07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, December 20, 2008

மொக்கைப்பதிவுகள் 2008: டாப் 10.!

வேறு வழியே இல்லாமல் நண்பர்களிடமே சரணடைந்துவிடுவது என்று தீர்மானம் பண்ணிவிட்டேன். அதுவும் நம்ப செட்டில் மொக்கைகளுக்கா பஞ்சம்.? நேரடியாக விஷயத்துக்குப் போய்விடலாம். டாப்பிக்குக்குள் போவதற்குள் ஒரு ரெண்டு வரி பில்டப் கொடுப்பது வழக்கம். அதைப்பார்த்துவிட்டு ஓவரா முறுக்கு சுத்துராய்ம்ப்பா இவன் என்று கமெண்ட் வர ஆரம்பித்துவிட்டது. இனி சேவாக் ஸ்டைல்தான்.

கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகள் :

*சீனியர் பதிவுகள் கணக்கில் கொள்ள‌ப்படவில்லை.
*ஒரே நபரின் பல பதிவுகள் பரிசீலனையில் இருந்தாலும் 10க்குள் ஒன்றுக்கு மேற்பட்டவை வந்தால் ஒன்று மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது.
*தேர்வுக்குழுவில் நான் மட்டுமே இல்லை, எனினும் ரிஸ்க் கருதி பிறரது பெயர்கள் வெளியிடப்படமாட்டாது.
*இதில் லஞ்ச லாவண்யங்களுக்கு இடம்தரப்படவில்லை.
*சுமார் 30க்கும் மேற்பட்ட பதிவர்களின் 100க்கும் மேற்பட்ட பதிவுகள் இந்தப்போட்டியில் கலந்துகொண்டன. இறுதிச்சுற்றில் நடுவர்களுக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான்.

இனி டாப் 10..


10. ப‌த்தாவ‌து இட‌த்தில் அண்ண‌ன் த‌மிழ் பிரிய‌ன். சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பு வெளியான‌ இந்த‌ப்ப‌திவு ஆனந்தவிகடனில் வெளியாக இருந்து கடைசி நேரத்தில் சுயமறுப்பாக வேண்டாம் என்று இருந்த பதிவு. சமீபத்தில் இதன் ரீமிக்ஸ்ஸாக‌ இன்னொரு ப‌திவு அவ‌ர் இட்டிருந்தாலும் ஒரிஜின‌லுக்கான‌ ம‌திப்பே த‌னி.

9. அடுத்த‌ இட‌த்தை வெல்ப‌வ‌ர் தோழ‌ர் ப‌ரிச‌ல். இந்த‌ப்ப‌திவில் த‌ன‌க்காக‌ இல்லாம‌ல் த‌ன‌து ச‌க‌ ப‌திவர் தோழர் அதிஷாவுக்கு உதவும்பொருட்டு‌ மென‌க்கெட்டு செய்த‌ சேவை புல்ல‌ரிக்க‌வைப்ப‌தாக‌ இருந்த‌து.

8 . அடுத்த‌ இட‌ம் கார்க்கிக்கு செல்கிறது. இவ‌ரின் தலைசிறந்த ப‌ல‌ ப‌டைப்புக‌ளில் தேர்ந்தெடுப்ப‌து சிர‌மாக‌ இருந்த‌தால் கும்ஸாக‌ இது த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து. ந‌ண்ப‌ர்க‌ள் இருவ‌ருக்கிடையே நிக‌ழ்ந்த‌ ராபிட் ப‌ய‌ர் இன்ட‌ர்வியூவை த‌ந்திருக்கிறார்.

7. சீட்டு விளையாட்டைப்பற்றி அண்ணன் வால்பையன் எழுதிய இந்த ஆராய்ச்சிப்பதிவு பெரும் புரட்சியை கிளப்பியது அப்போது. நீங்களும் இதைப்படித்து சூது பற்றி அறிந்துகொள்ளுங்கள். இல்லையெனில் யாராவது உங்களைப்பார்த்து சூது வாது தெரியாதவன் என்று சொல்லிவிடக்கூடும்.

6. தான் பெண் பார்த்த அழகை எல்லோருக்கும் மெயில் அனுப்பி விதவிதமாக வாங்கிக்கட்டிக்கொண்ட அண்ணன் சஞ்சய்யின் இந்தப்பதிவு பிடிக்கிறது ஆறாவது இடத்தை.

5. எல்லோரும் ரொம்ப‌ சீரிய‌ஸா திங்க் பண்ணி ப‌தில் சொன்ன‌ ஒரு முக்கிய‌மான‌ தொட‌ர் ப‌திவில் தைரியமாய் முடிந்த‌ வ‌ரை மொக்கை போட்ட‌ வீராங்க‌னை அக்கா ஸ்ரீம‌தி வெல்கிறார் ஐந்தாவ‌து இட‌த்தை.!

4. உடல் நலமில்லாத ஒரு நேரத்தில், டாக்டரை பார்க்கச்செல்கிறார் நமது அனைவரின் அன்புக்குரிய அண்ணந்தம்பி அப்துல்லா. அப்போது அந்த டாக்டரை கலாய்த்த அனுபவம் பெறுகிறது அழகான இந்த நான்காவது இடத்தை.

3. ஆர‌ம்ப‌த்திலேயே அகிலாண்ட‌ நாய‌க‌னுக்கு அருமையாக குரல் கொடுத்து நமது அன்பை சம்பாதித்துக்கொண்ட அதிஷா அடுத்த இடத்தைப்பிடிக்கிறார். இதில் தெறிக்கும் JKR ஆத‌ர‌வுக்குர‌லை க‌வ‌னியுங்க‌ள்.

2. நமது கலாய்த்தல் திலகம் குசும்பன் அவர்கள் சக பதிவர்களை வைத்தே நமது அருமைத் தல.. நர்சிமை கலாய்த்த (இது கீழ்க்கண்ட மொக்கை இலக்கணத்தில் அடங்காவிட்டாலும்) இந்தப்பதிவு பெறுகிறது இரண்டாம் இடத்தை.! வாழ்த்துகள் குசும்பரே..

1. ஒரு மொக்கைக்கே அர‌ண்டு போகும் உங்க‌ளுக்கு ஒரு மொக்கை விருந்தே வைத்த‌ இந்த‌ப்ப‌திவுக்கே முத‌லிட‌ம் வ‌ழ‌ங்கி நானும் ர‌வுடிதான் என்ப‌தை பெருமையோடு ஒப்புக்கொள்கிறேன்.


பி.கு 1: நல்ல மொக்கைப்ப‌திவுக‌ள் எப்ப‌டி இருக்க‌வேண்டும் என‌ ச‌மீப‌த்தில் ஒரு மூத்த ப‌திவ‌ர் சொன்ன‌போது இந்த‌ விள‌க்க‌ம் கேட்க நேர்ந்த‌து. படித்தவுடன் வாசகர்களுக்கு ஏற்படும் உணர்ச்சியில் சிரிப்பு 5%, எரிச்சல் 40 %, கோபம் 5%, வாழ்க்கையின் மீதே வெறுப்பு 15%, டல் 8%, ஷாக்2%, ஆவ்வ்வ் 25% ஆகிய‌ன‌ ஏற்ப‌ட‌வேண்டுமாம். ஏற்ப‌ட்ட‌தா?

பி.கு 2: இந்த லிஸ்ட்டில் இடம்பெறாதவர்கள் ச்சு..ச்சு.. அழக்கூடாது.! இடம்பெற்றவர்கள் வரிசைப்படுத்தலை சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.. சும்மனாச்சுக்கும் போட்டது.

பி.கு 3: அத்தனை இணைப்புகளையும் படித்து மீண்ட வீரன் யாராவது இருப்பானாயின் அது போற்றத்தக்கது. உடன் தொடர்பு கொள்ளவும். 'மொக்கைகொண்டான்' என்ற பட்டமும், சிறப்புப்பரிசும் காத்திருக்கிறது.

17 comments:

 1. மொக்கைக ரெக்கை கட்டிப் பறக்குது !!
  படிக்கிறவங்க மொக்கைகொண்டான்னா, அறிமுகப்"படுத்தின" நீங்க "மொக்கை கண்டான்"-ஆ?

  ReplyDelete
 2. நன்றிங்கோவ்....

  அப்புறம் இந்த கமெண்ட்டை சார்ஜாவில் நம்ப குசும்பன் வீட்டுல இருந்துதான் டைப்பிக்கிறேன் :)

  ReplyDelete
 3. என்ன?????????/ நான் எட்டாவது இடமா? ஓ... யாருக்கும் எட்டாத இடத்தில் இருக்கிறேனா? இருந்தாலும் என தலைவலி மருந்து மற்றும், ராகிங் பதிவை நீங்கள் படிக்கவிலை என்பது தெரிகிறது.

  மு.கு: நான் ரெண்டாவது டிஸ்கியை படிக்கல‌

  ReplyDelete
 4. கவிஜாயினி ராப் லிஸ்ட்'லே இல்லையே?? :))

  ReplyDelete
 5. நன்றிங்கோவ்....
  எப்டிங்ண்ணா உங்களால மட்டும் இதெல்லாம் முடியுது... அவ்வ்வ்

  ReplyDelete
 6. ///இராம்/Raam said...

  கவிஜாயினி ராப் லிஸ்ட்'லே இல்லையே?? :))///
  ஒருவேளை அவங்க மூத்த, வயசான பதிவர் என்பதால் விதிமுறையில் படி வெளியேத்தி இருப்பாங்க போல.. ;)))

  ReplyDelete
 7. //வீராங்க‌னை அக்கா ஸ்ரீம‌தி வெல்கிறார் ஐந்தாவ‌து இடத்//

  இதில் இருக்கும் நுண்ணரசியலை இப்போதுதான் கவனித்தேன்..

  ReplyDelete
 8. ஒரு பதிவும் போடாம இப்படியும் ஒப்பேத்தலாமா

  ReplyDelete
 9. //: அத்தனை இணைப்புகளையும் படித்து மீண்ட வீரன் யாராவது இருப்பானாயின் அது போற்றத்தக்கது. உடன் தொடர்பு கொள்ளவும். 'மொக்கைகொண்டான்' என்ற பட்டமும், சிறப்புப்பரிசும் காத்திருக்கிற//

  எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் இருக்காருங்க.. எல்லாத்தையும் படிச்சவ்ரு.. அவரு ஏற்கனவே மொக்கை கொண்டான் தான்..

  ReplyDelete
 10. இன்னிக்குத் தான் லிங்கையே பார்த்தேன், ஒரு அருமையான நிகழ்ச்சி பற்றிய விமரிசனம் உங்களுக்கு மொக்கையாய்ப் பட்டிருக்கிறதை நினைத்தால் வருத்தமாய் இருக்கிறது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ரசனை இருக்கும் இல்லையா?? இது மொக்கைனால் என்ன சொல்லறது? :((((((((((((((((((((((((((((((((

  ReplyDelete
 11. அதிலும் முழுக்க முழுக்கத் தமிழிசைக்கு முக்கியத்துவம் கொடுத்த ஒரு நிகழ்ச்சி!

  ReplyDelete
 12. 'மொக்கைகொண்டான்' பட்டப் பத்திரத்தை பார்சலில் எனக்கு அனுப்பவும்.

  ReplyDelete
 13. //இடம்பெற்றவர்கள் வரிசைப்படுத்தலை சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.. சும்மனாச்சுக்கும் போட்டது.//

  ஆங் அப்படியே நீங்க வரிசை படுத்தி இருக்கும் பதிவர்கள் அனைவரும் ரொம்ப கோவகார பசங்க பார்த்து சூதனமா நடந்துக்குங்க சித்தப்பு!

  அப்புறம் எனக்கு இரண்டாம் இடம் கொடுத்த நீங்க வாழ்க !!!

  ReplyDelete
 14. என்னாது? எனக்கு ஆறாவது இடமா? முடியாது 2வது இடம் தான் வேண்டும். குசும்பனை வேண்டுமானால் 6வது இடத்துக்கு தொரத்துங்க. :)

  ReplyDelete
 15. ரொம்ப நன்றிங்கோ 7-வது இடம் கொடுத்தத்ற்க்கு

  பரிசலே எனக்கு பின்னாலயா

  (பத்த வச்சிட்டியே பரட்ட)

  ReplyDelete
 16. நன்றி அண்ணா.. :)) ஹை எனக்கு ஐந்தாவது இடமா.. :))

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது