பெண்ணியம் : துளி பார்வை
வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
Posted by
Thamira
at
5:40 PM
5
comments
வேறு வழியே இல்லாமல் நண்பர்களிடமே சரணடைந்துவிடுவது என்று தீர்மானம் பண்ணிவிட்டேன். அதுவும் நம்ப செட்டில் மொக்கைகளுக்கா பஞ்சம்.? நேரடியாக விஷயத்துக்குப் போய்விடலாம். டாப்பிக்குக்குள் போவதற்குள் ஒரு ரெண்டு வரி பில்டப் கொடுப்பது வழக்கம். அதைப்பார்த்துவிட்டு ஓவரா முறுக்கு சுத்துராய்ம்ப்பா இவன் என்று கமெண்ட் வர ஆரம்பித்துவிட்டது. இனி சேவாக் ஸ்டைல்தான்.
கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகள் :
*சீனியர் பதிவுகள் கணக்கில் கொள்ளப்படவில்லை.
*ஒரே நபரின் பல பதிவுகள் பரிசீலனையில் இருந்தாலும் 10க்குள் ஒன்றுக்கு மேற்பட்டவை வந்தால் ஒன்று மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது.
*தேர்வுக்குழுவில் நான் மட்டுமே இல்லை, எனினும் ரிஸ்க் கருதி பிறரது பெயர்கள் வெளியிடப்படமாட்டாது.
*இதில் லஞ்ச லாவண்யங்களுக்கு இடம்தரப்படவில்லை.
*சுமார் 30க்கும் மேற்பட்ட பதிவர்களின் 100க்கும் மேற்பட்ட பதிவுகள் இந்தப்போட்டியில் கலந்துகொண்டன. இறுதிச்சுற்றில் நடுவர்களுக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான்.
இனி டாப் 10..
10. பத்தாவது இடத்தில் அண்ணன் தமிழ் பிரியன். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்தப்பதிவு ஆனந்தவிகடனில் வெளியாக இருந்து கடைசி நேரத்தில் சுயமறுப்பாக வேண்டாம் என்று இருந்த பதிவு. சமீபத்தில் இதன் ரீமிக்ஸ்ஸாக இன்னொரு பதிவு அவர் இட்டிருந்தாலும் ஒரிஜினலுக்கான மதிப்பே தனி.
9. அடுத்த இடத்தை வெல்பவர் தோழர் பரிசல். இந்தப்பதிவில் தனக்காக இல்லாமல் தனது சக பதிவர் தோழர் அதிஷாவுக்கு உதவும்பொருட்டு மெனக்கெட்டு செய்த சேவை புல்லரிக்கவைப்பதாக இருந்தது.
8 . அடுத்த இடம் கார்க்கிக்கு செல்கிறது. இவரின் தலைசிறந்த பல படைப்புகளில் தேர்ந்தெடுப்பது சிரமாக இருந்ததால் கும்ஸாக இது தரப்பட்டுள்ளது. நண்பர்கள் இருவருக்கிடையே நிகழ்ந்த ராபிட் பயர் இன்டர்வியூவை தந்திருக்கிறார்.
7. சீட்டு விளையாட்டைப்பற்றி அண்ணன் வால்பையன் எழுதிய இந்த ஆராய்ச்சிப்பதிவு பெரும் புரட்சியை கிளப்பியது அப்போது. நீங்களும் இதைப்படித்து சூது பற்றி அறிந்துகொள்ளுங்கள். இல்லையெனில் யாராவது உங்களைப்பார்த்து சூது வாது தெரியாதவன் என்று சொல்லிவிடக்கூடும்.
6. தான் பெண் பார்த்த அழகை எல்லோருக்கும் மெயில் அனுப்பி விதவிதமாக வாங்கிக்கட்டிக்கொண்ட அண்ணன் சஞ்சய்யின் இந்தப்பதிவு பிடிக்கிறது ஆறாவது இடத்தை.
5. எல்லோரும் ரொம்ப சீரியஸா திங்க் பண்ணி பதில் சொன்ன ஒரு முக்கியமான தொடர் பதிவில் தைரியமாய் முடிந்த வரை மொக்கை போட்ட வீராங்கனை அக்கா ஸ்ரீமதி வெல்கிறார் ஐந்தாவது இடத்தை.!
4. உடல் நலமில்லாத ஒரு நேரத்தில், டாக்டரை பார்க்கச்செல்கிறார் நமது அனைவரின் அன்புக்குரிய அண்ணந்தம்பி அப்துல்லா. அப்போது அந்த டாக்டரை கலாய்த்த அனுபவம் பெறுகிறது அழகான இந்த நான்காவது இடத்தை.
3. ஆரம்பத்திலேயே அகிலாண்ட நாயகனுக்கு அருமையாக குரல் கொடுத்து நமது அன்பை சம்பாதித்துக்கொண்ட அதிஷா அடுத்த இடத்தைப்பிடிக்கிறார். இதில் தெறிக்கும் JKR ஆதரவுக்குரலை கவனியுங்கள்.
2. நமது கலாய்த்தல் திலகம் குசும்பன் அவர்கள் சக பதிவர்களை வைத்தே நமது அருமைத் தல.. நர்சிமை கலாய்த்த (இது கீழ்க்கண்ட மொக்கை இலக்கணத்தில் அடங்காவிட்டாலும்) இந்தப்பதிவு பெறுகிறது இரண்டாம் இடத்தை.! வாழ்த்துகள் குசும்பரே..
1. ஒரு மொக்கைக்கே அரண்டு போகும் உங்களுக்கு ஒரு மொக்கை விருந்தே வைத்த இந்தப்பதிவுக்கே முதலிடம் வழங்கி நானும் ரவுடிதான் என்பதை பெருமையோடு ஒப்புக்கொள்கிறேன்.
பி.கு 1: நல்ல மொக்கைப்பதிவுகள் எப்படி இருக்கவேண்டும் என சமீபத்தில் ஒரு மூத்த பதிவர் சொன்னபோது இந்த விளக்கம் கேட்க நேர்ந்தது. படித்தவுடன் வாசகர்களுக்கு ஏற்படும் உணர்ச்சியில் சிரிப்பு 5%, எரிச்சல் 40 %, கோபம் 5%, வாழ்க்கையின் மீதே வெறுப்பு 15%, டல் 8%, ஷாக்2%, ஆவ்வ்வ் 25% ஆகியன ஏற்படவேண்டுமாம். ஏற்பட்டதா?
பி.கு 2: இந்த லிஸ்ட்டில் இடம்பெறாதவர்கள் ச்சு..ச்சு.. அழக்கூடாது.! இடம்பெற்றவர்கள் வரிசைப்படுத்தலை சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.. சும்மனாச்சுக்கும் போட்டது.
பி.கு 3: அத்தனை இணைப்புகளையும் படித்து மீண்ட வீரன் யாராவது இருப்பானாயின் அது போற்றத்தக்கது. உடன் தொடர்பு கொள்ளவும். 'மொக்கைகொண்டான்' என்ற பட்டமும், சிறப்புப்பரிசும் காத்திருக்கிறது.
Posted by
Thamira
at
6:54 PM
17
comments
அவனுக்கு பக்தனாக இருக்க எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ தெரியாது, ஆனால் நான் அவனது பக்தன். அவன் ஒரு லெஜன்ட். நிஜமான புரட்சி வீரன். ஆழ அகலமான வளமான சிந்தனாவாதி. தத்துவ மேதை. பிற தத்துவ ஞானிகளைப்போல சிந்தனையை சொன்னதோடு நில்லாமல் முடிந்தவரை வாழ்ந்தும்காட்டிய பகுத்தறிவு பகலவன்.
அவனை ஒட்டி திரு. ஓவியா சொன்ன ஒரு கருத்தை நண்பர் தங்கவேல் மாணிக்கம் இந்தக்குறும்பதிவில் சொல்கிறார். அற்புதமானது அது. இவரது பிற பதிவுகளை இன்னும் படிக்கவில்லை. ஆனாலும் ஒரு சோறு பதம்தானே. இந்த நேரத்தில் வலைச்சர வாய்ப்பை வழங்கிய திரு. சீனா அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில் கிடைக்கும் குறைந்த நேரத்திலும் நான் நினைக்கும் டாப்பிக்கில் பதிவுகளைத்தேடும் பணியில் ஒன்றின் பின் ஒன்றாக சுட்டிகளின் மூலமாக பயணிக்கும் அனுபவம் புதிது. வழியெங்கும் வித விதமான பதிவுகள். அதில் பல முத்துக்கள்.
புதிய கலாச்சாரம் இதழில் வெளியான ஒரு கட்டுரை 'வினவு' வலைப்பூவில் அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ளது. ஆரோக்கியமான சிந்தனை, அதே நேரம்அது வளமான மொழிநடையில் சொல்லப்பட வேண்டும். இப்படித்தான் எனது எழுத்துகள் இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன், அதை நோக்கியே பயணிப்பேன். ஆணாதிக்கம் எங்கே துவங்குகிறது, அறியாமலே அதில் இருபாலரும் உழல்வது குறித்த ஒரு சிறு பார்வை. என்னை சமீபத்தில் மிகவும் கவர்ந்த ஒரு கட்டுரை இது. இது குறித்து மூத்த பதிவர் சேவியரின் அழகான நடையில் லைட்டான, ஆனால் சிந்தனைக்குரிய பதிவு ஒன்றையும் காணுங்கள்.
பெண்விடுதலை குறித்து எழுதியிருக்கிறாரா என தெரியவில்லை எனினும் வேறு சில பிரமாதமான விஷயங்கள் TBCD யின் பதிவுகளில் அழகான நடையில் கண்டேன். கவிஞர் கலி. பூங்குன்றன் எழுதிய மேலும் ஒரு மதிப்புக்குரிய கட்டுரையை தமிழ் ஓவியாவின் இந்தப்பக்கத்தில் காணலாம்.
மேலும் தேடியறிவோம் அறிவுச்செல்வத்தை.! பெண்களுக்கான சம உரிமையும், சுதந்திரமும் பெரிய மனதோடு நாம் வழங்குவது என்றோ, அவர்கள் போராடிப்பெறவேண்டியது என்றோ அல்லாமல் காலங்காலமாய் அதைச்செய்த ஆண்கள் மற்றும் அதை ஒப்புக்கொண்ட பெண்கள் இருவரது தவறேயென அறிந்து அன்பும் ஒழுக்கமும் ஆன அறவாழ்வை சமவாழ்வை வாழ்வோம்.. (ஹைய்ய்ய்யா.. ரொம்ப நாள் கழிச்சு ஒரு அறிவுரை சொல்லிட்டீனே..) வாழ்த்துகள்.. நாளைக்குச்சந்திப்போமா?
Posted by
Thamira
at
7:37 PM
9
comments
நானெல்லாம் எழுதுவதே ஒரு நகைச்சுவைக்குரிய விஷயம்தான் எனினும், உங்களுக்குத் தருவதற்காக தனியாக சில வலைப்பூக்களைத் தேடிப்பார்த்தேன்..
அன்பு நிறைந்த அண்ணன் வடகரை வேலன் அவர்கள் மிகுந்த படிப்பாளி. தனது அனுபவங்களில் இருந்தும், வாசிப்பில் இருந்தும் அவர் தரும் படைப்புகள் ரசனைக்குரியவை. நகைச்சுவையிலும் கலக்குவார். அவரது மிக சமீபத்திய பதிவு ஒன்றில் கொசுக்களை அழிப்பது எப்படி என்பதை கற்றுத்தருகிறார். தவறாமல் போய் கற்றுக்கொள்ளுங்கள். இலவச இணைப்பாக நண்பர் சென்னிடம் எறும்புகளை ஒழிக்கும் வழியையும் கற்றுக்கொள்ளலாம்.
மிக அரிதாக எழுதும் நண்பர் மதி சமீபத்தில் பழம்பெரும் நகைச்சுவை லெஜன்ட் தேவனை நினைவூட்டி எழுதிய இந்தப்பதிவையும் காணுங்கள். நண்பர் டிவிஆரின் இந்த நகைச்சுவைத் தொகுப்பையும் காணுங்கள்.
மேலும் சில புதிய <எனக்குப் புதிய என்று அர்த்தம்> வலைகளையும் மேய்ந்தேன். தங்கமணி டாப்பிக்கில் ஏற்கனவே கலக்கிய பினாத்தல் சுரேஷ், புதுகைத்தென்றல் இவர்களோடு நானும் சமீபத்தில் இணைந்தேன். ஆனால் உண்மையில் இன்னும் பல ஸ்பெஷலிஸ்ட்டுகளும் இருக்கக்கூடும், குறைந்த பட்சம் தொடராக இல்லாமல் அவர்கள் சில பதிவுகளாவது எழுதியிருக்கக்கூடும். அப்படி ஒரு ஆத்திச்சூடியொன்றைக் கண்டேன். இவர் புதியவர் போலத் தெரிகிறது. சாம்பிள் : ஒள - ஒளவையார்: "கூறாமல் சன்யாசம் கொள்!' என்று உபதேசித்த தமிழ்ப் பெருமாட்டி. தொடர்ந்து கலக்குவாரா இந்த ராஜேஷ்?
மற்றொரு புதிய பதிவரான சுரேஷின் இந்த கல்லூரிப்போஸ்டரைப் பார்க்கலாம்.
பிரவுசிங் சென்டரிலிருந்து துரத்தப்படுவதால் பாதியிலேயே இந்தப்பதிவை முடிக்கிறேன். முடிந்தால் இதே டாபிக்கை நாளையும் தொடர்வேன்.
Posted by
Thamira
at
8:48 PM
14
comments
Posted by
Thamira
at
6:49 PM
13
comments
Posted by
Thamira
at
1:43 PM
19
comments