07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 9, 2014

நன்றி! வணக்கம்!

வலைச்சர நண்பர்களுக்கு இனிய வணக்கம்.

 கடந்த ஒரு வார காலமாக என் பதிவுகளை வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் நன்றிபல. இன்று உங்களுடன் பகிரவிரும்பும் சில தளங்கள் இதோ.

தொன்மை மொழி கற்றலுக்கான தளம் என்று சொல்லும் விசும்பு என்ற தளத்தில் தொல்காப்பியம் காணொளி மூலம் கற்கலாம்.

நேற்றுதான் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பிரபலங்களை பேட்டி கண்டு ஆஹா ஓஹோவென்று பேசியாச்சு..ஆனால் இன்னும் போராடவேண்டியது நிறைய உள்ளது என்று முகத்திலடிக்கும் ஒரு பதிவு. சர்.சி.வி.ராமன் பற்றிய அருமையான கட்டுரை அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

ஆட்டிசம் பற்றி அறிந்துகொள்ளுங்கள், மற்றவருக்கும் சொல்லுங்கள் என்று பதிவிட்டிருக்கும் பாலபாரதி அவர்களுக்குப் பாராட்டுகள்.

கண்தானம் செய்யச் சொல்லும் அருமைக் கவிதை நெல்லை பாஸ்கர் அவர்களின் கவிதைத் தளத்தில்.

குழந்தைகள் கதை கேட்டால் மூளையைக் கசக்கி யோசிக்க வேண்டாம், தமிழ் அறிவு கதைகள் என்ற தளத்தைப்  பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆட்டோமொபைல் தமிழன் என்ற தளத்தில் கார்கள் பற்றிய தகவல் நிறைந்து இருக்கிறது. உலகிலேயே வேகமான கார் எது என்று அறிய இப்பதிவைப் பாருங்கள்.

வாழிய வாழியவே தளத்தில் வேதியியல் ஆசிரியர் பற்றிய பதிவு உங்களின் பள்ளி நாட்களை நினைவுபடுத்தலாம்.

ப்ரியன் கவிதைகள் என்ற தளத்தில் நீல நிறை ஓடை என்ற கவிதை அருமை.
பட்டாம்பூச்சி துரத்தும் பிள்ளையின் குதூகலத்துடன் இவர் என்ன செய்கிறார் என்பதை அழகிய கவிதையில் சொல்லிவிட்டார்.

அருமையான கவிதைகள் நிறைந்த தளங்கள் மேலும் இரு தளங்கள் தமிழ் கவிதைகள் மற்றும் என் தமிழ்.

தவறாமல் பின்னூட்டம் இட்டு என்னை ஊக்கப்படுத்தும் நண்பர் ஸ்ரீனி அவர்கள் மகிழ்ச்சி பற்றி ஏதோ சொல்கிறார்..அவர் நிறைய எழுதினால் எனக்கு மகிழ்ச்சி!

வலைச்சரத்தில் இருந்து விடைபெற்றாலும், வலைத்தளத்தில் சந்திப்போம்.
 

நன்றி, வணக்கம்!
நட்புடன்,
கிரேஸ்

24 comments:

 1. என் வலைத்தளத்திற்கு தொடர்ந்து வாருங்கள், நன்றி!

  ReplyDelete
 2. சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் - இன்றைய அறிமுகங்களுக்கும்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி திரு.தனபாலன்.

   Delete
  2. senthie, rekha, Jayakumar Vellaiyan - இவர்களின் தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

   Delete
  3. அப்டினா நல்லா வலைவீசிட்டேன் போல.. :)
   மகிழ்ச்சி!

   Delete
 3. நல்ல பல தளங்களின் அறிமுகம்!..
  வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பாக செய்தீர்கள்.
  அன்பின் பாராட்டுக்களுடன் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. சிறப்பான பணி கிரேஸ் !
  வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 5. வணக்கம் சகோதரி
  வலைச்சர ஆசிரியர் பணியைச் செவ்வனே முடித்த சகோதரிக்கு அவர்களுக்கு வாழ்த்துகள். தொடர்ந்து தங்கள் சமூக சிந்தனையும் தமிழ்ப்பற்றும் அனைவருக்கும் பயன்படட்டும். தங்கள் வலைத்தளம் இன்னும் இன்னும் சிகரம் தொடட்டும். நன்றி சகோதரி.

  ReplyDelete
 6. ஆக்கபூர்வமான பதிவுகளை அறிமுகப்படுத்திய வித அருமை .தொடரட்டும் உங்களின் தமிழ் பணி

  ReplyDelete
 7. ஒரு வாரகாலம் சிறப்பாக பல வலைத்தளங்களை தொகுத்து வழங்கியமைக்கு வாழ்த்துக்கள்! புதிய தளங்களுக்கு சென்று பார்க்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 8. வேலையின் காரணமாக, வலைத் தளங்களில் பயணிக்கவில்லை எனது தளத்தின் அறிமுகத்திற்கு நன்றி

  ReplyDelete
 9. பணியை சிறப்பாக முடித்தமைக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 10. அட.. அட.. என்னோட தளத்தையும் அறிமுகம் செய்ததற்கு உளமார்ந்த நன்றி கிரேஸ். கண்டிப்பா நிறைய எழுத முயற்சி செய்கிறேன் :)

  ஆசிரியர் பணியினை அற்புதமாக செய்து முடித்தமைக்கு வாழ்த்துகள் கிரேஸ் :)

  ReplyDelete
  Replies
  1. இந்த வாரமே அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன் :)
   நன்றி ஸ்ரீனி.

   Delete
 11. பல புதிய தளங்களை அறிந்து கொண்டேன். ஒரு வாரமாக வலைச்சர ஆசிரியராக, சிறப்பாகப் பணி செய்தீர்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 12. பணியை சிறப்பாக செய்து முடித்தமைக்கு பாராட்டுக்கள் கிரேஸ்.
  வாழ்க வளமுடன் ....!

  ReplyDelete
 13. தங்கள் சிறந்த அறிமுகப் பணிக்கு நன்றி.

  ReplyDelete
 14. ஒரு வாரம் சிறப்பான பதிவுகள் எழுதி பலரை அறிமுகம் செய்த உங்களுக்கு பாராட்டுகள்....

  தொடர்ந்து சந்திப்போம்....

  ReplyDelete
 15. நன்றி கிரேஸ் அய்யா அவர்களே..! தங்களின் அறிமுகம் எமது ஊக்கம்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது