ஜே கே ரித்தீஸுக்குப் போட்டியாக ஒரு கும்பல்!!!
அகிலாண்ட நாயகன் தமிழகத்தின் விடிவெள்ளி அண்ணன் ஜே.கே.ரித்தீஸுக்குப் போட்டியாக நம் இணையத்தில் ஒரு கும்பல் அலைகிறது. அது வேறே யாரும் இல்லீங்க நம் வருங்கால முதல்வர் க்ரூப்தான்.
ஒன்பது பேர் சேர்ந்து இந்த க்ரூப்பில் இருந்தாலும், மூன்றாவது அணியைப் போல் இவங்களும் தங்கள் முதல்வர் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நம்ம ஊர் அரசியல்வாதிகள் 2011, 2016 தேர்தல்களையே குறிவைத்து காய் நகர்த்தினால், இந்த அணி அதையும் தாண்டி 2030 தேர்தலை குறிவைத்து வேலை செய்கிறார்கள்.
மக்கள் பிரச்சினைகளான மின்வெட்டு, காவிரி நீர் இதையெல்லாம் 2030ல் எப்படி தீர்ப்பது என்று தீர்மானமே போட்டிருக்கிறார்கள்.
என்னதான் தமிழகத்தின் முதல்வர் இடத்துக்குப் போட்டி போட்டாலும், உலக அரசியலையும் ஊன்றி கவனித்து, ஆலோசனை சொல்லக்கூடிய தகுதி இந்த க்ரூப்புக்கு இருக்கிறதென்று இந்த, இந்த பதிவுகளைப் பார்த்தால் தெரியும்.
எல்லா அரசியல்வாதியும் தேர்தலுக்கு முன்னாலே தமிழகம் முழுவதும் சூறாவளிப் பயணம் செய்வதுபோல், இவங்களும் ஒவ்வொரு மாவட்டமா போய் தங்களை அறிமுகப்படுத்திக்கறாங்க... தஞ்சை, கொங்கு, நெல்லை - இன்னும் பல மாவட்டங்களுக்கும் செல்ல இருக்காங்க...
சமீபத்தில்தான் இந்த அணி துவங்கியிருப்பதால், மத்திய மாநில தேர்தல்கள் நெருங்க நெருங்க, (பதிவுகளில்) சூடு பிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.
----------
இப்படியாக அண்ணன் ஜே.கே.ரித்தீஷ் சங்கத்துக்கு எதிரா நிறைய பேர் வேலை செஞ்சாலும், சங்கத்தில் புதுசா நிறைய பேர் சேந்துக்கிட்டும் இருக்காங்க.
சமீபத்துலே கொ.ப.சே-வாக சேர்ந்தவர் இவர்தான். அதற்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் இங்கே இருக்கு.
இவரோட இந்த பதிவு இவரோட நகைச்சுவை உணர்வை எடுத்து காட்டுது.
அறிவாளிங்களுக்கே உரித்தான பிரச்சினைகளைக் குறித்து இவர் போட்ட பதிவும் நல்லாயிருந்துச்சு. ஹிஹி.. எனக்கு இந்த மாதிரி அடிக்கடி பிரச்சினை வரும். (என்ன பண்றது.. சமாளிக்க வேண்டியதுதான்...!!!)
---------
நாளைய பதிவு :-> அழுவாச்சி பதிவர்கள்...!!!
|
|
கலக்கறீங்க.
ReplyDeleteசுட்டிகளைப் படித்தேன், மிக ரசித்தேன்
//ஒன்பது பேர் சேர்ந்து இந்த க்ரூப்பில் இருந்தாலும்,//
ReplyDeleteநீங்களும் ஒருத்தர் தானாம அதுல
//தங்கள் முதல்வர் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை//
ReplyDeleteஅதுவும் நீங்க தானாமா
//இந்த அணி அதையும் தாண்டி 2030 தேர்தலை குறிவைத்து வேலை செய்கிறார்கள்.//
ReplyDeleteஅதுக்கு பிள்ளையார் சுழியே நீங்க தானாமே
//நாளைய பதிவு :-> அழுவாச்சி பதிவர்கள்...!!!//
ReplyDeleteகைகுட்டையோட காத்து கொண்டிருக்கிறேன்
நானும் வருங்கால முதல்வர் கூட்டத்துகிட்ட உங்களப் பத்தி ரொம்ப நல்லவரு,வல்லவரு அப்புறம் வருங்கால முதல்வர்ன்னு கூடச் சொல்லிப்பார்த்தேனுங்க.கேட்கிறப் பாடக்காணோம்.கட்சி அமைச்சி,மெம்பரெல்லாம் வலுவா சேர்க்கிறாங்க.உங்க கண்பார்வைக்கு வந்தாங்களே அதுவே சந்தோசம்.
ReplyDeleteபோன பாராளுமன்றத் தேர்தலுக்கு ஹாட் மச்சி ஹாட் ன்னு ஒரு கூட்டம் திரிஞ்சது.ஓட்டு முடிவுக்கப்பறம் கட்சியக் கலைச்சிட்ட மாதிரிக் கேள்விப் பட்டேன்.அவங்க மேலேயும் ஒரு கண்ணு வச்சுக்குங்க சொல்லிப்புட்டேன்.
ReplyDeleteச்சின்னப் பையன் ரொம்ப நன்றி உங்களுக்கு. என்னுடைய மொக்கை பதிவுகளுக்கு ஒரு அறிமுகம் ஏற்படுத்திக் கொடுத்ததுக்கு:)
ReplyDeleteஎங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி,ஆனால் நீங்களும் தப்ப முடியாது, சேர்ந்து சென்னை மாவட்டம் பற்றி எழுதவேண்டுமே.
ReplyDelete/*
ReplyDeleteஒன்பது பேர் சேர்ந்து இந்த க்ரூப்பில் இருந்தாலும், மூன்றாவது அணியைப் போல் இவங்களும் தங்கள் முதல்வர் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை
*/
போட்டியே அதுக்கு தான்
வாங்க புதுகைத் தென்றல் -> நன்றி..
ReplyDeleteவாங்க வால் -> அவ்வ். ஆமாங்க 2030ஐ நான் விட்டுட்டேன். அவங்க புடிச்சிக்கிட்டாங்க... :-))
வாங்க ராஜ நடராஜன் -> எங்க ஜேகேக்கு போட்டியா வந்தப்புறம் பார்வையிலிருந்து தப்பமுடியுமா???
வாங்க வித்யா -> நன்றி...
வாங்க குடுகுடுப்பை -> அவ்வ். சென்னையை விட்டு மூணு வருஷமாச்சு. வேணா பழங்கதயை பேசலாம்... :-))
ReplyDeleteவாங்க நசரேயன் -> ஓகே ஓகே.... :-))
2030 ஆ? ஹலோ... நாங்களும் 2011 க்குதான் குறி வெச்சுருக்கொம்.
ReplyDelete2011-ல நாம 9 பேர் சேத்து மொத்தம் 1,23,45,678 முதல்வர்கள்.
வருங்கால முதல்வர்ல யாருக்குமே கொளுகையே தெரியல.
ReplyDeleteஇவங்க எப்பயுமே முதல்வர் ஆகமுடுயாதுங்கிறது தான் கொளுகையே,அது தெரியாம அந்த பதவிக்கு பயங்கர போட்டி.
அதாவது வாழ்நாள் வருங்கால முதல்வர்கள். எப்பயுமே நோ முதல்வர்.
வாங்க மகேஷ்ஜி -> அவ்வ்வ்.... ஜேகே இவ்ளோ பேரோட போட்டி போடணுமா???
ReplyDeleteவாங்க குடுகுடுப்பை -> நாற்காலிக்கு ஆசைப்படாமெ இப்படி ஒரு க்ரூப்பா???? ரொம்ப அதிசயமா இருக்கே!!!!
நானும் அதில் ஒருவன் என்பதை இங்கு சொல்லி கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்
ReplyDelete