07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, December 23, 2008

பிழிஞ்ச துணி


ஒரு பன்முக வித்தகர் - சகோதரர் கடந்த மே மாதம் என்னுடைய புனைப்பெயரைப் பற்றி.....

சிகரெட் பிடிக்க விழைந்தேன்.
விரல்களும் உதடுகளும் சிகரெட்டும்தான் இருந்தன.

தீப்பெட்டி இல்லை.  சுற்றியிருந்தவர்களும் 
மனம் திரும்பிய மைந்தர்களாக இருந்தார்கள்.
என் தவிப்பைப் பார்த்த நண்பர் ஒருவர், 
என்னிடமிருந்த சிகரெட்டை வாங்கி
ஜன்னல் வழியாக வெளியே நீட்டினார்.
சிகரெட் பற்றிக்கொண்டது. சென்னை!
உங்கள் புனைபெயரின் மேல் அன்பு வருமா..?

என வெயிலைப் பற்றியும், வெயிலானைப் பற்றியும் தனிமடல் எழுதிய இந்த சகோதரர் இப்போது......


பிழிஞ்ச துணிபோல் ஊரே மழையால் ஊறிப்போச்சப்பா
நனைஞ்சு காய்ஞ்சு நனைஞ்சு காய்ஞ்சு நாறிப்போச்சப்பா

என ஆரம்பிக்கும் இவர்

தாரு ரோடெல்லாம் முழுங்கின பெறகும் தாகம் தீரலையா
வருணன், இந்திரன் மழைக்குச் சாமியாம் போதும் போங்கையா
வெயிலுக்குக் கடவுள் யாரோ எவரோ வெளியில வாங்கையா
யப்பா போதுமப்பா என்று வெயிலுக்கான கடவுளை இப்படி அழைக்கிறார்.


இந்தக் கவிஞரின் பாசத்திற்குரிய தம்பி

முதல்வர் வருகிறார்

"சீக்கிரமா
ரோடு போட்டு
முடிங்கப்பா...
நாங்க பந்தல் போட
தோண்டனும்ல..."
என சொல்லும் இவர்....
ஏற்கனவே அறிமுகமானவராய் இருந்தாலும்,

இவருடைய இன்னொரு இடமான
மூ.... சந்திலிருந்து பத்திரிக்கையாளர்களுக்கு பத்து கட்டளைகள் சொல்கிறார்.


இந்த மூ.ச வலைத்தளத்தை பின்பற்றும் ஒரே ஒருவர் - கோவையில் வக்கீல் தொழில் நடத்திக் கொண்டிருக்கும் ஓவியரென அவருடைய பதிவுகளினூடே அறிய முடிகிறது.

மிகப் பிரபலமானவர்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.  நேற்று தான் வலைத்தளத்தை பார்த்தேன்.  அத்தனை பதிவுகளையும் ஒரேடியாக படித்து முடித்தேன்.
  
ஏழாவது மனிதன்

இன்னும் நிறைய.....


பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான இவர் மழைச் சென்னையை அனுபவித்து சில குறிப்புகள் எழுதியிருக்கிறார். 

கவிதைகளும், பட, புத்தக விமர்சனங்களும் எழுதியிருக்கும் இவரின் ஆட்டோவில் பயணித்த அனுபவங்களையும் எழுதியிருக்கிறார்.

இந்தக் கவிதாயினியும் மழையைப் பற்றி ஒரு சிறு கவிதை எழுதியிருக்கிறார்.  
இவரது வீட்டிலிருக்கும் ஒரு  ’பூ’வைப் பற்றி பல கவிதைகளை தினமும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

கற்பனைகளும், பள்ளி நண்பர்களும், கேள்விகளும், தூக்கத்தில் கனவுகளும் நிரம்பியதாயிருக்கிறது அவளது நாட்கள்!!!
ஒரு காலத்தில் அம்பா!..  பைய்ய்ய்!... உர்!.... கா!...  இப்படி ஒரு ஒரு வார்த்தையில் பேசிட்டிருந்தவங்க, 

இப்போ ஏன் என்னைக் குழந்தைனு சொன்னே? னு செல்லச் சண்டை போடறாங்க.

இன்னும் நிறைய சுட்டிகளை இணைப்பதற்குள் ப்ளாக்கர் மக்கர் பண்ணுகிறது. எனவே அடுத்த பதிவில் சந்திப்போம்.

8 comments:

  1. "புழிஞ்ச துணி"ன்னதுமே சமீபத்துல விகடன்ல படிச்ச ரமேஷ் வைத்யா கவிதை ஞாபகம் வந்தது... பதிவல பாத்தா அதெ கவிதை... அட !!!

    ReplyDelete
  2. அதே........ கவிதை தான் மகேஷ்.
    நன்றி!

    ReplyDelete
  3. வெயிலான் கலக்குங்க..

    ReplyDelete
  4. நன்றி வெயிலான்..என்னுடைய பதிவுகளையும் பகிர்ந்ததற்கு!
    ஜீவாவின் கலைக்கூட பதிவுகள் புதிது..படிக்கத் துவங்கியிருக்கிறேன்! நன்றி...

    ReplyDelete
  5. //ஜீவாவின் கலைக்கூட பதிவுகள் புதிது..படிக்கத் துவங்கியிருக்கிறேன்! நன்றி...
    //

    reppittu :)

    ReplyDelete
  6. நன்றி கிரி!
    சந்தனமுல்லை மற்றும் அப்துல்லாண்ணே!

    ReplyDelete
  7. கலக்கிடிங்க வெயிலான்
    நேரமின்மை காரணமாக இப்போ தான் வர முடிஞ்சது

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது