07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, December 10, 2008

அழுவாச்சி பதிவர்கள்!!!

அழுவாச்சி பதிவர்கள் அப்படின்னா அழுது வடியற பதிவுகள் போடறவங்க இல்லே.... தங்கள் நகைச்சுவை உணர்வால் படிப்பவர்களை சிரிக்க வைத்து, அவர்கள் கண்ணிலிருந்து கண்ணீர் வரவைப்பவர்கள்.


---------


நகைச்சுவைன்னு வந்தப்புறம் இவரை சொல்லலேன்னா, என்னை நானே மன்னிக்க மாட்டேன் (!!!). தன் அனுபவங்களை அதிரடி பட்டாசாக சொல்லி படிப்பவர்களை நெடு நேரம் சிரிக்க வைப்பவர். பல முறை அலுவலகத்தில் என் சீட்டில் சிரிக்க முடியாமல் எழுந்து போய் ஓய்வறையில் தனியாக சிரித்திருக்கிறேன். நன்றி அபிஅப்பா.


இவரோட இந்த பதிவை படிச்சபிறகு, நான் அடுத்த நாள் வெளியிடணும்னு வெச்சிருந்த நகைச்சுவை (??) பதிவை 'delete' பண்ணிட்டேன். அந்த பதிவுக்கு முன்னால், என்னோட அந்த பதிவை படிச்சவங்க கண்டிப்பா என்னை திட்டியிருப்பாங்க. அவ்வ்.


இவரோட எல்லா பதிவுமே சூப்பர்தான் - இருந்தாலும் சட்னு (not சட்னி) நினைவுக்கு வருவது இது, இது மற்றும் இதுதாங்க.


----------


அடுத்தது இவரு. பதிவு போட்டாலும் சரி, மத்தவங்க பதிவுலே கமெண்ட் போட்டாலும் சரி - எல்லோரையும் பயங்கரமாய் கலாய்ப்பார். இவரோட பதிவு தலைப்பே கலாய், கலாய் அப்படின்னு வெச்சிருக்கார். நம்ம குசும்பன் அண்ணாச்சிதான்.

நண்பர் நர்சிம்மை கலாய்த்து இவர் போட்ட பதிவு இங்கே.
பள்ளியில் படிக்கும்போது (!!!) இவர், 'படம் வரைந்து பாகங்களை குறி' அப்படிங்கற கேள்வியில் நிறைய மதிப்பெண்களைப் பெற்றியிருப்பாருன்னு நினைக்கிறேன். படம் வரைந்து கலாய்ப்பதில் இவரை விட்டால் வேறு ஆளே இல்லை... சாம்பிளுக்கு இங்கே மற்றும் இங்கே. இதுவும் ஒரு சூப்பர் அரசியல் கலாய் பதிவு.


------------


நாமக்கல் சிபி:


ரசிச்சி சிரிக்க வெக்கறதுலே இவரு மன்னரு. லேட்டஸ்டா போட்ட இந்த மீள்பதிவு இவரோட கற்பனைத் திறனுக்கு ஒரு சான்று. சில சமயம் கவிஞராய் அவதாரம் எடுத்துடுவாரு. இவரு எழுதிய ஒரு கொலவெறி கவிதை இங்கே. இணையத்துலே ஒரு காலத்துலே - பகிரங்க கடிதம் - சீசன் ஓடிட்டிருந்தபோது - இவர் எழுதிய ரெண்டு பயங்கர கடிதங்கள் இங்கே மற்றும் இங்கே.


-----------


'மீ த ஃபஷ்டு' - அப்படின்ன உடனே எல்லாருக்கும் தெரிஞ்சிடும் இவங்க யாருன்னு. எல்லார் பதிவுலேயும் போய் முதல் பின்னூட்டம் போடறவங்க. இவங்க பதிவுலே பின்னூட்டங்களைப் படிச்சா, அதுவே ஒரு பதிவு மாதிரி இருக்கும் - அப்படியாக பேச்சு வார்த்தைகளை வளர்த்துக்கிட்டே போவாங்க (பாஸிடிவ்வாத்தான் சொல்றேன்பா!!!). கதை, கட்டுரை, கவிதை(!!) இப்படி எல்லாத்துலேயும் கலந்துகட்டி அடிப்பாங்க.


கவிதை இங்கே மற்றும் இங்கே... இதையும் படிச்சி பாருங்க (மூச்சை இழுத்து பிடிச்சி படிங்க.. எல்லாமே பெரிய பெரிய வாக்கியமா இருக்கும்...!!!).
மோகன் பதிவுலே இவங்க எழுதின இந்த கட்டுரை இவங்க கொலவெறியின் உச்சக்கட்டம்னு சொல்லலாம்.


-----------


நக்கலுக்கும் நையாண்டிக்கும் பேர் போனவரு(?) இவரு. எல்லா பதிவுலேயும் இவரோட தொடல் (டச்) இருக்கும். சென்னைக்கும் பெங்களூருக்குமிடையே இவரது பயணம் பற்றிய பதிவுகள் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். அவை இங்கே, இங்கே மற்றும் இங்கே. சாருவைப் பத்தி இவரோட புகழ் பெற்ற பதிவு இங்கே.


இவரோட திருமண நாள் பதிவு சூப்பர். இனிமே வருடா வருடம் இவரோட திருமண நாள் பதிவு மட்டும் கண்டிப்பா படித்தாகணும்னு முடிவே பண்ணிட்டேன்... ஏன்னு கேக்கறீங்களா??? .. அவ்வ். என்னையும் அதே தேதியில்தான் மாட்டிவிட்டாங்க....

----------

நாளைய பதிவு -> காலையில் பாடும் ராகங்கள் என்ன?

17 comments:

  1. காலையில் பாடும் ராகங்கள் என்ன?//

    பொதுவா காபி ராகம்னாலும் சில வீடுங்களில் பிள்ளைகள் முராரி ராகம் பாடுவாங்க.

    வேலை அதிகம் இருந்தா தங்கஸ் சோக ராகம் பாடுவாங்க.

    ரங்கமணிகள் மட்டும் ஆனந்த ராகம்

    ReplyDelete
  2. சூப்பர் கலெக்ஷன்ஸ்:):):) அதிலையும் பிளாக் பத்தி தெரிஞ்சப்ப டுபுக்கு அண்ணன், அபி அப்பா மற்றும் அம்பி அண்ணா இவங்களோட பதிவுகள நான் ரெண்டே நாள்ல படிச்சு முடிச்சேன்:):):)

    அம்பி அண்ணனோடதுல சூலம் இல்லா பத்திரக்காளியச் சொல்றதா, ரெண்டே பேர் கலந்துக்கிட்ட மாபெரும் பிளாகர்கள் மாநாடைச் சொல்றதா, கல்யாணம் பிக்சானதப் பத்தின மேட்டரைச் சொல்றதா(இதையும் கிட்டத்தட்ட இவரோட குவிஜு போஸ்டுகளாட்டாம் போட்டிருப்பார், யாருன்னு புரியாம படிச்சப்போ செமக் கடுப்பு எனக்கு:):):)), சூர்யா பொறந்தப்புறம் போட்ட பதிவை சொல்றதா, வாஷிங் மெஷினைச் சொல்றதா:):):)

    அபி அப்பாவோடதுல நீங்க குறிப்பிட்டைகளோட மானாட மயிலாடப் பத்தின நக்கல் பதிவு, பழனி போன பதிவு, பொங்கல் சாப்பிடறதப் பத்தின பதிவு, அபுதாபி பதிவுகள்னு சான்சே இல்ல:):):)

    ReplyDelete
  3. என்னையும் ஆட்டையில் செத்ததுக்கு ரொம்ப நன்றி:):):) அமவுண்ட் உங்க அக்கவுண்டில் போடப்பட்டது:):):)

    //கதை//
    ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், நான் எழுதுன எதை கதை கேட்டகிரில சேக்கறீங்க? எனக்கு யோசிக்கவே வராது, இதுல நானாவது கதையாவது:):):)

    ReplyDelete
  4. குட் கலெக்‌ஷன்!

    ReplyDelete
  5. இந்தப் பக்கத்தையே ஃபேவரைட்டில் சேமித்து வைக்கலாம்போல... கலக்கல் சத்யா!!!

    ReplyDelete
  6. சூப்பர்....

    காலையில் சாப்பிடும் காரங்கள் என்ன?

    ReplyDelete
  7. உங்கள சேத்துக்காதது அவையடக்கத்துனாலயா?:))

    ReplyDelete
  8. நல்ல தகவல் ச்சின்ன பையன், நீங்க ரெம்ப ப்பெரிய பையன்

    ReplyDelete
  9. வாங்க ராப் -> அவ்வ்வ். நாம பேசின அமௌண்ட் வரலியே???? சரியாத்தானே எழுதியிருக்கேன்.....:-((

    வாங்க புதுகைத் தென்றல் -> ஆஆஆ... ராகங்கள் பதினாறு உருவான வரலாறு - இதானா???? :-)))

    வாங்க தமிழ் பிரியன், பரிசல் -> நன்றி...

    ReplyDelete
  10. வாங்க மகேஷ்ஜி -> காலையில்தான் 'பல' காரங்கள் சாப்பிடணும்போல தோணும். ஆனா வெறும் ப்ரெட்/ஜாம்தான் கொடுப்பாங்க வீட்லே... :-(((

    வாங்க நட்சத்திர நாயகரே -> அட.. என்னையே வாழ்த்தி பாடி பரிசும் பெற நான் என்ன அரசியல்வாதியா????? - அப்படின்னு கேப்பேன்னுதானே நெனெச்சீங்க???? நான் கேக்கமாட்டேனே.... :-)))

    வாங்க நசரேயன் -> அவ்வ்.. நன்றி...

    ReplyDelete
  11. அட இந்த வாரம் ஆசிரியர் அண்ணாத்த நீங்களா??

    ஊராண்ட போய் இன்னிக்குதான்பா வந்தேன். சாரி பார் தி லேட்டுபா :)

    ReplyDelete
  12. அருமை அருமை அருமை

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது