07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 7, 2008

இசையில் தொடங்குதம்மா..

'சையில் தொடங்குதம்மா...' என்ற பாடல், 'ஆதியில் ஒலி இருந்தது' என்ற பைபிளின் வாக்கியத்தோடு ஒக்கிறது. 'ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு' என்கிறது உலகப் பொதுமறை. இசை பற்றி, வைகோ அவர்கள் கூறுவது இங்கே...! தாலாட்டில் இருந்து ஒப்பாரி வரைக்கும் நம் வாழ்வில் இசை இல்லாது நிகழ்வுகள் இல்லை. பரமஹம்ச யோகானந்தா 'ஒலி அலைகள் தான் உலகமே' என்று சொல்கிறார்.

இசையைப் பற்றி சில பதிவுகளைப் பார்ப்போம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, இசை என்றால் திரைத்தமிழிசை தான். கானா பிரபா இனிய நல்ல பாடல்களை வரிசையிட்டுத் தம் கருத்துக்களைச் சொல்லிப் பாடல்கள் கூறுகிறார்.

பாடும் நிலா பாலுவின் காலத்தால் அழியாத திரைப் பாடல்களை வரிசையிட்டு வழங்குகிறார்கள் கோவை ரவி மற்றும் சுந்தர்.

கானக் கந்தர்வன் கே.ஜே.யேசுதாஸின் இனிய மயக்கும் பாடல்களைத் தொகுத்து வைக்கிறார்கள், இங்கே!

இனிமையான நாதஸ்வரப் பாடல்களை மார்கழி மகோத்சவத்தில் வழங்குகிறார்கள், இங்கே!

அமிழ்தினிமையான கண்ணன் பாடல்களை இங்கே பாடுகிறார்கள்!

செயபாலின் கூடையில் தமிழும், இசையும் இணைந்த மாயம் குறித்து அலசப்படுகின்றது.

யாழ் சுதாகரின் பதிவில் பல கடிதங்களைக் காண்கிறோம்.

நாகார்ஜூனன் 'திணை இசை சமிக்ஞை'யில் இசை பற்றியும் சொல்லுகிறார்.

ன்னும் நான் கண்டிராத, நான் குறிப்பிடாத ஆயிரம் நூற்றுக்கணக்கான தளங்கள் தமிழில் இருக்கலாம். அவற்றைச் சொல்லாததன் ஒரே காரணம், நான் மிகக் குறைவாகவே வலையுலகின் மேய்பவன் என்பது மட்டுமே! மற்றபடிக்கு வேறு எந்த காரணங்களும் இல்லை. நண்பர்களின் பதிவுகளைக் குறிப்பிடாதது, எந்த காரணங்களை முன்னிட்டும் அல்ல என்பதை அறிவார்கள்.

சென்ற வாரம் முழுக்க நான் எழுதிக் கொள்ள முடிவு செய்த போது துறை வாரியாகப் பிரித்துக் கொண்டு, அதன் படியே எழுத வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அதை ஓரளவிற்காவது பூர்த்து செய்திருக்கிறேனா என்பதை, நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

வாய்ப்பு கொடுத்த சீனா ஐயா அவர்களுக்கும், பின்னூட்டங்கள் கொடுத்துப் பாராட்டிய அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி கூறி விடை பெறும் முன், எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலில் இருந்து முதல் சில வரிகள்,

உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
தொடர்கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...!



வணக்கம்.

***

படம் உதவி நன்றி :: http://farm1.static.flickr.com/28/92452265_6efaec82ec.jpg

6 comments:

  1. ganakandharvan blogayum kothatharuku manamarntha nandrigal.

    ReplyDelete
  2. நண்பர் வசந்த்துக்கு....
    வலைச்சரத்தில் தங்கள் கடைசிப் பதிவின் தலைப்பு..'....தொடங்குதம்மா...'...குறும்பைய்யா உமக்கு.
    கடந்த ஒரு வாரத்தில் பலதரப்பட்ட வலைப்பூக்களை அறிமுகப்படுத்தி, வலைச்சர ஆசிரியாராக தங்களின் பங்களிப்பை நிறைவாகச் செய்துவிட்டீர்கள்.(ரக வாரியாகப் பிரித்து மேய்ந்து விட்டீர்கள்...)
    நன்றி....

    ReplyDelete
  3. ரொம்ப நல்ல, பயனுள்ள வாரமாக இருந்தது. நன்றி...

    ReplyDelete
  4. அன்பு புதுகைத்தென்றல், தமிழ்ப்பறவை, கபீஷ்...

    நன்றிகள்...!

    ReplyDelete
  5. வசந்தகுமார் சார் டிசம்பரில் பதிவு போட்டுள்ளீர்கள் இன்று தான் தங்களின் இந்த பதிவை பார்த்தேன். எங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்துள்ளீர்கள் இசை ஒரு சமுத்திரம் இசையுலக ஜாம்பவான்கள் வழங்கிய சிறு சிரு துளிகளை நாங்கள் நண்பர்களூடன் பகிர்ந்து கொள்கிறோம் அவ்வளவே அதில் எங்களூக்கு மிக்க மகிழ்ச்சியே. இதோ இந்த சுட்டியில் மற்ற ஜாம்பவான்களின் பாடல்களும் ஒலித்தொகுப்புக்களாக நேரம் கிடைக்கும் போதி விஜயம் செய்து கேட்டு மகிழுங்கள். http://paasaparavaikal.blogspot.com/

    ReplyDelete
  6. தேனிகிண்ணத்திலும் எனது ஒலித்தொகுப்புகள் உள்ளான "வானொலி" என்று தேடி பாருங்கள் உங்கள் ஆதரவுக்கு நன்றி! நன்றி!! http://thenkinnam.blogspot.com/

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது