நானும் பதிவுலகமும் - 2
➦➠ by:
சீனு,
திடங்கொண்டு போராடு சீனு
இன்றைய பதிவுலகத்தையும் அன்றைய சிறுபத்திரிக்கைச் சூழலையும் ஒன்றோடொன்று ஒப்பிடும் அளவிற்கு பல விஷயங்கள் ஒத்துப்போகின்றன. அன்றைய காலங்களில் வெகுஜன பத்திரிகைகளில் எழுத வாய்ப்பு கிடைக்காத எழுத்தாளர்கள் சிறுபத்திரிக்கை அல்லது கையெழுத்துப் பத்திரிக்கைகள் மூலம் தங்கள் எழுத்தார்வத்தை தணித்துக் கொண்டார்கள் அல்லது வளர்த்துக் கொண்டார்கள். இது போன்ற சிறுபத்திரிகையில் எழுதியவர்களுக்கு, வெகுஜனபத்திரிக்கை எழுத்தாளர்களுக்கு நிகரான பரந்துவிரிந்த வாசகத்தளம் இருந்திருக்கவில்லை.
மேலும் பெரும்பாலான சிறுபத்திரிகை எழுத்தாளர்களுக்கு தங்களுடைய சக எழுத்தாளர்களே வாசக மற்றும் விமர்சகர்களாக இருந்துள்ளார்கள். எதுவாயிருந்தாலும் தங்களுக்குள்ளாகவே பகிர்ந்துகொள்ள வேண்டும். சில சமயங்களில் இங்கும் வார்த்தைச் சிக்கனம் முக்கியம், அப்போதுதான் ஒன்றிற்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் படைப்புகளை வெளியிட முடியும். மற்றொரு முக்கியமான விஷயம், எங்கே மற்றொருவன் படைப்பை விமர்சித்தால் தன் படைப்பையும் மட்டம்தட்டி விமர்சித்து விடுவார்களோ என்ற பயம் கலந்த சூழலும் இருந்துள்ளது.
பாரதியில் இருந்து சுந்தர ராமசாமியில் இருந்து சுஜாதா வரை பெரும்பாலான எழுத்தாளர்கள் சிறுபத்திரிகை எழுத்தாளர்களாக இருந்து வெகுஜன ஊடகத்திற்கு வந்தவர்கள்தாம். என்ன, சிலர் உயிரோடு இருக்கும்போது, சிலர் இறந்தபின்பு. இன்றைய நிகழ்காலத்திலும் சிறுபத்திரிக்கைகள் வெளிவந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் அவை பதிவுலகம் என்னும் மாபெரும் ஊடகத்தின் முன்னே கொஞ்சம் கலையிழந்து காணப்படுகிறது, இருந்தும் அங்கும் தொடர்ந்து இயங்குபவர்களும் இருக்கிறார்கள்.
பதிவுலகத்தை சிறுபத்திரிக்கையுடன் ஒப்பிட மிக முக்கியக்காரணம், வெகுஜன ஊடகத்துடன் ஒப்பிடுகையில் இங்கும் வாசகப்பரப்பு குறைவு. பெரும்பாலான நேரங்களில் விமர்சகர் என்பவர் சக பதிவராகவே இருப்பார். வார்த்தைச் சிக்கனம் வெகு முக்கியம். பதிவு பெரிதாக பெரிதாக நுனிப்புல் மேய்தல் அதிகமாகும். இருந்தும் இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் கொஞ்சம் திறமையாகவும் தீவிரமாகவும் இயங்கினால் ஒரு வெகுஜன ஊடகத்திற்கு நிகரான வாசகபரப்பை பெற்று விடலாம் என்பது குறிப்பிடப்பட்ட வேண்டிய விஷயம். இன்னும் சொல்லபோனால் ஏதோ ஒரு விதத்தில் வெகுஜன ஊடகங்களே பதிவுலகத்தைப் பார்த்து தங்கள் பாணியை மாற்றிக் கொண்டுள்ளன உ.தா:விகடன் டைம் பாஸ்.
ஒருவர் எதற்காக பதிவுலகத்தைத் தேடி வர வேண்டும் என்ற வினா எழும்போது நம் ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விதமான பதில் கிடைக்கலாம். எழுதனும்னு ஆச, பத்திரிக்கைக்கு அனுப்புனேன் ரெஸ்பான்ஸ் இல்ல அதான் இங்க வண்டேன், என்னுடைய விருப்பங்கள பகிர்ந்துக்க எனக்குன்னு ஒரு இடம், கிட்டத்தட்ட டைரி மாதிரி யூஸ் பண்றேன், பொழுது போகல அதான் எழுதுறேன். இது போல் இன்னுமின்னும் ஏராளமான பதில்கள் கிடைக்கலாம். பதில்கள் என்னவாயிருந்தாலும் பதிவுலகத்தின் வெற்றியை நிர்ணயிக்கப்படும் ஒரு ஒத்தகருத்து என்ற ஒன்றே. இங்கே ஒத்தகருத்து என்பது பதிவருக்கு ம் பதிவருக்கும் இடையில் எழுத்தார்வம் என்ற புள்ளியிலும், வாசகனுக்கும் பதி வருக்கும் இடையில் தன் எண்ணத்தோடு ஒன்றிப்போதல் என்ற புள்ளியிலும் இணையலாம்.
நேற்றைய பதிவில் 'நான் பதிவுலகத்தினுள் அடியெடுத்து வைத்திருந்த நேரம் அது பதிவுலகத்தின் தேய்பிறைக் காலம்' என்று குறிப்பிட்டு இருந்தேன். அதற்கான காரணத்தை விரிவாகப் பேசுமுன் எனது பதிவுலக அனுபவத்தையும் பேச வேண்டியது கட்டாயமாகிறது.
தொடர்ந்து பேசுவோம்
பதிவுலக வரலாற்றுப் பயணம் குறித்த ஒரு கட்டுரை எனது வலையில் எழுதியது
இன்றைய அறிமுகங்கள்
மெட்ராஸ் தமிழன் என்ற பெயரில் எழுதிவரும் நண்பர் 2007ம் ஆண்டு முதலே எழுதி வந்தாலும் மிகக் குறைவாக எழுதி வருகிறார். தன்னுடைய சமீபத்திய பதிவில் சென்னையின் மூர்மார்கெட் என்னும் பகுதியைப் பற்றி எழுதியிருக்கும் பதிவு அட்டகாசம். மூர்மார்க்கட் பற்றி எனக்குத் தெரியாத பல விசயங்களை மிகவும் சுவைபட எழுதியுள்ளார்.
வார்த்தைகள் விருப்பம்
வார்த்தைகள் விருப்பம் என்னும் தளத்தில் எழுதிவரும் திரு காரிகன் அவர்களும் மிகக் குறைவான பதிவுகளே எழுதியிருந்தாலும் மிக சுவைபட எழுதுகிறார். கூறவரும் விசயங்களில் இவர் மேற்கோள் காட்டும் உவமைகள் அத்தனையும் அத்துணை அழகு.
இசை விரும்பிகள் XIII -- மறைந்த கானம்
நாடோடியின் பார்வையில் என்ற தளத்தில் எழுதிவரும் திரு ஸ்டீபன் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் அதாவது 2012-ம் ஆண்டுக்கு அப்புறம் மீண்டும் தன் வலைப்பூவை தூசி தட்டி எழுதத் தொடங்கியுள்ளார்.
பயண அனுபவமும், தொ(ல்)லைக்காட்சித் தொடர்களும்..
உலக இலக்கியம் விரும்பும் நண்பர்களுக்கு இந்த வலைபூ ஒரு பெருத்த தீனி போடும் என்று நம்புகிறேன்.
|
|
அனைத்தும் தொடரும் தளங்கள்... இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதனக்குள்ளே ஒப்பீடு என்றும் உயர்வைத் தரும்... பதிவுலக அனுபவ பயணத்தை பேசுங்கள்... வாழ்த்துக்கள் சீனு...
டைம்பாஸ் விகடன் பதிவுலகம் பார்த்து மாற்றிக் கொண்டதா? புரியவில்லை.
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை.
டைம்பாஸ் இது வரை படித்ததில்லை.... அதனால் ஸ்ரீராம் கேள்வி எனக்குள்ளும்....
ReplyDeleteநான்கு அறிமுகங்கள் - நான்கும் நான் படித்த நினைவில்லை....
தொடர்ந்து சந்திப்போம் சீனு...
சிறுபத்திரிகை போல வலை உலகிலும் படித்து விமர்சிப்பவர் சக பதிவராகவே இருப்பார்ன்னு சொல்லியிருக்க. அப்படி இருந்தாலும் வலையுலகில் பெரிய அளவில் போட்டி மன்ப்பான்மை, புகைச்சல் இல்லைன்னுதான் தோணுது எனக்கு. இதைப்பத்தி உன் கருத்தென்ன நள்ளிரவு நாயகா! அறிமுகம் செய்யப்பட்டவர்களை நிதானமாகச் சென்று வாசிக்கிறேன். அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள், சீனு.
ReplyDeleteவாழ்த்துகிறேன்! வலைச்சர பணி ஏற்றமைக்கு!
ReplyDeleteநல்ல தலைப்பில் வலைச்சர பதிவுகள் தொகுத்து வருவது நன்று சீனு.....
ReplyDeleteஅருமையான தலைப்புகள், இன்றைய வலைசர அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete//நாடோடியின் பார்வையில் என்ற தளத்தில் எழுதிவரும் திரு ஸ்டீபன்//
ReplyDeleteவணக்கம் சகோ, என்னை பெயருடன் அறிமுக படுத்தியமைக்கு ரெம்ப நன்றி. ஒரு வாரமும் தொடந்து ஜொலிக்க வாழ்த்துங்கள்..
ஸ்டீபனின் தளம் அறியாதது. போய் வரேன்
ReplyDeleteஅய்யோ பாவம் நாடோடி .....
Delete//பதில்கள் என்னவாயிருந்தாலும் பதிவுலகத்தின் வெற்றியை நிர்ணயிக்கப்படும் ஒரு ஒத்தகருத்து என்ற ஒன்றே. //
ReplyDeletePuriala
ஒவ்வொரு பதிவின் முன்னுரையும் அருமை ... சீனு கலக்கு
ReplyDelete//இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் கொஞ்சம் திறமையாகவும் தீவிரமாகவும் இயங்கினால் ஒரு வெகுஜன ஊடகத்திற்கு நிகரான வாசகபரப்பை பெற்று விடலாம் என்பது குறிப்பிடப்பட்ட வேண்டிய விஷயம்.//
ReplyDeleteமிகவும் சரி ....
அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
ReplyDeleteஸ்டீபனின் தளம் தவிர மற்ற தளங்கள் எனக்கு புதிது! அறிமுகம் செய்தமைக்கு நன்றி! பதிவுலக பயணம் குறித்த கட்டுரை சூப்பர்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteசீனு,
ReplyDeleteகருத்தையே அனுமானம் என்று சொல்லிவிட்டு பதிவையே அனுமானமாக எழுதி வைக்குறிங்களே அவ்வ்!
//மேலும் பெரும்பாலான சிறுபத்திரிகை எழுத்தாளர்களுக்கு தங்களுடைய சக எழுத்தாளர்களே வாசக மற்றும் விமர்சகர்களாக இருந்துள்ளார்கள். எதுவாயிருந்தாலும் தங்களுக்குள்ளாகவே பகிர்ந்துகொள்ள வேண்டும். சில சமயங்களில் இங்கும் வார்த்தைச் சிக்கனம் முக்கியம், அப்போதுதான் ஒன்றிற்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் படைப்புகளை வெளியிட முடியும். மற்றொரு முக்கியமான விஷயம், எங்கே மற்றொருவன் படைப்பை விமர்சித்தால் தன் படைப்பையும் மட்டம்தட்டி விமர்சித்து விடுவார்களோ என்ற பயம் கலந்த சூழலும் இருந்துள்ளது. //
சிறுபத்திரிக்கை என்பது(சிற்றிலக்க்கியப்பத்திரிக்கை) "வாசகர் பரப்பில்" மட்டும் வேண்டுமானால் வலைப்பதிவுகள் போல சுருங்கி இருக்கலாம். ஆனால் அவற்றின் தரத்திற்கு பக்கத்தில் வலைப்பதிவுகளில் எழுதும் 99.9% மக்களால் நெருங்க முடியாது.
நீங்க ஒரே ஒரு அளவீட்டின் படி "சிறுப்பத்திரிக்கையை" வலைப்பதிவுகளோடு ஒப்பீட்டு அதான் இது என்பது ஆகச்சிறந்த நகைச்சுவை!!!
மேலும் சிற்றிலக்கிய அரசியல் என்றால் என்னனே தெரியாமல் பேசிட்டு இருப்பதாக படுகிறது.
உண்மையில் அடுத்தவர் படைப்பை "சல்லடைப்போட்டு சலித்து விடுவார்கள்" ,நீங்க வலைப்பதிவு "சிண்டிகேட்" வகையை தாண்டாமலே சிற்றிலக்கிய உலகம் வலைப்பதிவு போல ஒருவருக்கு ஒருவர் முதுகு சொறிஞ்சிக்கிட்டிருக்காங்க என நினைத்துக்கொண்டால் என்ன செய்ய அவ்வ்!
தயவு தாட்சண்யமின்றி " விமர்சனம்" செய்து கழுவி ஊத்திவிடுவார்கள் சிற்றிலக்கிய பத்திரிக்கையாளர்கள்.
பிரமிள் என்ற தருமு சிவாராம் என்பவரைப்பற்றி விசாரித்து தெரிந்துக்கொள்ளவும், அவர் விமர்சனம் செய்தால் "கழுவில் ஏற்றிவிடுவார் ":-))
#//பாரதியில் இருந்து சுந்தர ராமசாமியில் இருந்து சுஜாதா வரை பெரும்பாலான எழுத்தாளர்கள் சிறுபத்திரிகை எழுத்தாளர்களாக இருந்து வெகுஜன ஊடகத்திற்கு வந்தவர்கள்தாம்//
சுந்தரராமசாமி எப்போ வெகுஜன ஊடக எழுத்தாளராக ஆனார் அவ்வ்!
பாரதி காலத்தில் , மவுண்ட் ரோட் மஹாவிஷ்ணு தி இந்துவே கொஞ்சம் வளர்ந்த சிறுப்பத்திரிக்கை தான் :-))
பாரதி ஆசிரியராக இருந்த சுதேசமித்திரன் அக்காலத்தில் "தமிழின் முன்னணி' பத்திரிக்கை.
எனவே பாரதியெல்லாம் சிறுபத்திரிக்கையில் இருந்து ,வெகுஜன ஊடகத்திற்கு வந்தவரல்ல. அவர் காலத்தில் சின்னது தான் பெருசு!
விட்டா சன் மியுசிக்கில் பாரதி பணியாற்றினார் என ரேஞ்சில் சொன்னாலும் சொல்வீங்க போல அவ்வ்!
#//பதிவுலகம் என்னும் மாபெரும் ஊடகத்தின் முன்னே கொஞ்சம் கலையிழந்து காணப்படுகிறது, இருந்தும் அங்கும் தொடர்ந்து இயங்குபவர்களும் இருக்கிறார்கள். //
ஷகிலா படங்களின் முன் மம்மூட்டி ,மோகன்லால் படங்கள் கூட கலையிழந்தனவாம் :-))
சிறுப்பத்திரிக்கைகள் என்பன தனி உயிரினம், அவற்றின் சர்வைவலுக்கு "பதிவுலகம்" எவ்வித பொறுப்பும் இல்லை.
சிற்றிலக்கியவாதிகள் இணையத்திற்கு வருகிறார்கள் ,ஆனால் அவையே சிற்றிலக்கிய இணையத்தளங்கள் என்று தான் அழைக்கப்படுகின்றனவே ஒழிய "வலைப்பதிவுகள்" என்றல்ல.
வலைப்பதிவுகளில் எழுதுபவர்களுக்கு பெரும்பாலும் சிற்றிலக்கியமென்றல் என்னனு தெரியாது ,அதைப்படிக்கவும் மாட்டார்கள்,அதிகப்பட்சம் சுஜாதாவை தாண்டி சிறந்த எழுத்தாளர்களே இல்லை என மனப்பிராந்திக்கொண்டவர்கள் :-))
ரெண்டு வேறுப்பட்ட வகையை , வெறுமனே "வாசகர் பரப்பை" மட்டும் வச்சு ரெண்டும் ஒன்று என ஒப்பிடுதல் தவறானது.
வணக்கம் வவ்வால்,
Deleteஎன்னுடைய முதல் பதிவிற்கு நீங்கள் அளித்த கருத்துரைக்கு முரண்படும் நான் தயக்கமே இல்லாமல் இந்த கருத்துக்களுக்கு உடன்படுகிறேன் காரணம், இந்த ஒப்பீடிற்கு நிச்சயம் மாற்றுக் கருத்து வரும் என்று தெரியும்,அதேசமயம் உங்களிடமிருந்தே வரும் என எதிர்பார்க்கவில்லை...
இப்படி ஒப்பீடு செய்வதற்கு முன் சிறிது யோசித்தேன் சிறிது தயங்கவும் செய்தேன், காரணம் வலையுலகம் சிற்றிதழ் ஒப்பீடு ஓவர் ஹைப் என்று தெரியும்.. இருந்தும் ஒப்பிட ஒரு காரணம் சமீபத்தில் நான் படித்த சுந்தர ராமசாமியின் கட்டுரை தொகுதி தான், அதில் சிற்றிதழ் குறித்து எழுதிய பெரும்பாலான விஷயங்கள் இங்கும் ஒத்துப் போனது போன்ற ஒரு உணர்வு.. சிற்றிதழ்கள் பற்றி எனக்கு இன்னும் நிறைய தெரிய வேண்டும்.. இப்படி ஒரு பதிவு எழுதியிராவிட்டால் இப்படி ஒரு விளக்கம் கிடைத்திருக்காது.. அதற்கு நன்றி
மேலும் நான் சிற்றிதழ் குறித்து மேற்கூறிய கருத்துகள் அனைத்துமே சுந்தர ராமசாமி தனது நானும் என் எழுத்தும் கட்டுரைத் தொகுதியில் கூறியவை தாம். சிற்றிதழ் குறித்த தனது கட்டுரையில் அங்கும் விமர்சனங்கள் கம்மி மேலும் புரிந்துகொள்வார் குறைவு கிட்டத்தட்ட இல்லை என்றே குறிப்பிட்டுள்ளார் வவ்வால்..
சீனு,
Deleteவணக்கம்,
//அதேசமயம் உங்களிடமிருந்தே வரும் என எதிர்பார்க்கவில்லை... //
என்ன கொடுமைய்யா இது அவ்வ்!
எனக்கு முன்னாடி கருத்து சொன்ன யாருமே "புரிஞ்சுக்கொள்ளாமலே" பதிவ படிச்சுட்டாங்களோ அப்போ?
யாருமே "குறிப்பிட்டு" சொல்லக்காணோமேனு தான் நான் சொன்னேன். இல்லைனா நான் இப்பதிவுக்கு பின்னூட்டமே போட விரும்பவில்லை, அடுத்தடுத்து ஏன் "மடக்கிட்டு" இருக்கணும் என நினைத்து கடந்து செல்லவே நினைத்தேன்.
#//மேலும் நான் சிற்றிதழ் குறித்து மேற்கூறிய கருத்துகள் அனைத்துமே சுந்தர ராமசாமி தனது நானும் என் எழுத்தும் கட்டுரைத் தொகுதியில் கூறியவை //
வலைப்பதிவுகளை எங்கே ஒப்பிட்டார்?
#//சிற்றிதழ் குறித்த தனது கட்டுரையில் அங்கும் விமர்சனங்கள் கம்மி மேலும் புரிந்துகொள்வார் குறைவு கிட்டத்தட்ட இல்லை என்றே குறிப்பிட்டுள்ளார் வவ்வால்..//
அவர் மட்டும் புரிந்து கொண்டாராமா?
காலச்சுவடே ஒரு சிற்றிதழ் தான் அவ்வ்!
ஆம் சிற்றிதழே தான் , ஆனால் சிற்றிதழ்களில் அதிக சர்க்குலேஷன் உள்ளது.
சிற்றிதழ்களை புரிந்துக்கொள்ளவில்லை என யாரைப்பார்த்து சொல்கிறார், அவர் புரிந்துக்கொள்ளவில்லை என்பதை அப்போ ஒத்துக்கணுமே ,இப்போ செத்தவரை எழுப்பிக்கேட்க முடியாது அவ்வ்!
விமர்சனங்கள் கம்மினு எப்படி சொன்னார்னு தெரியலை, ஆனால் ஏகப்பட்ட விமர்சனங்களை சிற்றிலக்கியவாதிகள் வைத்துள்ளார்கள் ,ஒரு வேளை அதெல்லாம் "கண்டுக்காம" விட்டிருப்பார் போல :-))
சுரா எழுதின கட்டுரைக்கு ,சுராவே சாட்சினு நீங்க வேற சொல்லிக்கிட்டு முடியல :-))
காலச்சுவடை கழுவி ஊத்தி எழுதின கட்டுரைகள் எதாவது படிச்சிருக்கீங்களா? அதெல்லாம் செய்யாம ,சுராவே எழுதினது தான் சிற்றிலக்கியத்தின் "வரையறை" என கதை சொல்ல வரீங்க!
ஒவ்வொரு சிற்றிலக்கிய பத்திரிக்கையும் ,ஒவ்வொரு எழுத்தாளரின் முகம், (சில எழுத்தாளர்களுக்கு சில பத்திரிக்கை மட்டுமே இடம் தரும்,அவ்வரசியல் தனி)எனவே அந்த எழுத்தாளர் அப்படினு விமர்சிப்பது கூட சிற்றிலக்கியப்பத்திரிக்கையின் மீதான விமர்சனமே.
ஜெமோ இப்போ கூட காலச்சுவடை விமர்சிக்கிறார். அதெல்லாம் படிங்க ,அப்பாலிக்கா விமர்சனம் இருந்துச்சா இல்லையானு "தீர்ப்பு"க்கு வரலாம்.
உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம், இந்த பத்திரிக்கை எழுதினது சரியல்லனு அதே பத்திரிக்கைக்கு கடிதம் எழுதுவாங்க ,அதை வெளியிடலைனா, அதை இன்னொரு பத்திரிக்கையில் வெளியிட வச்சு "முகத்திரையை" கிழிப்பாங்க :-))
காரிகன் குறைவாக எழுதினாலும் நேர்த்தியாக ,சான்றுகளுடன் எழுதக்கூடிய வெகுசிலப்பதிவர்களில் ஒருவர், அதிகம் கவனிக்கப்படுவதில்லையே என நினைப்பதுண்டு ,அவரின் பதிவுகளை அறிமுகப்ப்படுத்தியமை சிறப்பான ஒன்று.
ReplyDeleteகாரிகன் மற்றும் அறிமுகமான மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
வலைச்சர ஆசிரியராக தெரிவுசெய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்கள்.அறிமுகங்களின் எண்ணிகையை சற்று அதிகரிக்கலாம் என்பது என் அபிப்பிராயம்
ReplyDeleteசீனு ,நேற்றைய அறிமுகத்தில் எனது தளம் குறித் அறிமுகத்திற்கு நன்றி சொல்லி கிளம்ப முடியாது .ஆனா வேறு வழியும் தெரில .நான் உனக்கு இட்ட முதல் கமெணட்ட விட இன்று வரை எனக்கென்று பூசப்பட்ட ஒரு முத்திரையை தாண்டி பலரிடம் என்னை கொண்டு சென்றது நீ என்பதுதான் உண்மை .
ReplyDeleteசிற்றிதழ், சிற்றிலக்கிய பத்திரிக்கைகள் என்பது நினைத்தவுடன் அனைவரும் தொடங்கக் கூடியது அல்ல, இதில் பணத்தை இழந்தவர்கள் ஏராளம், என்னுடைய கவிதை ஒன்று அச்சமில்லை என்கின்ற இலக்கிய சிற்றிதழில் வர 40 தடவை திருத்தியும் திருப்தியில்லை அந்த ஆசிரியருக்கு, பிறகு ஒரு வழியாக வேறு கவிதை விடிய விடிய உக்காந்து எழுதி வரவைக்க நான் பட்ட பாடு இருக்கே..! அதே மாதிரி கையெழுத்துப் பத்திரிக்கை என்பது பல எழுத்தாளர்களை அப்படியே தூக்கிப் போட்டு விடும் வருடம் ஒருமுறை தடிமனான ஒரு புத்தகம் போடுவார்கள் ஓவியம்,சிறுகதை, கட்டுரை கவிதை என்று மணிமணியாக அழகிய கையெழுத்தில் வரும் அதில் என்னுடைய துக்கடா கட்டுரை வருவதற்கு இரண்டு வருடம் வெறும் ஓவியனாக அவர்களுடன் இருந்தேன். ஆனால் வலைப்பதிவு அப்படியில்லை உடனே தொடங்கிவிடலாம், உடனே அதிக பாராட்டும் குறைந்த விமர்சனமும் கிடைக்கும்.
ReplyDeleteசில முக்கிய பதிவுகளை அறிமுகப்படுத்தினீர்கள்.
ReplyDeleteஇன்னும் சில அதிகமாக அறிமுகப்படுத்தலாம்.
நன்றி!
அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சீனு.
ReplyDeleteபதிவுலக எழுத்தும் பத்திரிகை எழுத்தும் பத்தி விவாதிக்க சரியான நேரம் பாத்தீங்களே.. என்னால் வலைபக்கம் வர முடியாத டைம் பாத்து.
தங்களின் அறிமுகங்களை வரவேற்கிறேன்.
ReplyDeleteநன்றி சீனு அவர்களே...
ReplyDeleteசீனு,
ReplyDeleteஎதேச்சையாக இங்கு வந்து பார்த்தால் ஆச்சர்யம். என் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி. மெட்ராஸ் தமிழன் expatguru வின் வலைப்பூ அட்டகாசமான கட்டுரைகள் கொண்டது. நாடோடியின் பார்வையில் நான் இனிமேல்தான் படிக்கவேண்டும். சிறப்பான தளங்களை அறிமுகம் செய்யும் இந்தப் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.
சிற்றிலக்கியம், வலையிலக்கியம் என்ற குழப்பங்களுக்குள் புக விரும்பவில்லை. இரண்டுக்கும் வித்தியாசங்கள் இருந்தாலும் ஒரு காலத்தில் எழுத விரும்புவர்கள் எழுதினார்கள்..எழுதினார்கள்..அவ்வளவே. அவர்களின் படைப்புக்கள் அச்சு எழுத்தில் உருமாறவே இல்லை. வலைப்பூ இந்த disparity யை அதிரடியாக உடைத்து காணாமல் போக செய்துவிட்டது. இங்கு யாரும் எழுதலாம். எல்லாமும் எழுதலாம். இந்த சுதந்திரம் ஒன்றே இணையத்தின் ஆசீர்வாதம் என்று நினைக்கிறேன்.
வவ்வால்,
நான் அவ்வளவாக கவனிக்கப்படுவதில்லை என்ற உங்களின் ஆத்மார்த்தமான அக்கறைக்கு ஒரு ஆழமான நன்றி. Catcher in the Rye எழுதிய J.D. Salinger ரை நான் அடிக்கடி நினைத்துக்கொள்வதுண்டு. அவர் ஒரு தனிமை விரும்பி.