ஹே ராம், பிஸ்னெஸ், ஊர்சுற்றி.
ஹே ராம் படம் என்றால் உங்களுக்கு என்ன தோன்றுகின்றது..?
எனக்கு உடனே தோன்றுவது, அபர்ணா இடுப்பை சாகேத்ராம் கடிக்கும் 'சீன்'. மற்றும் பலருக்கும் பல காட்சிகள் நினைவுக்கு வரக் கூடும்.
ஆனால்... சிவப்பு இரத்தத்தில் கதறியபடியே சரியும் கமலின் அருகில் துள்ளும் பல்லியின் அர்த்தம் என்ன..? கல்கத்தாவில் இருந்து விலகி ஓடும் போது பாகன் இன்றி தெருவில் அலையும் யானை உணர்த்துவது என்ன..? சமஸ்தானத்தில் தழுவும் வசுந்த்ரா, நீளத் துப்பாக்கியாக மாறிக் குறிப்பது என்ன..?
தமிழில் விளக்கம் கொடுக்கிறார் ஜமாலன்.
'இதெல்லாம் எனக்குப் போதாதுங்க. பத்து ரூபாய்க்கு சாம்பார், ரசம், கூட்டு, அவியல், பொறியல், ரசம், தயிர், ஸ்வீட், பாயசம்.. இதெல்லாம் போதாதுன்னு ஒரு டம்ளர் தண்ணி வேற கேக்கற ஆளுங்க நாங்க. எங்கயாவது ஃபுல் அனலிஸிஸ் இருக்கா..?' என்று கேட்ப்வர்களுக்காக, ஆங்கிலத்தில் சீன் - பை - சீனாக அனுபவித்து, ஆராய்ந்து விளக்கம் கொடுத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன், இங்கே..! (அறிமுகப்படுத்திய நாடோடிக்கு நன்றிகள்.)
University of Iowaன் இணையத் தளத்தில் Philip Lutgendorf சொல்லும் சில கருத்துக்கள், இங்கே..!
உலகப் பொருளாதாரச் செய்திகளையும், பண வர்த்தக நிலவரங்களையும், நிதி மேலாண்மை நுட்பங்களையும், பங்கு வணிக ரோலர் கோஸ்டர் விசித்திரங்களையும், நிதி நிலை அறிக்கைக் குழப்ப வார்த்தைகளையும்,கச்சா எண்ணெய்க் கச்சடாத் திருட்டுக்களையும் ஆங்கிலத்தில் அள்ளித் தெளிக்க ஆயிரம் தளங்கள் இருக்கின்றன.
தமிழில் நாம் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கின்றனவா..? முக்கியப் பத்திரிக்கைத் தளங்கள் ஒரு க்ளிக் கண்ணியாக வைத்திருந்தாலும், முழுக்க முழுக்க வணிகச் செய்திகளைத் தரும் சில தளங்களையும், வலைப்பதிவுகளையும் இனிக் காண்போம்.
நாடும், நடப்பும் - 1
தமிழ் வர்த்தகம் என்ற பெயரோடு திருமதி. பிரியா பொருளாதாரக் கட்டுரைகளை எழுதுகிறார். சில படிக்க வேண்டிய பதிவுகள் ::
கார்- டூ வீலர் விற்பனை கடும் சரிவு
யுஎஸ் பொருளாதாரம் தேக்கம்: 2007லிலேயே தொடங்கி விட்டது-குழு
இரண்டே நாளில் ரூ. 50,000 கோடி இழப்பு
வட்டி விகிதம் மேலும் 0.50% குறையும்?
டாட்டா குழும நிறுவனங்கள்-எதிர்கொண்ட சோதனைகள்
நாடும், நடப்பும் - 2
ஆச்சரியமாக இதே பெயரிலேயே மற்றுமொரு பதிவு. அதுவும் வணிகப் பதிவு. சென்னையிலிருந்து 'வெறும் பேச்சுப் பேசேல்' என்று தன்னைப் பற்றிக் கூறிக் கொள்ளும், 'நாட்டு நடப்பு' என்பவர் இப்பதிவில் கட்டுரைகள் எழுதுகிறார்.
பங்குச் சந்தை பற்றிய தனது அலசல்களை ஈஸ்வர் மோகன் இந்தப் பதிவிலே பேசுகிறார்.
ஜாஃப்னாவில் இருந்து இளங்கலை மாணவரான சுமன், கொஞ்சம் பொருளியல் பற்றிக் கூறுகிறார், இங்கே..!
இவர்கள் எல்லாரும் புதியவர்களே..! நாம் நிறைய பின்னூட்டம் கொடுத்தால், மேலும் ஆர்வமாக எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.
சந்தை நிலவரம்
மும்பையில் இருந்து 'மேக்ஸிமம் இந்தியா' என்பவர் எழுதும் இப்பதிவில் பிற தலைப்புகளும் காணக் கிடைத்தாலும், பங்குச் சந்தையைப் பற்றி, எக்கானமி பற்றிப் பதிவுகள் எழுதி இருக்கிறார். சமீபத்திய மும்பைத் தாக்குதல் பற்றிய இவரது இந்தப் பதிவு ஒன்றே, மும்பை மீது இவருக்கான காதலைச் சொல்கிறது.
ஷேர் ஹண்டர்
ஜோஷ் அலெக்ஸாண்டர் பங்கு மார்க்கெட் பற்றி எழுதும் கருத்துக்கள். அவ்வப்போது சிறுகதைகள், அறிவியல் கதைகள் என்று விலகினாலும், மீண்டும் மைய நீரோட்டத்தில் வந்து கலந்து கொள்கிறார்.
தமிழ் வணிகம்
முழுக்க முழுக்க வர்த்தகச் சந்தையின் அத்தனை முக்கியமான துறைகளையும் பற்றி எழுதுகின்ற தளம் இது. கண்டிப்பாகப் தினசரி பொருளாதார நிலைகளைத் தெரிந்து கொள்ளவும், பண விவகாரங்களை அலசும் கட்டுரைகளுமாக தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பெருநகரத்தில் இருந்தும், அதனைச் சுற்றிலும் உள்ள சிற்றூர், டவுன், கிராமங்களில் இருந்தும் கிளம்பிய தமிழர்கள் தம் மண்ணையும், அதன் நினைவுகளையும் மறக்க முடியாமல் ஊர்ப்பதிவுகளாகக் குழு அமைத்து எழுதுகிறார்கள். பெரும்பாலும் அனைவர்க்கும் தெரிந்திருக்கும் பதிவுகள் தான் என்றாலும், புதியவர்களுக்கு அறிமுகமாக இருக்கட்டுமே என்று இங்கே குறிப்பிடுகிறேன்.
சென்னை
கோவை
மதுரை
குமரி
புதுவை
ரிச்மண்ட்
ஹைதை தமிழ்ச் சங்கம்
மீண்டும்.. அ.பதிவில்...!
|
|
//நாடும், நடப்பும் - 2
ReplyDeleteஆச்சரியமாக இதே பெயரிலேயே மற்றுமொரு பதிவு.//
இது வலைப்பூ என்று நினைக்கிறேன்.
மீண்டும் மிக நல்ல அறிமுகம். சில பதிவுகளைத் தவிர மற்றவை எனக்குப் புதிது.
ஹாய் திரு. வசந்தகுமார்!
ReplyDeleteநான் நேற்று ஒரு வலைப்பூவைப் பார்த்தேன். மிகவும் நன்றாக எழுதியிருந்தார். நான் சுமார் 3 1/2 வருடங்களாக வலைப்பூக்களைப் படிக்கிறேன். இவரது வலைப்பூ எனக்குத் தெரியாது.(தமிழ்மணத்துக்கு இப்போதுதான் வருகிறேன்) உங்களுக்கு இவரைப்பத்தி ஏற்கனவே தெரிந்திருக்கலாம். இல்லையென்றால், அவரது வலைப்பூவைப் படித்து, உங்களுக்கும் பிடித்திருந்தால் அதை அறிமுகப் படுத்துமாறு பணிவுடன் வேண்டுகிறேன். இது படிப்பவர்களுக்கு கண்டிப்பாக பயனுள்ளது. அவர் புகழுக்கும் பாராட்டுக்கும் எழுதுபவரல்ல. எனக்கு அவரது வலைப்பூ நேற்று வரை தெரியாது. பலருக்கு பயன்படும் என்ற எண்ணத்தில் உங்களிடம் வேண்டுகிறேன். நான் வலைச்சரத்துக்கும் புதிது. அதிக உரிமை எடுத்ததற்கு மன்னிக்கவும்.
இதுதான் அந்த பூவின் முகவரி
http://enganeshan.blogspot.com/
நன்றி
நீங்கள் எழுதிய பதில் தனிமடலில் கிடைத்தது(intended or by mistake?)
ReplyDeleteபதிலுக்கு நன்றி!
அன்பு கபீஷ்...
ReplyDeleteஅது intended தான். :)
அனைவருக்கும் வணக்கம்.நாடும்,நடப்பும்-1 ஐ அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.இவ்வலைப்பூ மட்டும் புதிதல்ல.இவ்வலையுலகத்திற்கு நானும் புதிது.இவ்வலைப்பூவில் அறிமுகப்படுத்தியதால் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் என நம்புகிறேன்.-ப்ரியா
ReplyDelete