07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, March 21, 2014

பனியைத் தேடி - சிம்லா ஸ்பெஷல் - குப்ரி

அண்ணன் வர டன்னலின் அடியில் காத்திருக்கும் பொழுது தான், அங்கு நிலவிய குளிர் என் ஆடைக்குள் ஊடுருவத் தொடங்குவது தெரிந்தது. என் மாமா, அவர் அமெரிக்காவில் இருந்தபொழுது பயன்படுத்திய விண்டர் ஜாக்கெட் மற்றும் க்லவ்ஸ் என்னிடம் கொடுத்தனுப்பியிருந்தார். அதுதான் எனக்கு அந்தக் குளிருக்கு கவசமாக நான் அங்கிருந்த மூன்று நாட்களும் என்னைக் காத்தது. எங்களை விடுதிக்கு அழைத்துச் செல்ல எங்களுடன் சாலைக்கு வந்து காத்திருந்த விடுதிப் பணியாளர் வழி சொல்ல, ஒரு வழியாக அண்ணன் நாங்கள் காத்திருந்த டன்னலை வந்தடைந்தார். 

எங்களிடம் இருந்த மூன்று பளுவான பைகளை, அந்த விடுதிப் பணியாளர் தன் முதுகில் ஒன்றும், இரு கைகளில் ஒன்றுமாக யேந்திக்கொண்டு, ஒற்றையடிப் பாதைப் போல் இருந்த, சிமெண்ட் படிகள் மீது ஏறத் தொடங்கினார். பளு சுமந்த பொழுதும் மலை ஏறிப் பழக்கமான அவர் வேகமாக ஏற, நாங்கள் சற்று பின் தங்கியே தொடர்ந்தோம். மலை மீது ஒரு குட்டி மலையே ஏறி, அதன் பின் ஒரு சரிவில் இறங்கி எங்களது விடுதி முன் வந்து சேர்ந்தோம். இதற்குள் மணி ஏழாகி விட்டது. அன்றைய இரவு அறையில் தான் என்றானது.  'மைக்கேல் மதன காம ராஜன்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் வீடு போல், மலை உச்சியில் மரத்தால் மட்டுமே கட்டப்பட்ட அந்த அறைக்குள் சென்ற பொழுது, இதயம் சற்று 'பக் பக்' என்றே துடித்தது. இரண்டு முறை குதித்து உறுதியை சோதித்து பார்த்த பின்னே அடுத்த அறைக்குள் சென்றேன். 

குளிர் காலத்தில் சிம்லா சென்றால், குளிரின் உச்சகட்டத்தை உணரலாம் என்பது என் திட்டம். ஆனால் நான் அங்கு உணர்ந்ததோ நான் எதிர் பார்த்ததை விட மிகவும் கடுமையான குளிர். அந்த இரவை கடக்க நிச்சயம் நெருப்பின் துணை தேவை என்று தோன்ற, 'ரூம் ஹீட்டர்'  ஆர்டர் செய்யலாம் என்று நான் முனைய, என் நண்பன் என்னைத் தடுத்து, அலமாரியின் உள் இருந்து பஞ்சு மெத்தையில் பாதி கணம் இருக்கும் ஒரு வெள்ளை நிற ஜமக்காலத்தை(எனக்கு அதன் சரியான பெயர் தெரியவில்லை. அறிந்தவர்கள் சொல்லவும்) எடுத்து கொடுத்தான். இதையா போர்த்திக் கொள்வது என்று முதலில் நான் யோசித்தாலும், வேறு வழியின்றி மெத்தை மேல் அதை விரித்து அதற்கு அடியில் சென்றேன். சற்று நேரமாக, அது எனது உடலின் உஷ்ணத்தை பாதுகாத்து, நல்ல கத கதப்பை தந்தது. அருமையான ஒரு கண்டுபிடிப்பு அது. 

காலையில் குளித்து முடிப்பதற்குள் நான் பட்ட பாட்டை சொல்லி மாளாது.  ஹீட்டர் குழாயில் இருந்து வரும் சூடான நீர், வாளியை அடையும் முன், தன் சூட்டை இழந்து விட்டது. ஒரு வழியாக குளித்து முடித்து, தயாராகி, பனியைத் தேடும் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். செல்லும் வழியில் ஒரு கோல்ப் மைதானத்தில் வாகனத்தை நிறுத்தி, அங்கு சென்று சுற்றிப்பார்க்கும்படி எங்களது ஓட்டுனர் சொல்லினார். முடியவே முடியாது எங்களுக்கு பனிதான் வேண்டும் என்று நாங்கள் மறுத்துவிடவே, எங்களை குப்ரி அழைத்துச் சென்றார். குப்ரி சிம்லாவில் இருக்கும் ஒரு சிகரம். அதன் அடியில் இருந்து உச்சிக்கு செல்வதற்கு குதிரை சவாரி செய்ய வேண்டும். அதில் நிஜ குதிரைகளும் சில போலி குதிரைகளும் உங்கள் அதிர்ஷ்டம் போல் கிடைக்கும். (குதிரைக்கும் கழுதைக்கும் பிறந்தது இந்த போலிக் குதிரை. இதை ஆங்கிலத்தில் mule என்பர்)

எனக்கு குதிரை ஏறிப் பழக்கம் இல்லாததால் சற்று பயத்துடன் நான் இருக்க, எனக்கு போலிக் குதிரையே வழங்கினர். எங்கள் நால்வரின் குதிரையையும் ஒரு சேர அழைத்துக்கொண்டு, அதன் பாகன் எங்களுடன் நடந்து வந்தான். அவன் முன்னே வழி காட்டிக்கொண்டு  செல்ல, எனது குதிரை கடைசியில் வந்தது. ஒற்றையடிப் பாதையாக மலை மேல் செல்லவும் இறங்கவும் ஒரே வழிதான். மேலிருந்து குதிரைகள் இறங்கும் பொழுது, எனது குதிரை சற்று பயந்து ஓரமாக ஒதுங்கிக் கொள்ளும்பொழுது, எனக்கோ 'எங்கே, குதிரை கால் இடறி  சரிந்து விடுமோ' என்ற பயம் தோன்றும். ஒரு முப்பது நிமிட 'திக் திக்' குதிரை சவாரிக்கு பின் குப்ரி சிகரத்தை அடைந்தோம். சிம்லாவில் இருக்கும் உயர்ந்த சிகரத்தில் நிச்சயம் பனி இருக்கும் என்ற எனது ஆசையில் மண் தான் விழுந்தது. அங்கு சில மேகி(maggi) கடைகளும் ஒரு தீம்(theme) பார்க்கும் தான் இருந்தன. 

தீம் பார்க்கில் சில மொக்கை ரைடுகளை தவிர்த்து ஒரு ரைடு மட்டும் எங்களைக் கவர்ந்தது, நானும் என் நண்பனும் மட்டும் அதில் ஏறினோம். மத்தியில் ஒரு கம்பம், அந்தக் கம்பம் தாங்கும் ஒரு வளைவான சக்கரம், அந்தச் சக்கரத்தில் வட்டமாக ஒருவர் மட்டும் அமரும் ஊஞ்சல். பார்க்க சாதாரண ஊஞ்சல் போல் இருந்தால், அது இருந்தது மலை உச்சியில் என்பதாலும், அது சுற்றிய வேகத்தாலும், ஆகாயத்தில் தூக்கி வீசப் படுவது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. எனது உணவுக் குழாயில் இருந்து வயிறு வரை அனைத்தும் ஒரு சக்சன்(suction) பம்ப் வைத்து உரியப்படுவது போல் ஒரு உணர்வு. ஒரு வழியாக சுற்றி நிற்க, நான் இறங்கலாம் என்று நிதானிக்கும் பொழுது, என் நண்பன் 'ஒன்ஸ் மோர் ப்ளீஸ்' என்று கேட்க, எனது உயிர் மீண்டும் ஊஞ்சல் ஆடியது. 

அங்கு அருகில் ஆப்பில் தோட்டம் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைக்க, இதுவரை வாழ்வில் காணாத ஆப்பில் மரங்களைத் தேடிச் சென்றோம். சரிவாக செல்லும் பாதையில் நெடுந்தூரம் சென்றும் அங்கு ஆப்பில் மரங்கள் ஏதும் தென்படவில்லை. வழிதவறிவிட்டோம் என்று நாங்கள் உணரும் பொழுது, நாங்கள் மிகவும் எதிர் பார்த்திருந்த தருணம் வந்தது. சாலையில் உறைப்பனி தென்படத் தொடங்கியது. நாங்கள் எதிர்பார்த்து போல் இல்லை. வெள்ளை நிற சோப்பு நுரையை மணலில் கலந்தால் எப்படி இருக்கும், அது போலத் தான் அந்தப் பனி அழுக்காக இருந்தது. கிடைத்த வரை லாபம் என்று அதனுடன் விளையாடத் தொடங்கினோம்.


அந்தப் பனியை கையில் ஏந்தும் பொழுது, பல நாட்களாக டீப் ப்ரீஸ் (deep freeze) ஆகி உறைத்திருக்கும் உங்கள் பிரிட்ஜ் ப்ரீசர் பாக்சில் கை வைத்தால் எப்படி இருக்குமோ, அப்படித் தான் இருந்தது. ஒருவர் மீது ஒருவர் அடிக்கும் பொழுது, எப்படியாவது சட்டையினுள் ஊடுருவும் பொழுது அந்தப் பனி உண்டாக்கும் சிலிர்ப்பை சொல்ல வார்த்தை இல்லை. பனியைக் கண்ட ஆனந்தத்தில் சற்று நேரம் கூடுதலாகவே செலவழித்துவிட்டோம். 

இறங்கும் பொழுது மிகவும் எளிதாக இருந்தப் பாதை, ஏறும் பொழுது சற்று கடினமாக மாறியது. அதிக இடங்களில் அமர்ந்து அமர்ந்து செல்லத் தொடங்கினோம். இந்த குளிர் செய்யும் தந்திரம், நமது தாகத்தை அடக்கி, உடலுக்கு தேவையான நீரை நம்மை அருந்தவிடாமல் செய்வதுதான். காலை டிபனும் நான்-ரொட்டி என்பதால் சற்று குறைவாக உண்ண, எனது உடலில் வலு வேகமாக குறைந்தது. எனது நண்பர்களை விட மிகவும் பின் தங்கத் தொடங்கினேன், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கத் தொடங்கியது, அந்த குளிரிலும் நெற்றி வியர்த்தது. இனி ஒரு அடியும் நகர முடியாத நிலையில், எனது கால்களை பூமியில் என்னால் உணர முடியவில்லை.                                                                                                  
இன்றைய அறிமுகங்கள்:

*********************************************************************************************************
கௌபாய் படங்களின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. 2012 இல் வெளிவந்து என்னை மிகவும் கவர்ந்த கௌபாய் திரைப்படம் 'Django' , இந்தப் படத்தை பற்றி இவர் எழுதிய விமர்சனத்தை படித்தாலே அவரது சினிமா அறிவு நன்கு புலப்படும்.

'கருந்தேள்' என்னும் தளத்தில் ராஜேஷ் அவர்கள் எழுதிய 'Dijango unchained' என்ற பதிவு.

*********************************************************************************************************
கௌபாய் படங்களில் என்றுமே நம்பர் ஒன் இடத்தை பிடிப்பது 'The good. The Bad and the Ugly' தான்.

'சினிமா சினிமா' தளத்தில் ராஜ் அவர்கள் எழுதிய 'The good, the bad and the ugly' பதிவு.

*********************************************************************************************************

'Suba's Musings' என்னும் தளத்தில் சுபா அவர்கள் 'என் வீட்டுத் தோட்டத்தில்' என்ற பதிவு.

*********************************************************************************************************

'எளியவை' என்னும் தளத்தில் பந்து என்பவர் எழுதிய 'கர்ணனை விட பாவம்' என்ற மஹாபாரதத்தின் கிளைக் கதை.

*********************************************************************************************************

'அதீத கனவுகள்' என்ற தளத்தில் ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதிய 'அவள் என்னை ஒதுக்கினாள்' என்னும் பதிவு.

*********************************************************************************************************

மேலும் சில அறிமுகங்களுடன் நாளை சந்திப்போம்.

புன்னகையுடன் 
ரூபக்   

26 comments:

  1. சிலிர்க்க வைக்கும் அனுபவம்... அடிக்கிற வெயிலுக்கு இதம்...

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. 'Suba's Musings' தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. மரத்தில் ஆப்பு செய்யலாம். இங்க ஆப்பில் மரமா?

    தேவுடா..! பனியை கையில் அள்ளி நானும் விளையாடியது போன்றதொரு மானசீக உணர்வு. பயணம் வெழு சுகம்.

    அறிமுகம் பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா. மிக்க நன்றி சார்

      Delete
  4. //ஒரு வெள்ளை நிற ஜமக்காலத்தை(// அதனை கம்போர்ட்டர் (Comforter) என்று கூறுவர்.. பயணமும் அறிமுகங்களும் அருமை..

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் அறியாதது என்னதான் இருக்கிறது :) ?

      Delete
  5. அலமாரியின் உள் இருந்து பஞ்சு மெத்தையில் பாதி கணம் இருக்கும் ஒரு வெள்ளை நிற ஜமக்காலத்தை(எனக்கு அதன் சரியான பெயர் தெரியவில்லை. அறிந்தவர்கள் சொல்லவும்////

    ரஜாய்..??

    நாங்களும் சிம்லா சென்றோம் ..
    பனியைத்தேடினோம்..
    ஆனால் கண்டடையும் துணிவு இல்லாததால் சுற்றிப்பார்த்துவிட்டு மட்டும் திரும்பினோம்..!
    யாரிடம் கேட்டாலும் பதிலும் கிடைக்கவில்லை - பனி எங்கே என்ற எங்கள் கேள்விக்கு..!!

    அருமையான அறிமுகங்கள் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. பெயர் மறந்து விட்டது. நாளை பனி இருக்கும் இடம் பற்றி வெளியாக இருக்கும் அத்தையும் படியுங்கள்

      Delete
  6. ரஜாய் .... குல்ட் ( QUILT) என்றும் கூறுவர்.... சிம்லாவின் இரவு நேர வெட்பநிலை எவ்வளவு இருந்திருக்கும் ????

    நான் மைனஸ் -13 டிகிரி C -ல் பணிபுரிந்திருக்கிறேன்..ஸ்ரீநகரில்....

    ReplyDelete
    Replies
    1. மைனஸ் 13 . அதையும் ஒரு நாள் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது

      Delete
  7. இந்த பகுதியை மிகவும் ரசித்துப் படித்தேன்.. இதுவரை எழுதியதில் இதுதான் உச்சம் :-)))

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. நாளைதான் பனியின் உச்ச கட்டம்.

      Delete
  8. அறிமுகத்துக்கு நன்றி ரூபக் ராம்.. என் தளத்தில் தகவல் சொன்னதற்கு நன்றி தனபாலன்.. ரூபக் ராம்.. ஒரு சிறு திருத்தம்.. என் பெயர் பந்து என்று இருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும். தற்பொழுது திருத்திவிட்டேன்.

      Delete
  9. சூப்பர்யா ரூபக் ... நல்ல இரசனை நடை ...

    ReplyDelete
  10. போலிக் குதிரை புதிதாக கேள்வி படுகிறேன் ... அப்புறம் யானைப் பாகன் கேள்வி பட்டிருக்கிறேன் அது என்ன குதிரைப் பாகன் ... எனக்கு விளங்கவில்லை ? ரூபக் சொல்வது சரிதானா ?

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் 'குதிரைப் பாகன்' சரியா என்று தெரியவில்லை

      Delete
  11. வாத்தியார் கருத்து செம செம ... ஆப்பில் மரம் தூள் போங்க

    ReplyDelete
  12. வட இந்தியாவில் குளிர் சமயத்தில் இந்த ரஜாய் இல்லாது முடியாது. இதற்குள் புகுந்து விட்டால் குளிர் தெரியாது. காலையில் வெளியே வரவும் மனதிருக்காது! :)

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. பனிமழையில் நனைந்தேன்! அனைத்து தளங்களும் எனக்கு புதியவை சென்று பார்க்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  14. பனியைதேடி கைகளால்தொட்டு மகிழ்ந்து விளையாடியாகிவிட்டது :)

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. மிக்க நன்றி அறிமுகத்திற்கு :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது