07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, February 5, 2014

சிரிக்கலாம் வாங்க!

சிரிக்கலாம் வாங்க!


நகை, அழுகை, இனிவரல், மருட்கை
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, அமைதி
இவை ஒன்பான் சுவைகள்! நவரசம் என்பார்கள்!
இதில் முதலில் வருவது நகை!
பொன் நகையை விட பெரிது புன்னகை!
மோனாலிசாவின் புன்னகைக்கு இன்றும்புகழ் குறையவில்லை!
அறுசுவை உணவை புசித்தாலும் செவிக்குணவாக
அமைவது நகைச்சுவை!
நவரசத்தில் முதல்வன் நகை
சிரிக்கத்தெரிந்த ஒரே விலங்கென மனிதனைசொல்லுவார்கள்!
நகைச்சுவை உணர்வு நம்மை மன அழுத்தத்திலிருந்து விடுவிக்கும்!
லாஃபிங் தெரபி! இன்று மருத்துவத்திலும் புகழடைந்துள்ளது!
அழுகை சொட்டும் காவியங்களை படைத்துவிடலாம்!
ஹாஸ்யம் ததும்பும் எழுதுவது அவ்வளவு சுலபமல்ல!
வலைப்பூக்களில் வகைவகையாய் நகைச்சுவை!
வாரி வழங்குகிறார்கள் நண்பர்கள்!
கொஞ்சம் ஹாஸ்ய ரசம் இன்று பருகுவோம்!

ஜாபர் அலி என்பவர் நடத்தும் ஜோக்ஸ் என்னும் வலைப்பூவில் இன்றைய நவீன யுகத்தை இப்படி கிண்டல் செய்கிறார் இங்கு நவீன யுகம்

நம்பள்கி இவரை தெரியாதவர் இருக்கமாட்டீர்கள் நினைவுகளும் சிந்தனைகளும் என்ற வலைப்பூவில் எழுதிவரும் மருத்துவர். அரசியல்பதிவுகள் அட்டகாசமாய் எழுதுவார் இவர் இரண்டு மொழிகளை வளர்க்கிறார் இங்கே தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் வளர்த்த கதை
தயிர் வடையை ருசிக்காதவர்கள் கிடையாது! இவர் அதை எப்படி செய்திருக்கிறார் பாருங்கள் தயிர்வடை செய்து அசத்திய கதை

சி.பி. செந்தில்குமாரின் அட்ரா- சக்க வலைப்பூவிற்கு அறிமுகம் தேவையில்லை! இவரின் ட்விட்ஸ் கலகலக்க வைக்கும். வார இதழ்களில் இவரது பல ஜோக்ஸ் இடம்பெற்றிருக்கிறது எகணமொகணயாய் சிரிக்க வைக்கிறார் இங்கு எகணமொகண ஜோக்ஸ் 

புன்னகை உலகம் வலைப்பூவில் சிரிக்க வைக்கிறார்கள் இப்படி
மறக்கமுடியாத ஜோக்ஸ் இதைப்படிச்சா சிரிச்சுக்கிட்டே இருப்பீங்க! மறக்க முடியாத ஜோக்ஸ் இதை படியுங்க சிரியுங்க இங்கு


இ ஆரா என்றும் இனியவன் என்னும் வலைப்பூவில் சிரிக்க வைக்கிறார் கிங்ஸ்ராஜ் இவரின் ஜோக்ஸ் ஜோக்ஸ் இதோ சென்னை புத்தகக் கண்காட்சி பற்றி இங்கே! சென்னை புத்தக கண்காட்சி

ஜோக்காளி என்ற தளத்தில் எழுதிவரும் பகவான் ஜி குட்டிகுட்டியாய் நிறைய ஜோக்ஸ் எழுதுவார் சிரிக்கவைப்பார்
டிரான்ஸ்பருக்கு அஞ்சாத   தில்லுதுரை போலீஸ்காரங்க தொப்பையை குறைக்க ஐடியா இங்கே! இடுப்பு அளவை குறைக்க
வானவில் என்ற தளத்தில் எழுதிவரும் மாடசாமி இராஜாமணியின் இந்த பதிவை படித்துவிட்டு சிரிக்காமல் இருக்க முடியாதுஆதார் அட்டையும் ஊறுகாயும் இதைப்படிச்சா சிரிக்காம இருக்க முடியாது
ஏதாவது என்ற வலைப்பூவில் எழுதும் வையாபதி ஒரு கேள்வி கேட்கிறார் முடிந்தால் பதில் சொல்லுங்கள்! கதையை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாமா?

பரதேசி @ நியுயார்க் தளத்தில் இதைப்படித்து விழுந்துவிழுந்து சிரித்தேன் சின்னவயதில் நாம் செய்யும் குறும்புகளை நினைவுபடுத்தும் பதிவு இது. டிங்!டாங்!டிங்

அவர்கள் உண்மைகள் என்ற தளத்தில் எழுதிவரும் மதுரைத்தமிழனின் பதிவுகள் அனைத்தும் ரசிக்க தக்கவை! நகைச்சுவை இவர் உடன்பிறப்பு போல இங்கு ஒரு ரகசியம் சொல்லித்தருகிறார் பாருங்கள் மச்சினியை மடக்குவது எப்படி? இந்த பதிவையும் படியுங்க உங்க சந்தேகம் தீருதான்னு பார்க்கலாம்  காதலிக்கும் போது இருக்கும் அழகு

நகைச்சுவை என்றால் சேட்டை இல்லாமலா? சேட்டைக்காரன் இவரது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் என்ற நூலை படித்து சிரித்துமாளவில்லை! இவரது இந்த பதிவு  சிலைகள் தேவையா அருமையா ஒருபாட்டு படிச்சிருக்கார் பாருங்கள் போனால் போகட்டும் போடாஆசிரமங்களை கிண்டலடிக்கிறார்   இங்கே

கோகுலத்தில் சூரியன் வெங்கட் எழுதுவது எல்லாமே நகைச்சுவைதான்! அவர்கட்சிக்காரனுக்கு வாதாடுகிறார்  இங்கே சாட்ல ஒரு பெண்ணை எப்படி மடக்குகிறார் பாருங்கள்  சாட்ல ஒரு பொண்ணு
குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் தளத்தில் எழுதிவரும் நண்பர் குட்டன் மனைவிக்கு எப்படி உதவி செய்கிறார்  பாருங்கள் இங்கு  பதிவர் திருவிழா பத்தி இங்கே கலாய்க்கிறார்  மனநல மருத்துவரிடம் குட்டன்   முட்டா நைனாவிடம் இப்படி யாரோ கேட்டார்களாம்  இங்கு

 இன்னும் எத்தனையோ நகைச்சுவை எழுத்தாளர்கள் வலையில் இருப்பார்கள்! நான் அறிந்தவரை என் கண்ணில் பட்டவரை கொஞ்சம் தொகுத்துள்ளேன்! மனம் லேசாக சிரித்துக் கொண்டே இருப்போம்! சிரித்துவாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திட கூடாது! சிரிச்சிக்கிட்ட இன்றைய நாளை துவக்குங்கள்
நகைச்சுவை ரசத்தை பருகினீர்களா? நாளை மீண்டும் சந்திப்போம்! உங்கள் கருத்துக்களை பகிர்ந்து ஊக்கம் அளியுங்கள்! இந்த பணி சிறக்க வாழ்த்துங்கள்! நன்றி!

22 comments:

  1. வணக்கம்

    வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. என் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

      Delete
  2. நான் ரசிக்கும் வலைப் பதிவர்கள் அனைவருமே உங்கள் ரசனையில் இருப்பது அதிசயம் என்றால் ,அதில் என் ஜோக்காளியும் இருப்பது எட்டாவது அதிசயம் தான் !
    அறிமுகம் செய்த உங்களுக்கும் ,தகவல் தந்த ரூபன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி !
    த .ம +1

    ReplyDelete
  3. நகைச்சுவை மிளிர எழுதும் பதிவுலக எழுத்தாளர்களையும் அவர்களது வலைத்தளங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளமைக்கு நன்றி. இவற்றில் சில ஏற்கனவே தெரிந்தவைதான். புதிய வலைத்தளங்களுக்கு சென்று படிக்கிறேன்.
    இவ்வாரம் எனது ''ஏதாவது'';வலைத்தளத்தை அறிமுகம் செய்துள்ளமைக்கு மகிழ்ச்சி எனது நன்றி

    ReplyDelete
  4. நகைச்சுவை தளங்களில் சில நான் அறிந்தவை. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. என் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் சுரேஷ்.. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்... தகவல் கொடுத்தா ரூபனுக்கும் என் நன்றிகள்

    ReplyDelete
  6. Jafer Ali அவர்களின் தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    நல்லதொரு தொகுப்பு... பாராட்டுக்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. நம்பளையும் கண்டுகினதுக்கு ரெம்ப டேங்க்ஸ் வாத்யாரே...! இன்றோடூசு ஆய்க்கின அல்லாருக்கும் வாய்த்துக்கள்பா...

    ஒன்ன பத்தி இன்னாரு இன்னாமாரி சொல்லிகினார்பான்னு நம்ப கைல தகவல் சொல்லிகின நம்ப டி.டி அண்ணாத்தேக்கும் ரெம்ப டேங்க்ஸ்பா...

    ReplyDelete
  8. சுரேஷ் தொகுப்பு அற்புதம்

    ReplyDelete
  9. சில இடங்களுக்கு இன்னும் போனதில்ல! இப்ப போய் சிரிச்சுட்டு வரேன்!

    ReplyDelete
  10. என் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிக சுரேஷ்.. . தகவல் கொடுத்த திண்டுக்கல் தனபாலன் & ரூபனுக்கும் என் நன்றிகள்

    ReplyDelete
  11. அடியேனின் பகுத்தறிவு ஜோக்ஸயும் கண்டு மகிழுங்க.

    kgopaalan.blogspot.in

    கோபாலன்

    படிச்சிட்டு தயவுசெய்து திட்டாதீங்க.

    ReplyDelete
  12. என் வலைப்பூவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி சுரேஷ்

    ReplyDelete
  13. தங்களின் அறிமுகத்திற்கு மிக்க நன்றிகள் சகோதரரே.

    ReplyDelete
  14. என் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சுரேஷ். தகவல் கொடுத்த திண்டுக்கல் தனபாலன் & ரூபனுக்கும் என் நன்றிகள்

    ReplyDelete
  15. சிரிக்க, சிரிக்க பதவிகள் தொகுப்பு. நன்று!

    ReplyDelete
  16. மனிதகுலத்தின் சிறப்பான தகுதி சிரிப்பு. அதைப் பற்றி இவ்வாறாக சிறப்பாக பதிந்தமைக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  17. யாவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  18. எனது வலைதளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் !

    ReplyDelete
  19. anaivarukkum vaazhthukkal .mikka nandri sako pakirvukalukku .

    ReplyDelete
  20. நன்றி சுரேஷ்!
    எனது பதிவுகளுக்கு நீங்கள் கொடுத்த லிங்குக்கு

    சில சமயம், என்னை அறிமுகப்படுத்துவர்களை நான் பாராட்ட மறந்து விடுவேன்--இது வேண்டும் என்று நான் செய்வது இல்லை...என்னால் முடிந்ததை நாள் செய்கிறேன்.,

    ReplyDelete
  21. நல்ல அறிமுகம். சிலர் தளங்கள் எனக்குப் புதிது....

    அறிமுகம் செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது