இணையத்தின் அப்பாடக்கர்ஸ் (ஃபைனல் ஷாட்) - என் பணி முடியும் நேரமிது..
இந்த நீண்ட பதிவை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி...
ஒரு வார காலமாக வலைச்சரத்தை 'வளவளச்'சரமாக மாற்றிவிட்டேன் என நினைக்கிறேன். இரத்தின சுருக்கமாக பதிவு எழுத வேண்டும் என்றுதான் நினைத்திரு- ந்தேன். ஆனால் ஏனோ முதல் முறை வாய்ப்பு, சரியான திட்டமிடல் இல்லாமை, ஆபிஸின் ஆணி, குடும்பப்பொறுப்புகள் போன்ற சில காரணங்களால் எதிர்பார்த்த அளவு செய்யவில்லை என்றுதான் நினைக்கிறேன்.. சீனா அய்யா இன்னொரு வாய்ப்பு கொடுக்காமலா போய் விடுவார்.. அப்போது கலக்கலாம்..
80 களின் இறுதியில் என்று நினைக்கிறேன். குமுதம் அப்போது நம்பர் ஒன் வாரப்பத்திரிக்- கையாக இருந்தது. நிறைய புதிய முயற்சிகள் செய்வார்கள். அதில் ஒரு முயற்சியாக வாரம் ஒருவர் அந்த இதழை தயாரிப்பதாக ஆரம்பித்தார்கள். முதல் இதழை டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தயாரித்ததாக நினைவு. தமிழகத்தின் அனைத்து ஆளுமைகளுக்கும் அப்பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஒருவரின் தனித்திறமையையும், எண்ணங்க -ளையும் வெளிக்கொணரும் வித்தியாசமான முயற்சி அது.நல்ல வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஒரு வருடத்தின் தீபாவளி இதழை குஷ்வந்த் சிங் தயாரித்தார். அதுவரை அவரை யாரென்றே தெரியாது. அதன்பிறகுதான் அவர் எவ்வளவுப் பெரிய இலக்கிய ஆளுமை என்பதைத் தெரிந்து கொண்டேன்...
வலைச்சரமும் அப்படிப்பட்ட பணியைத்தான் தொடர்ந்து செய்துவருகிறது. நிறைய பதிவர்களுக்கு விசிட்டிங் கார்டு ஆக இருக்கிறது. இப்பணி தொடர்ந்து சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
தற்போதெல்லாம் வலைப்பூவில் புதிய பதிவர்கள் எழுத வருவது குறைந்துவிட்டது. அப்படி யாராவது ஒருவரை தேடிக்கண்டுபிடித்தால் , அங்கே " உங்கள் பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது" என்று திண்டுக்கல்லாரின் பின்னூட்டம் இருக்கிறது. நான் பதிவெழுத வந்து ஒரு வருடம் கழித்துத்தான் அதாவது நூறு பதிவுகளுக்கு மேல் எழுதியபிறகுதான் வலைச்சரத்தில் என் வலைப்பூவை அறிமுகப்படுத்தினார்கள்.
பதிவுலகின் பொற்காலம் என்று 2008-2011 ஆம் ஆண்டு மத்தியில் வரை சொல்லலாம். நிறைய பதிவர்கள். அத்தனைப்பேரும் மிகச்சிறந்த, தனித்துவமான, எழுத்தாளுமை உடையவர்கள். ஒவ்வொரு பிரிவுகளிலும் கலக்கினார்கள். நகைச்சுவையான எழுத்துத் திறன் உள்ளவர்கள் குழுவாக சேர்த்து பட்டையைக் கிளப்பினார்கள். பிற்பாடு பேஸ்புக், ட்வீட்டர் களின் தாக்கம், தமிழ்மணத்தோடு ஊடல், சொந்தப் பிரச்சனைகள் என்று சில காரணங்களால் பதிவுலகத்தைவிட்டு விலகியவர்கள் திரும்பவே இல்லை.. நான் பதிவெழுத வந்தது 2011 இறுதியில். ஒருவேளை அதற்கு முன் வந்திருந்தால், சுனாமியில் சிக்கிய படகு போல காணாமற்போயிருப்பேன்..!
போகட்டும்..
என் ஒருவாரகால வலைச்சர ஆசிரியப்பணிக்கு ஒத்துழைப்பு நல்கிய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. என் வலைப்பூவில் மாதத்திற்கு நான்கைந்து பதிவுகள் எழுதுவேன். அவ்வளவுதான் எழுதமுடியும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.ஆனால் தினம் ஒரு பதிவுகூட எழுதமுடியும் என்கிற நம்பிக்கை வலைச்சர ஆசிரியப் பொறுப் பேற்ற பிறகுதான் வந்திருக்கிறது.
முதலில் இதுவரை எழுதிய பதிவுகளில் எனக்கு பின்னூட்டமிட்ட நண்பர்களின் பட்டியல் இது . ( இனி பின்னூட்டமிடுபவர்களை அடுத்தப் பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்கிறேன்). முதலில் இவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.
இத்தோடு முடித்துக்கொண்டு எனக்குப் பிடித்த பதிவர்களும் பதிவுகளைக் காணலாம்.
-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
சில நாட்களுக்கு முன் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். "முன்பெல்லாம் வேற்று மொழித் திரைப்படங்களை காப்பியடித்து ஒரு தமிழ்ப் படம் எடுக்கப்பட்டால், அது காப்பி என்று தெரிய பத்து வருடங்கள் கூட ஆகும். இப்போதெல்லாம் படம் ரிலீஸான அடுத்த நாளே இணையத்தில் சொல்லிவிடுகிறார்கள் "
மூடர்கூடம் படத்தை எல்லோரும் ஆஹா.. ஓஹோ.. அற்புதம் என புகழ்ந்து கொண்டிருக்கையில், அடிச்சாரு பாருங்க நம்ம ராஜ் , " மூடர் கூடம் (2013) - கொரியன் படத்தின் தழுவல் !! ".
-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
இணையத்தின் அப்பாடக்கர்ஸ் (ஃபைனல் ஷாட்)
பொதுவாக என் பதிவுகளில் நக்கல் நையாண்டிகள் நிறைய இருக்கும். அதானால் நிறைய இணையப்போராளிகள் பின்னூட்டத்தில் பொங்கோ பொங்கு என்று பொங்கல் கிண்டிவிட்டு போவார்கள். கடைசில பார்த்தால் அதெல்லாம் டம்மி பீசாக இருக்கும். அதை நக்கல் செய்து ஒரு சிறுகதை (மாதிரி) எழுதினேன். நவீனத்துவ போராளி...
இது வலைச்சரம் என்பதால் அரசியல் நையாண்டிகள் இல்லாமல் கொஞ்சம் அடக்கி வாசித்தேன். இருந்தாலும் நம்ம நக்கல் நையாண்டி இல்லாமல் வலைச்சரத்தை நிறைவு செய்வது கொஞ்சம் நெருடலாக இருப்பதால்... சும்மா ஒரு பைனல் 'பன்ச்' . ஏற்கனவே என் வலைப்பூவில் இட்டது. வலைச்சரத்திற்காக சிறு மாற்றங்களுடன்.
சமூக வலைத்தளங்களில் நிறைய அப்பாடக்கர்ஸ் இருக்காங்க.. சொந்த போட்டோ மற்றும் பெயரில் வரமாட்டாங்க.. குறிப்பா சேகுவரா,காஸ்ட்ரோ,பிரபாகரன் போன்ற போராளிகளின் பிறந்த நாளின் போது அவர்களின் படத்தை ப்ரொபைல் படமா வச்சிப்பாங்க ..மற்ற நாட்களில் நயன்தாரா , திவ்யா, பாவனா, நஸ்ரியா, ஹன்சிகா போன்ற மறத்தமிழச்சிகளின் போட்டோ..
நூறு வருடமாகத்தான் நான் இந்தியன் .. ஆயிரம் வருடமாக நான் தமிழன். அதனால் இந்தியன் என்கிற அடையாளம் கேவலம் என்பாங்க.. இதை எங்கிருந்து சொல்றான் என்று பார்த்தால், இந்தியாவில் இடஒதுக்கீட்டு சலுகையில் இஞ்சினியரிங் படித்துவிட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகியிருப்பான். அவுங்க அப்பா சென்ட்ரல் கவர்மண்ட் பென்சன் வாங்கிகிட்டு இருப்பாரு.
தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்று ஸ்டேடஸ் போடுவான். இதுவரை தமிழ்நாட்டை தமிழனே ஆளவில்லை என்பான்.ஆனால், டிசம்பர் 12 அன்று உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்று ஸ்டேடஸ் போடுவான். அதைவிடக்கொடுமை நம்ம சுவரில் வந்து புரட்சி புண்ணாக்குன்னு கமெண்ட் போடுவான் . நாம திருப்பி கேள்வி கேட்டா அந்தப் பக்கமே வர மாட்டான். சரி அவன் சுவரில் போயி ஏதாவது கேள்வி கேட்கலாம்னு ஒரே ஒரு கமெண்ட் போட்டா போதும். உடனே பிளாக்தான். அப்படிப்பட்ட அப்பாடக்கரைப் பற்றிய பதிவுதான் இது. பாவம் இவருக்கு பிளாக் பண்ணவும் தெரியாம..பதில் சொல்லவும் தெரியாம திண்டாடுவதைப் பாருங்கள்.
@ Tweeter..
சமூக வலைத்தளங்களில் நிறைய அப்பாடக்கர்ஸ் இருக்காங்க.. சொந்த போட்டோ மற்றும் பெயரில் வரமாட்டாங்க.. குறிப்பா சேகுவரா,காஸ்ட்ரோ,பிரபாகரன் போன்ற போராளிகளின் பிறந்த நாளின் போது அவர்களின் படத்தை ப்ரொபைல் படமா வச்சிப்பாங்க ..மற்ற நாட்களில் நயன்தாரா , திவ்யா, பாவனா, நஸ்ரியா, ஹன்சிகா போன்ற மறத்தமிழச்சிகளின் போட்டோ..
நூறு வருடமாகத்தான் நான் இந்தியன் .. ஆயிரம் வருடமாக நான் தமிழன். அதனால் இந்தியன் என்கிற அடையாளம் கேவலம் என்பாங்க.. இதை எங்கிருந்து சொல்றான் என்று பார்த்தால், இந்தியாவில் இடஒதுக்கீட்டு சலுகையில் இஞ்சினியரிங் படித்துவிட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகியிருப்பான். அவுங்க அப்பா சென்ட்ரல் கவர்மண்ட் பென்சன் வாங்கிகிட்டு இருப்பாரு.
தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்று ஸ்டேடஸ் போடுவான். இதுவரை தமிழ்நாட்டை தமிழனே ஆளவில்லை என்பான்.ஆனால், டிசம்பர் 12 அன்று உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்று ஸ்டேடஸ் போடுவான். அதைவிடக்கொடுமை நம்ம சுவரில் வந்து புரட்சி புண்ணாக்குன்னு கமெண்ட் போடுவான் . நாம திருப்பி கேள்வி கேட்டா அந்தப் பக்கமே வர மாட்டான். சரி அவன் சுவரில் போயி ஏதாவது கேள்வி கேட்கலாம்னு ஒரே ஒரு கமெண்ட் போட்டா போதும். உடனே பிளாக்தான். அப்படிப்பட்ட அப்பாடக்கரைப் பற்றிய பதிவுதான் இது. பாவம் இவருக்கு பிளாக் பண்ணவும் தெரியாம..பதில் சொல்லவும் தெரியாம திண்டாடுவதைப் பாருங்கள்.
@ Tweeter..
அம்புட்டுதேன்.. சும்மா நகைச்சுவைக்காக பதிந்தது..
என் பணி இனிதே முடிந்தது. இதுதான் என் வலைப்பூ.. மனதில் உறுதி வேண்டும்
உங்கள் ஆதரவிற்கு மீண்டும் ஒருமுறை நெஞ்சார்ந்த நன்றிகள்...!
என்றும் அன்புடன் ..
மணிமாறன்.
என் பணி இனிதே முடிந்தது. இதுதான் என் வலைப்பூ.. மனதில் உறுதி வேண்டும்
உங்கள் ஆதரவிற்கு மீண்டும் ஒருமுறை நெஞ்சார்ந்த நன்றிகள்...!
என்றும் அன்புடன் ..
மணிமாறன்.
--------------------THE END-----------------------
|
|
வணக்கம்
ReplyDeleteமனதில் உறுதி கொண்டு ஒரு வார காலமும் பல வேலைப் பிரச்சினைக்கு மத்தியில் மிகச் சிறப்பாக பல தளங்களை அறிமுகம் செய்துள்ளீர்கள் வலைச்சர ஆசிரியர் பணியில் இருந்து இன்றுடன் விடைபெற்று சென்றாலும் தங்களின் வலைப்பூ வழி சந்திக்கலாம்..... வாழ்க வாளமுடன்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Deleteகருத்துக்கு மிக்க நன்றி . தொடருவோம்...
மிக சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள்.
கருத்துக்கு மிக்க நன்றி
Deleteநல்ல தேடல்!
ReplyDeleteகடும் உழைப்பு!
சிறந்த தொகுப்பு!
உங்களுக்கு என் நல்வாழ்த்து!
த. ம. 3!
-கலையன்பன்.
(பாடல் பற்றிய தேடல்!)
கருத்துக்கு மிக்க நன்றி
Deleteகடினமான பணிக்கு இடையிலும் வலைச்சரப்பகிர்வு வித்தியாசமான தொகுப்பாக இருந்தது! மீண்டும் வலையில் சந்திக்கலாம் பாஸ்.
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி thanimaram nesan
Delete//நூறு வருடமாகத்தான் நான் இந்தியன் .. ஆயிரம் வருடமாக நான் தமிழன். அதனால் இந்தியன் என்கிற அடையாளம் கேவலம் என்பாங்க.. இதை எங்கிருந்து சொல்றான் என்று பார்த்தால், இந்தியாவில் இடஒதுக்கீட்டு சலுகையில் இஞ்சினியரிங் படித்துவிட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகியிருப்பான். அவுங்க அப்பா சென்ட்ரல் கவர்மண்ட் பென்சன் வாங்கிகிட்டு இருப்பாரு.// Super..super..super!
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி பாஸ்...
Deleteவெகுநாட்களுக்குப் பின் வலைசரத்தை நீங்கள் தான் பல மணங்கள் கமழும் வலைசரமாக சரமாக தொடுத்துள்ளீர்கள்..வாழ்த்துக்கள் சார்
ReplyDeleteமிக்க நன்றி சீனு
Delete//இந்தியாவில் இடஒதுக்கீட்டு சலுகையில் இஞ்சினியரிங் படித்துவிட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகியிருப்பான். அவுங்க அப்பா சென்ட்ரல் கவர்மண்ட் பென்சன் வாங்கிகிட்டு இருப்பாரு.// - அதாவது, இந்தியா இட ஒதுக்கீடு என்கிற ஒரு சலுகையைக் (!) கொடுத்துவிட்டதால், கண்ணெதிரே இந்தியா தமிழ் இனத்தையே அழித்த பின்னும் இந்தியன் எனச் சொல்லிக்கொண்டு திரிய வேண்டும், அப்படித்தானே?
ReplyDelete//தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்று ஸ்டேடஸ் போடுவான். இதுவரை தமிழ்நாட்டை தமிழனே ஆளவில்லை என்பான்// - அண்ணா எனும் ஒருவர் தமிழ்நாட்டை ஆண்டிருப்பதை மறந்துவிட்டுத் தமிழ்நாட்டைத் தமிழனே ஆளவில்லை எனச் சொல்வது தவறுதான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இந்த வரியை எப்படி நீங்கள் நகைமுரண் எனச் சொல்கிறீர்கள் எனப் புரியவில்லை. 'தமிழ்நாட்டைத் தமிழன்தான் ஆளவேண்டும்' என்பது எதிர்காலம். 'இதுவரை தமிழ்நாட்டைத் தமிழனே ஆளவில்லை' என்பது கடந்த காலம். கடந்த காலத்தில் இப்படி நடக்கவில்லை என்பதால் இனியாவது அப்படி நடக்க வேண்டும் என்கிறார்கள். இதில் என்ன முரண் இருக்கிறது? இதை முரண் எனச் சொல்வது எப்படி இருக்கிறது என்றால், 'இனியாவது வருகிற வருமானத்தை ஒழுங்காகச் சேமிக்க வேண்டும்! இதுவரை, ஈட்டிய வருமானத்தை ஒழுங்காகச் சேமிக்கவில்லை' என நடுத்தரக் குடும்பத்து மனிதர் ஒருவர் திட்டமிடுவதை முரண்பாடு எனச் சொல்வது போல் இருக்கிறது!
மொத்தத்தில் இந்தப் பதிவு தமிழ்ப் போராளிகளை இழிவுபடுத்துவதாக இருக்கிறது. ஈழப் பிரச்சினைக்காகப் போராடுவதிலும், இந்தியாவைக் குற்றம் சொல்வதிலும், தனி ஈழம், தனித் தமிழ்நாடு எனவெல்லாம் பேசுவதிலும் என்ன தவறு என எனக்குப் புரியவில்லை. ஒரு நாட்டின் அடிப்படைக் கடமை அந்த நாட்டு மக்களைக் காப்பாற்றுவது, மண்ணை/எல்லையைக் காப்பாற்றுவது, அந்த நாட்டு மக்களுக்கான பன்னாட்டுப் பிரதிநிதியாக இருப்பது. தமிழர்களைப் பொறுத்த வரை இந்த மூன்று கடமைகளிலிருந்தும் இந்தியா தவறி விட்டது. அதுவும் திட்டமிட்டே! அதுவும் தொடர்ந்தே. அப்படிப்பட்ட நாட்டிடம் நாம் தனிநாடு கேட்பதில் என்ன பிழை இருக்க முடியும்? சொல்லப்போனால், இன்னும் அந்தளவுக்குக் கூட நாம் போகவில்லை. அண்டை நாட்டில் நடந்த கோடூரத்துக்கு நியாயத்தையும், அவர்களுக்கான தனிநாட்டையும்தான் கேட்கிறோம். அதற்குள் இப்படி!...
வெளிநாடுகளிலெல்லாம் பாருங்கள், தங்கள் நாடு தங்கள் அடிப்படை உரிமையை மறுத்தாலே மக்கள் தனிநாடு கேட்டுப் போராடுகிறார்கள். (எ.டு: திபெத்). ஆனால் இங்கு, இனத்தையே அழித்த வெறுப்பைக் காட்டும் முகமாக நான் இந்த நாட்டுக் குடிமகன்/ள் எனச் சொல்லிக்கொள்ள மாட்டேன் எனச் சொல்லவே உரிமையில்லையாம், அப்படிச் சொல்வது இழிவாம்! தமிழர் என்றால் மட்டும் உங்களுக்கெல்லாம் என்ன அவ்வளவு மட்டமாய்ப் போய்விட்டதா? உலக வரலாறுகளை எடுத்துப் பாருங்கள்! எல்லா நாடுகளிலும் இப்படித்தான். அவையெல்லாம் புரட்சி, போராட்டம். ஆனால், அதே புரட்சி தமிழர்கள் செய்தால் பிண்ணாக்கு, இல்லையா?
'வலைச்சரம்' தமிழ்த் தளம் என நினைத்திருந்தேன். தவறு போலும்!
கருத்துக்கு மிக்க நன்றி... முதலில் இது வலைச்சரத்தின் கருத்தல்ல.. என் சொந்தக் கருத்து. வெளிநாட்டுக்கு செல்வதற்கு இந்தியன் என்கிற அடையாளம் வேண்டும்... இந்தியன் பாஸ்போர்ட் வேண்டும். வெளிநாட்டில் சிட்டிசென் வாங்குவதற்கும் இந்தியன் என்கிற அடையாளம் வேண்டும். சிட்டிசென் வாங்கியபிறகு இந்தியன் என்பது அவமானம், இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும்... இந்தியா தமிழர்களுக்கு எதிரான நாடு .. இப்படி சந்தர்பவாத கூச்சல் போடுபவர்களைத்தான் சாடியிருக்கிறேன்...
Delete//கண்ணெதிரே இந்தியா தமிழ் இனத்தையே அழித்த பின்னும் இந்தியன் எனச் சொல்லிக்கொண்டு திரிய வேண்டும், அப்படித்தானே?//
'தமிழ் இனத்தையே' என்று ஒட்டுமொத்தமாக சொல்வது உங்கள் சொந்த நிலைப்பாடாக இருக்கலாம். அது உங்கள் தனிப்பட்ட நிலைப்பாடு . இதைப்பற்றி விரிவாக என் தளத்தில் விவாதிக்கலாம்.
//'தமிழ்நாட்டைத் தமிழன்தான் ஆளவேண்டும்' என்பது எதிர்காலம். 'இதுவரை தமிழ்நாட்டைத் தமிழனே ஆளவில்லை' என்பது கடந்த காலம்.//
எனக்கு இதுதான் சார் புரிய மாட்டேங்குது. யார் தமிழன்....? தமிழ் நாட்டிலே பிறந்து தமிழ் பேசுகிறவர்தான் தமிழன் என்றால் வெளிநாட்டில் உள்ளவர்களெல்லாம் தமிழர்கள் கிடையாது போல ஆகிவிடும்...! அப்படியானால் தமிழ் பேசுகிறவர்களெல்லாம் தமிழர்கள் என்றால் நம்மை ஆண்டவர்கள் எல்லோருக்குமே தமிழ் நன்றாகத் தெரியுமே..! சரி.. தலைமுறை தலைமுறையாக தமிழ்நாட்டில் இருந்தவர்கள் என்றால் கலைஞரும் தமிழர் தானே .. ? இதை எதற்காக கேட்கிறேன் என்றால், வைகோவையும் , கலைஞரையும் , விஜயகாந்தையையும், பெரியாரையும் ,அண்ணாவையும் தமிழர்கள் இல்லை என்று நீங்கள் பிரித்துப்பார்ப்பது வெறும் சாதியின் அடிப்படையில்தானே...? சாதிய ரீதியாக ஒருவரை தமிழர் இல்லையென்று சொல்வது எப்படி சார் நியாயமாகும். தலித் சாதி கூட இந்தியா முழுமைக்கும் உள்ளது... அவர்கள் தமிழர்கள் இல்லையா...?
இங்கு என் ஆசிரியப் பணி முடிந்துவிட்டது. என்னால் இனி லாக் இன் செய்ய முடியாது... மேலும் விவாதிக்க வேண்டுமென்றால் என் தளம் வரலாம் பிரதர்...
//'வலைச்சரம்' தமிழ்த் தளம் என நினைத்திருந்தேன். தவறு போலும்!//
Deleteஇது என்ன சிந்தனை ..? வலைச்சரம் என்பது ஒரு ஊடகம் போல. அதில் எனக்கு எழுத வாய்ப்பளித்திருக்கிறார்கள். என் கருத்தை சொன்னேன். நாளை உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் உங்கள் கருத்தை சொல்லுங்கள். தமிழ் இந்துவில் தமிழ் எழுத்துருவுக்கு எதிராக ஜெயமோகன் எழுதியால் அப்பத்திரிக்கை தமிழர்களுக்கு எதிரான பத்திரிகை என்று சொல்வீர்களா..
தவிரவும் இது தமிழுக்கோ தமிழர்களுக்கோ எதிரான பதிவு கிடையாது என்பதைப் புரிந்துகொள்ளவும். ஒரு சில சந்தர்பவாத மனிதர்களைத்தான் குத்திக் காட்டியிருக்கிறேன்.
உங்கள் கருத்துக்கள் வினோதம்!
Deleteஒரு நாட்டில் வாழ்ந்தால் அந்த நாட்டுக் குடியுரிமை, கடவுச் சீட்டு போன்றவற்றைத்தான் பயன்படுத்த முடியும். இது தவிர்க்க இயலாதது. அதற்காக அந்த நாடு என்ன செய்தாலும் சகித்துக் கொண்டு போக வேண்டுமா? அப்படியானால், உலகில் எங்கெல்லாம் தனிநாட்டுப் போராட்டங்கள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் அந்த மக்கள் அந்த நாட்டுக் கடவுச்சீட்டையோ, குடியுரிமை அட்டை முதலானவற்றையோ பயன்படுத்தவில்லையா? அட இதே இந்தியாவில், விடுதலைக்கு முன் எந்த நாட்டுக் குடியுரிமையை, கடவுச்சீட்டைப் பயன்படுத்தினார்கள்? ஆங்கில அரசின் முத்திரை குத்தப்பட்டவற்றைத்தானே? அப்படியானால், ஆங்கில அரசுக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குப் போய், இங்கிலாந்துக்கு எதிராக நேதாஜி ஆதரவு திரட்டியது தவறு என்பீர்களா?
//'தமிழ் இனத்தையே' என்று ஒட்டுமொத்தமாக சொல்வது உங்கள் சொந்த நிலைப்பாடாக இருக்கலாம். அது உங்கள் தனிப்பட்ட நிலைப்பாடு . இதைப்பற்றி விரிவாக என் தளத்தில் விவாதிக்கலாம்// - அப்படியானால், மொத்த இனமும் அழிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறீர்களா? 1948இல் இயற்றப்பட்டுள்ள ஐ.நா சட்டப்படி ஓர் இனத்தைப் பகுதியாகவோ முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது, அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை இனப்படுகொலைக் குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. (பார்க்க: http://ta.wikipedia.org/wiki/இனப்படுகொலை). இவை அனைத்தும் ஈழத் தமிழினப் படுகொலையில் நடைபெற்றதும் இந்தியா அவற்றுக்கு உதவியதும், அதற்கு இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளன் கோத்தபயா நன்றி அறிவித்ததும் நம் அனைவரின் கண் முன்தான் நடைபெற்றன. ஆக, இதில் விவாதிக்க ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
//யார் தமிழன்? தமிழ் நாட்டிலே பிறந்து தமிழ் பேசுகிறவர்தான் தமிழன் என்றால் வெளிநாட்டில் உள்ளவர்களெல்லாம் தமிழர்கள் கிடையாது போல ஆகிவிடும்...! தமிழ் பேசுகிறவர்களெல்லாம் தமிழர்கள் என்றால் நம்மை ஆண்டவர்கள் எல்லோருக்குமே தமிழ் நன்றாகத் தெரியுமே..! சரி.. தலைமுறை தலைமுறையாக தமிழ்நாட்டில் இருந்தவர்கள் என்றால் கலைஞரும் தமிழர் தானே .. ? இதை எதற்காக கேட்கிறேன் என்றால், வைகோவையும், கலைஞரையும் , விஜயகாந்தையையும், பெரியாரையும் ,அண்ணாவையும் தமிழர்கள் இல்லை என்று நீங்கள் பிரித்துப்பார்ப்பது வெறும் சாதியின் அடிப்படையில்தானே...? சாதிய ரீதியாக ஒருவரை தமிழர் இல்லையென்று சொல்வது எப்படி சார் நியாயமாகும். தலித் சாதி கூட இந்தியா முழுமைக்கும் உள்ளது... அவர்கள் தமிழர்கள் இல்லையா?// - யார் சொன்னது? தமிழர் என்பது ஓர் இனம். தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழர்கள். இப்படித்தான் தமிழ்த் தலைவர்களும் கூறியுள்ளார்கள்; பன்னாட்டுக் கலைக்களஞ்சியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Tamil_people). ஒரு மொழியில் எழுதும்பொழுது, அந்த மொழி பற்றி, சமூகம் பற்றி, வரலாறு பற்றி அடிப்படையை கூடத் தெரிந்து கொள்ளாமல் நீங்களாகவே என்னென்னவோ நினைத்துக் கொண்டால் அதற்கு யார் பொறுப்பு?
விஜயகாந்த்தைத் தமிழர் இல்லை என்பதற்குக் காரணம் அதுதான். அவருடைய தாய்மொழி தமிழ் இல்லை. அவர் வீட்டில் கூட இன்னும் தெலுங்குதான் பேசுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. மற்றபடி, வை.கோ, பெரியார், அண்ணா ஆகியோரைத் தமிழர்கள் இல்லை என யார் சொன்னது? சாதி என்றால் என்ன, இனம் என்றால் என்ன என்பது கூடத் தெரியாத அரைவேக்காடுகள் சில, அப்படிப் புதிதாக இணையவெளியில் உளறித் திரிகின்றன. ஆனால், அந்தச் சிலரின் கருத்தை வைத்து மொத்த இனத்தை விமர்சிக்க முடியாது.
கருணாநிதியையும் சிலர் அப்படிக் கூறுகிறார்கள். காரணம் அவர் செய்த தமிழினத் துரோகத்தினால் எழுந்த வெறுப்பு. அதை ஒரு கருத்தாக ஏற்க முடியாது. கருணாநிதியின் மூதாதையர்கள் மகாராட்டிரத்திலிருந்து வந்தவர்களாயிருந்தாலும் தமிழையே தாய்மொழியாகச் சிறு வயதிலிருந்து ஏற்றுக்கொண்டு, அந்த மொழியிலேயே பயின்று, தமிழுக்காகப் பல சேவைகளும் செய்த கருணாநிதி தமிழர்தான். ஆனால், தமிழினத் துரோகி. எனவே, சாதியின் அடிப்படையில் நான் இவர்களையெல்லாம் தமிழர்கள் இல்லையெனச் சொல்வதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்! சாதி தமிழர் பண்பாடே இல்லை; அதை விட்டொழிக்க வேண்டுமெனப் பதிவு வெளியிட்டவன் நான். உங்கள் குற்றச்சாட்டு எனக்குப் பொருந்தாது.
//தமிழ் இந்துவில் தமிழ் எழுத்துருவுக்கு எதிராக ஜெயமோகன் எழுதியால் அப்பத்திரிக்கை தமிழர்களுக்கு எதிரான பத்திரிகை என்று சொல்வீர்களா// - ஜெயமோகன் அப்படி எழுதியது ஓர் ஆராய்ச்சி மனப்பான்மையில்தான். ஆகவே, அது கண்டிக்கப்பட வேண்டிய, முளையிலேயே கிள்ள எறியப்பட வேண்டிய கருத்துதானே தவிர, அதைத் தவறு எனச் சொல்ல முடியாது. ஆனால், 'தமிழ் இந்து' தமிழர்களுக்கு எதிரான இதழ்தான். காரணம், ஆங்கில இந்துவின் சிங்கள ஆதரவுப் போக்கு.
Delete//இது என்ன சிந்தனை ..? வலைச்சரம் என்பது ஒரு ஊடகம் போல. அதில் எனக்கு எழுத வாய்ப்பளித்திருக்கிறார்கள். என் கருத்தை சொன்னேன். நாளை உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் உங்கள் கருத்தை சொல்லுங்கள்// - அப்படியில்லை; ஊடக அறம் (Media Ethics) என ஒன்று இருக்கிறது. யார் என்ன எழுதினாலும் அப்படியே வெளியிடுவதற்குப் பெயர்தான் நடுநிலைமை என ஊடகத்தினர் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தவறு! ஒருவர் எழுதுவது நியாயமானதாகவும் சான்றுடன் கூடியதாகவும் இருந்தால், அது அந்த நிறுவனத்தின் நிலைப்பாட்டுக்கு எதிரானதாக இருந்தாலும் அப்படியே மாற்றாமல் வெளியிடுவதற்குப் பெயர்தான் நடுநிலைமை. மாறாக, நீங்கள் இன்று சமூக வலைத்தளங்களில் தமிழர் போராட்டங்களுக்கு ஆதரவாகக் கருத்திடுபவர்கள் அனைவரையுமே பொத்தாம் பொதுவாக நக்கலடிக்கிற, இழிவுபடுத்துகிற வகையில் எழுதுவதையும் வெளியிட்டு, நாளை நான் ஈழப் பிரச்சினைக்கு ஆதரவாக எழுதுவதையும் வெளியிட்டால் அதை, ஊடகம் என்றால் அப்படித்தான். அதுதான் நடுநிலை என்கிற வகையில் நான் எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?
Deleteபற்பல தளங்களை தொடர முக்கிய காரணமே வலைச்சரம் தான்... புதிதாக வலைத்தளம் தொடர்பவர்களுக்கு கைபேசியில் அல்லது மெயிலில் பரிந்துரை செய்வது வலைச்சரம் தான்... (வலைச்சரம் செல்லுங்கள்... 100 தளம் தானே கேட்டீர்கள்... அங்கே ஆயிரக்கணக்கான தள அறிமுகங்கள் கிடைக்கும் என்று...!)
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள அனைத்தையும் தொடரும் அருமையான தளங்கள்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ராஜ் அவர்களின் தேடலை நினைத்து வியந்ததுண்டு... சேட்டைக்காரன் அவர்களின் நகைச்சுவையான பதிவுகளை (சேட்டைகளை) சொல்ல வார்த்தை இல்லை...
உங்கள் பாணியில் ஃபைனல் ஷாட் செம...! (படமாக தொகுப்பதற்கு எவ்வளவு சிரமம் என்பது புரியும்)
பல சிரமங்கள் இருந்தாலும், அதைப் பற்றி அதிகம் சொல்லாமல், ஆசிரியர் பணியை நன்றாக முடித்தீர்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
நன்றி...
மிக்க நன்றி DD..
Deleteஅண்ணே, செம... ஒரு வாரம் முழுவதும் உங்க ஸ்டைல்ல அருமையா கொண்டுபோனீங்க...
ReplyDeleteமிக்க நன்றி ஸ்கூல் பையன்...
Deleteஅன்பின் மணிமாறன்..
ReplyDeleteஇந்த வாரம் முழுதும் நல்ல பல விஷயங்களை அழகாக - தனித்துவமாக தொகுத்து வழங்கியமைக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்..
நான் என்னளவில் சிறிதாக இயன்றதைச் செய்தேன். அதையும் முன்வைத்து - மனம் திறந்து பாராட்டி மகிழ்ந்த பண்பு - தங்களை இன்னும் மேலும் உயர்த்தும்.
திரு. தனபாலன் அவர்கள் சொல்லிய மாதிரி - பல சிரமங்கள் இருந்தாலும், ஆசிரிய பணியை நன்றாக முடித்தீர்கள்...
மீண்டும் சந்திப்போம். அன்பின் நல்வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சார்..
Deleteஒரு வார வலைச்சர ஆசிரியப் பணியில் பற்பல தளங்களைப் பற்றியும் வித்தியாசமான தலைப்புக்களில் பயனுள்ள பதிவுகளை மிகச் சிரமத்தூடே கண்டெடுத்து, தொகுத்து, அதை நேர்த்தியாய், சுவையாய் தந்தீர்கள். நன்றாய் இரசித்தோம். பாராட்டுக்கள் நண்பரே!
ReplyDeleteதங்களது, எனது தளங்களில் சந்திப்போம்!
பின்னூட்டம் தந்தவர்களின் பெயர்களையும் விட்டு விடாமல் நன்றியுடன் தொகுத்தளித்ததும் பாராட்டுக்குரியதொன்றாகும்.
ReplyDeleteஇந்த வார தொகுப்பில் நகைச்சுவைப் பதிவர்கள் பதிவில் எனது பதிவொன்றையும் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நண்பரே!
மிக்க நன்றி சார்..
Deleteஎன் தளத்தை அறிமுகப்படுத்திய தங்களுக்கு மிக்க நன்றி சகோதரா. என்ன ஒரு கிண்டலும் கேலியுமான நடை உங்களுக்கு வாய்த்திருக்கிறது! மிகவும் அருமை. (வடிவேலு சுந்தர்சி-படக்கதைக்கான உள்ளடக்கம்). அதே நேரம் மாற்றுக்கருத்துக் கண்டு அசராமல் வரிந்துகட்டிக்கொண்டு வந்த இடம்(சீரியஸ்னெஸ்) அதுவும் சரியான வெளிப்பாடாகவே வந்துள்ளது. “சாப்பாடு நல்லாருந்துச்சு”ன்னு சொல்றத விட “இன்னும் கொஞ்சம்”னு கேட்கிறமாதிரி, உங்க எழுத்து நடை என்னை இழுத்து உங்கள் வலையைத் தொடர்வோர் பட்டியலில் இணைத்துவிட்டது. வேறென்ன சொல்ல? நன்றியும் வணக்கமும் உங்களுக்கும் வலைச்சர நிர்வாகிகளுக்கும்.
ReplyDeleteஉங்களைப்போன்ற பெரியவர்களிடமிருந்து பாராட்டு கிடைப்பது அடியேனின் பாக்கியம். தங்கள் கருத்தும் இணைத்துக் கொண்டதற்கும் மிக்க நன்றி சார்..
Deleteஎனது தளத்தினையும் இங்கே அறிமுகம் செய்தமைக்கு நன்றி மணிமாறன். தொடர்ந்து சந்திப்போம்.
ReplyDeleteஎனக்குத் தெரியாத சில புதிய அறிமுகங்களை தொடர்கிறேன் நன்றி
ReplyDelete