07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, June 5, 2014

ஆண்களின் பார்வையில் பெண் சுதந்திரம்/பெண்ணியம்


அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே,

இன்றைக்கு யாரையெல்லாம் அறிமுகப்படுத்தலாம்னு ஒரே யோசனையாக இருந்தது. ஏற்கனவே என்னுடைய புகுந்த வீட்டின் உறவினர்களையும், வலைப்பூவிற்கு புதியவர்களையும், குழந்தை எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தியாச்சு. அடுத்து  பெண்களை அறிமுகப்படுத்தலாம்னு தோணுச்சு. ஆனா பெண் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தாமல், பெண்ணியம்,பெண் சுதந்திரம் போன்ற பதிவுகளை எழுதியவர்களை அறிமுகப்படுத்தலாம் என்று நினைத்தேன். அதிலும் பெண்ணியத்தை பற்றி பெண்களே சொல்லாமல், ஆண்கள் சொன்னால் எவ்வாறு இருக்கும் என்று ஒரு எண்ணம். என்னுடைய எண்ணத்திற்கு ஈடு கொடுக்கும் விதமாக, நிறைய ஆண் எழுத்தாளர்கள் பெண் சுதந்திரத்தைப் பற்றியும்,பெண்ணியத்தைப் பற்றியும் தங்கள் வலைப்பூக்களில் சொல்லியிருக்கிறார்கள். அவர்களிலிருந்து சிலரை மட்டும் உங்களுக்கு அறிமுகப்படுதுவது தான் இந்த பதிவு. இவர்கள் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகியிருக்கலாம். அதனால் அவர்களுடைய இந்த பதிவை மீண்டும் படிக்கும் வாய்ப்பாக நினைத்துக்கொள்ளுங்கள்.

நான் இந்த தலைப்பை எடுத்துக் கொண்டதற்கு காரணம், நம் தாய் நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பெறுகிவிட்டது. தினமும் பத்திரிக்கைகளில் இந்த செய்திகள் இடம் பெறாமல் இருக்கிறதில்லை. அந்த அளவிற்கு அந்த குற்றங்கள் பெருகி விட்டது. இப்படியிருக்கின்ற சூழ்நிலையில், ஆண்கள் பெண்ணியத்தைப் பற்றியும் அவர்களின் சுதந்திரத்தைப் பற்றியும் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்று பார்க்கலாம். 


தஞ்சாவூரான் ஐயா அவர்கள், பாரதி பயிலகம் வலைப்பூ என்ற இந்த வலைப்பூவில், இளம் பெண்கள் ஆண்களிடம் பழகும்போது ஒரு எல்லைக்கோட்டிற்குள் தான் பழக வேண்டும் என்று கூறுகிறார்.     பெண் சுதந்திரம்

நந்தா என்பவர் பத்தினிப்பெண்கள் என்ற தலைப்பில் திருமணமான பெண்கள் தங்களுக்குள் ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு அதனுள்ளேயே சுழன்று கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார். பத்தினிப் பெண்கள்

டோண்டு என்று புனைபெயரில் நூறு ஆண்டுகளுக்கு அப்பால் பெண்ணின் திருமண வயது என்னாவாக இருக்கும் என்ற கற்பனை குதிரையை தட்டி விட்டிருக்கிறார். நூறு ஆண்டுகளுக்கு அப்பால் - பெண்ணின் திருமண வயது

ஜாக்கி சேகர் என்ற இவர் பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் என்ற வலைப்பூவில் பெண் சுதந்திரத்தைப் பற்றி ஒரு கவிதையை எழுதியிருக்கிறார். பெண் சுதந்திரம் உண்மையில் இந்த கவிதையில், நம் நாட்டில் மட்டும் தான் ஆண்கள் இப்படி சுதந்திரமாக இருக்க முடியும். அது தான் இந்தியா...

தான்ஸ் என்கிற இவர் விளைச்சல் என்கிற இந்த வலைப்பூவில், பெண்களை பற்றி நினைத்தாலே, அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற சலுகைகள் தான் நியாபகத்துக்கு வருகின்றன என்று அவருக்கு தெரிந்த வகையில் புலம்பியிருக்கிறார் . பெண்களைப் பற்றிய என்னுடைய எண்ணம் 

கே.ஆர்.பி. செந்தில், தன்னுடைய வலைப்பூவில் தந்தைப் பெரியார் எழுதிய “பெண் எப்போது அடிமையானாள்” என்ற புத்தகத்திலிருந்து சில கருத்துக்களை சுட்டிக்காட்டியிருக்கிறார்.  

இதே மாதிரி பெண் உரிமை பற்றி பெரியாரின் மொழிகள் என்று தன்னுடைய வலைப்பூவில் திரு. என்பவர் எழுதியிருக்கிறார் - பெண் உரிமை பற்றி பெரியார் மொழிகள்

அடுத்து ஜெயதேவ் என்பவர் தன்னுடைய வலைப்பூவில் பெண் விடுதலையைப் பற்றி சொல்லியிருக்கிறார். பெண் விடுதலை

தமிழ்மணி என்பவர் தன்னுடைய வலைப்பூவில் தன் தாய்,சஓக்தரி,தன்னுடன் வேலைப் பார்க்கும் தோழி, உடன்பிறவா சகோதரியின் மகள் என்று நான்கு பேரிடமும் சில கேள்விகளைக் கேட்டு அவர்களின் பதில்களை அலசுகிறார். பெண்கள் மத்தியில் பெண்ணியம்

சுவாமி வித்தியானந்தா என்பவர், இந்தியாவில் பெண்களின் சுதந்திரத்தைப் பற்றி புராணங்களோடும், சாஸ்திரங்களோடும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். இந்தியாவில் பெண்களின் சுதந்திரம் 

இறுதியாக, அடியேனும் இன்றைக்கு பெண்களுக்கு உண்மையிலேயே சுதந்திரம் கிடைத்து விட்டதா என்று கேட்டிருக்கிறேன் - பெண்ணியம் காத்து-உண்மையான சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்

நாளை வேறு சில பதிவர்களுடன் உங்களை சந்திக்கிறேன்.


28 comments:

  1. பாரத மாதா....படத்தோடு தொடக்கம்...அருமை.
    தாய் நாடு,தாய் மண் என்ற பற்றுதல் நம் தாய் மாந்தர்கள்,சகோதரிகள்,மகள்கள் என்கிற உணர்வும், சிவ சக்தி சமேதரின் குறிப்பும் உணர்ந்தால்...."மனிதம்" மட்டுமே என்பது புரியும்.

    ReplyDelete
    Replies
    1. விளக்கமாக சொன்னீர்கள் சகோதரி.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  2. பெண்களின் மதிப்பை ஆண்கள் இன்னும் அதிகமாக புரிந்து கொள்ள வேண்டிய சரியான தருணத்தில் வந்துள்ள சரியான பதிவு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  3. நல்ல அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி

      Delete
  4. நிறைய தெரியாத தளங்கள்... அறிமுகத்துக்கு மிக்க நன்றி....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்பை

      Delete
  5. பெண்ணியத்தை பற்றி பெண்களே சொல்லாமல், ஆண்கள் சொன்னால் எவ்வாறு இருக்கும் என்று எண்ணி ஆண் பதிவர்களின் பதிவை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்!. இவர்களில் காலஞ்சென்ற திரு டோண்டு அவர்கள் மற்றும் திரு ஜாக்கி சேகர் அவர்களின் பதிவுகள் எனக்கு பரிச்சயமானவை.மற்றவர்களின் பதிவுகளை படிக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  6. ஆண்கள் - பெண்ணியத்தை பற்றிச் சொன்னால் எவ்வாறு இருக்கும் என்ற வித்தியாசமான சிந்தனையுடன் - இன்றைய பதிவு!..
    சிந்தனையைத் தூண்டுகின்றது.. அறிமுக தளங்களுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  7. ஆண்களின் பார்வையில் பெண்ணியம்...அருமையான பகிர்வு... நன்றி. ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி

      Delete
  8. அருமையான தொகுப்பு... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி டிடி

      Delete
  9. வணக்கம்

    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  10. சிறந்த அறிமுகங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  11. வித்தியாசமான சிந்தனைப்பகிர்வு.அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  12. நல்ல தொகுப்பு. பல அறியாத தளங்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  13. சிறப்பான தலைப்பில் வலைச்சர அறிமுகம்! பல தளங்கள் புதியவை! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்

      Delete
  14. எனது பதிவையும் தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளீர்கள் மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா. மிக்க நன்றி :-)

    ReplyDelete
  15. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரா

    ReplyDelete
  16. நல்ல தொகுப்பு. சில தளங்கள் அறியாதவை.

    அறிமுகத்திற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது