கடிக்கீறியே வாத்து !!
➦➠ by:
கருவாச்சிக் கலை
கருவாச்சியின்
அன்பான வணக்கமுங்க..
எல்லாரும்
நல்ல சுகமா?? முதலில் உங்களைக் கொஞ்சமா கடிச்சிட்டு அப்புறமா பதிவர்கள அறிமுகப்
படுத்துறேனே ப்ளீஸ்..எறும்புக்கடி,கொசுக் கடிலாம் அட்ஜஸ்ட் பன்னுரிங்கள்ள அதேமாறி
இந்த வாத்துக்கடியையும் அட்ஜஸ்ட் பண்ணிக்கொங்க ...
நடக்க நடக்க
வயிற்றுக் கொழுப்புக் குறையும்
பேசப்பேச
வாய்க் கொழுப்பு குறையுமா??
வயித்த
கரைச்சி வாய் வழி வந்தா அது வாந்தி
வாய்வழி வந்து
வயித்த கரைச்சா அது வதந்தி!!
மீனை
புடிக்கிறவன் மீனவன்
அப்போ நாயப்
புடிக்கிறவன் நாய்அவனா???
பசங்க அதிகமா பேசினா
அது பகடி
பொண்ணுங்க அதிகமா
பேசினா அது வாயாடியா???
காதுல இரத்தம்
வர்றத துடைச்சிக்கொங்க இப்போ இன்றையப் பதிவர்களை சிந்திப்போம் ...
பெயர்
:ந.கணேஷன்
புனைப் பெயர்
:ந.க .துறைவன்
வலைப்பூ
:கவிஞர் துறைவன் கவிதைகள்
கவிஞரின்
நூல்கள்:
1 1)ஒரு கிராமம் கண்ணீர் வடிக்கிறது(கவிதைகள்) 1982.
2) வண்ணத்துப்பூச்சிகள் (குறுங்கவிதைகள்) 1988
3) இனி...... (புதுக்கவிதைகள்) 1989
4) காற்றுக்குப் புரியும் (புதுக்கவிதைகள்) 1991
5) நதிக்கரைகள் (ஹைக்கூ கவிதைகள்) 1994
6) சருகு இலைப் படகுகள்
(ஹைக்கூ கவிதைகள்) 2001
7) பாப்பா பாடும் பாட்டு (சிறுவர் பாடல்கள்) 2003
8) சிரிப்பின் முகவரி - 2005
(குழந்தைகள் சார்ந்த ஹைக்கூ கவிதைகள்)
9) புன்னகைப் பூக்கும் மலர்கள் - 2007
(சிறுவர் கவிதைகள், கதைகள்)
10) இலை நிழல் - (புதுக்கவிதைகள்) -2007
கூட்டுத் தொகுப்பு:
1) அறுவடை நாளில் மழை - 2003
2) தலைக்கு மேல் நிழல் - ஹைபுன் – 2007
2) வண்ணத்துப்பூச்சிகள் (குறுங்கவிதைகள்) 1988
3) இனி...... (புதுக்கவிதைகள்) 1989
4) காற்றுக்குப் புரியும் (புதுக்கவிதைகள்) 1991
5) நதிக்கரைகள் (ஹைக்கூ கவிதைகள்) 1994
6) சருகு இலைப் படகுகள்
(ஹைக்கூ கவிதைகள்) 2001
7) பாப்பா பாடும் பாட்டு (சிறுவர் பாடல்கள்) 2003
8) சிரிப்பின் முகவரி - 2005
(குழந்தைகள் சார்ந்த ஹைக்கூ கவிதைகள்)
9) புன்னகைப் பூக்கும் மலர்கள் - 2007
(சிறுவர் கவிதைகள், கதைகள்)
10) இலை நிழல் - (புதுக்கவிதைகள்) -2007
கூட்டுத் தொகுப்பு:
1) அறுவடை நாளில் மழை - 2003
2) தலைக்கு மேல் நிழல் - ஹைபுன் – 2007
""கவியரசு
கண்ணதாசன் விருது'' கவி ஞாயிறுதாராபாரதி கவி விருது அய்யா
அவர்களின் சிறப்புப் பட்டங்களை பட்டியலிட்டால் அதற்கென்று தனிப் பதிவே போடவேண்டும் என்பதால் இதோடு நின்று விடுகிறேன்.
அய்யாவப் பற்றிய அறிமுகம் மேற்கண்ட நூற்களும் அய்யாவின் பட்டங்களுமே உங்களுக்கு சொல்லி இருக்கும்..அய்யாவின் அதித நினைப்பு என்ற கவிதைக்கான சுட்டி ...அய்யாவோட சிறுவர் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது..அய்யா வோட சிரிப்பு சிரிப்பு கவிதையும் படிச்சிப் பாருங்களேன்..
2.பதிவர்: சசிமோஹன் குமார்
வலைப்பூ : சசிமோஹன்
இவர் ஒரு
ஆராய்ச்சியாளர்.இருபத்து நான்கு மணி நேரமும் தனது ஆராய்யிச்சிக்கு தன்னையே
அற்பணித்துக் கொள்வதால் பதிவெழுத நேரமில்லை என்று வருந்துபவர் (ஜி,நம்ம மக்களுக்கு
ரொம்ப பெரிய மனசு ஜி.ஆளுக்கு ஒரு ரெண்டு கிலோ நேரத்தை உங்க முகவரிக்கு அனுப்பி
வைக்கிறார்களாம்)
உங்க ஆராய்ச்சி
வெற்றியடைய வலைப் பதிவர்கள் சார்பாக வாழ்த்துகிறோம். பச்சைப்புல்லைத் தின்று
வெள்ளைப் பாலைத் தருவது எப்படி என்பது தான்,இந்த மாமனிதரின் ஆராய்ச்சி .
சினிமா விமர்சனம் எழுதுவது எப்படி ன்னு அழகா சொல்லித் தருகிறார்..சென்று பயனடையுங்கோ மக்களே!!
3பதிவர்:ரான் ஹாசன்
வலைப்பூ :அகங்கை
ரான் ஹாசன் என்ற புனைப் பெயரில் எழுதும் இவரின் நிஜப் பெயர் தெரியவில்லை ..கவிதைகள் கடலலைப் போல வருகின்றன ..இவோரோட கவிதையிலிருந்து சில வரிகள்
உண்ணும் பருக்கையில் எல்லாம் உன்முகமே தெரியுதம்மா !
உப்பும், புளி மிளகும் கலந்த ருசி - உன் உள்ளங்கைக்கு உரியதம்மா !
ஏழு மலைத் தங்கங்கள் இழந்தாலும் பெரிதில்லை
அன்னை உந்தன் அரவணைப்பில் ஆறுதல் கிடைத்துவிட்டால் -
ஏழு மலைத் தங்கங்கள் இழந்தாலும் பெரிதில்லை
அன்னை உந்தன் அரவணைப்பில் ஆறுதல் கிடைத்துவிட்டால் -
ஆயிரம்
சொர்க்கங்கள் காலடியில் கிடக்குமம்மா ! .மேலும் வாசிக்க
4.பதிவர்:வலசு -வேலணை
வலைப்பூ :சும்மா
சுவாரஸ்யமான கதைகள் சொல்வதில் வல்லவர் போலும் இப்பதிவர்..
காதலர் தினம் என்ற இவரின் கதை காதலன் காதலியைக் கொல்லவேண்டிய சூழ்நிலையில் எழுதப் பட்டிருப்பது வித்தியாசமான கதைக்களமாக காட்சி அளிக்கிறது..
அனைத்துக் காதலர்களும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.நாளை
காதலர் தினம் அன்றைய தினத்தில் தான் காதலை யாசித்தவளைக் காதலின் பெயரால் ஏமாற்றிக்
கொலை செய்யப் போகிறேன்.மேலும் வாசிக்க
5)பதிவர்:செங்கோவி
வலைப்பூ :செங்கோவி
மின்னூல்:மன்மதலீலை
பதிவுலகில் ஒரு மூத்தப் பதிவாளர் ..இவரைத் தெரியாதவர்கள் பதிவுலகில் யாருமே இருக்க முடியவே முடியாது (இவருக்குலாம் அறிமுகம் தேவை இல்லைதான் ஆனாலும் இதுக் கருவாச்சி கடமைன்ரதுக்காக).உள்ளூர் சினிமால இருந்து உலக சினிமா வரைக்கும் சும்மா பிச்சி பிச்சி மேய்பவர்.பெரிய படைப்பாளி மட்டுமில்ல படிப்பாளியும் கூட.. உலகப் புகழ்ப் பெற்ற சரித்திரக்கல்லூரி நாவல் மன்மத லீலை ய எல்லாருமே தரவிறக்கம் செய்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன் .இன்னும் செய்யயலன்னா இந்த சுட்டிய பயன்படுத்தி தரவிறக்கம் செய்து படித்து வாழ்வில் முன்னேறுங்கள் ...
சுடச் சுட இவரோட டயல் ம போர் மர்டர் பட விமர்சனத்தை சுவைத்து மகிழுங்கள்!!
6பதிவர்: சீனி
வலைப்பூ
:சீனி கவிதைகள்
சீனு பற்றியும்
அறிமுகம் உங்களுக்குத் தேவைஇல்லை என நம்புகிறேன்.சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும்
நாப்பழக்கம் என்பதற்கு உதாரணம் சீனுவை கூறுவேன்..சித்திரமான அவரின் எழுத்துக்களின்
முன்னேற்றம் அவரின் தொடர் எழுதுமுறையாளும் முயற்சியாலுமே!!எந்தத் தலைப்பு
கொடுத்தாலும் சோர்வாமல் எழுதும் பதிவர்.
சீனி யின் வரலாற்றுக் கதைகளை கவிதைகளாக படித்து சுவைக்க இங்கே சொடுக்கவும்
சரிங்க!! நான் இப்போ கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சி.. நாளைக்கு மீண்டும் நம்ம வலையில சிக்கும் மீன்களை அள்ளிக்கொண்டு உங்களைக் காண வருகிறேன்..அதுவரைக்கும் எங்கயும் போயிடாதிங்க ..ப்ளொக்ஸ் எ படிப்படின்னு படிச்சிட்டு இருங்க ...மீண்டும் உங்களை வந்து சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்களன்பு கலை ...
பி.கு : மிக்க நன்றி சொல்லக் கடமைப் பட்டு இருக்கிறேன் DD அண்ணா .அறிமுகப் பதிவர்களின் வலைகளுக்கு நீங்களே சென்று கூறுவது உண்மையில் மிகப் பெரிய உதவியே ...
|
|
ஆஹா ....என்ன அருமையான கொசுக்கடி :)))))))))) தனக்கே சொந்தமான
ReplyDeleteபாணியில் கலக்கீட்டார் என் தோழி .வாழ்த்துக்கள் கலை (மானே ) .
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
வாங்க அம்பாள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா
Delete"நடக்க நடக்க வயிற்றுக் கொழுப்புக் குறையும்
ReplyDeleteபேசப்பேச வாய்க் கொழுப்பு குறையுமா??" என்பதை
ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன்.
சிறந்த அறிமுகங்கள்
சூப்பர் சார் ...ரிசல்ட் வந்ததும் சொல்லுங்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
Deleteஅறிமுகங்கள் அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்
நன்றிங்க அய்யா
Deleteஆஆவ் :) துடைச்சாலும் பான்டேஜ் போட்டாலும் நோ யூஸ் :) மரண கடி :)
ReplyDelete//பேசப்பேச வாய்க் கொழுப்பு குறையுமா??//
eppoodi thaayee ippadiyellaam .../ :)))))))
//
எல்லாம் நம்ம குருவிடம் கற்றுக் கொண்டது தான் அம்மையே
Deleteஅறிமுகங்கள் அருமை சென்று பார்க்கிறேன் ..
ReplyDeleteசூப்பர் கா நன்றி
Deleteகொசுத்தொல்லை தாங்க முடியலை.. அறிமுகம் அபாரம்..
ReplyDeleteகொளுத்திடுவோமா ...நன்றிங்க
Deleteவாத்துக்கடி மாதிரி இல்லை... வேற ஏதோ மிருகம் கடிச்ச மாதிரி இருக்கே.... செங்கோவியின் மின்னூலை ஏற்கனவே தரவிறக்கம் செய்திருக்கிறேன்.... இன்னும் படிக்கவில்லை... அறிமுகங்கள் சூப்பர்...
ReplyDeleteபத்து ஊசி போடணும் மறக்காம போட்டுடுங்க
Deleteஇன்று கொஞ்சம் தாமதம்... ஏனென்றால் இன்று ஒரு பதிவு வெளியீடு... நேரம் கிடைப்பின் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-4.html
ReplyDeleteஅறிமுகங்களுக்கு சென்று வருகிறேன்...
கண்டிப்பா சார் ...இந்த வார வேலைய முடிச்சிட்டு அங்க வந்து போடுறேன்
DeleteGood work கலை... குடுத்த வேலையை சிறப்பா
ReplyDeleteசெஞ்சிச்சிட்டு இருக்கே,, வாழ்த்துக்கள்...!!
அறிமுக பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..
ப்ப்பாஆஆஆ ஹஹ்ஹா ...நன்றிங்க ...உண்மையோ பொய்யோ இறைவா உனக்கே வெளிச்சம்
Deleteநடக்க நடக்க வயிற்றுக் கொழுப்புக் குறையும்
ReplyDeleteபேசப்பேச வாய்க் கொழுப்பு குறையுமா??..
பாருங்களேன்.. வாத்தும் கடிக்கனும்..னு கிளம்பிடுச்சி!..
இதுல - ரெண்டு கொக்கி வேற!...
ஆனாலும் - கலை!.. கலக்கு கலக்குன்னு கடலைக் கலக்கி - வலைய வீசி பிடிச்சுத் தர்றதெல்லாம் சுவையோ.. சுவை!..
ரொம்ப நன்றிங்க அய்யா ரசித்து படிப்பதற்கு ...உங்கள் பாராட்டுக்கள் எனக்கு உத்வேகம்
Deleteஅசத்திட்டீங்க...! பாராட்டுக்கள்...
ReplyDeleteமூன்று தளங்கள் புதியவை சகோதரி... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ரொம்ப நன்றிங்க அண்ணா உங்கள் உதவிக்கும் வருகைக்கும்
Deleteவாத்துக்கடி தெரியாம போச்சே..ஒரு தடுப்பூசியாவது போட்ருப்பேன்.. :)
ReplyDeleteவாழ்த்துகள் கலை..
அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்!
வாங்க மேடம் ...ஊசி போட்டுட்டு வாங்க அடுத்த தரம் ...ரொம்ப நன்றிங்க
Deleteதொடர்ந்து கடிங்க.. ஐ மீன் எழுதுங்க..
ReplyDeleteகண்டிப்பாங்க நன்றிங்க
Deleteஅறிமுகப்படுத்திய அண்ணியாருக்கு நன்றி.
ReplyDeleteநன்றிங்க அய்யா
Deleteஅறிமுகம் செய்தமைக்கு நன்றியோ நன்றி ஜி.....
ReplyDeleteநன்றிக்கு நன்றி ஜி
Deleteகுட் மார்னிங்,மருமகளே!நலமா?///"வாத்து" ம் கடிக்குமா?அறிமுகங்கள் அருமை.///செங்கோவி said ..
ReplyDeleteஅறிமுகப்படுத்திய "அண்ணி" யாருக்கு நன்றி.///எப்புடி?
குட் நைட் மாமா ...நலமே ...நீங்கள் நலமா ...வாத்தும் கடிக்கும் ...நன்றிங்க மாமா வருகைக்கும் ...
Deleteசகோ..!
ReplyDeleteஎன்னையும் நீங்கள் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி!
நன்றி சகோ வருகைக்கு
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபடவா ராஸ்கோலு யாருயா இது
Deleteவாவ் .... ஒரு அருமையான அறிமுகங்கள் , இந்த வார ஆசிரியரின் திறன் கண்டு மெய்சிலிர்த்தேன் ....... தங்கள் திறமை கண்டு வியக்கிறேன்
ReplyDeleteதிரு (?). கருவாச்சி அவர்களே,
இந்த வார 3 பதிவுகளில் தங்களுடைய நகைச்சுவை இடைச்செருகல்கள் அருமை, ரசித்து சிரித்தேன் .......
இது போல இந்த வாரம் முழுவதும் தங்களின் திறமையான , ரசனை மிக்க, ரகைச்சுவை உடைய பதிவுகளால் எங்களை மகிழ்விக்க வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
தங்களின் தீவிர ரசிகன்
மங்குனி அமைச்சர்.
அப்புடின்களா ஆஆஆஆஆஆஅ ரொம்ப நட்ரிங்கோ
Deleteஅறிமுகங்கள் அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றிங்க
Deleteஇந்த கடியெல்லாம் நம்மை ஒண்ணும் பண்ணாது! நாம தமிழ் தோட்டத்துல வாங்காத கடியா? முதல் நான்கு பேர் புதியவர்கள் எனக்கு! சென்று பார்க்கிறேன்! அருமையான அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteநன்றி அண்ணா
Deleteஇது 'தமிழ்'க் கடியாக்கும்,ஹ!ஹ!!ஹா!!!
ReplyDeleteஅதே அதே
Delete:) yoga annaa
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றிங்க அக்கா
Deleteபி.கு : மிக்க நன்றி சொல்லக் கடமைப் பட்டு இருக்கிறேன் DD அண்ணா .அறிமுகப் பதிவர்களின் வலைகளுக்கு நீங்களே சென்று கூறுவது உண்மையில் மிகப் பெரிய உதவியே ...//அவர் பின்னூட்டப்புலிதான்!நன்றிகள் சார் !
ReplyDeleteசெங்கோவி,சீனி நான் அறிந்தவர்கள் மற்றவர்கள் பக்கம் இனித்தான் கருக்குமட்டையுடன் தேடித்தேடிப்போகவேணும்!ஹீ
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை சென்று பார்க்கிறேன் ..//சப்பாத்தி சுட்ட பின் தானே இத்தாலி பீசா என்னைப்போல அஞ்சலின் !ஹீ!ஆவ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteகொசுக்கடி அதிகம் தான்ாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeletesyasinWed Mar 12, 12:57:00 PM
ReplyDeleteThis comment has been removed by the author.//ஹீ இதுவும் ஒரு உள்குத்து போல தாண்டி வா வாத்து! என் தங்கை கிராமத்து கருவாச்சி ஆக்கும்!ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என்ன தோழி இப்படியா செய்வீங்க நல்ல பிள்ளை மாதிரி நலமும் விசாரித்துவிட்டு வாழைபழத்தில் ஊசி ஏற்றுவது போல மெல்லக் கடிக்கிறதா? toobad ஆசையா ஓடி வந்தா இப்படியா.... வலிக்குதில்ல. சரி தோழிக்காக பொறுத்துக் கொண்டேன்.
ReplyDeleteரசித்தேன் உங்கள் பாணியில் அசத்திடீங்க எனக்கு ரொம்பவே பிடித்தது. அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.....! தங்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்....!
வாத்துக்கடி பயங்கரமா இருக்கே.....
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களில் இருவர் தவிர மற்றவர்கள் எனக்குப் புதியவர்கள்........ நன்றி.
த.ம. +1
அறிமுகப்படுததப்பட்ட பதிவர்களின் வலைப்பூக்களைப் படித்தேன். வாழ்த்துக்கள்.
ReplyDelete