இன்றோடு நீங்கள் விடுதலை!!
➦➠ by:
கருவாச்சிக் கலை
கருவாச்சியோட மகிழ்ச்சியான
வணக்கம்ங்க ...எல்லாரும் நலம்தானே?இன்றோடு
நீங்கள் விடுதலை இந்த கருவாச்சிக் காவியத்திலிருந்து கடைசி நாள் அதுமா சும்மா
போவேனா கருவாச்சி காவியத்துலஇருந்து ஒருக் கவிதை உங்களுக்காக,
வண்ணந்தீட்டப்படா
கருங்கல் நான்,
உங்கள் கடவுள்
கைத்தீண்டலால்
கருவாச்சியானேன் !!
உங்கள்கைத்
தீண்டியிருந்தால்
கடவுளாகி இருப்பேன்!!!
எப்புடிஈஈஈ நம்ம
கவிதை ??ஆட்டைக் கடிச்சி மாட்டைக் கடிச்சி மனுஷனைக் கடிச்சி இப்போ கடவுளையும் ......
இன்றைய வாத்து தத்துவம்ஸ்:
எல்லாம் கடந்து போவது
தான் வாழ்க்கை!!
எல்லாம் விழுந்து
போவது தான் வழுக்கை !!
சரிங்க இப்போ
பதிவர்களைப் பார்ப்போம் வாங்க,
கவிதை பாடும் காக்கா பார்த்து இருக்கீங்களா ..இங்க
போயி பாருங்க நம்ம கவிதாயினி ஹேமா கவிதைகளை
சுவைக்க
உவமைக் கவிஞர் சுரதா அவர்களுக்கு இந்தக் கவிஞர்
கருணாகரசு தனது அன்புடன் நான் வலையில் கவிதை வடிக்கிறார் பாருங்க ..செம சூப்பர்
போயி பாருங்க
அதிகமா பேசமாட்டார் அண்ணன் ஆனால் அனல் போலக்
கவிதை வடிப்பவர் செய்தாலி...அவரின் பக்கங்களை சுவைத்து மகிழுங்கள் ..
தமிழின் வார்த்தைகளை வில்லாகி வளைத்து நெளித்து
சுவைத்து எழுதுபவர் புவனா கணேஷன் இவரின்
வலைத் தளம் ஸ்நேகமித்ரா காற்று வெளியிடை ...இவரின் உடலைத் தாண்டியும்இவளனே படிக்க..
கோபால் கண்ணன் அவர்கள் உழவுத் துறைப் பற்றி
அவரது மனவிழி வலையில் கவிதையாய் வடிப்பதையும் சுவைத்து மகிழுங்களேன்..
கணேஷ் ஆக வலையில் அறிமுகமான இவர் தீடிர்அவதாரமாய் பால கணேஷாரானார் மாறிய இந்த இருபத்து எட்டு வயதான இளைஞர் அகில இந்திய பதிவர்கள் இளைஞர் நற்பணி மன்றத்தை சென்னையில் துவைக்கியுள்ளார்.அகில இந்திய பதிவர்கள் இளைஞர் நற்பணி மாமன்ற தலைவரான பால
கணேஷ் அய்யா அவர்களின் கதாநாயகன் கதையை சுவைத்து மகிழுங்கள்...
இந்தப் பசங்களே இப்படித்தான் படம்
காட்டுவாங்கப்பா..இங்கப் போயி பாருங்க கோவை ஆவியின் படங்களை ...திகிலா விமர்சனத்திலே
பதிவர்களை பயம்முறுத்தும் இந்தக் கோவை ஆவியை சீக்கிரமாக ஒரு பேய் ஆவி புடிக்கனும்னு
வாழ்த்துவோம்..சைக்கோ படம் பாருங்கோ ஆவி யோட இடத்தில ...
சரிங்க நான் இப்போ உங்களுக்கு டாட்டா சொல்ல வேண்டிய நேரம் வதுடுச்சி அதுக்கு முன்னாடி எல்லாருக்குமே"ஸ்வீட்எடு கொண்டாடு "ஆமாங்க சந்தோசச் செய்தி அறிவிக்கப் போகும் தருணம்,இதுதான்
எமதுக் கடைசிப் பதிவாகும் வலைச்சர ஆசிரியையாக..
யாரையும் ஓரவஞ்சனை இல்லாம சராமாரியா பேசி இருக்கேன் மனசுக்குள்ள எதுவும் இல்லாமால், உங்க வீட்டுப் பிள்ளையா தான் ..
நான் இதுவரைக்கும் சுட்டித்
தனமா ஏதாவது செய்தக் காரியங்கள் உங்கள் மனசைக் காயப்படுத்தி இருந்தா இந்தப் பச்சப்
புள்ளைய மன்னிச்சிடுங்கோ ..அப்புடியே தலையில வலிக்காமா ஒருக் கொட்டு கொட்டிடுங்க..
சரிங்க நான் பேசச் சொன்னா மொக்கை போட்டுட்டே போவேன்..அன்பின் சீனா அய்யா கழுத்தை புடிச்சி தள்ளுரதுக்குள்ள நானே போயிடுறேன் ..
சரிங்க நான் பேசச் சொன்னா மொக்கை போட்டுட்டே போவேன்..அன்பின் சீனா அய்யா கழுத்தை புடிச்சி தள்ளுரதுக்குள்ள நானே போயிடுறேன் ..
மீண்டும் சிந்திப்போம் உங்கள் வலையிலும் எனது வலையிலும்
....நன்றிங்க இனிய வணக்கம் சொல்வது உங்களன்பு வாத்து,கருவாச்சி,கலை ... .
|
|
அட... அதற்குள் ஒரு வாரம் ஓடி விட்டதா...? கலகலப்பாக ஆசிரியர் பணியை முடித்தமைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்கள் தளத்தில் சந்திப்போம்(மா...?) தொடருங்கள் சகோதரி...
வாங்க dd சார் ,பாருங்க அதுக்குள்ளே ஓடிடுச்சி ...மிக்க நன்றிங்க சார் உங்களோட உதவி ரொம்ப பெரியது ,..கண்டிப்பா சிந்திப்போம் நு நம்புறேன்
Deleteஎன்னாஆஆதூஊஊஊ....மண்ணிப்பா ஆஆஆஆஆஆஆஆஆ.......:-)
ReplyDeleteமண்ணிப்பா ஆஆஆஆஆஆஆஆஆ....../////ஒரு வலைச் சர ஆசிரியர் முன் தமிழை இப்படியாக் கொள்வது ...?? ஸ்டான்ட் up ...போயி அந்த பெஞ்ச் மேல ஏறி நின்னுட்டு மன்னிச்சிடுங்க டீச்சர் ன்னு ௧௦௦ தடவை எழுதி காண்பிங்க
Deletenumber mistake :) ...100
Deleteஅது 'தமிழ்' க் கணக்கு,ஹ!ஹ!!ஹா!!!
Deleteவாத்தியார் பால கணேஷ் அய்யா அவர்களின் இணைப்பை மட்டும் சரி செய்யவும்...
ReplyDeletettp://minnalvarigal.blogspot.com/2014/03/blog-post.html ---> http://minnalvarigal.blogspot.com/2014/03/blog-post.html
இப்படிக்கு அகில இந்திய பதிவர்கள் இளைஞர் நற்பணி மாமன்றம்...!
ஹிஹ்ஹி dd சார் நீங்களும் அந்த மன்றா உறுப்பினர் தானா ..கலக்குங்க ...மாற்றிட்டேன் சார் ..ரொம்ப நன்றிங்க சார்
Deleteவாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteமிக்க நன்றிங்க அய்யா
Deleteஉங்கள்கைத்
ReplyDeleteதீண்டியிருந்தால்
கடவுளாகி இருப்பேன்!!!//கவிதை அருமை. கடைசியில் கடவுள் மீதுமா!ஹீ
ஹிஹ்ஹி ஆமா அண்ணா ,...
Deleteஒரு சிலர் புதிய முகங்கள் அறிமுகத்துக்கு நன்றிகள்.
ReplyDeleteஅவ்வ்வ்வ் நீங்களுமா நன்றி
Delete.அப்புடியே தலையில வலிக்காமா ஒருக் கொட்டு கொட்டிடுங்க..//ஹீ கருக்கு மட்டையால்தான் கொட்ட வேண்டும் ரவுடி தாதாயினி வாத்துக்கு!
ReplyDeleteகொட்டுங்க கொட்டுங்க வாங்கிப்போம்
Deleteசிறப்பான ஒரு வாரம் வாத்துவை இப்ப எல்லாம் அதிகம் வேலைப்பளுவினால் இணையத்தில் இணைய முடியாத நிலையினை வலைச்சர ஆசிரியர் மூலம் அன்பில் இணைய் நட்பை தொடர் வைத்த சீனா ஐயாவுக்கு என் நன்றிகளும் வாத்துவுடன் சேர்ந்து.
ReplyDeleteஉண்மை அண்ணா நீங்கள் சொல்வது ...கொஞ்சம் சிரத்தை எடுத்துகிட்டேன் டான் ...
Deleteதங்கை கலை!
ReplyDeleteதங்கள் அறிமுகங்கள் நன்று.
தாங்கள் என்றும் வெற்றியடைய வாழ்த்துகள்!
மிக்க நன்றிங்க அய்யா
Deleteஒரு வாரம் எங்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்த கலைக்கு வாழ்த்துக்கள் ...ஒரு வாரம் சென்றதே தெரியலை !!!!
ReplyDeleteமீண்டுமுங்கள் வலையில் சந்திப்போம் ..
மீண்டும் சிந்திப்போம் உங்கள் வலையிலும் எனது வலையிலும் ....நன்றிங்க இனிய வணக்கம் சொல்வது உங்களன்பு வாத்து,கருவாச்சி,கலை ... .///தங்கச்சி.........இன்னமும் சிந்திக்கப் போறாங்களாம்!
Deleteஹிஹ்ஹீ தங்கச்சிக்கு பாதுகாப்புக்கு தான் அவவுக அண்ணன் இருக்க்காகளே
Deletemeee toooooo:)
Deleteவழி நடந்த நாட்கள் எல்லாம் - வலி மறந்த நாட்களாக..
ReplyDeleteவலைச்சரத்தை தொடுத்ததுவும் கலைச்சரமாக..
ஊர்காட்டுக் கண்மாயில் தவழ்கின்ற அலையாய்
பேர்காட்டும் கலையே.. வாழ்க நலம் நிறைவாய்!..
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் ..பாராட்டுக்களும்
ReplyDeleteநன்றிங்க madam
Deleteஸ்.......ஸ்....அப்பாடி......"வலைச்சரம்" தப்பிச்சுது!இன்னும் தொடர்ந்திருந்தால் நார்,நாரா கிழிஞ்சிருக்கும்.நன்றி,சீனா ஐயா!!!
ReplyDeleteரொம்ப சந்தொசச்மா ....ஏன் இப்புடி
Deleteகடைசி அறிமுகம் நான்தானா.. ஹஹஹா.. அம்புட்டு திகிலாவா இருந்தது?
ReplyDeleteஆமாம் கோவை ஆவி நீங்கதான் தான் அந்த அதிஷ்டசாலி ....ம்புட்டு திகிலாவா இருந்தது?////எல்லேமே ஒரு விளம்பரம் தான் ...சீரியஸ் ஆ எடுத்துக்க வேணாம் ஆவி ...
Deleteஇவ்வளவு நாளும் போனதே தெரியல கலகலப்பா ஓடிற்று பெரும் உற்சாகமாக ஓடி வந்து வாசிப்பேன் உண்மையிலேயே மிஸ் பண்ணுவேன். அட்டகாசமாக ஆசிரியப் பணியை முடித்தீர்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
ReplyDeleteவாழ்க வளமுடன்.....!
நேத்தைக்கு வர இயலவில்லை. இன்றைக்குப் பாத்தா... இளைஞர் மாமன்ற தலைவர் பதவியோட என் பதிவைக் குறிப்பிட்டு சர்ப்ரைஸ் ஸ்வீட் தந்திருக்கா இளவரசி. ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா. கலகலன்னு ஒரு வாரத்தை நகத்தினதுக்கு இந்தா புடி... சாக்லெட் கேக்! இனி உன் வலையில் சந்திக்கிறேன்.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் ..பாராட்டுக்களும்
ReplyDeleteஆமாம் '' ....தமிழை இப்படியாக் கொள்வது ...??'' என எழுதியிருக்கிறீர்களே! ஏற்றுக் கொள்வதா? அல்லது குத்திக் கொல்வதா? எது சரி?? இதனைச் சுட்டிக் காட்டியமைக்கு மன்னிக்க
கருவாச்சி.............அங்க கடிச்சு இங்க கடிச்சு என்னையே கடைசியில......இதையெல்லாம் உங்கட மாமாவும் அண்ணாவும் பாத்த்கு ரசிச்சும்கொண்டு......நான் ஊர்ல இல்ல 3 வாரமா.நேத்துத்தான் வந்தேன்.அதான் அடிக்கடி வரமுடில உன்னோட சேட்டையைப் பாக்க.எல்லாம் சேர்த்து இப்பத்தான் பாத்தேன்.உங்க ஸ்டைலே தனிதான் இளவரசியாரே.அன்பு வாழ்த்தும் பாராட்டும் என் செல்லக் காக்காவுக்கு !
ReplyDeleteவாழ்த்துக்கள் கலை! சிறப்பாக ஒருவாரம் வலைச்சரத்தை அழகான பூக்களால் தொடுத்து அலங்கரித்தமை சிறப்பு! நன்றி!
ReplyDeleteஎன் குட்டி தங்கைக்கு நன்றி
ReplyDelete