07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, December 13, 2008

இவங்கல்லாம் என்னை மாதிரி இல்லே...!!!

என்னைய மாதிரி தினமும் வளவளன்னு எழுதறவங்களுக்கு நடுவுலே மாசத்துக்கு நாலஞ்சு பதிவு போட்டு அதெல்லாம் நல்ல நகைச்சுவையோடவோ, கருத்தோடவோ எழுதறவங்க நிறைய பேர் இருக்காங்க. அப்படி எழுதறவங்கள்லே சில பேரை பாப்போம்.


இவங்க இன்னும் நிறைய எழுதி இந்த பரந்து விரிந்திருக்கக்கூடிய கட்டுப்பாடற்ற ஒரு சமுதாயத்துலே, பல்வேறு பரிணாமங்களுக்கு நடுவே இருந்தாலும் தங்கள் சுயசார்பற்ற கருத்தியலிலிருந்து விலகி கலைப் படைப்பு படைக்க வேணும்னு கேட்டுக்கறேன்..


என்னை மாதிரியே - முன்னாடி இருக்கற பத்தி புரியாதவங்க - கவலைப்படாமே இவங்கள படியுங்க. நிறையவே புரியும்...அவ்வ்வ்..

-----------

சத்யபிரியன்:

தசாவதாரம் வந்தபோது எல்லோரும் அதைப்பற்றி கண்டிப்பா ஒரு பதிவு போட்டே ஆகணும்ன்றது எழுதப்படாத சட்டமா இருந்தாலும், இவர் தன் விமர்சனத்தை ஒரு கடிதமா கமலுக்கு எழுதினாரு. இங்கே போய் பாருங்க. கமலிடம் உள்ள தன் எதிர்ப்பார்ப்பை இதைவிட அருமையா சொல்ல முடியாதுன்றதை பின்னூட்டத்தில் நிறைய பேர் ஒத்துக்கிட்டிருக்காங்க.


என்னோட சின்ன வயசுலே தவறிய எங்கப்பா இப்போ இருந்திருந்தா எவ்ளோ நல்லாயிருந்திருக்கும்னு தினமும் நினைக்கறதாலே, அப்பாவைப் பற்றிய பதிவுன்னா உடனே தேடிப்போய் பாக்கிறவன் நான். அப்படி இவரு தன் அப்பாவை பற்றி எழுதிய நெகிழ்ச்சியான பதிவு இங்கே. போய் பாருங்க. கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும்.

சரவணகுமரன்:

நகைச்சுவை, ஜோக்ஸ், கதை அப்படி இப்படின்னு கலந்து கட்டி இவர் பதிவு போட்டாலும், சரவணகுமரன் அப்படின்ன உடனே நினைவுக்கு வருவது எனக்கு இந்த மற்றும் இந்த பதிவுகள்தான். அதுக்காக மத்த பதிவுகள் நல்லாயிருக்காதான்னு கேக்கப்படாது. படிச்சிப் பாருங்க. எல்லாமே நல்லாத்தான் இருக்கும்.

மேலே சொன்ன பதிவுகள், அப்பா மகன் இந்த ரெண்டு காரெக்டரை வெச்சி பிரபல இயக்குனர்கள் படம் எடுத்தா எப்படி இருக்கும்கிற அட்டகாசமான கற்பனை. ரெண்டாவது, தசாவதாரம் பாத்த எஃபெக்ட் - chaos தியரி - கரகாட்டக்காரன்லே எப்படி இருக்குன்ற இன்னொரு கற்பனை பதிவு.

ரம்யா

புதுசா வந்துருக்காங்க. நல்லா நகைச்சுவையா எழுதறாங்க.

நிறைய பேர் எழுதும் பார்த்திபன் - வடிவேல் காமெடியை இங்கே முயற்சி செய்துருக்காங்க பாருங்க. அருமையாத்தான் இருக்கு. இங்கே பாருங்க. இன்னொரு மொக்கைக் கதை இங்கே இருக்கு. இன்னும் நிறைய எழுதி எல்லோரையும் சிரிக்க வைப்பாங்கன்னு நம்பலாம்.

நவநீதன்:

இவரோட வலைப்பக்க முகப்பு டிசைனுக்காக நான் இங்கே போக ஆரம்பிக்கலை (நிஜம்மா...)

எழுத ஆரம்பிக்கும்போது நிறைய அருமையான கவிதைகள் எழுத ஆரம்பிச்சாரு. உதாரணத்துக்கு சில - இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே.

இவரோட கற்பனை கதாபாத்திரம் டகுல பாண்டியின் சில அட்டகாசங்கள் இங்கே மற்றும் இங்கே.

இன்னும் நிறைய கதை, கவிதைகளை படைச்சி நமக்கு படிக்கக் குடுப்பாருன்னு நினைக்கிறேன்.

9 comments:

 1. நிறைய புது அறிமுகம்.

  நன்றி ச்சின்னப்பையன்

  ReplyDelete
 2. நன்றி நண்பரே
  எங்கள் வாசிப்புக்களை விரிவாக்க உங்கள் பதிவு உதவி இருக்கிறது....

  ReplyDelete
 3. 'இங்கே', 'இங்கே' என்று போட்ட இடத்தில் எல்லாம், பதிவின் தலைப்பை போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ ??

  பதிவுகள் பற்றிய தகவல்கல்களுக்கு நன்றி.

  ReplyDelete
 4. ஒரு தகவல் களஞ்சியமே இருக்கும் போல

  ReplyDelete
 5. கட்டுப்பாடற்ற சமுதாயம், சுயசார்பு, கருத்தியல், கலைப் படைப்பு...

  ஆஆ...ஆங்... ஒண்ணும் புரியலையே..

  -----

  நன்றி ச்சின்னபையன். :-)

  ReplyDelete
 6. வெரி குட் அறிமுகம் !!!!!!!

  ReplyDelete
 7. நன்றி சின்ன பையன் அவர்களே
  அழகாக தொகுத்து வெளியிட்டு இருக்கிறீர்கள்
  அதில் என் பதிவையும் குறிப்பிட்டதிற்கு
  நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  எனக்கு இப்போது கூடுதல் பொறுப்பு வந்துவிட்டது
  என்று நினைக்கறேன்
  உங்கள் விருப்பத்தை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்
  நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
 8. வாங்க புதுகைத் தென்றல் -> நன்றி...

  வாங்க தங்கராசா -> ரொம்ப நன்றிங்க...

  வாங்க சதங்கா -> ஒவ்வொரு பதிவையும் பற்றி ஒரு சிறு விளக்கம் கொடுத்திருக்கேனே... அது போதும்னு நினைச்சேன்... :-((

  வாங்க நசரேயன் -> நன்றி..

  வாங்க சரவணகுமரன் -> அது ச்சும்மா... ஹிஹி எனக்கே புரியல... :-)))

  வாங்க ரவி -> நன்றி...

  வாங்க ரம்யா -> நன்றிங்க...

  ReplyDelete
 9. ரொம்ப நன்றி.... சின்ன அண்ணே....! (என்னா ஒரு மரியாத..!)
  கொஞ்சம் லேட்டா வந்து பின்னூட்டுவதற்கு மன்னிக்கவும்....!
  ஆபிசுல டேமேஜர் கொஞ்சம் கபடி ஆடுறார்....!

  //இவரோட வலைப்பக்க முகப்பு டிசைனுக்காக நான் இங்கே போக ஆரம்பிக்கலை//
  இத நான் ஒரு பாராட்டாவே எடுத்துக்கிறேன் ....!

  //இன்னும் நிறைய கதை, கவிதைகளை படைச்சி நமக்கு படிக்கக் குடுப்பாருன்னு நினைக்கிறேன்.//
  உங்களோட இந்த வார்த்தைகள் எனக்கு உற்சாக டானிக் போல இருக்கு..!
  கண்டிப்பா விடாமல் எழுதுறேன்....!

  சக பதிவர்களையும் அவர்களோட பதிவுகளையும் அழகாக அறிமுகப் படுத்தியிருகீங்க....!

  ரொம்ப நன்றி... அண்ணே...!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது