07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 8, 2008

உசுப்பேத்தி உசுப்பேத்தியே...!!!

பொழுதுபோகாமெ சும்மா பதிவு படிச்சிண்டிருந்தவன் - சரி நாமே ஒரு வலைப்பூ ஆரம்பிப்போம்னு ஆரம்பிச்சி, ஒரு மூணு பதிவு போட்டு
வெச்சேன். ஒழுங்கா ஒரு லீவ் லெட்டர்கூட எழுதத் தெரியாதவன் பதிவு எழுதினா யார் வந்து பாக்கப்போறாங்கன்னு நினைச்சா, திடீர்னு ஒரு
நாள் சிலபல பின்னூட்டங்கள் வந்திருந்துச்சு.

ஆஹா, புதுசா ஒருத்தன் வந்து மாட்டிண்டிருக்காண்டா அப்படின்னு நினைச்சிருந்தாலும், பின்னுட்டத்தில் எழுதும்போது நல்லாவே வரவேற்று
எழுதியிருந்தாங்க (இங்கே மறுபதிப்பு செஞ்சிருக்கேன்). அவிங்க மட்டும் அன்னிக்கு ஒண்ணும் எழுதாமே விட்டிருந்தாங்கன்னா, நான்.... நான்....
(இருங்க. துக்கம் தொண்டையை அடைக்குது. தண்ணி குடிச்சிட்டு வர்றேன்!!!) மேற்கொண்டு ஒண்ணுமே எழுதியிருக்க மாட்டேன்னு சொல்ல
வந்தேன்.

அன்னிலேர்ந்து ஆரம்பிச்சி இன்னி வரைக்கும் பின்னூட்டம் போட்டும்/ போடாமேயும் என்னோட பதிவைப் படிச்சி ஊக்குவித்த எல்லோருக்கும்
அப்புறம் நம்ம வலைச்சரக் குழுவினருக்கும் எல்லாத்துக்கும் மேலே நம்ம சீனா ஐயாவுக்கும் நன்றி சொல்லிண்டு, இந்த வாரத்துக்கான ஆசிரியர் பொறுப்பை ஏத்துக்கறேன்... ஸ்டார்ட் மீஜிக்....

என்னோட முதல் பதிவுக்கு பின்னூட்டம் போட்டு உசுப்பேத்தி (!!!) விட்டவங்க இவிங்கதான்!!! எல்லோருமே பெருந்தலைகள்ன்றதுதான் இங்கே
முக்கியமான மேட்டர்...!!!

------------------------------------

வெட்டிப்பயல் said...
வரும் போதே டாப் கீர்ல உள்ள வறீங்க.. வாழ்த்துக்கள்!!!
cheena (சீனா) said...
நல்வாழ்த்துகள் நண்பா - வருக வருக
கோவி.கண்ணன் said...
நகைச்சுவை தெறிக்குது....
கண்டிப்பாக நல்லா எழுதுவிங்க என்ற எதிர்பார்ப்பு கூடிப் போச்சு
வாழ்த்துக்கள் !
அறிவன் /#11802717200764379909/ said...
தங்கமணி சரியாத்தான் சொல்வாங்க போலருக்கு !!!!!!!!! :-)வாங்க,சும்மா அடிச்சு விளையாடுங்க..
கண்மணி said...
வாங்க வெல்கம்பதிவுலகில் எல்லோருக்கும் ஒரு இடமிருக்கு4 பேர் வசை பாடினாலும் 40 பேர் ஆதரிப்பாங்க
.:: மை ஃபிரண்ட் ::. said...
வாழ்த்துக்கள்..வருக வருக. :-)

------------------

எனக்கு பிடிச்ச என்னோட பதிவுகள்:

ரெண்டு கண்ணுலே உனக்கு ரொம்ப பிடிச்ச கண்ணு எது? அப்படின்னு கேட்டா நான் எதை சொல்லுவேன் (அதிகமா டிவி பாக்காதேன்னு
சொன்னா கேட்டாதானே?? கச்சாமுச்சான்னு வசனம் வருது பாரு வாயிலே!!!).

ஆனாலும், எனக்கு பிங் பண்ற மக்கள் பெரும்பாலும் கேக்கறது - மாமியார் என்ன பண்றாங்க? - அப்படின்னுதான். அதனால், எல்லோரும்
நினைவில் வைத்திருப்பது - 'மென்பொருள் நிபுணரானால்' தலைப்பைத் தவிர்த்து - இந்த மாமியார் பதிவுதான்.

18 comments:

 1. me the 1st.

  லின்ங் படிச்சிட்டு வர்றேன்

  ReplyDelete
 2. கலக்குங்க... பேருதான் ச்சின்னப்பையன்... ஆனா கலக்கலெல்லாம் பெரிய ரேஞ்சுல இருக்கும்...

  தூள் கெளப்புங்க சாரே... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. super:):):)//கலக்குங்க... பேருதான் ச்சின்னப்பையன்... ஆனா கலக்கலெல்லாம் பெரிய ரேஞ்சுல இருக்கும்...//

  வழிமொழிகிறேன்

  ReplyDelete
 4. வலைச்சர ஆசிரியரா? லகக்குங்க அட கலக்குங்கன்னு சொல்றதைத்தான் கலக்கி சொல்லிட்டேன்

  :))

  ReplyDelete
 5. பதிவு, பதிவர்களை உங்கள் பாணியில் நகைச்சுவை கலந்து, சூப்பராக அறிமுகப்படுத்துவீர்கள் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 6. புதுகைத் தென்றல்... இன்னும் படிக்கலியா? சீக்கிரம் படிச்சுட்டு வாங்க...

  ReplyDelete
 7. வாங்க புதுகைத் தென்றல் -> ஆமா. நீங்கதான் 1ஸ்ட். ஆமா, அங்கே போய் படிச்சீங்களா?????

  வாங்க மகேஷ் அண்ணே, திகழ்மிளிர், சரவணகுமரன், ராப் -> நன்றி..

  வாங்க சிவா, பரிசல், ராதாகிருஷ்ணன் ஐயா -> நன்றி...

  ReplyDelete
 8. வாழ்த்துக்களுடன் வரவேற்க்கிறேன்

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. வலைச்சரத்தின் புதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 11. வாங்க ச்சின்னப் பையன் ... எனக்கு உங்களை நினைச்சாலே உங்க ‘மாமியார்’ தான் நினைவுக்கு வருவாங்க..;))
  மாமியார் நலமா?

  ReplyDelete
 12. ஆமா. நீங்கதான் 1ஸ்ட். ஆமா, அங்கே போய் படிச்சீங்களா?????//

  படிச்சு பின்னூட்டமும் போட்டாசு.

  ஒவ்வொரு வீட்டுக்கும் இப்படி மாமியர்கள் தேவைதான்

  ReplyDelete
 13. வலைச்சரம் ஆசிரியருக்கு,

  உங்களுக்கு டேக் போட்டிருக்கேன்.

  வந்து பாருங்க.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது