07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label தணிகை. Show all posts
Showing posts with label தணிகை. Show all posts

Wednesday, August 13, 2008

கதை சொல்லபோறேன்..கத்தாம கேக்கோணும்..

என்ன தலைப்புல எழுதறதுன்னு யோசிச்சே பாதி முடியை பிச்சுகிட்டு கடேசியா வெறும் கதையா உட்டா என்னன்னு தோணுச்சுப்பா..அதான் கதை எழுதறவங்களை எல்லாரையும் பிடிச்சுட்டு வந்துடலாம்னு முடிவு பண்ணி இப்ப ஒவ்வொருத்தரா உங்க முன்னாடி கூட்டியாந்து நிக்க வெக்குறேன்..

கதை ன்னு சொன்னாலே அது சாந்தி அக்கா தான்..புன்னகை தேசம் எனும் வலைப்பூவில் அழகான காதல் கதை,தன் வாழ்வில் சந்தித்தவர்கள் ,அவங்க குழந்தைகளோட கும்மின்னு எழுதி கலக்குவாங்க..குழந்தைகளோட விளையாட்டுன்னாலே அழகு தான்..அதையே இவங்க எழுத்துகள் இன்னும் அழகு சேர்க்கும்..

இவங்களொட சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை என்ற காதல் கதை ரொம்பவே அருமையா இருக்கும்..எப்பவுமே இவங்க கதையில் சம்ப்வங்கள் உரையாடல்களா சொல்லபடுவது தான் சிறப்பு..அதன் மூலம் நம்மையும் அந்த கதையோடு பயணிக்க வைக்கும் திறமான எழுத்து..இந்த கதை சிஃபி .காமில் கூட வெளிவந்தது..தற்போது ஒலிம்பிக் பற்றியும் அழகாக தகவல்களோடு தொகுத்தளித்திருக்கிறார்..இதன் மூலம் நல்ல தொகுப்பாளினியாகவும் தெரிகிறார்..
அடுத்ததா நம்ம கீதாம்மா..கதை கதையாம் காரணமாம்..இவங்க வலையுலக தலைவின்னு எனக்கு வலைச்சரம் வந்தபிறகு தான் தெரியும்..வணக்கம் தல(வி)..ராமாயணத்தையே படத்தோடு தொடராக அழகாக எழுதி வருகிறார்..இதுக்கு மேல நான் சொல்லணுமா என்ன தல(வி) பத்தி...

அடுத்ததா நான் முன்னமே சொன்ன மாதிரி பாஸ்கர் (எ) ஒளியவன் சிறுகதையிலும் கலக்கு கலக்குன்னு கலக்கிட்டிருக்கார்..இவர் கதைகள் இணையதளங்கலில் கூட வெளிவந்திருக்கிறது..தற்போது மிகவும் சுவாரஸ்யமாக கடலும் 4453 ஆம் ஆண்டும் என்ற குறுந்தொடர் எழுதி வருகின்றார்..எல்லாரும் போய் வாங்க 4453 ஆம் ஆண்டுக்கு..

அடுத்ததா என் மனதை கவர்ந்த ஒரு முக்கியமான நண்பர் கென்..இவர் பத்தி சொல்லணுமா என்ன சாரு வோட வாரிசுல்ல..இவரோட எழுத்துக்கள் எப்போதுமே ஒரு நிராசையை கொண்டிருக்கும்னு எல்லாரும் சொல்லுவாங்க..அதோட காரணம் என்னன்ன்னு என்கிட்ட கென் போன்ல கூட சொன்னாரு..இவரோ கதையெழுதும் எழுத்துநடை மிகவும் வித்தியாசம் ..

இவரோட எழுத்து நடையின் மூலம் நம்மை கிராமிய மணம் கமழ கதைக்குள் ஆழ்த்தி விடும் திறம் ..அபாரம்..நான் இவரோட கதையில் அதிகமா ரசிச்சு (மூழ்கி )படிச்சது பிணத்தின் தீயில் பீடிக்கு நெருப்பெடுத்தவன்..கதையில் முடிவில் நம்மையறியாமல் கண் கலங்கி நிற்பது தான் உண்மை..

அடுத்தது நம்ம நிலா அண்ணா..கவிதையின் ஒரு புறம் தொடமுடியாத தூரத்துக்கு போயிட்டிருக்காருன்னா கதையும்..பொதுவ்வா தமிழ் குழுமங்களில் இவர்கதைகளை படித்து இன்னொரு சுஜாதான்னு கூட சொல்லி கேட்டிருக்கேன்..இவரோட சேமியா ஐஸ் , இன்னொன்னு தாய்மை ..எனும் சிறுகதை என்னை ரொம்பவே பாதித்து விட்டது...இதிலும் எழுத்து நடை தான் மிகவும் சொல்லதகுந்த விசயம்..அப்படியே கதைக்குள் நம்மை கண்கட்டி இழுத்து செல்லும் அபாரமான எழுத்துகள்....

ஹலோ என்னா எல்லாரும் கதைகேட்டு தூங்கிட்டிருக்கீங்க..நல்லா இருக்குப்பா ...எழுந்துருங்க எழுந்துருங்க...எல்லாரும் பிரசண்ட் சொல்லுங்க ..நான் அடுத்த பதிவோட திரும்ப வரேன்
மேலும் வாசிக்க...

Tuesday, August 12, 2008

பாடவா ஒரு பாடலை... கூடவே ஒரு தேட(வ)லை..

அடிச்சு புடிச்சு சாப்பிட்டு அடுத்த பதிவெழுதலாம்னு உக்காந்து யோசிச்சுபாத்தேன்..எதை பத்தி எழுதலாம்னு ...ஒரு முடிவும் வரலை...
என்னடா இது ஒன்னுமே தோணமாட்டேங்குதேன்னு கண்ணை தொறக்கணும் சாமின்னு பாட்டு பாட ஆரம்பிச்சேன் ..முதல் வரிய தவிர வேற எதுவும் நான் பாடலை,...

அட பாட்டை பத்தியே பதிவு போடலாம்னு முடிவாகி போச்சு..அப்புறம் என்ன தேடல் தொடங்கியது..தேடலில் முதலில் சிக்கிய பெரும் புள்ளி இம்சை அரசி..இவங்களோட கலாய்த்தல் பதிவுகளெல்லாம் முன்னமே குழுமத்துல சுட்டு போட்டிருக்காங்க...நானும் படிச்சிருக்கேன்..சன் மியூசிக்ல வி ஜே பத்தி ஒரு பதிவு வந்திருக்கு...

இப்ப ஒரு கன்னட பாடலுக்கு தமிழ் வடிவம் கொடுத்து ஒரு பாட்டு எழுதியிருக்காங்க....வரிகளெல்லாம் சுகம் சுகம்...நீங்க ஏன் தமிழ் சினிமாவுக்கு பாட்டு எழுதக்கூடாதுன்னு கேக்கணும்னு எனக்கு தோணுது..ஆனா அதுக்கு நீங்க அங்கங்க ஆங்கிலமும் கலக்கணும்னு சொல்லிகிட்டு இந்தாங்க அந்த பாட்டோட லிங்க்.....பாட்டு பாட்டு பாட்டு..
அப்படியேக்கா ஒரு உலாவு உலாவுனா .....நம்ம தமிழ் ரசிகைன்னு ஒருத்தவங்க தமிழ் ரசிகை கவிதைகள் னு ஒரு வலைப்பூவில் கவிதை ,பாட்டுன்னு எழுதி கலக்கிட்டு இருக்காங்க..இதுல என்ன விசேசம் னா ஏற்கனவே வந்த தமிழ் பாட்டோட ராகத்திலே இவங்க வேற வரிகளை உருவாக்கி சுகம் சேர்க்குறாங்க...போய் பாருங்களேன்..
இப்ப எங்க திரும்பினாலும் கேட்கும் பார்க்கும் பாட்டு..சுப்ரமணிய புரத்திலிருந்து கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்..மாற்று வரிகளோடு ஜொலிக்கிறது..

இன்னுமொரு பாடல் பாருங்கள்...மன்றம் வந்த தென்றலுக்கு மௌனராகத்திலிருந்து மாற்று வரிகளோடு...

இதுவரைக்கும் மாற்று வரிகளோடு பார்த்தோம்..இப்ப நம்ம பழைய தமிழ் பாடல்களை அழகாக தொகுத்து வழங்குகிறார்கள் தேன்கிண்ணம் வலையில்.இங்கு பாடலை கேட்கவும் வசதியோடு..நல்லதொரு சேவை..

எல்லாரும் பாட்டுகேட்டுக்கிட்டே இருங்க மக்களே....நான் அடுத்த பதிவோட வந்துடறேன்......
மேலும் வாசிக்க...

பொத்துக்கிட்டு ஊத்ததுங்க வானம்...நீங்க போர்த்திகிட்டு கூட வர வேணும்...

நானும் தான் வாத்தியாராயிட்ட ஜோருல ஜீப்பரா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு கண்ணாடிஒன்னை மாட்டிக்கிட்டு வகுப்பெடுக்கலாம்னு வந்தாக்கா தினமும் வந்து மீத பர்ஸ்ட் மீத செகண்டு ன்னு சொல்லற பயபுள்ளைங்க கூட ஆளை காணோம்..எங்க போயிருப்பாங்கன்னு யோசிச்சு யோசிச்சு மண்டை காய்ஞ்சு போயி சரி வகுப்புக்கு வந்த ரெண்டு பேருக்காச்சும் பாடம் நடத்தலாம்னு முடிவு பண்ணி என்ன தலைப்புல இன்னைக்கு பாடம் எடுக்கலாம்னு யோசிச்சேன்..

அடிக்கடி வந்து அலப்பறை பண்ணாலும் மனசுக்கு இதமா இருக்க இந்த மழை ஞாபகத்துக்கு வந்து தொலைச்சுடுச்சு..சரிப்பா இன்னைக்கு வகுப்புல மழையை பத்தி பார்ப்போம்...

முதல்ல மழைன்னு நினைக்கும் போதே மனசுல நிக்குறது மழைக்காதலன் சார்லஸ்தாங்க...இவர் மழையை ரசிப்பதற்கு சொல்லும் காரணங்களே கவிதையாய் தான் இருக்கிறது..மழைக்காதலன்னு சொல்லி அழகான காதல் கவிதைகளை நமக்கு தருகிறார்.. நீ -3 ன்னு இருக்கும் இந்த கவிதையில்
//உன்னைப் பற்றிஎழுதலாம் என்றுநினைத்துவார்த்தைகள் தேடுகின்றேன்...அனைத்துமே உன்னைச்சிறுமைப் படுத்துகின்றனபுள்ளியோடு முடிந்து போகிறதுகவிதை... //

அவ்ளோ அழகா பெண்மையை வர்ணிக்கிறாருங்க...புள்ளி வெச்சு கவிதை எழுதறாருங்க.....

அடுத்தது கொல்லிமலையில இருந்தே நேரா நம்ம கணினிதிரைக்கு சாரலை கொண்டு வந்து சேர்க்கும் ஜே கே...கடந்த ஒரு வருடத்துக்கு முன்னாடியிலிருந்து இவரோட கவிதைக்கு நான் ரசிகன்..நான் கணினியில் தமிழை பார்த்த கணம் இவரோட கவிதைகள் தான்..என்னோட வலை உருவாக காரணமும் இவரோட வலைபக்கம் தான்...ஆனா இப்பவெல்லாம் இவர் கவிதை எழுதறதையே விட்டுட்டார்னு நினைக்கிறேன்.அதிகமா கவிதைகள் வருவதே இல்ல...அந்த அழகிய நினைவுகள் என்று ஆரம்பிக்கும் இந்த கவிதை...காதலை அழகாய் சொல்லிசெல்லும்.....

அடுத்தது நம்ம எழில் பாரதி....கண்ணாடி மழைன்னு வலைப்பூவில் மனதில் பிரதிபலிப்புகள் என்ற வாசகத்தோடே பிரதிபலிக்கிறார்..கவிதைகளை...அழகான கவிதைகள் எல்லாமே ...கடைசியாய் வந்த சில்மிஷ காதல்னு அருமையான புகைப்படங்களையும் அதை பிரதிபலிக்கும் வரிகள் என நம்மையும் கவிதையில்(காதலில்) நீந்த வைக்கிறார்,....

சரி சரி...எல்லாரும் ரொம்ப நேரம் மழையில நனைந்து இருக்கீங்க..அப்புறம் இந்த வாத்தியார் பயலால தான் ஜலதோஷம்னு நாளைக்கு லீவ் எடுத்துட போறீங்க..தலைய துவட்டிக்கிட்டு ரெடியா இருங்க..அடுத்த பதிவோட நானும் வருகிறேன்....
மேலும் வாசிக்க...

Sunday, August 10, 2008

காதலிக்க போறேன்.. காப்பாத்த வாங்க -2

போன பதிவுல கோகுலனும் மீறானும் செமயா லவ்ஸ் விட்டாங்களா..இப்ப யாரை யாரை பத்தியெல்லாம் எழுதலாம்னு யோசிச்சுகிட்டே போனா தேவதைகளின் சொந்தக்காரர் சிவா அண்ணா ஞாபகம் வந்தாரு..அடடே காதலிக்காக கவிதை எழுதறவங்க மாதிரி இவர் கவிதையவே காதலிக்கறாராம்..கவிதை காதலன் என்ற இவரது வலைபக்கத்தில் 63 பதிவுகள் இருக்கிறது..காதல் மட்டுமே 44 பதிவுன்னா பாருங்க..இவரோட புரப்பைல்ல காதலுக்காக கவிதை எழுத ஆரம்பிச்சதா சொல்லியிருக்கார்..



இந்த நவீன காலத்துகாதலுக்கும் இவர் காதலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் போல ..அட ஆமாங்க எழுத மட்டும் தெரியும்? என்ற கவிதையில்

காதலியின் மீதிருக்கும் உண்மையான காதலை அழகாக சொல்லியிருப்பார்.



அடுத்தது கமல்ராஜன் இவர் வித்தியாசமானவனின் சின்ன சின்ன கிறுக்கல்கள் னு வலைப்பூவில் வலம் வருகிறார்...வழக்கமா பெண்களை அதிகமாய் வர்ணித்தே கவிதை எழுதும் ஆண்களுக்கு மத்தியில் வர்ண்னைகளுக்கு அந்த பெண்ணானவள் பாடும் படியாய் ஒரு கவிதை அவளின் எதார்த்த எதிர்பார்ப்புகள்.... அழகாக ஒரு பெண்ணின் மனதை எழுதியிருக்கிறார் வரிகளாக..



அடுத்ததா நம்மா ரசிகன்..இவர் தாங்க வலையுலகத்தில் இவ்ளோ இருக்குன்னு என்னை கூட்டியாந்து காமிச்சாரு..எனக்கு நிறைய சொல்லி கொடுத்த பெருமையும் இருக்கு இவருக்கு..இவரை பத்தி நான் சொல்லாமயே உங்களுக்கு தெரிந்திருக்கும்..ஆனாலும் இவரோட ஜொள்ளுகாதலும் லொள்ளு கவிதையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்..கவிதை முயற்சிகள்னு இவர் வகை படுத்தியிருந்தாலும் வரிகளில் காதலும் கவிதையும் ஒன்றுகொன்று திமிறிகொண்டு தான் வருகிறது..ரசிகன் கண்ணால சாப்பாடு போடறதுக்கு ரெடியாகிட்டிருக்கீங்களா?



என்னாங்க சாப்பாடுன்னதும் ரசிகன் கிட்டயே எல்லாரும் உக்காந்துட்டீங்களா? எழுந்து வாங்கப்பா..அதெல்லாம் இன்னும் காலமிருக்குன்னு சொல்லிட்டிருக்கார் அவர்..நாம அடுத்த ஆளை பார்க்க போலாம்..

அடுத்தது ஒளியவன் எங்கிற பாஸ்கர்..இவரின் கவிதைகள் சமூகம் காதல் மதவெறி என எல்லாவற்றையும் சீண்டி பார்த்துகொண்டிருக்கும்..இப்ப காதல் பத்தி பாக்குறதால இவரோட ஒரு காதல் கவிதையை பத்தி பார்ப்போம்.



நான் என்பதும் நீதான் !! என்ற கவிதையில் ஒரு இறந்த மனைவியின் மீதான காதலை அழகான வரிகள் கொண்டு நம் மனதில் ஆழபயணித்துவிடுகிறார்..நம்மால் தான் ஆழத்தில் இருந்து மீண்டெழமுடியவில்லை..அத்துணை அற்புதமான வரிகள்...இவரை பத்தி சொல்ல இன்னும் நிறைய இருக்கு...அடுத்த பதிவுகளில் இவர் மீண்டும் வருவார்..வேறொரு வலையோடு...



அடுத்தது உங்களுக்கெல்லாம் நல்ல பரிட்சயமான நிலாரசிகன் என்கிற ராஜேஷ்(??? பேர் கரீட்டு தானே தலீவா?) இவரோட உண்மையான பேரை தெரிஞ்சுக்க ஒரு வருசம் ஆச்சு...நிலாரசிகனாகவே எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர்..முன்னமெல்லாம் காதலில் ஊற்றெடுக்கும் இவரின் பேனா மை இப்பொழுது சமூகம் பக்கமும் திரும்பியிருக்கிறது..சரி நாம காதலை பத்தி தானே பேசிட்டிருக்கோம்.. இவரோட காதல் கவிதையெல்லாமே சும்மா ஜீப்பரா இருக்குமுங்க..இதுல முத்தகவிதை மூன்று.. சும்மா காதல் புகுந்து விளையாடுதுங்க...



//1.மெல்லிதழில் மென்மையாய்
முத்தமிட்டு வெட்கப்புன்னகையுடன்
நெஞ்சில் நீ புதைகின்ற
செளந்தர்யத்தில்,
தூவல் கொண்டெழுதிடும்
கவிதைகள் தோற்றுப்போகின்றன//



இந்த வரிகளில் காதலை சொல்லி கவிதையை பின்னுக்கு தள்ளியிருக்கிறார்..இவரோட கவிதையெழுதும் திறமை தான் காதலையே அழகு படுத்துதுன்னு தான் நான் சொல்லுவேன்...நீங்களும் அதை தான் சொல்லோனும்..ஏன்னா நான் தான் வாத்தியாராக்கும் ஹி ஹி ஹி ஹி..போதும் போதும் அடங்குடான்னு எல்லாரும் கோரஸ் பாடாதீங்க...இன்னும் நிறைய கவிஞர்கள் வலையில் காதலித்துகொண்டிருக்கிறார்கள்..இந்த வாரத்தில் நேரமிருந்தால் இது மூணாவது பாகமும் வரும்னு உங்களுக்கெல்லாம் சொல்லிகிட்டு இப்போதைக்கு அடுத்த பதிவுக்கு என்ன மாதிரி எழுதலாம்னு சுழலும் மின் விசிறியை நோக்கி கொண்டே.............
மேலும் வாசிக்க...

காதலிக்க போறேன்..காப்பாத்த வாங்க..

என்னடா காதலிக்க போறேங்குறான்.காப்பாத்த வாங்கங்கறான்..இவனுக்கு என்ன தான் வேணும்..ஒரு பதிவையும் உறுப்படியா போட வழியில்லாம எல்லாத்துக்கும் நம்மளையும் கூப்பிட்டு மொக்கை போடுறான்னு பாக்கறீங்களா?.. நோ நோ அழக்கூடாது..

இந்த காதல் இருக்கே..சும்மா சொல்லக்கூடாதுங்க...காதல்னு ஒரு வார்த்தையோட நீ நான்னு எதை சேர்த்தாலும் கவிதையா மாறி மனசுக்கு இதமா இருக்கும்..



இங்க நம்ம நண்பர்களும் அப்படி தான்...சும்மா காதல்னு வந்தாலே வார்த்தைகளை கோர்த்து காதலுக்கு இனிமையை சேர்த்து விடுவார்கள்.

சரி யாரெல்லாம் இப்படி காதல் காதல்னு சுத்திட்டிருக்காங்க அப்படீன்னு

பார்க்கலாம்..நீங்களும் வரீங்க தானே?



முதலாவதா நான் சொல்ல நினைக்கிறது கோகுலன்..இவர் இணைய குழுமங்களில் கோகுலனின் காதல் காதல் காதல் என கலக்கு கலக்குன்னு கலக்குவார்..கவிதைவரிகளில் காதல் கன்னாபின்னாவென்று பெருக்கெடுத்து ஓடும்..ஒரு அழகான காதல் இரண்டற கலத்தலென்பது ன்னு சொல்லியிருக்க்கார்..ஐயோ பறவைகளின் வழியாய் காதலை

//ஒன்றாய் பறக்கையிலும்

ஒன்றின் இறகு விசிறித்தரும்

காற்றேமற்றொன்றின் சுவாசம்//



என்ன அழகாக சொல்லியிருக்கார்..இன்னொன்னு பாருங்களேன்..இந்த காதல் இவரை என்ன பாடு படுத்தியிருக்குமென..வந்தாலும் வரலாம்.. தூக்கம் வராம எப்படி தத்தளிக்கிறார்னு பாருங்களேன்..காதல் ரொம்ப தான் படுத்துதுன்னுநினைக்கிறேன்..



அடுத்தது நம்ம பாசக்காரபய மீறான்..சம்பன் குளத்தான்னு வலைப்பூவீல் காதலை பிச்சி பிச்சி உதறராருங்க..மெல்லதிறந்தது (காதல்) கனவு ன்னு ஆரம்பிச்சு அந்த கவிதையில் காதல் அழகா ? காதலி அழகான்னு திக்கு முக்காட தான் வெச்சுடறாரு...

//
#
நீ பிரிந்த நொடிகளில்
ஒட்டிக்கொள்கின்றன
உன் நினைவுகள் !
#
I Love U வென குறுந்தகவலுனுப்பிவிட்டு
பெருமூச்சு விடுகிறேன்
காதலை பிரசவித்த சுகத்தில் !
#
இதயத்தில் நீ குடிவந்த பிறகு
நொடிக்கொருமுறை சரிபார்த்துக்கொள்கிறேன்
துடிப்பை. ! //



காதலை பிரசவத்தோடு ஒப்பிட்டு அழகாய் எழுதியிருக்கிறார்..



சரி இந்த பதிவுல இந்த ரெண்டு காதலர்களை பார்த்தோம்..இந்த பாகம் மட்டும் இன்னொன்னா போடுடான்னு மனசு சொல்லுது..சொன்னா கேட்டூ தானே ஆகணும்..இல்லன்னா தமிழ் மாங்கனியோட மனசாட்சி மாதிரி எல்லார் மத்தியிலும் உண்மையெல்லாம் சொல்லிடுச்சுன்னா என்ன பண்றது சாமி..

அதனால மக்களே அடுத்த பாகத்தில் இன்னும் பல நண்பர்களோடு வருகிறேன்...
மேலும் வாசிக்க...

சாமி கும்மிட போறேன்..சத்தம் போடாம வாங்க...

எந்த வலையை பிடிச்சு எதையெல்லாம் எழுதலாமிங்குறதுல ரொம்பவே அங்கலாய்ச்சுடுது என் மனசு..சரி எதையாச்சும் எழுதிடலாம்னு வந்தா கோர்வையா ஒரு தலைப்பு கிடைக்கமாட்டேங்குது சாமின்னு சொன்னப்ப தான் தோணுச்சு சரி முதல்ல சாமியை பத்தியே போட்டு முதல் பதிவை தொடங்கிடுவோம்..ஆடி மாசம் வேற வலையில உலாத்தினா நிறைய பதிவுகள் கிடைக்கும் போலன்னு அப்படியே சுத்தலாம்னு நுழைய


முதல்ல ஞாபகம் வந்தது நம்ம கவிநயா தான்..உள்ள நுழைஞ்சதுமே அட்டகாசமா ஆடிவெள்ளி கிழமையிலே ன்னு ஒரு செம சூப்பரான பாட்டு.இவங்க பதிவுகளில் எப்பவுமே அழகான தரிசன புகைப்படங்களும் அதற்கேற்ற வரிகளும் அற்புதமாய் எழுதியிருப்பாங்க..நீங்களும் இங்க போய் தொட்டு கும்மிட்டு வாங்க..அடுத்ததுக்கு போகலாமா?

ஆத்தாவை பத்தி பாட்டு படிச்சோம்..அப்புறமா என் பேரில் குடியிருக்கும் முருகனை பற்றி என்னவொரு அழகா இவங்களோட ஆசைக்கு ஏத்தமாதிரி ரெண்டாந்தரம்கட்டபோறோம் வந்து வாழ்த்துங்கன்னு கூப்பிட்டிருக்காங்க..


அட என்னாங்க வெறும் வாழ்த்தோட அனுப்ப மாட்டாங்க நல்ல தடபுடலா தேவலோகத்துவிருந்து வெச்சு தான் அனுப்புவாங்க..எல்லாரும் ஒரு எட்டு போய்ட்டு வரூவோமா?


கவிநயாவின் வலையுலாவலில் இன்னொரு வலை திரு சதாசிவம் எழுதியவைகள் கண்ணில் பட்டது.இவருக்கு இறைநம்பிக்கையே இல்லாமல் இருந்து எப்படிஇறைக்குள் வந்தார் என்பதையும் இறைவனின் அவதாரங்கள் பற்றியும் வாழ்க்கையும் நீயே! வழித்துணையும் நீயே என பாடியுள்ளார். இவரில் ராமனை பற்றிய அதிகமான கவிதைகளை பார்க்கமுடிகிறது..இறைவனே இவருள் இருந்து எழுத தூண்டுவதாய் சொல்லும் இவரின் எழுத்துக்கள் நம்பிக்கை..


அடுத்ததா இணையகுழுமத்தில் அறிமுகமான அம்மா விசாலம் அவர்களுடைய மீராம்பிகா வலை..இதில் சமூகம் குறித்த தேடல்களும் கடவுள் பற்றிய போதனைகளும் அதிகம் காணலாம்.குறிப்பாக இந்து மத பண்டிகைநாட்களின் வீசேசம் குறித்தும் வழிபடும் முறைகுறித்தும் இவர் எழுத்துகள் அமைந்திருக்கும்..அதில் நான் உங்களுக்கு சொல்லவிரும்பும் பதிவு வரலட்சுமி விரதம். எல்லாரும் கவிநயா அக்காவோட பதிவுல விருந்து சாப்பிட்டீங்கல்ல ..இப்ப விரதமும் இருந்து பாருங்க...


விரதம் முடிஞ்சவுடனே படையல் எல்லாம் நீங்களே சாப்பிடலாம்..என்ன சரி தானே ஒப்பந்தம்..


அப்படியேக்கா விரதம் முடிஞ்சு எல்லாரும் வந்து கடைசியா ஒரு அந்தாதி பாடலாமா? இங்க பாருங்க குமரன் அமிராமி அந்தாதியை அழகாக பாடலும் படத்தோடும் பாடலுக்கான ஒவ்வொரு வரிக்கான விளக்கமும் அந்தாதி தொடை பற்றிய செய்திகளையும் எதுகை மோனை நயமென எல்லாவற்றையும் தொகுத்தளிக்கிறார்..கடைசியாக நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே (அபிராமி அந்தாதி 100வது பாடல்) கொடுத்திருக்கிறார்...

அந்தாதி கத்துக்க ஆசை படுறவங்க எல்லாரும் இவரோட பதிவை படிச்சாலே
எழுதலாம்னு நினைக்கிறேன்..


சாமி கும்மிட்டாச்சு..அடுத்த பதிவுக்காக நான் போறேன்..இதையெல்லாம் படித்து பார்த்து சாமி கும்பிட்டு நீங்களும் காத்திருங்க...என் மொக்கைதொடருக்காக/

ஒரு வாரம் உங்க தலையெழுத்து அனுபவிச்சு தான் ஆகணும்..
மேலும் வாசிக்க...

கனவு நிறைவேறி கம்பெடுத்துட்டேன்..

கனவு நிறைவேறி கம்பெடுத்துட்டேனுங்க..அட ஆமாங்க நான் வாத்தியாராயிட்டேன்.யாருடா இது திடீர்னு வந்து வாத்தியாராயிட்டேன்னு கூவுறான்னு நீங்கல்லாம் முழிக்கறது எனக்கு தெரியுது..ஒரு வருசத்துக்கும் மேல வலையெழுதினாலும் அதிகமா பிரபலமில்லாத வலைஎன்னோடது தான்..

என்னடா ஆளே தெரியலைங்கறோம்.இவன் வலையை பத்தி பேசிட்டிருக்கான்னு நினைக்கறீங்களா..என்னோட பேர் தணிகை (எ) தணிகாசலம்.ஊர்சென்னை.வயசு சொல்லணுமா? முந்தைய பதிவர் வயசையெல்லாம் சீனா ஐயா சொன்னதால நானும் 23 ன்னு சொல்லிகிறேன்.தணிகாசலம்(எ) தணிகை என்னோட விரிவான அறிமுகம் அன்புடனுக்காக எழுதியது..இங்கபோன நான் இன்னாரு எப்படி பட்டவன்னு தெரியும்..

படிச்சது பன்னிரெண்டாவது தான்..அதோட கருகி போன என்னோட வாத்தியார் கனவு இன்னைக்கு தான்ய்யா நிறைவேறிச்சு..அதைய நிறைவேத்தி வெச்ச என் சின்ன???????? நண்பர் சீனா ஐயாவுக்கு முதல்ல வணக்கமுங்க& நன்றியும் கூட;-))))))

அப்புறம் என்ன இது வரைக்கும் சூப்பரா எழுதின, கலாய்ச்ச,கும்முன எல்லா பதிவர்களுக்கு வணக்கமுங்க..


எவ்ளோ எழுதணும்னு தோணுது. ஆனாஎன்ன எழுதறதுன்னு தெரியலை..காலேஜிக்கு முதல் முதலா போன பயம் இன்னைக்கு இங்க எழுதும் போது வருது..ராகிங் பண்ணுவீங்களாப்பா???

என்னை பத்தின மொக்கை(சத்தியமா மொக்கை தான்னு நிஜமா நல்லவன் சொல்றது கேக்குது)போதும்னு நினைக்கிறேன்.


என் வலையை பத்தி சொல்லணும்னா லாட்டரி சீட்டை பொறுக்கி விளையாடும் போது அதுல இருந்த லாட்டரி அடிச்சா எப்படியிருக்கும்.. அப்படி தாங்க எதேச்சையா ஒரு வலைபக்கத்தை படிக்கும் போது தெரியாம சைன் இன் கிளிக் பண்ணி அதுல வந்த கிரியேட் ஆப்ட்சன் ல போய் எனக்குன்னு ஒரு வலை உருவாகிச்சு. கணினியை பத்தின அறிவு முழுசா இல்லாம தமிழ் குழுமங்களில் எழுதுவதை அப்படியே இங்க வெட்டி ஒட்டிடுவேன்..மத்தபடி என் வலைக்கு அதிகமா யாரும் வரூவதில்லை..எதுவாயிருந்தாலும் குழுமத்தோட நின்னுடும்..


இந்த வெற்றுகாகிதத்தின் எண்ணகுவியல்கள் தான் என்னோட வலை.இங்க கவிதைன்னு சில கொலைகளும் கதைன்ன்னு சில கொடுமைகளூம் இருக்கும்..அதிகமா சுயம் தேடியவைகளாகவோ இல்ல புலம்பல்களாகவோ தான் ....

என்னோட கவிதையில் தனிமைகள் .. கதையில் என் கனவு தேவதை ..இது ரொம்ப பிடிக்கும்..


டேய் விட்டுட்டு அடுத்த பதிவாச்சும் படிக்கற மாதிரி போடுடான்னு எல்லாரும் முட்டிக்கிறீங்கன்னு என் பட்சி வந்து சொல்றதால இதோட போதும்னு விட்டுட்டு அடுத்த பதிவு என்ன போடலாம்னு யோசிச்சுகிட்டே உங்க மறுமொழிஎனக்கும் வரணும் னு இப்பவே நன்றி சொல்லி ஜீட் விட்டுக்கறேன்..
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது