அன்பாலே அழகாகும் வீடு!!
➦➠ by:
ராஜி
ஓவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வாழ்நாள் லட்சியம் இருக்கும். ஆனா, எல்லாருக்கும் இருக்கும் ஒரு லட்சியம் என்னன்னா அது ”சொந்த வீடு”.. வீடு கட்டுவது ஒரு சிலருக்கு எளிதா முடிஞ்சுடும். மற்றவர்களுக்கு ஏண்டா, வீடுக் கட்ட ஆரம்பிச்சோம்ன்னு அல்லல் பட வைக்கும். அதுக்கு சரியான திட்டமிடல் இல்லாதக் காரணம்தான். பெரியவங்க வாஸ்து சரியில்லை, நல்ல நேரத்துல ஆரம்பிக்கலைன்னு ஆயிரம் காரணம் சொல்லுவாங்க.
ஏதோ நம்மாளான சின்ன முயற்சி வீடு கட்டும் போது கவனிக்க வேண்டியவகளைப் பற்றி வலையுலக சகோதரர்கள் பதிஞ்சதை பதிவாக்குறதுதான். இனி யார் யார் என்னென்ன ஆலோசனைகள் சொல்றங்கன்னு பார்க்கலாமா!?
வீட்டு மனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விசயங்களை சை.பைஜூர் ரஹ்மான் சொல்றதை நினைவில் வச்சுக்கோங்க.
வீடுக் கட்ட இடத்தை தேர்ந்தெடுத்து, வீடு கட்ட ஆரம்பிக்க உகந்த நாள் எதுன்னு செந்தில்வயல் சொல்றார்.
சொந்த வீடு கனவு நனவாக வீ டுகட்ட பேங்க்ல லோன் வாங்கச் சொல்றார் ஓலை.
தன் வீட்டு உபயோகத்துக்காக மீள்சுழற்சி முறையில பால் நேன்ல வளர்த்த பருப்புக்க் கீரை, புதினா, கொத்தமல்லியை செய்முறையோடு சித்ரா சுந்தர் பதிவிட்டிருக்காங்க.
சொந்த வீடு கனவு நனவாக வீ டுகட்ட பேங்க்ல லோன் வாங்கச் சொல்றார் ஓலை.
தன் வீட்டு உபயோகத்துக்காக மீள்சுழற்சி முறையில பால் நேன்ல வளர்த்த பருப்புக்க் கீரை, புதினா, கொத்தமல்லியை செய்முறையோடு சித்ரா சுந்தர் பதிவிட்டிருக்காங்க.
எல்லா செலவுகளையும் எப்படி சிக்கனப் படுத்தி , நாம் விரும்பும் வகையில் வீடு கட்டலாம்ன்னு மழைக்காகிதம் ல சொல்றாங்க.
வாஸ்து முறைப்படி புது வீட்டுக்கு பெயிண்ட் அடிப்பதைப் பற்றி நிலவைத் தேடில சொல்றாங்க.
வீட்டுக்கு மின்சார இணைப்பு தருவது எப்படின்னு தொழில்நுட்பப் பதிவு போட்டிருக்கார் Deen Azar
நிலை வாசல் கதவு வைக்க சரியான இடம் எதுன்றதை முருகு பாலமுருகன் சொல்றார்.
நமக்கு பிடிச்ச மாதிரி நம்ம வீட்டை நாமே வடிவமைக்கலாம்ன்னு வேலன் சொல்லித் தர்றார்.
வீடுகட்டும்போது வாஸ்துன்ற பேர் அடிபடும். யார் அந்த வாஸ்துன்னு தெரிஞ்சுக்க ராஜா அரவிந்த் சொல்றதைப் படிச்சு பாருங்க.
தான் வீடுக் கட்ட லோனுக்கு லைந்ததையும், தன் புதுமனை புகுவிழா அனுபவத்தையும் அமுதவன் பகிர்கிறார்.
அதிக செலவில்லாம வீட்டை அழகா வச்சுக்க ஒரே வழி பூச்சாடியில் தினமும் பூ வைத்து பராமறிப்பதுதான். அதுக்கான டிப்ஸை மதிவர்ணன் வர்ணன் தர்றார்.
தான் வீடுவாங்க ஆசைப்பட்டு, தேடித் தேடி, வீடு வாங்கி நொந்தக் கதையை சுஜாதா தேசிகன் சொல்றார்.
வீட்டு அறைகள் வாஸ்து முறைப்படி எப்படி அமையனும்ன்னு தெரிஞ்சுக்க இங்க போய் பாருங்க.
இன்றைய காலக்கட்டத்துல இன்வெர்ட்டர் இல்லாம வீடு இல்ல. அந்த இன்வெர்ட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவகளை நவ்ஷத் மொகமத் சொல்றார்.
கோடையிலும் வீட்டை குளிர்ச்சியா வச்சுக்க ரோஜா வனத்துல ஐடியா சொல்றாங்க.
என்னதான் லட்சக்கணக்குல காசு கொட்டி வீட்டைக் கட்டி, ஆயிரக்கணக்குல செலவு செஞ்சு அழகாக்கினாலும் அந்த வீட்டில் அன்பும், புரிதலும், விட்டுக் கொடுத்தலும்தான் மகிழ்ச்சியை உண்டாக்கும். என்ன சகோஸ் நான் சொல்றது சரிதானே!?
|
|
மிகவும் பயனுள்ள தளங்களின் தொகுப்பு ...பாராட்டுக்கள்..!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா!
Deleteவீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்பது போல அத்தனை சிரமமான காரியத்தை எளிதாக்க பயனுள்ள விஷயங்களை தரும் பதிவர்களின் அறிமுகம் இன்று மிக அருமையா சொல்லி இருக்கீங்கப்பா ராஜி.. அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்கள் அனைவருக்குமே அன்பு வாழ்த்துகள்.. த.ம.2
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மஞ்சுக்கா!
Deleteதேவையான பதிவு.வாழ்த்துக்கள் தோழி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா
Deleteபயன் உள்ள பகிர்வு !
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!
Deleteஎன்னதான் லட்சக்கணக்கில் பணத்தைக்
ReplyDeleteகொட்டி வீட்டைக் கட்னாலும் -
அந்த வீட்டில் அன்பும், புரிதலும், விட்டுக்
கொடுத்தலும்தான் மகிழ்ச்சியை உண்டாக்கும்.
அழகான தொகுப்பில் அருமையான வரிகள்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்ரி ஐயா!
Deleteஎன்னுடைய தளத்தையும் நினைவில் வைத்திருந்து சரியான சமயம் வரும்போது பகிர்ந்திருப்பதற்கு என்னுடைய நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!
Deleteபயனுள்ள தொகுப்பு.. பாராட்டுகள்.
ReplyDeleteஅனைத்தும் பயனுள்ள தளங்கள் சகோதரி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
உங்களுக்கு தெரியாத தளம் ஒண்ணாவது இருக்கா!?
Deleteமிகவும் பயனுள்ள தொகுப்புக்கள். வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!
Deleteஇந்த பதிவு மிக மிக முக்கியமான பதிவு. சில வருடங்கள் கழித்து காரணம் என்ன என்பதைச் சொல்கின்றேன். பக்கத்தில் வீட்டுக்காரம்மா வேறு இதை படித்து விட்டு என்னை திட்டிக் கொண்டு இருக்கின்றார்.
ReplyDeleteஉங்களுக்கு திருப்தி தானே?
என்ன காரணம்ன்னு புரிஞ்சிடுச்சு சகோ!
DeleteNanringa Raji
ReplyDeleteராஜி,
ReplyDeleteஎனது இரண்டாவது வலைப்பூவையும் இங்கே அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சியும், நன்றியும். அறிமுகமான அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பயனுள்ள தளங்களின் தொகுப்பு
ReplyDeleteநன்றி
அருமையான பயனுள்ள பதிவுகள்
ReplyDeleteபெரும்பாலானவை இதுவரை அறியாத
பதிவுகளும் கூட
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அருமையான பகிர்வு
ReplyDeleteமிகவும் பயனுள்ள தொகுப்பு . வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிகவும் நன்றி
ReplyDelete