07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 8, 2014

பாரதியார் வியந்த பெண்மணியும்...

வலைச்சர நட்புகளுக்கு இனிய வணக்கம்.

அனைத்து மகளிருக்கும் பெண்களை சமமாகப் பாவித்துக் கைகோர்த்து இனிது வாழும் ஆண்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம்.

புரட்சிப் பெண் என்றாலே பாரதியார் நினைவுக்கு வருவார். அவர் குருவாக ஏற்றுக் கொண்ட பெண்மணியைப் பற்றி அறிவீரா? அவர்தான் சிஸ்டர் நிவேதிதா.

இவர் மார்கரெட் எலிசபெத் நோபல் என்ற இயற்பெயர் கொண்ட ஐரிஷ் பெண்மணி. இவர் லண்டனில் 1895ல் சுவாமி விவேகானந்தரைச் சந்தித்தார். அவருடைய பேச்சால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். என் நாட்டுப் பெண்களை கற்றவர்களாக்க உன் உதவி தேவை என்று சுவாமி விவேகானந்தர் சொன்னதால் அதை ஏற்று 1898ல் இந்தியா வந்தார். ராமக்கிருஷ்ண பரமஹம்சரின் மனைவி திருமதி.சாராதேவியுடனும் நெருங்கிய நட்பு கொண்டார். பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் கற்பிக்க வேண்டும் என்று புரிந்துகொண்டார். பெண் கல்வி என்பது ஏற்றுக்கொள்ளப்படாத சமூகத்தில் சிஸ்டர் நிவேதிதா கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. வெளிநாட்டில் நிதி திரட்டி கொல்கத்தாவில் பெண்கள் பள்ளியை ஆரம்பித்தார். இப்படி பெண் கல்விக்காகவும் விழிப்புணர்வுக்காகவும் உழைத்த சிஸ்டர் நிவேதிதாவை அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்திற்குச் சென்ற பாரதியார் சந்திக்க நேர்ந்தது. தான் மிகப் பெரிய சக்திக்கருகில் இருப்பதை பாரதியார் உணர்ந்தார். அன்று தன்  மனைவியை அழைத்துவராத பாரதியாரிடம் சிஸ்டர் நிவேதிதா, "சமூகத்தின் ஒரு பாதியை அடிமைப்படுத்தி மறுபாதி எப்படி சுதந்திரம் பெற முடியும்? போனது போகட்டும், இனிமேல் உங்கள் மனைவியை வேறாக பார்க்கவேண்டாம். அவளை உங்கள் கரம் எனப் பிடித்து இதயத்தின்  தேவதையாக வையுங்கள்" என்று சொன்னார். சிஸ்டர் நிவேதிதாவால் பாரதியார் பெரிதும் கவரப்பட்டார், அவருடைய சக்திப் பாடல்களில் நிவேதிதாவின் உத்வேகம் இருப்பதை அறியலாம். சிஸ்டர் நிவேதிதா பாரதியாரின் வாழ்வில் பெரும் உந்து சக்தியாக இருந்தார். பாரதியாரை மாற்றிய புரட்சிப்பெண் அவர்.

மகளிர் தின வாழ்த்துக்களை உரித்தாக்கி சில பெண் பதிவர்களின் பதிவுகளை இங்கே பகிர்கிறேன். (அட போங்கப்பா என்று ஓடாத ஆண்களைப் பாராட்டுகிறேன்).


தமிழிசை அறிவோம் என்று சொல்லும் இசையின் ஈர இயக்கங்கள் என்ற தளத்தில் குமரிக்கண்டத்து இசை பற்றிப் பகிர்கிறார் நித்யவாணி. சிவ பூஜையில் கரடி என்றால் என்ன, புரிந்து கொள்ள இப்பதிவு.
பரதமும் அபிநயமும் பரதம் பற்றிய சில தகவல் தருகிறது.

இதுதான் சமநிலை சமூகமா என்று கேட்கும் ஆயிஷா பாரூக் அவர்களின் தளத்தில் கவிதைகளும் கட்டுரைகளும் அருமையாய்க் கொட்டிக்கிடக்கின்றன.

சக்தியைத் தேடி சக்தியோடு குரல் கொடுக்கும் உமா மோகன் அவர்களின் குரல் என்ற தளம்.

நினைவலைகள் என்ற தளத்தில் ஜீவா ராஜசேகர் பல பயனுள்ளத் தகவல்களைப் பகிர்கிறார். அதில் ஒன்று போலியோ பற்றியது.


மழையின் ஒலி ரசிக்கும் கீதா அவர்களின் இனிய கவிதை தளத்தில் தவறு கண்டு பொங்கியெழு என்று  அறைகூவல் விடுக்கிறார்.


இவரைப் பற்றி சொல்லவேண்டியதில்லை, பலர் அறிந்தவர், நிகழ்காலம் எழில். பொறியியல் கவுன்சிலிங் செல்பவர்களுக்கு அக்கறையாய்ச் சில தகவல்கள் பகிர்ந்துள்ளார். இப்பதிவை இட்டு ஒரு ஆண்டு கடந்திருந்தாலும் மாற்றம் ஏதும் இல்லை என்பது வருத்தமே, இனியாவது நேர்மறைமாற்றங்கள் நிகழும் என்ற நம்பிக்கையில்.

இந்த சேமிப்பு பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவசர உலகில் மிகவும் தேவைதான்.

உஷா அன்பரசு அவர்களின் பதிவில் ஜாதிமல்லி  நீதி கேட்கிறது. இவரின் ராசி என்ற கதை சொல்கிறது சமூகத்தில் தேவையான அருமையான மாற்றம். மாற்றம் உள்ளது என்றாலும் முழுவது அழியவில்லை இந்நிலை, முற்றும் மாற செயல்படுவோம்.

எங்கும் மகிழ்ச்சி நிறைக என்று சொல்லும் மைதிலியின் தளத்தில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள். கவிதைகளும் கலக்கும் இவர் தளத்தில் படங்களும் அருமை, காலம் விரைகிறது, காதலே வழிவிடு என்ற ஒன்று உங்களுக்காக.

கவிதைகளில் கலக்கும் இந்த தென்றல் மருந்தையும் தேனில் கலந்து இனியக் கவிதையாய் பதித்துவிடும்.

அறியாத உயிரினங்களைப் பற்றி அருமையாய்ப் பகிர்ந்திடும் தோழி கீதமஞ்சரி கவிதைள், கட்டுரைகள் என்று கலக்குவார்.

கோடை விடுமுறை வரப்போகிறது. பிள்ளைகளை நன்கு ஓடியாடச் சொல்லுங்கள். உச்சி வெயிலில் அவர்களை மகிழ்ச்சியாக்க இதையும் பார்த்து வைத்துக்கொள்ளுங்கள், தியானாவின் பயனுள்ள தளம், பூந்தளிர்.

சரண்யாவின் தளத்தில் கைவினைகள் அழகாய் நிறைந்துள்ளன. தமிழ்சொற்களும் இனிமை சேர்க்கின்றன அதில் ஒன்று, அழகியதொங்கி.
விடுமுறையில் இந்த காதணி செய்து விடுங்கள். பருப்பில் அழகிய ஒரு கிண்ணம்.

பருத்தி அன்றும் இன்றும் என்றுதகவல் சொல்லும் ஒரு பதிவு, காகிதப் பூக்கள் தளத்தில்.

இன்னும் நிறைய நிறைய பேர் இருக்காங்க..அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

நாளை சந்திக்கும் வரை,
நட்புடன்,
கிரேஸ்

38 comments:

  1. வார இறுதி, விடுமுறை..ஆனாலும் இங்கே கடமையாய் வந்துடுறீங்களே ..மகிழ்ச்சி!

    ReplyDelete
  2. வணக்கம்மா.நல்ல பதிவு.கீர்த்தனா கீதான்னு மாறிடுச்சேப்பா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கீதா..நன்றி.

      அவங்க கீர்த்தனா என்ற பெயரில் எழுதியிருந்தாலும் கீழே கீதா ரவி என்று பெயர் இருக்கிறது. அதனால் வந்த குழப்பம் :) அவர்தான் தெளிவுபடுத்தணும்.

      Delete
    2. தோழி கீதா அவர்களுக்கும் ஆசிரியர் கிரேஸ் அவர்களுக்கும் இனிய வணக்கம். கீர்த்தனா என்ற புனைபெயரில் கீதா ரவி ஆகிய நான் தான் எழுதி வருகிறேன். ஆசிரியர் கிரேஸ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி இனியகவிதை தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுதியதற்கு. இங்கே அறிமுகம் செய்ததை எனக்கு தெரிவித்த தோழர் தனபாலன் அவர்களுக்கும் மிகவும் நன்றி. உங்கள் அனைவரின் ஆதரவும் ஊக்கமும் தொடர்ந்தும் கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன். அன்புடன் கீதா ரவி

      Delete
  3. என்னடா இது,, இன்னைக்கு சனிக்கிழமை முழுநாள் மின்சாரத் தடை போட்டுட்டாங்களோ!!!!
    யாரையும் காணோமே...

    ReplyDelete
    Replies
    1. இதோ வந்துட்டேன்... வந்துட்டேன்... ஹா... ஹா...

      அனைத்து தளங்களுக்கும் சென்று வர தாமதம்...!

      Delete
    2. அதானே உங்களையும் காணோமேனு நினைச்சேன்..
      நன்றி நன்றி..

      Delete
  4. அறிமுக பதிவர்களுக்கு.. வாழ்த்துக்கள்..

    மகளிர் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. இன்றைய சிறப்பான நாளில் அருமையான பகிர்வு... Saranya's crafts தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. இதோ வந்துட்டேன் கிரேஸ் !
    மகளிர் தின வாழ்த்துக்கள் !!
    அப்புறம் இந்த நாளில் என் தளம் அறிமுகம் செய்திருக்கிறீர்கள் !!
    நன்றி! நன்றி !!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மைதிலி..உங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!

      Delete
  7. மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!..
    இன்று அறிமுகமாகிய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  8. வணக்கம்

    இன்றைய சிறப்பான நாளில் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  9. தென்றலின் அறிமுகம் கண்ட மகிழ்ந்தேன்.. மிக்க மகிழ்ச்சிங்க..அறிமுகப்படுத்திய விடயத்தை அற்புதமாக பகிர்ந்த சகோ தனபாலன் அவர்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள் பா தொடருங்க தொடர்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. தென்றலின் இதம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமல்லவா? :)
      நன்றி சசிகலா.

      Delete
  10. சகோதரிகள் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  11. நிறைய புதிய தளங்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. என் BT.. awareness பதிவை இங்கே அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி கிரேஸ்

    ReplyDelete
  13. சகோதரர் தனபாலனுக்கு ஸ்பெஷல் நன்றிகள் :)

    ReplyDelete
  14. மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. மகளிர் தின வாழ்த்துக்கள்.
    நிறைய புதிய தளங்கள். சென்று பார்க்கிறேன்.

    ReplyDelete
  16. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்.

      Delete
  17. மகளிர் தினத்தில்
    சிறந்த அறிமுகங்கள்

    ReplyDelete
  18. அருமையான பதிவு. வாழ்த்துகள் கிரேஸ்.

    ReplyDelete
  19. என் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் கிரேஸ்!

    ReplyDelete
  20. இங்கு ஆசிரியரால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்துப் பதிவர்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. எம் வலைத்தலத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே.... :)

    ReplyDelete
  22. சேமிப்போடு என்னையும் உங்கள் வலைதளத்தில் அறிமுகம் செய்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் தோழரே :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது