07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, December 11, 2008

காலையில் பாடும் ராகங்கள் என்ன?

ஏதோ ஒரு பழைய படத்தில் (ராவணன்?) ஒருத்தர் கேப்பாரு. காலையில் பாடும் ராகங்கள் என்ன? மாலையில் பாடும் ராகங்கள் என்ன? அப்படின்னு. அடுத்தவரு வரிசையா பாடிக்கிட்டே வருவாரு.


அதே மாதிரி, காலையில் படிக்கும் பதிவுகள் என்ன? மதியத்தில் படிக்கும் பதிவுகள் என்ன? அப்படின்னு வரிசையா என்கிட்டே கேட்டா (யாரும் கேக்கமாட்டீங்களே!!!) இந்த பட்டியலைத்தான் சொல்வேன்.


இந்த பதிவை படிச்சிட்டு - சூரியனுக்கே டார்ச்சா? - வெண்பூக்கே பிரியாணியா - வாலுக்கே சரக்கா - அப்படின்னெல்லாம் யாரும் பின்னூட்டம் போடாதீங்க. எனக்கு தெரிஞ்சத / பிடிச்சத சொல்றேன். அவ்ளோதான்.


---------------


தினமும் காலையில் 6.30 மணியிலேந்து offshore மெயில்கள்/தொலைபேசிகள் ஆரம்பிச்சிடும். தொலைபேசியில் பேசிக்கிட்டே இவங்க பதிவையும் படிக்க ஆரம்பிசிட்டா பொழுது போறதே தெரியாது.


லக்கிலுக்: இவருக்கு மட்டும் ஒரு நாளைக்கு 48 மணி நேரம் கொடுத்துட்டானா கடவுள்ன்றா மாதிரி பதிவு மழையா கொட்டினாலும், எதை எடுப்பது எதை விடுப்பதுன்னு முடிவு எடுக்கமுடியாமே எல்லா பதிவுகளும் அருமை. புனைவு, மசாலா அப்படி இப்படின்னு ஏகப்பட்ட வெரைட்டி கொடுப்பாரு. இவரோட எதிர்ப்பதிவுகள காலையிலே படிச்சா, அந்த நாள் மட்டுமில்லே, எல்லா நாளும் இனிய நாள்தான்...




பரிசல்காரன் : அடுத்தது நம்ம நவரச நாயகன். நிறைய படிச்சி, நிறைய எழுதறவரு - தினமும் ஏதாவது ஒரு சுவாரசியமான மேட்டர் வெச்சிருப்பாரு. பதிவர் சந்திப்போ, அவியலோ, திரைப்பட விமர்சனமோ - பரிசல் டச் தனியா தெரியும். ஜனரஞ்சகமா எழுதறதாலே நிறைய நண்பர்களையும் சம்பாதிச்சிருக்காரு.




கோவி.கண்ணன் : என்னெயெல்லாம் அடிக்கடி வீட்லே திட்டுவாங்க. கொர கொர, சொர சொரான்னு இல்லாமே இப்படி வழவழ கொழ கொழன்னு இருக்கியேன்னு. அதாவது பல விஷயத்திலே என்னாலே எந்தவித கருத்தும் சொல்லமுடியாமே - ஒரு முடிவே எடுக்காமே எல்லாத்தையும் 'காலம்' பார்த்துக்கொள்ளும்னு இருக்கறதுதான் காரணம்.



ஆனா, இவரு அந்த மாதிரி இல்லே. எந்த விஷயமா இருந்தாலும், எந்த பிரச்சினையா இருந்தாலும், அதைப் பற்றிய தன் கருத்தை வெட்டு ஒண்ணு, துண்டு மூணா எடுத்து சொல்லிடுவாரு.



-------------


அப்புறம் மதிய உணவு சாப்பிடும்போது சில 'லைட்' பதிவுகளை படிப்பேன். இந்த பதிவர்களின் நகைச்சுவை உணர்வுக்காகவும் - அது copy/paste ஆக இருந்தாலும் பல இடங்களிலிருந்து தொகுத்து போடுபவர்களாகையால் - அந்த பதிவுகளை படிப்பதுண்டு.


செல்வகுமார்:

செய்தி எல்லோரும் சாதாரணமாக படித்த செய்தியாகத்தான் இருக்கும். ஆனால் இவரோட கமெண்ட்ஸ் கண்டிப்பா சிரிப்பை வரவழைக்கும். வடிவேல் கேப்டன் லடாய் பற்றி இவர் போட்ட இந்த பதிவு நான் மிகவும் ரசித்ததாகும்.

தொலைக்காட்சிகளில் முதல்முறையாக சூப்பர் ஹிட் திரைப்படம் - இப்படி போடறதுக்கு படத்தை எப்படி தேர்ந்தெடுக்கறாங்கன்னு இங்கே சொல்றாரு பாருங்க.

------------

அருப்புக்கோட்டை பாஸ்கர்:


துக்ளக், தினமணி ஆகிய பத்திரிக்கைகளிலிருந்து வெட்டி/ஒட்டுவதால், அந்த இரண்டையும் ஒரே இடத்தில் பார்த்துவிடலாம். ஒரு ச்சின்ன கார்ட்டூனிலிருந்து வேறொரு சூப்பர் பதிவு போட ஐடியா கிடைக்குமென்பதாலும், இந்த பக்கங்களை தவறாமல் பார்ப்பதுண்டு...

-------------

கார்த்தி:

இவர் தனக்குத் தெரிந்த பல்வேறு sms, ஜோக்ஸ், மொக்கைகளை பதிவிட்டு வருகிறார். சொந்த சரக்கோ அல்லது இரவல் சரக்கோ, சாப்பிடும்போது சிரிக்க வைப்பதற்காக இவருக்கு ஒரு நன்றி... நீங்களும் போய் பாருங்க.

டாக்டர் விஜய் பற்றிய ஒரு கொலவெறிக் கதை இங்கே. சில மொக்கைகள் இங்கே, ஜோக்குகள் இங்கே.

------

அப்புறம் ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னால், இவரோட பதிவை கண்டிப்பா ஒரு தடவை பாத்துடுவேன். அடுத்த நாள் காலை 5 மணிக்கு ஷெட்யூல் செய்து வெச்சிருக்கிற பதிவு சரியா இருக்கான்னு பாத்துட்டு - இன்னிக்கு ஒரு 200 பேராவது வந்தாங்களா - ஒரு 20 பின்னூட்டமாவது வந்துச்சா, அது போறும்டா சாமின்னு கடவுளை வேண்டிக்கிட்டு தூங்கப் போயிடுவேன்... அவ்வ்வ்..

------------

நாளைய பதிவு: மாப்பு... வச்சிட்டான்யா ஆப்பு...!!!

19 comments:

  1. ராத்திரி மேட்டர் சூப்பர்!

    (பதிவைப் பத்தி செல்றேன்சாமி!)

    ReplyDelete
  2. 1st போட்லான்னு வந்தேன்

    ஹும்ம்ம் ...

    ReplyDelete
  3. அண்ணே கிளப்புறிய...

    ஆமாம் எங்கன வேலை பார்க்கிறய,

    எனக்கும் ஒரு வேலை வாங்கி கொடுங்களேன்,

    பதிவுலகமே கதின்னு கிடக்கலாம்.

    ஹி ஹி ஹி - நமக்கு எதாவது எழுததான் ஆசை - அதை வச்சிக்கிட்டு இன்னா பன்றது.

    உங்கிட்ட இருந்தாலாவது கற்றுக்கொள்ளலாம்.

    ReplyDelete
  4. // rapp said...

    super collections:):):)//

    சொன்னது சரி.. இப்படி சிரிச்சா என்ன அர்த்தம்?

    அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  5. வாங்க பரிசல் -> :-)))

    வாங்க அதிரை ஜமால் -> அவ்வ்வ்... யப்பா சாமி... வேலெ வெட்டி இல்லாதவன்னு நினைக்காதீங்கப்பா. வேலை ஜாஸ்தி ஆனதால, அப்பப்போ பதிவு போடாமெ இங்கே 'லீவ்' போட்டிருக்கேன்... ஓகேவா... :-))

    வாங்க ராப் -> நன்றி... ஆஆ... பரிசல் கொளுத்திப் போட்டுட்டாரே... பதில் சொல்லுங்க....

    ReplyDelete
  6. நீங்கள் சொன்ன அனைவரும் சூரியன்கள் தான்,ஆனால் இரவில் டார்ச் அடித்ததால் மன்னிக்கிறேன்

    ReplyDelete
  7. காலம் பாத்துக்கும்னு கருத்து சொல்லாம விடறது முதுகுக்கு நல்லதுங்கோ,அதுல ஒன்னும் தப்பு இல்லங்கோ

    ReplyDelete
  8. /*இன்னிக்கு ஒரு 200 பேராவது வந்தாங்களா*/

    ரெம்ப குறைவு 2000 ம் தான் சரி

    ReplyDelete
  9. வாங்க அப்துல்லா -> அவ்வ். எதுக்கு ஐயா ஹையா???

    வாங்க வால் -> நன்றி..

    வாங்க குடுகுடுப்பை -> அதேதான். அதேதான்... :-))

    வாங்க தமிழ் பிரியன் -> ஆஆ.. அது தமிழ் குட்டா ஆங்கில குட்டா??????

    ReplyDelete
  10. அப்போ எங்க பதிவெல்லாம் படிக்க எதுவுமே சிக்காதபோதுதானா? இதை நான் கன்னா பின்னாவென்று மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன்... :)))))

    ReplyDelete
  11. ஹையோ! என்னோட பேரு உங்கள் பதிவிலா?மிக்க நன்றி நண்பரே....நானும் எழுதியுள்ளேன் என்று தெரிகிறது....நன்றி நன்றி

    ReplyDelete
  12. //சொந்த சரக்கோ அல்லது இரவல் சரக்கோ//ஹி ஹி ஹி....அப்பப்ப சொந்தமாவும் எழுதுவேன்......

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது