என் வீட்டுத் தோட்டத்தில்
➦➠ by:
ராஜி
ஆறறிவு ஜீவன்களைப் பற்றியும், ஐந்தறிவு ஜீவன்களான ஊர்வன, பறப்பன, நீந்துபவைப் பத்தி பதிவுப் போட்டு அசத்திய நம்மாளுங்க ஓரறிவு ஜீவன்களான செடி, கொடியை மட்டும் விட்டுடுவாங்களா!? என்ன!?
இதோ அவற்றைப் பற்றி பதிந்தவர்களின் தளங்கள்...,
மனிதன், ஐந்தறிவு ஜீவன்கள் மட்டுமில்லை.., மரம் செடி, கொடிகளுக்கும் மனம் உண்டென்பதை சரவணன் குமார் அனுபவத்திலிருந்துத் தெரிஞ்சுக்கலாம்.
அக்கம் பக்கம் வீட்டினர் கொடுக்கும் முருங்கைக்காய்களைச் சமைச்சுச் சாப்பிட்டுப் பழக்கமான நமக்கு ஒரு முருங்கைக் காய் 7 இல 10 ரூபாய் கொடுத்து வாங்கினா எப்படி இருக்கும்!? அதை பகுத்தறிவு பக்கங்களில் சொல்றாங்க.
சிறு வயதில் புளியம் பழத்தைப் பறித்து விளையாடிய பித்தனின் வாக்கு அனுபத்தைப் படிச்சுப் பாருங்க.
கல்யாணத்துல வாழை மரம் ஏன் கட்டுறாங்க!? கட்டி வைக்கலைன்னா கீழ விழுந்துடும்லன்னுதான் என்னை மாதிரி ஆட்கள் ஜோக்கடிப்பாங்க. ஆனா, அதுக்கான காரணத்தை பிரபாதாமு சொல்றாங்க.
பெரியவங்களை ஆலமரம்ன்னு சொல்ற வழக்கம் நமக்குண்டு. ஆலமரமும், நம் பெத்தவங்களைப் போல செய்யும் தியாகங்களை விழுதுகள் வெளிச்சம்
கவிதையாக நம்மோடு பகிர்கின்றார்.
எங்க ஊர்களில் கெட்ட விசேசத்துக்கு மட்டும்தான் அகத்திக்கீரை சமைப்பாங்க.ஆனா, அடிக்கடி அகத்திக் கீரை சேர்த்துக்கச் சொல்றாங்க டாக்டர்கள். காஞ்சனா ராதாக்கிருஷ்ணன் அகத்திக்கீரை சூப் செய்யுற விதத்தைச் சொல்றாங்க.
மல்லிகை பூக்குப் பேர் போனது மதுரை. மதுரை மல்லியின் அழகையும், வாசத்தையும் லதாகுப்பா சொல்றாங்க.
கருவேல மரம் நிலத்தடி நீரை உறிஞ்சிடுது. அது தீமையானது, நம்ம நாட்டைவிட்டுப் போகும்போது வெள்ளைக்காரங்க ஹெலிகாப்டர்ல தூவி இந்த விசத்தை நம்மூர்ல பரப்பிட்டுப் போய்ட்டாங்கன்னு ஆயிரம் கதைசொ சொல்லப்படும் கருவேல மரத்தைப் பத்தி டெர்ரர் கும்மி ஆளுங்க என்னச் சொல்றாங்கன்னு ஒரு எட்டுப் பார்த்துட்டு வந்திருங்களேன்.
பழங்களின் அரசனான மாம்பழத்தைப் பற்றி மொஹைதீன் பாஷா சொல்கிறார். இவர் தளத்தில் தாவரங்களைப் பற்றி நிறைய குறிப்பு இருக்கு.
தன் வீட்டில் முதன் முதலாய் காய்த்த அவரைக்காயைப் பற்றி சின்னக் குழந்தையின் குதூகலத்தோடு இளங்கோ படத்தோடு பகிர்கிறார்.
வேப்பம்பூவின் மருத்துவ குணங்கள், அதை பாதுகாத்து வைப்பது, அதனைக் கொண்டு என்னென்ன சமைக்கலாம்ன்னு நம்ம மாதேவி அக்கா போட்டிருக்கும் பதிவைப் பாருங்க.
பலாமரமும், காதலியின் மனமும் ஒண்ணுன்னு கப்லர் பாடல் மூலம் விளக்குகிறார் ஆதிகண்ணன்.
வெற்றிலைப் போட்டால் பட்டிக்காடு, பீடா சாப்பிட்டா அடங்காப் பிடாரின்னு சொல்லும் ஊர் நம்ம ஊர். ஆனா, வெற்றிலைப் போடுவதன் பலங்களை ராஜா
சொல்றார். கேட்டுக்கோங்க.
புதினாக்கு நிறைய மருத்துவ குணம் இருக்கு. விலையும் மலிவு. அதனால, அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும் விதமா அனிதா மோகன்ராஜ் புதினா சட்னி செய்வது எப்படின்னுச் சொல்லித் தர்றாங்க.
மருதாணியுடனான தன் அனுபவத்தையும், கால மாற்றத்தில் மெகந்தி வைக்கக் கற்றுக்கொண்டு தான் போட்ட மெகந்தி டிசைன்களை நமக்கு காட்டுகிறார் சுபத்ரா
சுண்டைக்காயின் மருத்துவ குணங்களை P.L.சும்பரம்ணியன் நமக்கு நினைவூட்டுகிறார்.
எல்லா சீசன்களிலும், எல்லா இடத்திலயும் கிடைக்கும் ஏழைகளினாப்பிளான பப்பாளி பழத்தின் அற்புதத்தை health ல சொல்றாங்க.
இப்ப தக்காளி சீசன். தக்காளி சாதம் செய்றது எப்படின்னு புதிய தென்றல் சொல்லித் தர்றாங்க.
எல்லா சீசன்களிலும், எல்லா இடத்திலயும் கிடைக்கும் ஏழைகளினாப்பிளான பப்பாளி பழத்தின் அற்புதத்தை health ல சொல்றாங்க.
இப்ப தக்காளி சீசன். தக்காளி சாதம் செய்றது எப்படின்னு புதிய தென்றல் சொல்லித் தர்றாங்க.
என்ன சகோஸ் பதிவுகளைப் படிங்க, செடி கொடிகளையும் நேசிங்க. முடிஞ்ச அளவுக்கு ஒரு செடியாவது உங்க வீட்டில் வளருங்க.
மின்வெட்டு காரணமாகவும், மயானக் கொள்ளை பண்டிகை காரணமாகவும் பதிவு தாமதமா வந்ததுக்கு மன்னிச்சு சகோஸ்.
|
|
முதல் விதை என்னுது
ReplyDeleteபசுமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிம்மா!
Deleteவீட்டுத் தோட்டம் குளு குளு என்று - அருமை!..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!
Deleteபசுமையான பதிவு!
ReplyDeleteஇதோ போறேன் தோட்டத்துக்கு!!
தோட்டத்துக்குப் போய் செடி கொடிகளோடு பேசிட்டு வாங்க மைதிலி!
Deleteதோட்டப்பகிர்வு அருமை !எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!
Deleteபகிர்வு அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா!
Deleteஓரறிவு உயிர்களைப்பற்றிய முன்னுரையும் பதிவர்களையும் பற்றி மிக அருமையா சொல்லி இருக்கீங்கப்பா ராஜி.
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கு அன்பு வாழ்த்துகள்.
த.ம.4
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மஞ்சுக்கா!
Deleteஅருமையான பகிர்வு சகோதரி... பாராட்டுக்கள்...
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களில் பல தளங்கள் அறியாதவை...! அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ஆஹா! வலைச்சரத்தின் ஆசிரியப் பண்ணியை இன்னிக்குதான் சரியாய் செஞ்சிருக்கேன்.
Deleteபுதியவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா!
Deleteசெடிகள் நிறைந்த தோட்டம்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
Deleteநல்ல அறிமுகங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலா!
Deleteசில பழைய பதிவுகளை தேடி பிடித்து அறிமுகப்படுத்தி இருக்கீங்க வாழ்த்துக்கள் ராஜி
ReplyDeletehttp://samaiyalattakaasam.blogspot.ae/2014/03/3.html
800 வது பதிவு ,பாரம்பரிய சமையலுடன் சிறப்பு விருந்தினர் பதிவு சர்கக்ரை பொங்கல்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலா
Deleteபதிவின் அறிமுகத்துக்கு மிக்க நன்றி ராஜி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க தென்றல்
Deleteஎந்தத் தளத்துக்கும் சென்றதில்லை அக்கா... நன்றி...
ReplyDeleteஇனி புது தளங்களுக்கு சென்று வாங்க ஸ்பை.
Deleteசிறப்பான தொகுப்பு. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க ஆதி
Deleteennai in the thalathil arimugapaduthiyamaikku nanrikal
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteசின்னுரேஸ்ரி அறிமுகத்துக்கு மிக்க நன்றி.
ReplyDeleteவழமைபோலஅறியத்தந்த திண்டுக்கல் தனபாலன் அவர்கட்கும் மிக்கநன்றி.
அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.....
ReplyDelete