07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, December 27, 2008

தெரிந்ததும் / யாததும்


வரலாறு என்பது மனிதர்கள் வாழ்ந்த விதத்தை சொல்வது. வாழ்ந்த விதம் தெரிய, 
உள்ளே பதிய, வாழும் வழி புரியும். 
அன்போடு இருப்பது தான் ஆன்மீகம். அன்பும் ஒருமுகப்பட்ட அக்கறையும் இணைபிரியாதவை.  எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு அக்கறை இருக்கிறது,  எங்கு அக்கறை இருக்கிறதோ 
அங்கு அன்பு இருக்கும்.
நான் அக்கறை மிகுந்தவர்களைப் பற்றி, அக்கறையோடு இருக்க வேண்டும் என்பதை பற்றி, அக்கறையோடு எழுதுகிறேன் அவ்வளவே.  அங்கு அன்பு தானாக இருக்கும்.  
அன்புதான் ஆன்மீகம்.        

நமக்கு தெரிந்த பதிவர்களின் தெரியாத வலைத்தளங்களை சென்ற பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன்.  இப்போது தெரிந்த பதிவர்களின் பதிவுகளில் எனக்குப் பிடித்த பதிவுகளை கொடுத்திருக்கிறேன்.

பாலகிருஷ்ணன் - ஊடகங்களில் செய்தி வருவதற்கு முன் இவர் பிரசுரித்த படங்கள் இவரின் தளத்தில் காணக்கிடைத்தது.

நான் இத்தளத்தில் வெளியிடப்படும் படங்களின் ரசிகன்.  படம் மட்டுமல்லாது பிற விசயங்களைப் பற்றியும் பதிவிடுவார்.

இவரும் ஒரு சிறந்த புகைப்படக்காரர்.  அவரைப்பற்றிச் சொல்ல இந்தப் படமொன்றே போதும்.


பல வகை முகமூடிகளை வரைந்திருக்கும் இந்த ஓவியரின் கேன்வாஸ் ஓவியங்களும் நன்றாக இருக்கும்.  பெரும்பாலான ஓவியங்கள் பறவைப் பார்வையிலேயே இருக்கும்.

நண்பர் பிரபு தான் எப்போதுமே அனைவருக்கும் பிடித்த பாடல்களை பதிவிடுவார்.

பாலா'ஜி' - பல தளங்களில் எழுதிக் கொண்டிருந்தாலும், தற்செயலாக இத்தளத்தை காண நேர்ந்தது.  பாடல்களை துல்லியமான ஒலித்தரத்தில் கேட்கலாம்.   தரவிறக்கமும் செய்யலாம்.

கேட்பதற்கரிய பாடல்கள் பலவிருக்கும் இத்தளத்தில் எனக்கு பிடித்த பாடல்.

கதைகளினூடாடும் வாழ்க்கை யில் தொடங்கிய இவரின் அறிமுகம் ஒரு புத்தக விமர்சனப் பதிவின் மூலம் எனக்கு கிடைத்தது.  பின்னூட்டத்தில் புத்தகத்தை கொடுத்தால் படித்துவிட்டு பதிவுக்கு கருத்து சொல்கிறேன் என சும்மா சொன்னேன்.  உண்மையாகவே புத்தகத்தை எடுத்து கொண்டு வந்து கொடுத்தார்.


எழுத்தாளர் கே.பி.கேவை, அவர் மசால் தோசை சாப்பிடும் போது :) முதன் முதலில் சந்தித்ததாலோ என்னவோ, ஈ.வெ.சா மற்றும் கே.பி.கேவுடனான என் சந்திப்புகள் பெரும்பாலும் உணவகங்களில் தான்.

இந்த எழுத்தாளர் கதை எழுதுவாரென்று நமக்குத் தெரியும்.  அவருடைய கவிதையை படித்திருக்கிறீர்களா? - ரயில் பயணம்

அனுபவப் பதிவுகள், கும்மி், மொக்கையுமாக வலையுலகத்திலிருந்த இந்த நண்பர் தற்போது பிரபல பத்திரிக்கையில் பொறுப்பாக கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்.  இவர் பதிவுகளிலிருந்து எனக்கு பிடித்த சில.

மிருகதேசம், மாநகரம், கோக்

எழுத்தாளர் வண்ணதாசனை (கல்யாண்ஜி) நமக்கு தெரியும்.  அவருடைய தந்தையுடன் ஒரு நேர்காணல் நடத்தியிருக்கிறார்.

எப்பவுமே கோக்கு [கோக் இல்லை :) ] மாக்காக எழுதும் குட்டபுஸ்கி, தன் அனுபவம் ஒன்றை நகைச்சுவையாக தந்திருக்கிறார்.


ஜகஜ்ஜால கில்லாடிகள் என்ற பெயரில் விளம்பர உலகத்தைப் பற்றி சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்.
பகுதி 1, 2, 3, 4, 5, 6
சமீபத்தில் (நெசமாவே சமீபத்தில்...) கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்தில், யுவகிருஷ்ணாவின் புத்தக அறிமுகத்தின் பின் நடந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்ட விளம்பரம் - அமுல்.  இந்த விளம்பரம் தடை செய்யப்பட்டிருக்கிறது.

குருவிகளுடன் ஒரு பயணம் - எச்சரிக்கை - ஆங்கிலப்பதிவு.
பதிவை விட பதிவரை கும்மு, கும்மென்று கும்மிய நம் தமிழ் பதிவர்களின் கருத்துக்களையும் படிச்சிடுங்க.


ஒரு கொள்ளை அன்புக்கும்
சின்னச்சின்ன அன்புகளுக்கும்
வித்தியாசம்
ஒரு மலைமுகட்டிலிருந்தும்
சிலபல உரையாடல்களிலிருந்தும்
குதிப்பதுதான்.

குந்தவை எழுதிய ஒரு பதிவு.
பயண ரசிகன் நான்.  பயணப்பதிவுகளை விரும்பிப் படிப்பேன்.  அந்த வரிசையில் இந்தப் பயணப்பதிவு நல்ல படங்களுடன் இருக்கிறது.

பயணப்பதிவுகளைச் சொல்லும் போது இவரைத் தவிர்த்து பார்க்க முடியாது.

பெரும்பாலான பயணப்பதிவுகள் அதிகமான படங்களோடு, குறைவான விசயங்களோடு முடிந்து விடுகிறது.  ஆனால் இந்த நண்பரின் பதிவும்   அவர் கொடுத்த பயண விவரங்கள், தங்குமிட தொடர்புகளுடன்  என் படகுப்பயண வீட்டுப்பயணம் நிறைவேறியது.

6 comments:

 1. படங்கள் அனைத்தும் அருமை...வள்ளுவர் கோட்டம் படங்களும் சூப்பர்! நல்ல தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் வெயிலான்!

  ReplyDelete
 2. அந்த எழுத்தாளருக்கு சல நாட்களாகவே பெண்டு நிமித்தி வேலை வாங்குறாங்களாமே!

  ReplyDelete
 3. // வள்ளுவர் கோட்டம் படங்களும் சூப்பர்! //

  அதில் ஒரு சிறுமி யானை சிற்பம் மேலே அமர்ந்திருக்கும் படத்தை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். மிக அழகு.

  நன்றி சந்தனமுல்லை!

  ReplyDelete
 4. // அந்த எழுத்தாளருக்கு சில நாட்களாகவே பெண்டு நிமித்தி வேலை வாங்குறாங்களாமே! //

  தப்பு! தப்பு! அந்த எழுத்தாளர் சில நாட்களாகத் தான் வேலை செய்கிறார்.

  நன்றி அருண்!

  ReplyDelete
 5. ஆகா என்னோட பதிவையும் ரசித்த உங்களுக்கு நன்றிங்கோ

  ReplyDelete
 6. ஆகா என்னோட பதிவையும் ரசித்த உங்களுக்கு நன்றிங்கோ

  குந்தவை

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது