07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, December 16, 2008

முதலில் காதல்..

அது ஒன்றுதான் எப்போதும் முதலில்.. இயல்பு வாழ்க்கை வாழவிடாமல் ஒருவனை அல்லது ஒருத்தியை பரவசத்தில் தள்ளிவிட்டுக் கொண்டேயிருக்கிறது ஒன்று. தரைக்கும் அவர்களது கால்களுக்கும் இடையே நிச்சயம் சிறிது இடைவெளி இருக்கத்தான் வேண்டும். சிலர் வாழ்க்கையில் காதலிக்கவும், சிலர் காதலிப்பதையே வாழ்க்கையாகவும் கைக்கொள்கின்றனர். யார் பெஸ்ட் என்பது இன்னும் கேள்விக்குறிதான். எப்படியும் அனைவரும் அந்தக்காற்றின் கரங்கள் படாமல் தப்புவதேயில்லை என்பதே ஆறுதலான விஷயம்.

நான் அதை எப்படி உணர்கிறேன் என்பதை எனக்குச்சொல்லத்தெரியாது. படித்துப்புரிந்து கொள்வதைவிட படித்து உணர்ந்துகொள்வதையே நான் மிகவும் விரும்புகிறேன். தமிழ் அற்புதமானதாகத்தான் இருக்கவேண்டும். எளிய ஒன்றிரண்டு வார்த்தைகளிலேயே உணர்வுகளை சொல்ல நமக்குதான் தமிழைக்கையாளத் தெரிந்திருக்கவேண்டும். இது பொதுவாக காதலருக்கு கைவந்துவிடுவது அற்புதமானதுதான்.



ஒருத்தி இவ்வாறு சொல்கிறாள்.


அடை மழையில்
குடைப்பிடிக்கத் தெரியாத
குழந்தையெனத் திணறுகிறேன் நீ முத்தம்
தரத்துவங்கியதும்..


காதலைப்பற்றி ஒரு நூறு பக்கங்கள் எழுதினாலும் இவ்வ‌ள‌வு அற்புத‌மாக‌ உண‌ர்வுக‌ளைச் சொல்லிவிட‌முடியுமா? இந்த‌ வ‌ரிக‌ளைக்க‌ண்ட‌வுட‌ன், க‌ணினியை நிறுத்திவிட்டு வேறு வேலைக‌ளைப் பார்க்க‌ப்போய்விட்டேன். குதூக‌ல‌ம்கூட‌ இவ்வ‌ள‌வு பாதிக்குமா என‌ விய‌ந்தேன்.


பூகோளம் வரைய
வளையல் திருடிக்கொள்கிறேன்.
என் உலகம் வரைவது
உன்னால் மட்டுமே
சாத்தியமாதலால்..


என்று தேவதையை அர்ச்சனை செய்ய துவங்குகிறான் இன்னொரு தாசன். இதைவிட‌ வேறு வார்த்தைக‌ள் இருக்குமா காத‌ல் தேவ‌தையை பூஜிப்ப‌த‌ற்கு?


ரோஜா பறிக்கையில்
உன் விரல் காயப்படுத்தியதற்காக
வெட்டப் போனேன்!
தொட்டுவிடும் ஆசையில்
குத்திவிட்டதாய்
அழுது தொலைத்தது செடி!


என்று இய‌ற்கையையும் காத‌லையும் செம்புல‌ப்பெய‌ல் நீர் போல‌ க‌ல‌க்கிறான் ஒரு காத‌ல‌ன். உலர்ந்துகொண்டிருக்கும் காதலியின் உடைளைச்சுற்றும் பட்டாம்பூச்சிகளை கேலி செய்யும் ஒரு காதலன், வீரியமான காதல் வாழ்க்கையை முடிந்தவரை அப்படி அல்ல என வரையறுக்க முயன்று தோற்றுக்கொண்டேயிருக்கிறான் ..இப்ப‌டி.

நான் உன்னை அழைத்துப்போகிறேன் என்றால்
நீ வரும்வரை அழைத்துப்போகிறேன்- பின்னர்
உன் நினைவுகளோடு போவேன்
நான் உன்னோடு வருகிறேன் என்றால்
நீ சொல்லும்வரை வருகிறேன்- பின்னர் உன் சுவடுகளில் நடப்பேன்
நாம் சேர்ந்தே போகலாம் என்றால்
வா முடிவிலி வரைக்கும் போவோம்..



காத‌லின் பின்விளைவுக‌ளை இப்ப‌டியாக வியப்போடு ஆர‌ம்பித்து இறுதியில் அதிர‌ வைக்கிறான் இன்னொரு காத‌ல‌ன். இத‌ன் தாக்க‌ம் அசார‌ண‌மான‌தென்றே நான் க‌ருதுகிறேன்.



எவ்வளவு அழகாக
உன்னால் காதலிக்க முடிந்ததோ
அவ்வளவு கொடூரமாக
அக்காதலை முறித்துக் கொள்ளவும் முடிந்திருக்கிற
உன் மனசின் தன்மையை
எண்ணி வியக்கிறேன் வலிகளோடு..



டிஸ்கி : கொஞ்சம் பெருசா எழுதவே பயம்மா இருக்குதுபா. பார்த்துட்டு ஓடிப்போயிடுவீங்களே.. மேலும் கொடுக்கப்பட்டுள்ள கவிதைகள் அந்தந்த கவிஞர்களின் ஒரு சோறு பதம் போன்றவைதான். செல்லுங்கள்.. ஈர்க்கும் காதல் கடலில் மூழ்குங்கள். வாழ்த்துகள்.! யப்பா.. மறக்காம ஓட்டும் போட்டுட்டு போங்கப்பா.. புண்ணியமா போகட்டும்.

13 comments:

  1. காதலே அழகுதான்.. நலா சொன்னிங்க சகா..

    ReplyDelete
  2. ஓட்டு போட்டேன்.. தமிலிஷைக் காணோம்.. அப்புறம் உங்க ஓட்டே இன்னும் போடலையே

    ReplyDelete
  3. நல்ல பதிவு.... நல்ல கவிதைகள்.. நல்ல அறிமுகம்... வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  4. நல்ல பதிவு. எனக்கு தெரியாத பல பதிவர்கள் இவர்கள். தெரிய வைத்ததற்கு நன்றி:)

    ReplyDelete
  5. நன்றிங்க்னா..
    :)
    இங்கு குறிப்பிட்டு இருக்கும் அத்தனை பேரும் நம் நண்பர்களே என்பதில் பெருமை..

    ReplyDelete
  6. காதல் வயப்பட்டாலே உளறலும் துவங்கிவிடும் என்று பலர் கூறுவர்.

    உளறல் என்பது செய்ய முடியாததை உனக்காக செய்வேனடி(அல்லது செய்வேனடா) என்று மார்தட்டிக்கொள்வது அல்லது, இது போல் ரோஜாச்செடியையின் முட்களின் மேல் கோபம் கொள்வது என்று பலவகைப்படும்.

    ஆனால் இவை உளறல் இல்லை. காதலித்தவர்களுக்கு (காதலிப்பவர்களுக்கு) மட்டுமே தெரியும், காதல் கொண்ட உள்ளம் அன்பு என்ற பெரும் போர்வையால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது.

    அதான் சொல்லிருகாங்க

    காதல் கொண்ட உள்ளம் அது குழந்தை போல!

    செல்லமாய் கோபிக்கும்
    இல்லாததைப் பேசும்
    சிணுங்கும்
    காதலியின்/காதலனின் மகிழ்ச்சிப்புன்னகையை அல்லது வெட்கத்தைக் காண என்னவெல்லாமோ சொல்லும் செய்யும்.

    காதலர்களின் கால் தடங்கள் நிச்சயம் மேலே தான் இருக்கும். சுட்டெரிக்கும் வெய்யிலிலும், இளவேனிற் காலத்துப் பூவின் ரசனையோடு மனம் துள்ளும்

    காதலில் வீழ்ந்த பின்னர் உலகில் வேறு ஆசை இருப்பதில்லை

    காதலில் ஒழிந்த பின்னர் வேறு ஆசைகள் நிறைவேறினாலும் அது ருசிப்பதில்லை.

    எனக்குப் பிடித்த தீம் காதல்.
    உங்கள் பதிவை ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
  7. காதலைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாமே... ஒரு பதிவு போதாதே.. :)

    ReplyDelete
  8. காதல் மாதிரி இருக்கய்யா உன் பதிவு (நல்லதா கெட்டதான்னு நீயே முடிவு பண்ணிக்க )
    :))

    ReplyDelete
  9. என்னடாது.. லவ்வு பத்தி பதிவு போட்டா கூட கூட்டம் வரமாட்டேங்குது? என்ன ஒலகமடா இது?

    நன்றி கார்க்கி.!
    நன்றி மகேஷ்.!
    நன்றி மாங்கனி.!
    நன்றி MSK.!
    நன்றி சக்திபிரபா.! (நல்லா உளறியிருக்கீங்க..)

    நன்றி தமிழ்.! (அது எங்களமாதிரி சின்னப்பசங்களுக்குதான், உங்களுக்கெதுக்கு?)
    நன்றி அப்துல்.! (ஊருக்கு எப்போ கிளம்புறீங்க?)

    ReplyDelete
  10. காதல்னு சொன்னா படிக்காமலா இருப்போம்...:)

    ReplyDelete
  11. அட! இதுல நாமளும் இருக்கோமா...

    நன்றி அண்ணன்...

    ReplyDelete
  12. Thamizhmaangani said...
    \\
    நல்ல பதிவு. எனக்கு தெரியாத பல பதிவர்கள் இவர்கள். தெரிய வைத்ததற்கு நன்றி:)
    \\

    என்னையத்தெரியாதுன்னு சொல்லிட்டியே ஆத்தா...:)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது