07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 24, 2014

இணைந்தே தொடங்குவோம்!

வலை உலக நண்பர்களுக்கு வணக்கம்!

நான் தான் பாண்டியன் பேசுகிறேன். பெயரைச் சொன்னதும் தெரிந்து கொள்வதற்கு நீ என்ன மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனா?னு தானே கேக்குறீங்க. இதோ என்னை அறிமுகம் செய்தவற்கு முன்பு என்னை பெற்றெடுத்து உலகை அறிமுகம் செய்து வைத்த என் அன்னைக்கும், சான்றோர்களின் அறிமுகம் கிடைக்க  காரணமாகிய தமிழன்னைக்கும், வலைச்சர ஆசிரியர் பொறுப்பு கொடுத்து அறிமுகம் செய்து வைத்திருக்கும் திரு.சீனா ஐயா அவர்களுக்கும், வலைச்சர பொறுப்பாசிரியர்கள் அனைவருக்கும் முதலில் என் அன்பான நன்றிகள்.

நான் தான் பாண்டியன் பேசுகிறேன். அரும்புகள் மலரட்டும் எனும் வலைப்பக்கத்தில் எழுதி வரும் அ.பாண்டியன் தான் நான். என் வலைப்பக்கம் ஆரம்பத்து வருகிற சூன் 17 வந்தால் ஒரு வருடம் முடிவடைய இருக்கிறது.  ஆமாங்க நடை பழகும் சிறு குழந்தை நான். என் எண்ணங்களை எழுத்துக்களாக்கும் முயற்சியில் கட்டுரைகள், கவிதைகள் புனைந்துள்ளேன். அவ்வாறு எழுதியதில் எனக்கு பிடித்த பதிவுகள் இருக்கட்டும். எனக்கு பிடித்த பதிவுகளை நானே அறிமுகம் செய்வதை விட நம் வலைப்பக்க நண்பர்களுக்கு பிடித்த பதிவுகளை இப்பதிவு மூலம் அறிமுகம் செய்கிறேன்.

 சகோதரி இளையநிலா அவர்கள் அவர்களது பக்கத்தில் பதிவோடு பகிரும் நண்பர்கள் எனும் தலைப்பில் அறிமுகம் செய்த எனது பதிவு
புதுக்கவிதையின் வடிவம்- ஓர் ஆய்வு

சகோதரி தென்றல் சசிகலா அவர்கள் வலைச்சரத்தில் அறிமுகம் செய்த பதிவு
தாய்மார்களே தமிழ்ப் பால் ஊட்டுங்கள்

சகோதரர் தளிர் சுரேஷ் அவர்கள் வலைச்சரத்தில் அறிமுகம் செய்த பதிவு
சினிமா விமர்சனம் அல்ல- சினிமா சார்ந்த விமர்சனம்

சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்கள் வலைச்சரத்தில் அறிமுகம் செய்த கவிதை
வரலாறு படைப்போம் வா நண்பா!

சகோதரி மஞ்சுபாஷினி அவர்கள் வலைச்சரத்தில் அறிமுகம் செய்த பதிவு
வலைப்பதிவு தம்பதியினரோடு ஓர் இனிய சந்திப்பு

சகோதரி கருவாச்சி கலை அவர்கள் வலைச்சரத்தில் அறிமுகம் செய்த பதிவு
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்- அறிவோம்

குறிப்பு:
தாமதமான வருகைக்கு நண்பர்கள் மன்னிக்கவும். நேற்றைய பதிவிற்காக காத்திருக்க வைத்தமைக்கு பொறுத்தருள்க. சென்னை பயணம் இப்பொழுது வந்தேன். வந்தவுடன் முதல் வேலை இப்பதிவு தான். இச்சிறிவனின் எழுத்துக்களைப் பொறுமையாக படித்தமைக்கு நன்றிகள்.. வாருங்கள் நண்பர்களே தமிழின் வளர்ச்சிக்கான நம் பணிகளில் இணைந்தே தொடங்குவோம். நன்றி...




62 comments:

  1. வணக்கம்
    சகோதரன்

    இன்றைய வலைச்சர அறிமுகத்தில் சுய அறிமுகம் நன்று... இன்றைய வலைச்சர அறிமுங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தி மகிழ்ந்தமைக்கு அன்பான நன்றிகள் சகோ. தொடர்வோம்..

      Delete
  2. வாழ்த்துக்கள். வலைசர ஆசிரியர் பணிக்காக. நல்ல பதிவர்களையும் பதிவுகளையும் அறிமுகப் படுத்துங்கள்.
    நல்ல தொடக்கம். தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய நல்ல உள்ளத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். தொடர்வோம் ஐயா...

      Delete
  3. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தி மகிழ்ந்தமைக்கு அன்பான நன்றிகள் ஐயா. தொடர்வோம்..

      Delete
  4. வணக்கம்
    சகோதரன்

    இன்று வலைச்சரப்பொறுப்பாசிரியராக இருந்து. மற்ற ஆசிரியர்கள் அறிமுகம் செய்த தங்களின் படைப்புக்கள் அனைத்துக்கும் சென்று வருகிறேன்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ. தங்களின் வருகைக்கும் அழகிய கருத்துக்கும் நன்றிகள்..

      Delete
  5. அறிமுகம் செய்தவர்களையே வைத்து, சிறந்த பதிவுகளை அறிமுகம் செய்தது நன்று... மேலும் அசத்த வாழ்த்துக்கள் சகோதரா...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்தும் வழிகாட்டலும் என்னைத் தொடர்ந்து வழிநடத்தட்டும் சகோ. நன்றிகள் பல..

      Delete
  6. புதுக்கவிதையின் பல படிமங்களை
    புதுமையாகப் போற்றிடும்
    பாண்டிய அரசே !!

    நீவிர் வாழ்க . நின் கொற்றம் வாழ்க.

    புதுக்
    கவிதை என்பது ஒரு கரகாட்டம்.
    கண்டவுடன் மயக்கும். ஐயமில்லை.
    சொற்களின் சதிராட்டம்
    சொல்லிய செய்தி சில
    சிந்திக்கவும் வைக்கும்.
    உள் உரளும் உணர்வுகளின்
    எரிமலை.
    உட்புகுந்த வேதனையின்
    வெளிப்பாடு.

    இருப்பினும் சொல்வேன். நீர்
    மறுப்பினும் சொல்வேன்.

    மரபுக்கவிதைகள் மா ஆழிகள் .
    வறண்டு போய் என்றும் மாள்வதில்லை.

    புதுக்கவிதைகள்
    மதுக் குவளைகள்.

    பருகையிலே கிறுகிறுக்கும்.
    பானகங்கள்

    அது மலை.
    இது மாயை.

    சுப்பு தாத்தா
    www.subbuthatha72.blogspot.com
    www.kandhanaithuthi.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. கவியால் இச்சிறியவனை வாழ்த்தியமைக்கும் அலைபேசியில் தொடர்பு கொண்டு நினைவுகளைப் பகிர்ந்தமைக்கும் என் நன்றிகளும் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் ஐயா...

      Delete
  7. Replies
    1. வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் அம்மா

      Delete
  8. அசத்துங்க சகோ ஓஓஓ!!!
    த,ம ஐந்து

    ReplyDelete
    Replies
    1. அக்காவின் வழிகாட்டுதல் இருக்கும் போது தம்பிக்கு என்ன கவலை! அக்காவின் விருப்பபடியே ஆகட்டும். நன்றிகள் அக்கா...

      Delete
  9. அன்பின் பாண்டியன் அவர்களுக்கு நல்வரவு..
    ஆசிரியரை (வலைச்சரத்தில்) அறிமுகம் செய்து -
    மகிழ்ந்த மாணாக்கனாக எளியேன்!..
    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு என்று வாழ்த்தியமைக்கு அன்பான நன்றிகள் ஐயா...

      Delete
  10. அறிமுகம் வைத்தே வித்தியாசமாக
    அறிமுகம் செய்தது அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தி மகிழ்ந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா...

      Delete
  11. சிறப்பான அறிமுகம் சகோ. வலைச்சர அறிமுகத்தையே அறிமுகமாக தந்து அசத்தியிருக்கிங்க. இந்த வாரம் முழுக்க அசத்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. என்னை முதன்முதலாக வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய சகோதரியே வருக. தங்கள் நட்பு என் பாக்கியம். தொடர்வோம் நன்றி...

      Delete
  12. வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் சகோதரி..

      Delete
  13. வணக்கம் சகோதரரே!..

    சுய அறிமுகப் பாணியே தனி! அருமை!
    உங்களை அடியேன் அறிமுகம் செய்ததையும்
    குறிப்பிட்டமைக்கு உளமார்ந்த நன்றி சகோ!..

    களைகட்டிவிட்டது உங்கள் பணி! சிறக்க வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் ஊக்கத்தால் தான் இவையெல்லாம் சாத்தியம். தஙகளின் வருகை மற்றும் வாழ்த்துக்கும் அன்பு நன்றிகள்

      Delete
  14. அன்பின் பாண்டியன் - முதல் நாள் பதிவிட நேரமின்மையின் காரணமாக இயலவில்லை. மறு நாள் பதிவிடுகிறேன் என வலைச்சரக் குழுவினரிடம் கூறியது குறித்து மிக்க மகிழ்ச்சி - இச்செயலே தங்களின் கடமை உணர்வினைக் காட்டுகிறது. பள்ளியில் படிக்கும் போது ஒரு நாள் வகுப்பிற்கு வர இயலவில்லை எனில் வகுப்பாசிரியரிடம் முன்னதாகவே கூறுவது நற்செயல். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      சென்னையில் முதல் நாள் இருந்தேன். பதிவிடுவதற்கு வாய்ப்பில்லாமல் போகும் என்பதை அறிந்து சென்னை புறப்படும் முன்பே தகவல் தெரிவித்தேன். இதனை இயல்பாக ஏற்றுக் கொண்ட உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றிகள் ஐயா..

      Delete
  15. அன்பின் பாண்டியன் - வலைச்சர விதி முறைகளின் படி - முதல் பதிவில் தங்களுடைய சிறந்த பதிவுகளை மற்ற பதிவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். இச்செயலைப் புது விதமாக - தங்களுடைய பதிவுகளில் சிறந்த பதிவுகளை ஏற்கனவே அறிமுகம் செய்த வலைச்சர முன்னாள் ஆசிரியர்கள் பெயரையும் அவர்கள் அறிமுகப் படுத்திய தங்களது பதிவுகளின் சுட்டிகளையும் கொடுத்தது பாராட்டுக்குரியது. இது தங்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      எனது நன்றி முகமாக அவர்களின் அறிமுகங்களும் தொடரும். இதில் பெருந்தன்மை ஒன்றும் இல்லை ஐயா அடியேனின் கடமை. மனமார பாராட்டியமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா...

      Delete
  16. நம்பிக்கையோடு.... புறப்படுங்கள் பாண்டியரே.... வெற்றி உமதே....

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் கூடவே நடைபோடும் போது எல்லாம் வெற்றி தான் சகோதரரே. மிக்க நன்றி..

      Delete
  17. வலைப்பக்கம் ஆரம்பத்து வருகிற சூன் 17 வந்தால் என்றுள்ளதே? சூலை 17 வந்தால் என்றிருக்கவேண்டும் என நினைக்கிறேன். அறிமுகம் அருமை. தொடர்ந்து பதிவுகளை எதிர்பார்க்கிறோம். சோழ நாட்டிலிருந்து பாண்டியனுக்கு சிகப்புக் கம்பள வரவேற்பு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      ஆம் ஐயா ஜீலை என்று தான் இருக்க வேண்டும். தகவல் தந்தமைக்கும் வாழ்த்திச் சிறப்பித்தமைக்கும் அன்பான நன்றிகள்..

      Delete
  18. ப்ளாக்கர் பிரச்சனையால் தாமதமாகியது. மன்னிக்க சகோ. அறிமுக படலம் அசத்தலாக உள்ளது. நல்ல முறையில் பணியை மேற்கொள்ள
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோதரியின் வாழ்த்து கிடைத்ததில் மிகுந்த சந்தோசம். தொடரட்டும் நம் நட்பு.. வாழ்த்துக்கு நன்றிகள்..

      Delete
  19. முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள்.விரைவில் திருமணம் நடைபெற போவதற்கு. இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.


    அடுத்து உங்கள் வலைபதிவுக்கு முதல் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்.
    ஆசிரியர் அல்லவா! வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பாக செய்வீர்கள் அதற்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. திருமண வாழ்த்துக்கும் வலைச்சர ஆசிரியர் வாழ்த்துக்கும் என் அன்பான நன்றிகள் அம்மா..

      Delete
  20. வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. மிகுந்த நன்றிகள் சகோ..

      Delete
  21. வாழ்த்துகள் பாண்டியன். எதையும் பொறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செய்யக் கூடியவர் சிறப்பாகச் செய்வீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      தஙகளின் அன்பும் நட்பும் என்றும் என்னை வழிநடத்தும் என்பதை நம்புவன் நான். வருகை தந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு நன்றிகள் ஐயா..

      Delete
  22. வணக்கம் பாண்டியன்...
    தாமதமாக வந்தாலும் பதிவு அருமை. மற்றவர்கள் உங்களைப் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டதை சுட்டி காட்டியது அருமை...

    நானும் வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்திருக்கிறேன்..

    http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_3.html

    அரும்புகள் மலரட்டும் என்னும் வலைப்பூ கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மிகச் சில பதிவுகளே (39 பதிவுகள்) எழுதப்பட்டு வருகிறது. சமூக சிந்தனை பதிவுகளும், கட்டுரை பதிவுகளும் அதிகமாக எழுதப்பட்டு உள்ளது. அதில் படித்தவர்கள் தான் அதிக தவறு செய்கிறார்களா? என்ற பதிவில் படித்தவர்களால் தான் சமுதாயம் சீரழிகிறது என்றும், படிக்கும் காலத்திலே ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை உருவாக்க, அதற்கேற்ப வழிமுறைகளை சொல்லித் தர வேண்டும் என விளக்குகிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர்
      முதலில் மன்னிக்கவும். எப்படியோ தங்கள் அறிமுகத்தை மறந்து விட்டேன். இதோ இப்பொழுதே இணைத்து விடுகிறேன். தவறுதலுக்கு பொருத்தருள்க சகோதரரே. தாமதமான மறுமொழிக்கும் மன்னிக்கவும். கருத்துக்கு நன்றி..

      Delete
    2. இணைப்பதற்குள் டேஸ்போர்டில் இருந்து வலைச்சரம் மறைந்து விட்டது. நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தமைக்கு நன்றிகள் சகோ. அதையே எனது அறிமுகமாகவும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்..

      Delete
  23. அறிமுக கட்டுரை வெகு சிறப்பு.. புதுக்கவிதைக்கான ஆய்வுகளை படித்தேன், அருமை..தொடருங்கள்..

    ReplyDelete
  24. சுய அறிமுகமே வித்தியாசமாக இருக்கிறது. அசத்துங்கள் சகோ

    ReplyDelete
  25. அறிமுகமே , ஆராம்பமே அட்டகாசம்! பாண்டியனின் ராஜ்ஜியத்தில் எழுத்துக்களின் ...உய்யலாலா...

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிகள் ஐயா

      Delete
  26. வாழ்த்துக்கள் சார்./

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிகள் ஐயா

      Delete
  27. மணவை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிகள் ஐயா

      Delete
  28. சிறந்த அணுகுமுறையுடன்
    சிறந்த அறிமுகங்கள்
    சிறந்த பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிகள் ஐயா

      Delete
  29. வாழ்த்துகள் பாண்டியன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிகள் ஐயா

      Delete
  30. அறிமுகம் சூப்பர் பாண்டியா வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது