அன்பின் பூ - மூன்றாம் நாள்
➦➠ by:
மஞ்சு பாஷினி
அன்பு வணக்கங்கள் எல்லோருக்கும்..
” உன் கூட படிக்கிற மாறன் நல்லா தானே படிக்கிறான் வகுப்புல முதல் மார்க் வாங்கறான். அவன் நல்லா படிக்கும்போது உனக்கு மட்டும் படிக்காம புத்தி எங்க போகுது? படிப்புல மட்டும் பாரு கல்லுளி மங்கன் மாதிரியே. எப்பப்பார்த்தாலும் டிவி டிவி டிவி” இது மாதிரி நிறைய வீட்டில் குழந்தைகள் அம்மா அப்பா கிட்ட டோஸ் வாங்குவதை நாம் பார்த்திருக்கிறோம். குழந்தைகளை டிவி பார்க்காதே என்று சொல்லும் நாம் தொலைக்காட்சியில் வரும் தொடர் ஒன்று கூட விடாமல் பார்க்கிறோம். நம் பக்கத்தில் படிக்க உட்காரும் குழந்தைகளின் கவனம் நாம் பார்க்கும் தொடரிலேயே இருக்கும்.
அப்புறம் எப்படி குழந்தைகள் மட்டும் க்ளாஸ் ஃபர்ஸ்ட் வரனும்னு நாம் எதிர்ப்பார்க்க முடியும்? அதேப்போல் எல்லாக்குழந்தைகளின் பெற்றோரும் ஆசைப்படும் ஒரே விஷயம் நம்மக்குழந்தை க்ளாஸ் ஃபர்ஸ்ட் வரும்னு. இப்படி பிள்ளையை கட்டாயப்படுத்தி படிக்கவைப்பதை விட பிள்ளைகள் அவர்களே படிப்பை விரும்பி படிக்கும்படியாக நாம் அவர்களுக்கு வழிக்காட்டிவிட்டாலே போதும். மாலை நேரம் விளையாட என்று ஒரு மணி நேரம் விட்டால் குழந்தைகள் நன்றாக ஓடி ஆடி விளையாடும். உடலுக்கும் வலு சேர்க்கும். புத்திக்கூர்மையும் அதிகமாகும். நினைவுத்திறனும் கூடும்.
அதிகாலை ஐந்து மணிக்கு எழுப்பி உட்காரவைத்து சத்தமாக படிக்கச்சொன்னால் உச்சரிப்பு நன்றாக வரும். தூக்கம் கண்ணு சொக்குமே புள்ளைக்கு அப்டின்னு நீங்க சொல்றது புரியுது. அதுக்கென்ன செய்யலாம்? இரவு 9 மணிக்கே பிள்ளைகளை படுக்க வைக்கவேண்டும். முயன்றால் முடியாதது என்று எதுவும் இல்லை தானே? வயதில் பெரியவர்களைக்கண்டால் உடனே அவர்கள் கால் தொட்டு நமஸ்காரம் செய்யச்சொல்லி என் பிள்ளைகளை பழக்கினேன் சிறுவயதில் இப்போதோ யார் வந்தாலும் இல்லையென்றால் நாங்க யார் வீட்டுக்கு சென்றாலும் என் பிள்ளைகள் தவறாமல் செய்கிறதுகள். பிள்ளைகளை அன்பும் பண்பும் நிறைந்தவர்களாக உருவாக்க நாம் தான் பாடுபடவேண்டும்.
என் மனம் கவர் பதிவர்கள் பதிவுகள் சிலவற்றை இன்று பார்ப்போமா?
முதன் முதல் வலைப்பூவில் கருத்து எழுதத் தொடங்கியதே ரமணி சார் வலைப்பூவில் தான். எளிய வரிகளில் ஆழ்ந்த கருத்துடன் பதியும் கவிதைகளின் சொந்தக்காரர்.
எழுத்துகளில் அனுபவம் ஒளிரும். இவர் எழுத்துகளில் பலமுறை நான் அமிழ்ந்து மீண்டதுண்டு. அட இந்தப்பிள்ளை எழுதுற பதிவெல்லாம் அற்புதமா இருக்குப்பா. ஆமாம் அற்புதமான பதிவுகளின் சொந்தக்காரர். எளிமையின் மறு உருவம். புன்னகைப்பூ பூத்துக்கொண்டே இருக்கும் இவர் முகத்தில். இவரின் ஜ்வல்யா பதிவுகள் செம்ம க்யூட்..
என்னை பிரமிக்கவைத்த எழுத்துகளுக்கு சொந்தக்காரர் இவர். ஒன்றும் தெரியாதுன்னு சொல்வார். நம்பிடவே கூடாது. அசத்தலா எழுதி வாசிப்போரை வியக்கவைக்கும் வித்தகர்.
தனக்கு மிகவும் பிடிச்சதெல்லாம் தேடி தேடி அழகாய் பொக்கிஷம் போல் சேமித்து வைப்பார். வயசென்னன்னு மட்டும் கேட்ராதீங்க? சரி ரகசியமா வெச்சுக்கோங்க. இவர் வயசு 10 தான். ஆமாம் இவரோட போன்ல பேசும்போது உற்சாகமா பேசிக்கொண்டே இருப்பார். நிறைய விஷயங்களை பகிர்வார். அத்தனையும் ரசனையான பதிவுகளாக இருக்கும்.
6. GMB WRITES
சளைக்காமல் அருமையான நாடகங்களை பதிவுகளை பகிர்வாய் தந்தவர். என்றோ எழுதிய எழுத்துகளை இன்றுவரை நினைவுக்கூர்ந்து பதிவுகளால் வியக்கவைத்தவர்.
உலக விஷயங்களை நம்மிடம் சுவையாக ரசிக்கும்படி பகிர்வார். அதில் பிரத்யேகமாக ஃப்ரூட் சாலட் எனக்கு மிகவும் பிடித்த பகிர்வு. செல்லுமிடத்தில் எல்லாம் பயணத்தை படங்களுடன் இணைத்து எழுதுவார். நாமும் உடன் பயணிப்பது போன்றதொரு உணர்வு இருக்கும் இவர் பதிவுகள் படிக்கும்போது. அசத்தலான புகைப்படங்கள் எடுப்பதில் வல்லவர். இன்னும் நேரில் சந்திக்கவில்லை.
தித்திக்கும் தமிழில் இனிமையான கவிதைகள், சமூக சிந்தனை கவிதைகள் என்று அசத்தும் அப்பாவின் வலைப்பூ.. உடல்நலம் சரி இல்லை என்றாலும் பதிவுகள் பதிவதில் என்றும் தொய்வு இருந்ததே இல்லை.
10. எங்கள் பிளாக்
உலக நடப்புகளை அவர்களுக்கே உரிய ரசனை எழுத்தில் பகிர்வார்கள். எனக்கு இதில் மிகவும் பிடித்த பகுதி பாசிட்டிவ் செய்திகள்.
அரிய விஷயங்களை அறியத்தரும் எழுத்துகளின் வலைப்பூவுக்கு சொந்தக்காரர் இவர். கணித மேதை இராமானுஜம் தொடர் பதிவு இவருடையது படிக்கும்போது நேரில் நிகழ்வுகள் எல்லாமே பார்த்த உணர்வு.
இனிய தமிழ் மணக்கும் பதிவுகள் நிறைந்த வலைப்பூவுக்கு சொந்தக்காரர்.
கேட்டால் உதவி செய்வோரை நல்லவர் என்கிறோம். கேட்காமல் உதவிடும் நல்ல உள்ளத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்? தனபாலன் என்று வைப்போமா? மென்மையான குரலுக்கும் எல்லோருக்கும் பயன் தரும் பதிவுகளையும் பகிர்வதோடு மட்டும் நின்றுவிடாமல் வலைச்சரத்தில் யார் ஆசிரியராக பொறுப்பேற்று அறிமுகப்படுத்தினாலும் அறிமுகப்படுத்திய அத்தனை பதிவர்களின் தளத்திற்கு சென்று “ தங்கள் தளம் வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று சொல்லி லிங்கும் தருவார் “ மேன்மையான உதவி இது. எதையும் எதிர்ப்பாராமல் செய்யும் சேவை இது. நிறைவான அன்பு நன்றிகள் தனபாலன் உங்கள் சேவை என்றும் தொடர்ந்துக்கொண்டே இருக்கட்டும்பா..
14. மதுமதி.காம்
குட்டி குட்டியான எளிய கவிதைகள் மூலம் அருமையான மெசெஜ் சொல்வார். டி என் பி எஸ் சி வகுப்புத்தேர்வுக்கான பயனுள்ள பதிவுகளை தந்தவர். அருமையான பதிவு எங்கிருந்தாலும் அதைத் தேடி எடுத்து பகிர்வார். உதவும் மனப்பான்மைக்கொண்டு நல்ல மனம் கொண்டவர். குட்டித் தேவதையின் சாம்ராஜ்ஜியத்தில் இவரும் ஒரு அங்கம். இவரின் பதிவுகளில் எனக்கு பிடித்த பதிவு நான் கொடுத்திருக்கும் லிங்க்.
15. வசந்த மண்டபம்
கவிதையிலேயே அழகு தோரணம் கட்டும் கலைஞன் தம்பி மகேந்திரன். வசந்த மண்டபம் உள் நுழைந்தால் கருத்துகள் சொல்லும் பல கவிதைகள் அங்கு காணலாம்.
16. கே.பி.ஜனா
முகநூலில் இவருடைய ரெண்டு வரில உலக விஷயங்கள் அடக்கும் வித்தையை ரசிப்பேன் நான். அவர் தானா இவர்னு போய் பார்த்தேன் இவர் தளத்தை. என்னை ஏமாற்றவில்லை.
17. காஸ்யபன்
எழுத்துகள் இவர் பதிவில் வீறுநடை போடுவதை நான் பார்த்திருக்கிறேன். யாருக்காகவும் எதற்காகவும் தன் எழுத்துகளை காம்ப்ரமைஸ் பண்ணிக்காத மனம் விரும்பிய வலைப்பூவுக்கு சொந்தக்காரர்.
18. சேட்டைக்காரன்
இவர் என்னை விட வயசுல மூத்தவராய் போயிட்டார். இல்லன்னா நான் இவரை சொல்ற வார்த்தை என்னவா இருக்கும் தெரியுமா? சேட்டக்காரப்பைய. இவர் அருகே அமர்ந்து இவர் பேசினதை இப்பவும் நினைச்சுப்பார்த்தால் அத்தனை எனர்ஜடிக்கா பேசுற மனுஷர். இடைவிடாம சிரிக்க வெச்சுட்டே இருப்பார் இவர் பக்கத்தில் போய் உட்கார்ந்தால். நானும் அப்டித்தான். அதே சமயம் இவரிடம் தயிர் சாதம் கொடுத்து சாப்பிடுங்கன்னு சொன்னால் அதையே ரசனையான பதிவாக்கி போட்ருவார் அசகாய சூரர். இவர் வலைப்பூவுக்கு சென்றால் வெளிவரவே மனசு வராது. எப்பப்பா மீண்டும் சந்திப்போம் நாம்? அப்பவும் தயிர்சாதம் தான்.. டீலா??
19. மின்னல் வரிகள்
க்ளாஸ்ல உட்காரவெச்சு பாடம் சொல்லிக்கொடுத்தா சமர்த்தா உட்கார்ந்துண்டு படிக்கிற மாதிரியே இருக்கும் நேர்ல பார்த்தா. பதிவு எழுதும்போது பார்க்கணுமே உலக ஞானம் அத்தனை அருமையா வரிகளில் தென்படும். கணேஷா என்று அன்புடன் நான் அழைக்கும் என் அன்புச்சகோதரன்.
க்ளாஸ்ல உட்காரவெச்சு பாடம் சொல்லிக்கொடுத்தா சமர்த்தா உட்கார்ந்துண்டு படிக்கிற மாதிரியே இருக்கும் நேர்ல பார்த்தா. பதிவு எழுதும்போது பார்க்கணுமே உலக ஞானம் அத்தனை அருமையா வரிகளில் தென்படும். கணேஷா என்று அன்புடன் நான் அழைக்கும் என் அன்புச்சகோதரன்.
20. தக்குடு
குறும்பும் நையாண்டி நக்கலுமாக இவர் பதிவுகள் மனம் ரசிக்க வைக்கும் கண்டிப்பாக
21. நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை
குழந்தையின் மழலைமொழியில் நம்மை பெயர் சொல்லி அழைப்பதில் இருக்கும் சுகத்தை என்ன ஒரு அழகா சொல்லி இருக்கார் பாருங்க தோழர் இரா எட்வின்
குழந்தையின் மழலைமொழியில் நம்மை பெயர் சொல்லி அழைப்பதில் இருக்கும் சுகத்தை என்ன ஒரு அழகா சொல்லி இருக்கார் பாருங்க தோழர் இரா எட்வின்
நிதான வாசிப்பு ஒரு கலை என்று சொல்கிறார் ஐயா டாக்டர் ஜம்புலிங்கம் அவர்கள். படிச்சு பாருங்களேன்.
23. தளிர் சுரேஷ்
பூதத்திடம் புடிச்சுக்கொடுத்துருவேன்னு ஒரு பதிவு எழுதி இருக்கும் இவரை கண்டிப்பா நீங்க யாருமே மறந்திருக்கமாட்டீங்க. நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்திய தளிர் சுரேஷ் தான்பா இவர்.
24. கேபிள் சங்கர்
இவர் பதிவில் நான் எடுத்ததுமே முதலில் பார்ப்பது சாப்பாட்டுக்கடை. ஊருக்கு போகும்போது இவர் சொன்ன இடங்களில் போய் சாப்பிடவேண்டும் என்று நினைப்பதுண்டு. அதே போல் இவருடைய பதிவில் நான் ரசித்து வாசிப்பது விமர்சனம்.
25. studentsdrawings
பிள்ளைகளின் திறமையை வெளிக்கொணர்ந்து அதைப்பாராட்டி ஊக்கப்படுத்தும் தளம் இது. திண்டுக்கல் தனபாலன் சார் சொல்லித்தான் இந்த தளம் எனக்கு தெரிய வந்தது.
26. தி.தமிழ் இளங்கோ
வை.கோ அண்ணா பதிவுகள் மூலம் தான் இவர் வலைப்பூவுக்கு முதன் முதல் வருகைத் தந்தேன். மிக அருமையான விஷயங்களை எளிமையாக எடுத்துச்சொல்வதில் வல்லவர்.
27. அவர்கள் உண்மைகள்
நையாண்டிக்குன்றாமல் பதிவுகளில் கருத்து சொல்லி நகைச்சுவையோடு எழுதும் எழுத்துக்கு சொந்தக்காரர் மதுரைத்தமிழன். தன் எழுத்துகளை யாருக்காகவும் எதற்காகவும் காம்ப்ரமைஸ் செய்துக்கொள்ளாதவர். வாழை இலைப்பற்றிய ஒரு பதிவு நான் இவர் வலைப்பூவில் படித்து இவர் எழுத்துகள் விருப்பமானது எனக்கு.
மீண்டும் நாளை சந்திக்கும்வரை அனைவருக்கும் அன்பு நன்றிகள்.
|
|
மிகவும் நன்றி.
ReplyDeleteபட்டியலில் இரண்டு அறி(யா)முகங்கள்.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா அப்பாதுரை
Deleteமுதலில் நன்றிகள் பல...
ReplyDeleteநேற்று முதல் இணைப்புகளை சொடுக்கினால் இங்கு வரும்படி (+ இன்று முதல் ஆசிரியர் வலைத்தளமும்) செய்து விட்டேன்...
இன்றைய எனது மனம் கவரும் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ஆஹா அற்புதம்பா... மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.
Deleteநன்றி ! 1960 களிலிருந்து எழுதி வருகிறேன் ! 'காஸ்யபன்" என்ற பெயரில் ! காஷ்யபன்,காசியபன்,காச்யபன், என்ற பெயரில் பலர் எழுதி வருகிறார்கள் ! மிகவும் மூத்தவன் அடியேன் என்று நினைக்கிறேன்! வாழ்த்துக்கள்---காஸ்யபன்.
ReplyDeleteஆமாம் சார். நீங்க சீனியர் மோஸ்ட். உங்க பெயரை திருத்திவிட்டேன். ஆங்கிலத்தில் இருந்ததைப்போன்றே எழுதியதால் இந்த தவறு ஏற்பட்டுவிட்டது. தவறுக்கு மன்னிக்க வேண்டுகிறேன். சார். மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.
Deleteஆம். பெற்றோர்கள் தான் குழந்தைகளின் முதல் ரோல்மாடல்.
ReplyDeleteஇன்றைய பதிவில், பலர் எனக்கு அறிமுகமானவர்கள். அறிமுகமில்லாத சிலரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.
நேற்று என் ஆபிசில் ஒரு க்ளையண்ட் வந்தபோது பேச்சுவாக்கில் இந்த வரி சொன்னேன். அதையே வைத்து இன்று எழுதிவிட்டேன். மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சொக்கன் சுப்பிரமணியன்.
Deleteஅருமையான முன்னுரையும் அறிமுகங்களும்! அனைவருக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா.
Deleteஅனைவருமே நான் விரும்பித் தொடரும்
ReplyDeleteஅருமையான பதிவர்கள்
அவர்களுடன் என்னையும் இணைத்து
அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரமணி சார்.
Deleteமிகப் பெரிய பிரபலங்களுடன் இந்த சிறியவனையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
ReplyDeleteஆமாம் தம்பி... நீங்க சிறியவர் தான் வயதில் என்னை விட :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..
Deleteஊரைச் சுற்றிக் கொண்டிருந்த என்னை இங்கு அடித்து இழுத்து வந்தவர் திண்டுக்கல் தனபாலன் அவரால்தான் நான் இங்கு அடிக்கடி படிக்க வருகிறேன்
ReplyDeleteஅச்சச்சோ தனபால் சார் அடிக்கவே மாட்டாரேப்பா :) மெயில் பாருங்க சகோ.
Deleteஎங்கள் ப்ளாக் வலைப்பதிவு பற்றிக் குறிப்பிட்டதற்கு, மிக்க நன்றி, மஞ்சுபாஷிணி!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் கௌதம் சார்.
Deleteஅருமையான வலை உலக ஜாம்பவான்களின்
ReplyDeleteஅறிமுகம் இன்றைக்கு..
அனைவருக்கும் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்...!
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா இராஜராஜேஸ்வரி.
Deleteசூப்பர் செலக்ஷன்ஸ் !
ReplyDeleteநன்றீஸ் மஞ்சு.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..
Deleteஎழுத்துலகுக்கு ஒரு மிகப்பெரிய கட்டடமாக என்னை எழுப்ப அஸ்திவாரமாக, ஏணியாக, தோணியாக, கோணியாக, நண்பராக, நலம் விரும்பியாக, வழிகாட்டியாக, முன்னோடியாக இருந்து செயல்பட்டு.....
ReplyDeleteஎன்னை யார் என்று எனக்கே அடையாளம் காட்டியதுடன், குடத்தில் இட்ட விளக்காக இருந்து வந்த என்னை குன்றின் மேல் ஏற்றி அனைவருக்கும் அறியச்செய்து உதவிய என் மானஸீக எழுத்துலக குருநாதர் .....
http://gopu1949.blogspot.in/2011/12/3-of-3.html
திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்களுக்கும் .......
இன்றைய வலையுல/எழுத்துலகப்புகழ் HAT TRICK HERO
http://gopu1949.blogspot.com/2014/02/vgk-03-01-03-first-prize-winners.html ........
திரு. S.V. ரமணி அவர்களுக்கும் ........
இடையே, அடியேனின் பெயரையும் சுட்டிக்காட்டியுள்ளது, மிகவும் மகிழ்வளிக்கிறது மஞ்சு.
இன்று தங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைவருக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
>>>>>
மிக்க மகிழ்ச்சி அண்ணா...
Delete2. வை.கோபாலக்ருஷ்ணன்
ReplyDelete//சுறுசுறுப்பும் நகைச்சுவையும் சோம்பலின்மையும் நேரம் தவறாமையும் இவர் இடும் ஒவ்வொரு பதிவில் இருந்தும் கற்றுக்கொள்ளலாம்.//
ஆஹா, என் செயல்களை, என்னைவிட நீங்க மிகவும் கூர்ந்து கவனித்துள்ளீகள், மஞ்சு.
அது தான் மஞ்சு என்ற பஞ்சு மிட்டாயின் தனித்தன்மை. ;)
>>>>>
நான் சொன்னது சரி தானே அண்ணா?
Delete
ReplyDelete//தொடர்ச்சியாக 5 பதிவுகள் இட்டுவிட்டால் சோம்பலோ அயற்சியோ ஏற்பட்டு ஒருப்பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு வேறு வேலை கவனிக்க போய்விடுவேன்.//
அருமையான எழுத்தாளர், அன்பின் + பண்பின் மறு உருவம், இனிய குடும்பத்தலைவி, நல்லதொரு பொறுப்பான உத்யோகம் பார்ப்பவர், சுருக்கமாகப்பின்னூட்டம் இடத்தெரியாதவர் என்னும் போது எதைத்தான் மஞ்சுவால் கவனிக்க முடியும்?
>>>>>
உண்மை தான் அண்ணா..
Delete//ஆனால் கோபு அண்ணாவின் ஒவ்வொரு பதிவும் அவரின் உழைப்பைச்சொல்லுகிறது.//
ReplyDeleteஅடடா, இதை மஞ்சு மூலம் கேட்கும்போது தன்யனானேன். ;)
இருப்பினும் .......
அணையப்போகும் அகல் விளக்கு எப்போதுமே சற்று கூடுதல் பிரகாசமாகத்தான் எரியும்.
சின்னதொரு அகலாகிய என்னை, அவ்வப்போது கவனித்து புதுத்திரி என்ற உற்சாகமும், மேலும் எண்ணெய் என்ற ஊக்கமும் அளித்து வரும் தங்களைப்போன்ற ஒருசில நலம் விரும்பிகளால் மட்டுமே, என் உடல் ஒத்துழைக்க மறுத்தாலும் என் உள்ளம் என்றும் இளமையாக இருந்து வருகிறது.
>>>>>
ததாஸ்து !!
Delete//திடிர்னு ஒரு ஃப்ளையிங் விசிட் கொடுத்தபோதும் கொஞ்சம் கூட சிரிப்பு மாறாமல் அன்புடன் குடும்பத்தினர் அனைவரும் என்னிடம் பேசினர்.//
ReplyDeleteதாங்கள் என் இல்லத்திற்கு மின்னல் வேகத்தில் வந்து சென்றது எனக்கு ஏதோ சொப்பனம் கண்டது போல மட்டுமே உள்ளது.
நல்லவேளையாக அதற்குள் தங்களை தங்கள் அண்ணியுடன் போட்டோ பிடித்து வைத்துக்கொண்டது நல்லதாப்போச்சு ! ;)
http://gopu1949.blogspot.in/2013/06/8.html
>>>>>
அடுத்த முறை வரும்போது சாவகாசமாக உட்கார்ந்து பேசிவிட்டு செல்கிறேன் அண்ணா.
Delete//26. தி.தமிழ் இளங்கோ
ReplyDeleteவை.கோ அண்ணா பதிவுகள் மூலம் தான் இவர் வலைப்பூவுக்கு முதன் முதல் வருகைத் தந்தேன். மிக அருமையான விஷயங்களை எளிமையாக எடுத்துச்சொல்வதில் வல்லவர்.//
இவர் வல்லவர் மட்டுமல்ல .... பொதுவில் மிகவும் நல்லவர் .... அன்பினைப் பொழிவதில் இவரை ’ஆண் மஞ்சு’ என நான் எனக்குள் நினைத்துள்ளேன் ;)
சந்தோஷமான விஷயம் அண்ணா.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete//13. திண்டுக்கல் தனபாலன்
Deleteகேட்டால் உதவி செய்வோரை நல்லவர் என்கிறோம். கேட்காமல் உதவிடும் நல்ல உள்ளத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்? தனபாலன் என்று வைப்போமா?//
எனக்கு இன்று முதல் தகவல் கொடுத்துள்ளவரும் இவரே தான்.
ஃ கேட்காமல் உதவிடும் நல்ல உள்ளம் = திண்டுக்கல் ‘பொன் தனபாலன்’
அருமை நண்பருக்கு என் நன்றிகள் + பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
தனபால் சாருக்கு என்னுடைய நன்றிகளும்.
Deleteஇன்றைக்கும் 2/3 [Two Third] அறிமுகங்கள் எனக்கு மிகவும் பரிச்சயமானவர்களால் இருப்பதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி ... மஞ்சூஊஊஊஊ. ;)))))
ReplyDeleteஆலிலைப்பிள்ளையார், ஆலிலைக் கிருஷ்ணன் + அசத்தலான பாப்பா எல்லாமே வழக்கம்போல அருமையோ அருமை. பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
பிரியமுள்ள கோபு அண்ணா
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா.
Deleteஇருவர் தவிர அனைவரும் தெரிந்தவர்கள். திறமையானவர்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகுழந்தைகளுக்கு பெற்றோர்கள் ரோல் மாடலாய் இருக்க வேண்டும் என்று சொல்வது உண்மை.
நீங்கள் சொல்வதை குழந்தை கையை ஊன்றி கவனிக்கிறதே! அருமையான படப் பகிர்வு.
எனக்கும் மிகவும் பிடித்த படங்கள் மேம்.. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.
Deleteநான் விரும்பி வாசிக்கும் பல பதிவர்களோடு என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி! என்னுடைய தளம் அறிமுகம் ஆனதை தெரிவித்த தனபாலன் அவர்களுக்கும் நன்றி! நிறைய பதிவர்களையும் பதிவுகளையும் இன்றும் அறிமுகம் செய்த உங்கள் உழைப்பு புரிகிறது! ஊக்கமுடன் தொடருங்கள்! இந்த ஊக்கமும் கவுரவமும் பதிவர்களை நிச்சயம் நல்ல புதிய படைப்புக்களை உருவாக்கிட உதவும்! நன்றி!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா.
Deleteகுழந்தை வளர்ப்பு பற்றிய அறிமுக உரை அற்புதம்! இதே போல் ஒன்றரை இரண்டு வயதிலேயே கான்வெண்ட் அது இதென்று குழந்தைகளை பாடாய் படுத்துவதை எதிர்ப்பவன் நான். என் மகளை அரசுப்பள்ளியில் தான் சேர்ப்பேன் என்று பிடிவாதமாய் உள்ளேன்! இந்த வருடம் சேர்க்க உள்ளேன்! அதிகாலையில் படிப்பு! அதிகரிக்கும் மதிப்பெண் என்பது என் மாணவர்களுக்கு நான் எப்போதும் சொல்லும் உபதேசம்! அருமையாக அதை நீங்கள் சொன்ன விதம் சிறப்பு! நன்றி!
ReplyDeleteகுழந்தைகளின் செயல்கள் நம்மைக்கண்டே தொடர்கிறது. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா.
Deleteஅருமையான முன்னுரையும் அறிமுகங்களும்! அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteVetha.Elangathilakam.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் வேதாம்மா
Deleteநன்றி மகளே! அறிமுகப் பதிவர் அனைவரும் என், அன்பு வணக்கமும் வாழ்தும்!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் அப்பா.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமூத்த பதிவர்கள் வரிசையில் எனக்கும் ஓர் இடம் தந்த , சகோதரி மஞ்சுபாஷினி சம்பத்குமார் அவர்களுக்கு நன்றி! எனக்கும் நிறைய வலைப்பதிவு நண்பர்கள் அய்யா திரு வை கோபாலகிருஷ்ணன் பதிவுகள வழியேதான் அறிமுகம் ஆனார்கள்;
ReplyDeleteஇந்த நண்பர்களோடு வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவர்களோடும் “ I AM A BLOGGER “ என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி!
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சார்.
Deleteபட்டியலில் நண்பர்களோடு கூட நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நண்பர்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.
ReplyDeleteஇத்தனை அறிமுகங்களா... மிச்ச நாட்களுக்கு மிச்சம் வைத்திருக்கிறீர்களா? :)))
நீங்க எல்லாம் இருக்கீங்கல்ல உதவிட. அப்புறம் எனக்கென்ன கவலை :)
Deleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..
இத்தனை பெரும் என் அபிமானத்துக்கு உரிய நட்சத்திரங்கள் .அனைவருக்கும்
ReplyDeleteஎன் இனிய வாழ்த்துக்கள் .உங்களுக்கும் என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் அக்கா .
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தங்கை.
Deleteதாங்க்ஸ். தாங்க்ஸ்மஞ்சு பாஷிணிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எல்லாம் அருள திருப்பதி மலைவாசனை ஏழுமலையானை பாலாஜியை ஸ்ரீனிவாசனை திருவேங்கடமுடையானை வேண்டி நிற்பேன்.
ReplyDeletesubbu thatha
www.wallposterwallposter.blogspot.com
உங்கள் ஆசீர்வாதம் என்றென்றும் கிடைக்கட்டும் அப்பா. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.
Deleteவலைச்சரம் பகுதியில் மீண்டும் என் பெயர்! இத்தனை பெருமைக்கு என்னைச் சொந்தக்காரனாக்கிய என் அம்மாவுக்குத்தான் நன்றி சொல்லணும் !
ReplyDeleteஇப்படி ஒரு அற்புதமான பிள்ளையைப்பெற்ற அம்மா பாக்கியசாலிப்பா ரிஷபா..
Deleteஇங்கே வந்த பிறகுதான் (வலைத்தளம்) நிறைய படைப்புலக பிரம்மாக்களை அறிமுகம் செய்து கொண்டேன். எழுத்தில் ஒவ்வொருவரும் தனி சுவை.. தனித் திறன். வாசிக்க ஆயுசு பத்தாது. பிரமிக்க மனசும் பத்தாது. அறிமுகம் செய்கிற மஞ்சுபாஷிணியின் எழுத்துத் திறமைக்கே எத்தனையோ கைத்தட்டல்கள்.. கண்ணனின் குழலினிமை அவர் படைப்புகளில் ஒலிக்கிறது எப்போதும் !
ReplyDelete” ஒவ்வொருவரும் தனி சுவை.. தனித் திறன். வாசிக்க ஆயுசு பத்தாது. பிரமிக்க மனசும் பத்தாது.” சத்தியமான வார்த்தைகள்பா ரிஷபா.. உங்க எல்லோரின் எழுத்துக்கு முன்னாடி நான் வெறும் பூஜ்யம் மட்டுமேப்பா .. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ரிஷபா...
Delete'என்ன தவம் செய்தனை...ஈன்கெனை ஒரு பொருட்டாய் வலைச்சரத்தில்
ReplyDeleteகொணர்ந்ததிற்கு, நான் என்ன தவம் செய்தனை யசோதா...சாரி மஞ்சு பாஷினி மேம்...
பாட்டாவே பாடிட்டீங்களா . மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சார்.
Deleteஅக்கா உங்க ரசனையே தனி அனைவரையும் மறக்காமல் நினைவு படுத்தி சொன்ன விதம் சிறப்பு. அனைவரும் அறிமுகமான உறவுகள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி அக்கா. உங்க மறுமொழிக்கே அனைவரும் ரசிகை ...
ReplyDeleteஇனிமையான கண்ணன் பாடலுக்கு நான் ரசிகை. :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சசி.
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா.
Deleteஒரே பெண்கள் மயமான்னு நேத்து கேட்டதுக்கு பதிலா இப்ப என் நண்பர்கள் அனைவரோடயும் எனக்கும் அறிமுகம் இங்க! தலையில குட்டிக்கிட்டு, நாலு உக்கி போட்டாச்சு இங்க. உங்கள் வரிகளில் என்தள அறிமுகம் படிக்கையில் ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கு மன்ச்சூ! (நன்றில்லாம் சொல்லி உங்களைத் தள்ளி நிறுத்திர மாட்டேன் நான்)
ReplyDeleteநேத்தே சொல்லி இருந்திருப்பேன். ஆனா சஸ்பென்ஸ் அம்பலமாகிடுமேன்னு சொல்லலை கணேஷா. நேத்து முழுக்க மங்கையர் சிறப்பு தொகுப்புன்னா இன்னைக்கு முழுக்க தாயுமானவர்களின் தொகுப்பு... நன்றி சொன்னால் பேசவே மாட்டேன்ல :)
Delete//கேட்காமல் உதவிடும் நல்ல உள்ளத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்? தனபாலன் என்று வைப்போமா? //
ReplyDeleteநீங்களே வெச்சிட்டீங்களே, அப்புறம் கேள்வி வேறு ஏன்?
அறிமுகங்கள் அனைத்தும் அருமை!
அதானே. சரியா சொன்னீங்க. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா.
Deleteஇன்றைய வலைப்பூ அறிமுகங்களில் எனது வலைப்பூ இணைந்திருப்பது அறிந்து மகிழ்ச்சி. தகவலைத் தெரிவித்த திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு என் நன்றி.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஐயா.
Deleteஎன் வலைப்பூவை அறிமுகப் படுதியதற்கு நன்றிகள். ஆனால் எழுதியதில் தங்களைக்கவர்ந்த பதிவு இன்னதென்று சுட்டியுடன் சொல்லியிருந்தால் வாசகர்கள் அதனை படித்து எழுத்தை ரசிக்கலாமா வேண்டாமா என்று முடிவு எடுக்க ஏதுவாக இருந்திருக்கும்.
ReplyDeleteநேற்று முத்துக்கள் என்றால் இன்று ரத்தினங்கள். அத்தனை பதிவர்களின் பதிவுகளையும் படித்ததில்லை.. மீண்டும் பதிவுலகத்தில் தீவிரமாக நுழைந்து படிக்கவேண்டும். உங்கள் உதவியால் இவ்வளவு நல்ல அறிமுகங்கள் கிடைத்தன. நன்றி மஞ்சு.
ReplyDeleteஅறிமுகமான அனைவரும் சிறந்த படைப்பாளிகள்..
ReplyDeleteபின்னூட்டத்தால் எம் போன்ற படைப்பாளிகளை ஊக்குவிக்கும்
வினையூக்கியாம் உங்கள் கையால் அறிமுகமாவது மிகுந்த மகிழ்ச்சி சகோதரி...
மனமார்ந்த நன்றிகளும் ..
அறிமுகமான அனைவருக்கும் நல்வாழ்த்துக்களும்..
Thanks a lot for your nice words madam! :)
ReplyDeletespcl thanks to our danabalan sir :)
எனக்கு விபரம் சொன்ன தனபாலன் சாருக்கு நன்றி!
ReplyDeleteநன்றி..காணாமல் போன என்னை பலருக்கும் நினைவு படுத்தியமைக்கு நன்றி..எப்படியிருக்கீங்க பாஸ்?பாத்து பேசி ரொம்ப நாளாச்சு..
ReplyDeleteபதிவுலகப் பிரபலங்கள் பலருடன் எனக்கும் ஓர் இடம் தந்தமைக்கு நன்றி சகோ.....
ReplyDeleteஅறிமுகம் ஆன அத்தனை பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.