால் என்ன? க்ளாஸ் கட் அடிச்சிட்டு சினிமா பார்க் பீச் சுடும் வெயிலில் சுற்றுவதா?  பணமும் அழகும் இருப்பவரை பார்த்து வருவதா? எதிர்ப்பார்ப்புகள் நிறைய வைத்துக்கொண்டு பகிரப்படும் காதல் சீக்கிரமே பிசுபிசுத்துவிடும்.

உனக்கு பிடிச்சது எனக்கும் பிடிக்கும்,  இதுவரை நிற்கவேண்டும். எனக்கு பிடிச்சது உனக்கும் பிடிச்சாகணும். அப்படின்னு சொன்னால் அங்கு ஆளுமை தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.  நீ எப்போதும் சிரிச்சுட்டே இருக்கணும் சந்தோஷமா இருக்கணும். நான் அதைப்பார்த்து ரசிக்கவேண்டும் இது ஓகே. நீ என்னால மட்டும் தான் சந்தோஷமா இருக்கணும், என்னிடம் மட்டும் தான் சிரிச்சு பேசவேண்டும் என்று சொன்னால் அது பொசசிவ்நெஸ்.  ஆஹா நம்மை  எந்த அளவுக்கு ஆழமா காதலிச்சா இவ்ளோ பொசசிவ்நெஸ் இருந்திருக்கும் அப்படின்னு பெருமை பட்டுரக்கூடாது. ஏன்னா இந்த பொசசிவ்நெஸ் தான் பிரிவுக்கான முதல் படி.

பொசசிவ்நெஸ்ல ஆரம்பிச்சு அவக்கிட்ட பேசக்கூடாது இவக்கிட்ட இளிக்கக்கூடாது. வேலை முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வராம எங்க சுத்த போனீங்க? இப்படி நிறைய கேள்விகள். அதில் எழும் சந்தேகங்கள். அவர்கள் மனசு வருத்தப்படவேண்டாம் என்று அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள் அவர்களுக்கு சாதகமாகச்சொல்லப்போய் அதுவே ஒரு காலக்கட்டத்தில் சலிப்பு ஏற்ப்பட்டுவிடும். அடச்சே இவளை காதலிச்சதுக்கு நரகத்துக்கே போயிருந்திருக்கலாம் என்ற வெறுப்பு ஏற்பட்டுவிடும். அதைவிட ஒருவரை ஒருவர் காதலிக்கும்போது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வளர்த்துக்கொள்ளவேண்டும்.  கோபத்திலும் வார்த்தைகள் அள்ளி கொட்டிவிடாமல் கவனமாக மௌனம் காக்கலாம். ஏனெனில் கோபத்தில் நாம் உமிழும் வார்த்தைகளே பாம்பாய் நம்மை கொத்தும் நிலை வரலாம். சுயமரியாதையை இழக்கும் நிலை காதலில் மட்டுமல்ல எந்த உறவிலும் நட்பிலும் வரக்கூடாது.

எந்த நிலையிலும் நேசிப்பவரின் மனம் புண்படும்படியான வார்த்தைகள் கொட்டிவிடாமல் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். கல்யாணம் எப்படி ஆயிரம் காலத்துப்பயிரோ அதேப்போல் தான் காதலும். காதல் செய்வதே கல்யாணம் புரிவதற்காக தானே? காதலித்து கல்யாணம் புரிந்து வாழ்க்கையில் வெற்றியை தொடுவதென்பது எளிதான காரியம் இல்லை. ஆனால் முயன்றால் முடியாதது எதுவும் இல்லையே. மனம் நிறைந்த அன்பை இனிமையான வார்த்தைகளாக வெளிப்படுத்தவேண்டும். கோபம் ஆரம்பித்து சண்டையில் முடிந்து பிரிவதற்கு தானா உருகி உருகி காதலித்தது?  ஒரு வார்த்தை பேசுமுன் யோசியுங்கள், சொல்லும் வார்த்தையினால் உங்களுக்கோ உங்களை நேசித்தவருக்கோ பலன் இருக்கிறதா என்று. உங்கள் சொற்கள் அவரை குதறிவிடும் என்றால் அமைதி காத்துவிடுங்கள். 

இந்தக்காலத்துப்பிள்ளைகள் சீக்கிரமே காதலில் விழுகிறார்கள், சீக்கிரமே ப்ரேக் அப் கூட…  இந்த இனிய நாளில் மட்டுமே எல்லோரும் அன்பாய் இருக்காமல் எல்லா நாளுமே எல்லோரிடமும் அன்புடன் இருந்து வாழ்க்கையை மட்டுமல்ல செல்லும் இடமெல்லாம் சிறப்பாக்கிக்கொள்ளுவோம். 


இன்று மனம் கவர் பதிவர்கள் சிலரை சந்திப்போமா?

காதலிக்கவில்லை என்றாலும் கவிதை வரும் என்று அழகுறச் சொல்கிறார்.

இருட்டிலும் தடம் மாறாது புன்னகை சிந்திச்செல்லும் அருமையான கவிதைகள் நிறைந்திருக்கிறது.

சீரியசான கணேஷாக இருந்து கருத்துகள் தருவதும் வசந்தாக மாறி நகைச்சுவையால் நம்மை மகிழ்விக்கிறது.

அழகிய கலைநயம் மிக்க வேலைப்பாடுகளும், பாடல்களும் இவரின் ரசனையை சொல்கிறது.

ஒவ்வொருவரின் கவிதையும் இவர் பார்வையில் எழுதி இருக்கும் விமர்சனம் மிக அருமை.

கோவை ஞானியின் புதிய நூல் தமிழ் நாகரீகத்திற்கு என்ன எதிர்க்காலம் பற்றிய மிக அருமையான கருத்து.

குட்டி கவிதைகளுடன் நிறைந்திருக்கிறது வலைப்பூ.

கோலிசோடா படத்துக்கு என்ன அருமையா விமர்சனம் எழுதி இருக்கார் பாருங்க.

சுவைக்கவும் சிந்திக்கவும் நிறைய நல்ல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

காமடி நடிகர் வடிவேலுவை தன் கற்பனையில் எழுதி இருக்கார் பாருங்க எப்டின்னு.

வித்தியாசமான விளையாட்டென்று சொல்லி ஒரு கவிதை எழுதி இருக்கார்.

ஷீரடி சாய்பாபாவின் நேரடி சிஷ்யை பற்றிய அரிய பகிர்வு.

மாயர்களுக்கும் நமக்கும் உள்ள 100 தொடர்புகளைப்பற்றி சொல்லி இருக்கிறார்.

கொலையாளி என்ற சிறுகதை எழுதி இருக்கிறார் படித்துப்பாருங்களேன்.

மக்கியும் மரமாகும் கவிதை வரிகள் சிந்தனைத்துளிர்.

படங்கள் என்றாலே எனக்கு சட்டென இவர் நினைவு தான் வரும். அழகான தொகுப்பில்  உயிரோட்டத்துடன் இருக்கும் இவர் படங்கள்.

குளத்தின் குறியீட்டை கவிதை வடிவில் சொன்ன பகிர்வு அழகு.

நடிகர் சோ வின் நகைச்சுவையை ரொம்ப அருமையா பகிர்ந்திருக்கிறார்.

பாசத்தை வரிகளில் இழைந்து கிராமத்து கருவாச்சிக்கு ஒரு அன்புக்கவிதை.

எல்லா சாமியும் ஒன்னு தான் என்ற இவர் கவிதையில் ஒரு சிறப்பு இருக்கிறது.

நிலவு வந்த நேரத்தை என்ன அழகா சொல்லி இருக்கார் பாருங்களேன்.

ஒவ்வொரு படத்துக்கும் இவர் விமர்சனம் எழுதறது அட்டகாசமாக இருக்கும்.

படைப்பாளிகளின் படைப்புகளுக்கு வரவேற்புக்கொடுத்து படைப்புகளை பகிரும் அருமையான வலைப்பூ.

சந்தேகமும் நம்பிக்கையும் என்ற முரண்பாடான இரு வார்த்தைகளை வைத்து கவிதை அழகா எழுதி இருக்கார்.

அனுபவங்களை சுவாரஸ்யமாக பதிவிட்டிருக்கிறார்.

பழமையை விட்டுவிடாத புதுமை விரும்பியின் கவிதை இது.

ஒரு பகிர்வை எப்படி சுவாரஸ்யமாக தருவது என்று இவரின் இந்த பதிவை பார்க்கும்போது தெரிந்துக்கொள்ளலாம்.

இன்றைய நாள் எல்லோருக்கும் நலன்களே தரட்டும். அன்பு வணக்கங்கள்.

மீண்டும் நாளை மனம் கவர் பதிவர்களுடன் சந்திப்போம்.



44 comments:

  1. காதல் என்பது பற்றிய புரிதல் நிறைய இளைஞர்களுக்கு இல்லை. அழகான ஒரு அலசலை நடத்தி அசத்திட்டீங்க மன்ச்சூ! இன்னும் கொஞ்சம் விரிவா எழுதினீங்கன்னா... தனி புத்தகமாவே போட்டுறலாம். பழக்கப்பட்ட பலரின் தளங்களுடன் புதியவையும் சில (கணேஷ்&வசந்த் போல). படிக்கிறேன். அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா மிக்க மகிழ்ச்சி கணேஷா.

      Delete
  2. வணக்கம்

    இன்று காதல் பற்றி மிக சிறப்பாக கூறியதோடு இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ரூபன்.

      Delete
  3. காதல் குறித்து அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்! எனது தளத்தையும் இணைத்துக் கொண்டதற்கு நன்றி:)!

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ராமலஷ்மி.

      Delete
  4. பிள்ளையார் படம் அழகோ அழகு... காதலைப் பற்றிய விளக்கம் மிகவும் அருமை...

    அன்பு தினம் - என்றும் வேண்டும்...
    தினம் என்றும் - அன்பாக வேண்டும்...

    வாழ்த்துக்கள்...

    கணேஷ் - வசந்த், பொன் இளவேனில், வைகறை, வாமனன் அதீதம், இளையநிலா ஜான்சுந்தர் - இவர்களின் தளங்கள் எனக்கு புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. //அன்பு தினம் - என்றும் வேண்டும்...
      தினம் என்றும் - அன்பாக வேண்டும்...// அற்புதம்பா... ரசித்தேன்.... மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.

      Delete
  5. ரசனையான அறிமுகங்கள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா இராஜராஜேஸ்வரி.

      Delete
  6. காதல் பற்றிய உரை மிக அருமை..உண்மையும் கூட!
    பல அருமையான தளங்களுடன் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றி பல மஞ்சுபாஷினி!!

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா கிரேஸ்.

      Delete
  7. ’கா த லா வ து க த் த ரி க் கா யா வ து’
    http://gopu1949.blogspot.in/2014/02/vgk-05.html
    என்று சொல்லாமல் காதலைப்பற்றிய மிக அருமையான, உண்மையான, நெகிழ்வான விளக்கங்கள் கொடுத்துள்ளது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மஞ்சு.

    குப்புறப்படுத்துள்ள குழந்தைப்பிள்ளையாரும்,
    கொண்டைபோட்டக் கண்ணனும்
    பனியன் போட்ட பாப்பாவும்
    மிகச்சிறப்பான படத்தேர்வுகள்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள் ...... மஞ்சு.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா.

      Delete
  8. காதலர் தினத்தில் காதலைப் பற்றிய விளக்கம் மிக அருமை. மூன்று படங்களும் கொள்ளை அழகு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சொக்கன் சுப்பிரமணியன்

      Delete
  9. எனது தளத்தை அறிமுகபடுதியதற்கு நன்றி. அறிமுகமான மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சரவணன்.

      Delete
  10. அடுத்த அடுத்த வாரங்களில் எனது தளம் வாசிக்க பரிந்துரைக்க செய்ததற்கு நன்றி சகோ ...!!! மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ...!!!

    அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!!!
    மற்ற தோழர்களின் தளங்களையும் வாசிக்கிறேன் ...!!!

    இனிதே இப்பணி தொடர அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள் ..!!!

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ஜெயசரஸ்வதி.

      Delete
  11. அக்கா அருமையான அலசல்... அறிமுகபடுத்தியவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சசி.

      Delete
  12. இன்றைய வலைப்பூக்கள் அறிமுகம் அருமை.அதைவிடவும் மிக அருமை இன்றைய கருத்துப் பகிர்வு. இளைஞர்களுக்கு ஒரு பாடம்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஐயா.

      Delete
  13. http://atheetham.com/ this is the official website of atheetham magazine. please do accept this change in your post.

    thanks

    ReplyDelete
    Replies
    1. I apologize for my mistake Sir... I have corrected. Thankyou Sir..

      Delete
  14. அன்பின் தி. த. அய்யா, ரூபன் அய்யா, மற்றும் அறிமுகம் செய்த தங்களுக்கும் நன்றி கலந்த வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா க்ருஷ்ணா ரவி.

      Delete
  15. காதல் பற்றிய சிறப்பான கருத்துப்பகிர்வு! சில தளங்கள் புதியவை! சென்று பார்க்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சுரேஷ்.

      Delete
  16. அழகிய படங்களுடன் சிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் என்
    இனிய வாழ்த்துக்கள் .உங்களுக்கு என் பாராட்டுக்கள் அக்கா .

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா அம்பாளடியாள்.

      Delete
  17. எனது தளத்தையும் அறிமுகப்படுத்தி வைத்தமைக்கு மிக்க நன்றி.காதலைப் பற்றிய விளக்கம் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா தினெஷ் சாந்த்.

      Delete
  18. காதலைப்பற்றி அருமையான கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள்.
    இன்றைய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் மேம்.

      Delete
  19. காதல் பற்றிய சிறப்பான கருத்து .

    ReplyDelete
  20. மூத்தவர்கள் மிளிரும் வலைச்சரத்தில் தனிமரத்தையும் அடையாளம் காட்டியத்துக்கு நன்றிகள்.

    ReplyDelete
  21. என்னோடு அறிமுகமான எல்லா வலை உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. வலைச்சர அறிமுகம் என்று அறிவிப்புத்தந்த அன்பு நண்பன் ரூபனுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  23. Arumai akka.. Oru wedding function la busy aa irukkarathaala comment poda mudiyala.. but ellaaththaiyum padichchuttu thaan irukken.. :)

    ReplyDelete
  24. எனது "சோவின் நகைச்சுவை" என்ற பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி, நன்றி, நன்றி!

    ReplyDelete
  25. தகவலை எனது பதிவில் வந்து தெரிவித்தமைக்கு...
    தங்களுக்கும் திரு.ரூபன் அவர்களுக்கும் நன்றி, நன்றி!

    ReplyDelete
  26. எனக்குத் தெரியாத சில பதிவர்களின் பக்கங்களை உங்கள் அறிமுகத்தினால் தெரிந்து கொண்டேன். நன்றி சகோ.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது