07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 29, 2014

தொடரும் நட்புகள்

வணக்கம் நண்பர்களே!

இந்த பதிவில் நான் அறிமுகம் செய்யும் நண்பர்கள் உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்களாக இருக்கலாம். இது அறிமுகம் என்பதை விட என்னோடு நட்புகள் பாராட்டும் இவர்களுக்கு நான் காட்டும் நன்றி முகமாக இதை நான் பார்க்கிறேன்.

வணக்கம் உங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பார்க்கவும்........ இப்படி ஒரு வசனம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர்களின் தளங்களில் சில நிமிடங்களில் பார்க்கலாம். தகவல் தெரிவிப்பவர் யார் என்று உங்களுக்கே தெரியும். ஆம் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தான். அவரின் தளத்திலிருந்து ஒரு பதிவு
நம் குற்றங்களைத் திருத்த...

நான் குறிப்பிடும் ஐயா புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். குழந்தை மனசுக்கு சொந்தக்காரர் இவரின் நட்பு கிடைத்ததில் மிகுந்த சந்தோசம் எனக்கு. இவரின் எழுத்துக்கள் எதார்த்தங்களை எடுத்தியம்பும் ஆற்றல் கொண்டவைகள் அவர் யார்னு தெரிந்து கொள்ள வேண்டுமா! அவர் தாங்க நாம தமிழ் இளங்கோ ஐயா அவர்கள். அவரின் பதிவு அனைவருக்கும் பயன்படும் பயன்படும் இணையதளங்கள் – 1

காணாமல் போன கனவுகள் தளத்தில் சகோதரி ராஜீ அவர்கள் எழுதிய அவரின் அனுபவப் பகிர்வு மதுரை திருமலை நாயக்கர் மஹால்- மௌன சாட்சிகள்

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறார்கள். சங்க இலக்கிய பாடல்களுக்கு அவர் எழுதும் எளிய மாற்றுப்பாடல் மிக அருமை அவரின் பதிவில் ஒன்று
நம்மையும் அறியான் பிறரையும் அறியான்

தினம் ஒரு நகைச்சுவை, தினசிரி கவிதை என கலக்கி வரும் பகவான் ஜி அவர்கள் சிந்தனைகள் மற்றும் சுறுசுறுப்பு உண்மையில் வியக்க வைக்கிறது
இந்த மறதி வரக் காரணம் ,மனைவியிடம் 'கடி 'வாங்கியதாலா ?

சிட்டுக்குருவியின் சிறுகதை எதார்த்தத்தை அள்ளித்தெரிக்கும் ஆற்றல் கொண்டது. அதன் சிறப்பான சிறுகதைகளில் சிக்கிக் கொண்டவர்களில் நானும் ஒருவன் உளுந்த வடை,,,,,,,,,

உலகில் நடப்பவை என்னுடைய பார்வையில் டிபி.ஆர். ஜோசப் அவர்களின் எழுத்துகளின் மயங்கிய மனங்களில் என் மனமும் முதல்வரிசையில் நிற்கும்
நினைவுகள் சுகமானவை!

தனிமரம் தலைப்பிலும் வித்தியாசம் எண்ணங்களிலும் வித்தியாசம் காட்டும் நல்ல எழுத்தாளரின் ஒரு பதிவு இங்கு என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-நன்றிகள்

காலை எழுந்தவுடன் முதலில் படிக்கும் பதிவு ராஜாராஜேஸ்வரி அம்மாவுடையது தான் என்று பதிவுலக சகோதரிகள் சொல்லிக் கேட்டிருக்கிறேன் ஆன்மிகத்தில் அழகிய நாட்டம் கொண்ட அம்மாவின் அத்தனை பதிவுகளும் அசர வைக்கும் அதில் ஒன்று
சயனத் திருக்கோல அனுமன்

சகோதரி  அருணா செல்வம் அவர்கள் கதம்ப வலை எனும் பெயர் கொண்ட வலைப்பக்கத்தில் எழுதி வருகிறார். அவர் வைத்த பெயர் போலவே பூக்கங்களின் கதம்பங்களே அவரது தளத்தில் பூக்கிறது
வயசுக்கு வரும் பக்குவத்தில் பெண்குழந்தை உள்ள பெற்றோரா? படியுங்கள்.

நெஞ்சை வருடிச் செல்லும் கவிதைகள் அடங்கிய அம்பாளடியாள் தளம் அனைவரும் பின் தொடர வேண்டிய வலைப்பக்கம் அதிலிருந்து ஒரு பதிவு
சுவாசிக்கும் நேரத்திலும் இதைத் தான் மனம் யாசிக்கிறது

நண்டு நொரண்டு எனும் வழக்கறிஞர் ராஜசேகரன் அவர்களின் தளத்தில் அழகான விடயங்கள் ஊர்ந்து வலம் வருகின்றன. நாமும் சென்று பார்ப்போம்
ஜாதி ,மதம், தீண்டாமை X சமச்சீர்கல்வி .

கில்லர்ஜி (பேர கேட்டவுடனே சும்மா அதிருதில்ல... ) எனும் வலைத்தளத்தில் இடப்படும் பதிவுகள் புதிய சிந்தனைகளோடு சிரிக்க வைக்கும் பதிவுகளும் நம்மை ஈர்க்கும் அப்படியொரு பதிவு களத்தூர், கண்ணம்மா

எண்ணங்களை எழுத்தோவியாகமாக தரும் தளிர் சுரேஷ் அவர்கள் ஆன்மிகப்பதிவுகளோடு பல்சுவைப்பதிவுகளையும் தந்து கொண்டிருக்கிறார். அவரின் எண்ணங்கள் எல்லாம் உயர்ந்தவையாக இருக்கும். பின்னூட்டம் இடுவதில் புயல் இவர். இவரின் பதிவில் ஒன்று “இரண்டு ரூபாய்!” “இரண்டு ரூபாய்!”

சாமானியன் கிறுக்கல் கூட சமூகச் சிந்தனைகள் கொண்டதாக இருக்குமா! ஆம் நண்பர்களே அவரின் எழுத்துகள் சமூக நோக்கத்தோடு எழுதப்பட்டிருக்கும் பாலியல் புரிதலற்று புழுத்துபோகும் சமூகம் !

சகோதரி அபயா அருணா நினைவுகள் எனும் தனது தளத்தில் கடவுள் நம்பிக்கை பற்றி கூறியுள்ளார். வாங்களேன் படித்து வருவோம்
கடவுள் நம்பிக்கை

ஜே.பாண்டியன் அவர்களின் பதிவுகளில் ஒரு இளமை துள்ளுவதைக் காணமுடியும். நாளைய உலகின் மாற்றம் இப்படியும் இருக்கலாம் என்பதைத் தெரிவிக்கும் கவிவரிகள் இது நிலவில் நீர்

கடல் கடந்து வளரும் தமிழில் விடுபட்ட ஒரு பதிவர்
டென்மார்க்கில் வாழ்ந்து வரும் கோவை கவி அவர்கள் கனவு தேசம் எனும் பதிவில் எப்படி அமைய வேண்டும் எனும் தன் எண்ணங்களைக் கவியாக்கி தந்திருக்கிறார் அவசியம் பார்க்க வேண்டிய பதிவு
322. கனவு தேசம்.



38 comments:

  1. தொடரும் நட்புகளின் பதிவுகள் மிக அருமை.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் அம்மா

      Delete
  2. தொடரும் நட்புக்களின் தொகுப்பு அருமை...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் சகோதரர்

      Delete
  3. இந்த ''கத்துக்குட்டி'' யைகூட அறிமுகப்படுத்தி இருக்கீங்கே... இது தங்களது பெருந்தன்மையை காண்பிக்கிறது நண்பரே... நன்றி எனசொல்லி முடிக்கமணமில்லை........
    அன்புடன் அபுதாபி பாமரன்.
    KILLERGEE

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சிங்கக்குட்டி கத்துக்குட்டி எல்லாம் அல்ல. என்னோடு நட்பில் இருக்கும் உங்களை அறிமுகப்படுத்தியதில் என்ன பெருந்தன்மை இருக்கிறது சகோ. தங்கள் அன்பிற்கு நன்றிகள். தொடர்ந்த நட்பில் இணைந்திருப்போம். நன்றிகள் சகோ..

      Delete
  4. தங்களின் தொடரும் நட்புகளின் அறிமுகங்கள் அனைத்தும் அருமை! இதிலும் சிலர் வலையுலகம் மூலம் அறிவோம்! சிலரைப் பல வலைத்தளங்களில் பின்னூட்டங்களில் கண்டிருக்கின்றோம் என்றாலும் அவர்களது வலைத்தளம் சென்றதில்லை! காரணம்....நேரம்தான்! எல்லோர் வலைத்தளங்களும் சென்று வாசிக்க வேண்டும் என்ற அவா இருக்கத்தான் செய்கின்றது! இனியாவது செய்ய வேண்டும்!

    எல்லோருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தொடர் வருகை தந்து உற்சாகமூட்டும் வார்த்தைகளால் ஊக்கப்படுத்தியமைக்கு நன்றிகள் ஐயா..

      Delete
  5. காலை எழுந்தவுடன் முதலில் படிக்கும் பதிவு ராஜாராஜேஸ்வரி அம்மாவுடையது தான் என்று பதிவுலக சகோதரிகள் சொல்லிக் கேட்டிருக்கிறேன் ஆன்மிகத்தில் அழகிய நாட்டம் கொண்ட அம்மாவின் அத்தனை பதிவுகளும் அசர வைக்கும் அதில் ஒன்று
    சயனத் திருக்கோல அனுமன்

    எமது வலைத்தளத்தை சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா
      நான் மிகையாக எதுவும் சொல்லி விட அனைத்தும் உண்மை தான். தஙகளின் நட்புக்கும் வாழ்த்துக்கும் அன்பு நன்றிகள்..

      Delete
  6. தொடரும் நட்புகள் அருமை! நானும் தொடரும் நட்புகளும்
    இன்னும் தொடரா நட்புகளும் இங்கு காண்கிறேன். தொடர வேண்டும்...
    காலநேரம் போதாமையால் சிறிது தாமதம்.
    விரைவில் அவர்களிடமும் செல்வேன்!

    அறிமுகப் பதிவர்களுக்கும் உங்களுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. காலமின்மை தான் எனக்கும். இருப்பினும் காலத்தை வென்று நண்பர்களின் படைப்புகளை அறிவோம். கருத்துக்கு நன்றிகள் சகோதரி.

      Delete
  7. சிறந்த அறிமுகங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தி மகிழ்ந்தமைக்கு அன்பான நன்றிகள் ஐயா. தொடர்வோம்..

      Delete
  8. இன்றைய வலச்சரத்தில் எனது வலைத் தளத்தினையும் வலைப் பதிவு ஒன்றினையும் அறிமுகப் படுத்திய அன்புள்ள ஆசிரியர் அ.பாண்டியன் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி எல்லாம் நீங்கள் சொல்லலாமா! வருகை தந்து வாழ்த்தி மகிழ்ந்தமைக்கு அன்பான நன்றிகள் ஐயா. தொடர்வோம்..

      Delete
  9. நட்புக்கு மரியாதை.
    அருமை சகோ.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தி மகிழ்ந்தமைக்கு அன்பான நன்றிகள் சகோ. தொடர்வோம்..

      Delete
  10. தொடரும் நட்புக்கள் வலைச்சரத்தில் சாமானிய தனிமரத்தையும் அவையில் முந்தியிருக்க செய்தமைக்கு நன்றிகள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. சாமானியரா நீங்கள் சாதிக்கப் பிறந்தவர். பல சாதனையாளர்களை உருவாக்கும் ஆற்றல் உங்களுடையது. தங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும் சகோதரர்..

      Delete
  11. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. நட்பு பாராட்டும் நண்பர்களுக்கு என - இன்றைய சரத்தைத் தொடுத்து வழங்கியது அருமை.. நல்ல மனம் வாழ்க!..

    ReplyDelete
  13. அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தி மகிழ்ந்தமைக்கு அன்பான நன்றிகள். தொடர்வோம் சகோ..

      Delete
  14. அன்பின் பாண்டியன் - சுட்டிகளைச் சுட்டி - சென்று - படித்து - மகிழ்ந்து - மறுமொழிகளும் பெரும்பாலான பதிவுகளில் இட்டு வந்தேன் - அறிமுகங்கள் அத்தனையும் அருமை - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      தங்கள் வருகைக்கும் வாழ்த்தி பாராட்டியமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். இப்படியொரு வாய்ப்பைத் தந்த தங்களுக்கே அனைத்து பெருமைகளும் சாரும்..

      Delete
  15. சிறப்பான பதிவர்களோடு எனக்கும் ஒரு இடம் தந்தமைக்கு நன்றி! அசத்தலான பணிக்கு வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தி மகிழ்ந்தமைக்கு அன்பான நன்றிகள் சகோதரர். தொடர்வோம்..

      Delete
  16. வணக்கம்
    சகோதரன்.

    காலங்கள் சில நேரங்களில் மாறும்
    ஆனால் தாங்கள் வைத்துள்ள
    நட்பு என்ற வார்த்தை மாறாது
    என்பதை பதிவின் வழி சுட்டிக்காட்டியுள்ளீர்கள்

    வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தி மகிழ்ந்தமைக்கு அன்பான நன்றிகள் . தொடர்வோம் சகோ..

      Delete
  17. நன்றி... நன்றி சகோதரா...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தி மகிழ்ந்தமைக்கு அன்பான நன்றிகள். தொடர்வோம் சகோதரர்..

      Delete
  18. பல புதிய பதிவுகளை அறிந்துகொண்டேன் நண்பா

    ReplyDelete
    Replies
    1. மிகுந்த நன்றிகள் சகோதரர். தொடர்ந்து இணைந்திருப்போம்...

      Delete
  19. வணக்கம் சகோதரரே!
    உங்கள் நட்பு கிடைத்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி. என் தளத்தையும் நட்புகளின் தளங்களையும் இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. என்றும் தொடரட்டும் நம் நட்பு. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      கண்டிப்பாக நம் நட்பு என்றும் தொடரும். தங்களின் நட்பு கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி. நட்புகளின் தளங்களைப் பகிர்ந்து கொண்டதில் அளவற்ற மகிழ்ச்சி சகோதரி.. கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்..

      Delete
  20. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது