07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 10, 2008

காதலிக்க போறேன்.. காப்பாத்த வாங்க -2

போன பதிவுல கோகுலனும் மீறானும் செமயா லவ்ஸ் விட்டாங்களா..இப்ப யாரை யாரை பத்தியெல்லாம் எழுதலாம்னு யோசிச்சுகிட்டே போனா தேவதைகளின் சொந்தக்காரர் சிவா அண்ணா ஞாபகம் வந்தாரு..அடடே காதலிக்காக கவிதை எழுதறவங்க மாதிரி இவர் கவிதையவே காதலிக்கறாராம்..கவிதை காதலன் என்ற இவரது வலைபக்கத்தில் 63 பதிவுகள் இருக்கிறது..காதல் மட்டுமே 44 பதிவுன்னா பாருங்க..இவரோட புரப்பைல்ல காதலுக்காக கவிதை எழுத ஆரம்பிச்சதா சொல்லியிருக்கார்..



இந்த நவீன காலத்துகாதலுக்கும் இவர் காதலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் போல ..அட ஆமாங்க எழுத மட்டும் தெரியும்? என்ற கவிதையில்

காதலியின் மீதிருக்கும் உண்மையான காதலை அழகாக சொல்லியிருப்பார்.



அடுத்தது கமல்ராஜன் இவர் வித்தியாசமானவனின் சின்ன சின்ன கிறுக்கல்கள் னு வலைப்பூவில் வலம் வருகிறார்...வழக்கமா பெண்களை அதிகமாய் வர்ணித்தே கவிதை எழுதும் ஆண்களுக்கு மத்தியில் வர்ண்னைகளுக்கு அந்த பெண்ணானவள் பாடும் படியாய் ஒரு கவிதை அவளின் எதார்த்த எதிர்பார்ப்புகள்.... அழகாக ஒரு பெண்ணின் மனதை எழுதியிருக்கிறார் வரிகளாக..



அடுத்ததா நம்மா ரசிகன்..இவர் தாங்க வலையுலகத்தில் இவ்ளோ இருக்குன்னு என்னை கூட்டியாந்து காமிச்சாரு..எனக்கு நிறைய சொல்லி கொடுத்த பெருமையும் இருக்கு இவருக்கு..இவரை பத்தி நான் சொல்லாமயே உங்களுக்கு தெரிந்திருக்கும்..ஆனாலும் இவரோட ஜொள்ளுகாதலும் லொள்ளு கவிதையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்..கவிதை முயற்சிகள்னு இவர் வகை படுத்தியிருந்தாலும் வரிகளில் காதலும் கவிதையும் ஒன்றுகொன்று திமிறிகொண்டு தான் வருகிறது..ரசிகன் கண்ணால சாப்பாடு போடறதுக்கு ரெடியாகிட்டிருக்கீங்களா?



என்னாங்க சாப்பாடுன்னதும் ரசிகன் கிட்டயே எல்லாரும் உக்காந்துட்டீங்களா? எழுந்து வாங்கப்பா..அதெல்லாம் இன்னும் காலமிருக்குன்னு சொல்லிட்டிருக்கார் அவர்..நாம அடுத்த ஆளை பார்க்க போலாம்..

அடுத்தது ஒளியவன் எங்கிற பாஸ்கர்..இவரின் கவிதைகள் சமூகம் காதல் மதவெறி என எல்லாவற்றையும் சீண்டி பார்த்துகொண்டிருக்கும்..இப்ப காதல் பத்தி பாக்குறதால இவரோட ஒரு காதல் கவிதையை பத்தி பார்ப்போம்.



நான் என்பதும் நீதான் !! என்ற கவிதையில் ஒரு இறந்த மனைவியின் மீதான காதலை அழகான வரிகள் கொண்டு நம் மனதில் ஆழபயணித்துவிடுகிறார்..நம்மால் தான் ஆழத்தில் இருந்து மீண்டெழமுடியவில்லை..அத்துணை அற்புதமான வரிகள்...இவரை பத்தி சொல்ல இன்னும் நிறைய இருக்கு...அடுத்த பதிவுகளில் இவர் மீண்டும் வருவார்..வேறொரு வலையோடு...



அடுத்தது உங்களுக்கெல்லாம் நல்ல பரிட்சயமான நிலாரசிகன் என்கிற ராஜேஷ்(??? பேர் கரீட்டு தானே தலீவா?) இவரோட உண்மையான பேரை தெரிஞ்சுக்க ஒரு வருசம் ஆச்சு...நிலாரசிகனாகவே எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர்..முன்னமெல்லாம் காதலில் ஊற்றெடுக்கும் இவரின் பேனா மை இப்பொழுது சமூகம் பக்கமும் திரும்பியிருக்கிறது..சரி நாம காதலை பத்தி தானே பேசிட்டிருக்கோம்.. இவரோட காதல் கவிதையெல்லாமே சும்மா ஜீப்பரா இருக்குமுங்க..இதுல முத்தகவிதை மூன்று.. சும்மா காதல் புகுந்து விளையாடுதுங்க...



//1.மெல்லிதழில் மென்மையாய்
முத்தமிட்டு வெட்கப்புன்னகையுடன்
நெஞ்சில் நீ புதைகின்ற
செளந்தர்யத்தில்,
தூவல் கொண்டெழுதிடும்
கவிதைகள் தோற்றுப்போகின்றன//



இந்த வரிகளில் காதலை சொல்லி கவிதையை பின்னுக்கு தள்ளியிருக்கிறார்..இவரோட கவிதையெழுதும் திறமை தான் காதலையே அழகு படுத்துதுன்னு தான் நான் சொல்லுவேன்...நீங்களும் அதை தான் சொல்லோனும்..ஏன்னா நான் தான் வாத்தியாராக்கும் ஹி ஹி ஹி ஹி..போதும் போதும் அடங்குடான்னு எல்லாரும் கோரஸ் பாடாதீங்க...இன்னும் நிறைய கவிஞர்கள் வலையில் காதலித்துகொண்டிருக்கிறார்கள்..இந்த வாரத்தில் நேரமிருந்தால் இது மூணாவது பாகமும் வரும்னு உங்களுக்கெல்லாம் சொல்லிகிட்டு இப்போதைக்கு அடுத்த பதிவுக்கு என்ன மாதிரி எழுதலாம்னு சுழலும் மின் விசிறியை நோக்கி கொண்டே.............

9 comments:

  1. ம்ம்ம் இது தொடர்கதையா - சிவா , ராஜேஷ் - கலக்குங்க - காதல் இளவரசன் சிவாவின் காதல் கவிதைகள் எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம்

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. இங்க பாருங்க கொடுமைய...என்னதான் தெரியாதவனா இருந்தாலும் வந்து மறுமொழியாச்சும் போடுங்க சாமி...


    அடுத்த பதிவுல இன்னும் மெனக்கெட்டு எப்படியாச்சும் படிக்கிறா மாதிரி எழுதறேன்..

    சீனா சார் நன்றி..உங்க ஊக்கத்துக்கு,...

    ReplyDelete
  3. இங்க பாருங்க கொடுமைய...என்னதான் தெரியாதவனா இருந்தாலும் வந்து மறுமொழியாச்சும் போடுங்க சாமி...


    வந்துட்டேன். வந்துட்டேன்.

    கொஞ்சம் பிசியா இருந்துட்டேன் நண்பரே.

    பதிவு போடுங்க படிச்சிக்கினு இருக்க நான் ரெடி.

    ReplyDelete
  4. புதுகைத் தென்றல் said...

    இங்க பாருங்க கொடுமைய...என்னதான் தெரியாதவனா இருந்தாலும் வந்து மறுமொழியாச்சும் போடுங்க சாமி...


    வந்துட்டேன். வந்துட்டேன்.

    கொஞ்சம் பிசியா இருந்துட்டேன் நண்பரே.

    பதிவு போடுங்க படிச்சிக்கினு இருக்க நான் ரெடி.//

    ஆத்தா உங்களுக்கு எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய மனசு......

    ReplyDelete
  5. அருமையான
    கவிதைகள்

    ReplyDelete
  6. //திகழ்மிளிர் said...
    அருமையான
    கவிதைகள்

    //

    வாங்க வாங்க ...ஆமா ஏன் லேட்டு?

    சரி சரி..நீங்களாச்சும் வந்தீங்களே,,

    அப்படி உக்காருங்க...

    ReplyDelete
  7. தணிகை..ரொம்ப நன்றி.. இவ்வளவு சிறப்பான அறிமுகம் கொடுத்ததுக்கு...

    சீனா ஐயா தங்களோட பாராட்டுக்கு நன்றி.. "காதல் இளவரசன்" அடைமொழி வேற... மிக்க நன்றி

    கமல் ராஜனின் வலைப்பூ மிகவும் அருமையா இருக்கு... அதுல தொழின்னு ஒரு கவிதை.. அட அட அட ரொம்ப நல்லா இருக்கு...
    அம்மா.காம் .. மிகவும் அழுத்தமான கவிதை கமல்.. வாழ்த்துகள்...
    "அவளின் எதார்த்த எதிர்பார்ப்புகள்" - எளிமை, அருமை

    ரசிகனோட கவிதைகள் பத்தி சொல்லவே வேண்டாம்.... ரொம்பவே அனுபவிச்சு எழுதுவார்..

    ஒளியவன் - பாஸ்கர்கிட்ட நான் ஒரு வாக்கு கொடுத்திருக்கேன். அவரோட கவிதைகள் எல்லாத்தையும் படிசிட்டு பதில் எழுதுறேன்னு..

    என் வலைப்பூவை வந்து பார்த்தவங்களுக்கு என் நன்றிகள்... பார்க்க போறவங்களுக்கு என் வரவேற்புகள்...

    நன்றி

    அன்புடன்
    சிவா.....

    ReplyDelete
  8. தணிகை..ரொம்ப நன்றி.. இவ்வளவு சிறப்பான அறிமுகம் கொடுத்ததுக்கு... //

    நன்றி தல

    ReplyDelete
  9. /
    இங்க பாருங்க கொடுமைய...என்னதான் தெரியாதவனா இருந்தாலும் வந்து மறுமொழியாச்சும் போடுங்க சாமி..
    /

    வந்தாச்சு வந்தாச்சு நைனா கொஞ்சம் லேட்டாயிடிச்சு கோச்சிக்காத நைனா!!

    :)))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது