22/09/2014 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்:

துளசிதரன் தில்லை அகத்து மற்றும் கீதா

Thillaiakathu Chronicles

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள்!

பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள்!

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 2, 2008

கயல்விழி முத்துலெட்சுமியின் பெருமுயற்சி!!

கயல்விழி முத்துலெட்சுமி

குழந்தைகளின் தனி உலகம்
குழந்தைகளோடு இருக்கும் போது நாம் ஜாக்கிரதையாக பேசவேண்டும். கள்ளம் கபடம் இல்லாத அவர்கள் மனதில் நல்லவைகள்தான் நிரம்பியிருக்கின்றன். பெரியவர்கள் பேசுவதைப் பார்த்துத்தான் நல்லது கெட்டது இரண்டையும் கற்றுக்கொள்கிறார்கள். ஆகவே பேசும் போது நிதானித்துப் பேசவேண்டும் பெரியவர்கள். குழந்தைகளுக்கு பெற்றோர்தான் முன்
மாதிரிகள் என்று உஷார்படுத்துகிறார். படிக்கவேண்டியது...அதன்படி நடக்கவேண்டியதும்கூட!!
கடைசி வரிகளில் பதிவர்களுக்கு ஒரு நெத்தியடி!!
இன்று சர்வ சாதாரண மாக பெரியவர்களாகிய நம் வலைப் பதிவர்கள் கெட்ட வார்த்தைகளை உபயோகிக்கும் நிலையைப் பார்க்கிறோம்.பிள்ளைமனம்

இழப்பின் வலிகள்
பெண்கள் இன்றும் சந்தித்துக்கொண்டிருக்கும் இழப்புகளையும் வலிகளையும் வேதனையோடு
சொல்கிறார். பெண்களுக்கான invicible fence-சும் அதைத் தாண்டிவரத்தெரியாத, போன
தலைமுறையையும் தண்டிக்கொண்டிருக்கும் இன்றைய தலைமுறையும் பற்றி வலியோடும் ஆறுதலோடும் சொல்லியிருக்கிறார்.
வலிகள்

விதவிதமாய் வித்தியாசமாய்.....தோசைகள் சுட்டுத்தருகிறார். இதை பற்றி அப்பவே பின்னூட்டத்தில் என்னோட யானை, பூனை தோசைகள் பத்தி பீத்தியிருக்கிறேன்.
தோசை

தில்லியில் சிறுவர் சிறுமிகள் எப்படி கண்ணன் பிறந்தநாளை....கிருஷ்ணஜெயந்தியை கொண்டாடுகிறார்கள் என்பதை படங்களோடு காட்டியிருக்கிறார். வித்தியாசமாயிருக்கிறது.
பொங்கல் சமயத்தில் 'சிறுவீட்டுப் பொங்கல்' என்று சிறுமிகள் சின்ன மண் அடுப்பு வைத்து
அதில் சின்ன பானை வைத்து பால் காய்ச்சி கொண்டாடுவார்கள். மேலும் பிள்ளைகள்
அவரவர் வீட்டிலிருந்து உப்பு, புளி, அரிசி மற்றும் தேவையான சாமான்கள் கொண்டுவந்து
கூட்டாஞ்சோறு சமைப்பார்களே? அதுபோலிருக்கிறது. அவர்களின் ஒற்றுமையும் பலப்படுகிறது,
இது போன்ற விழாக்களால்! இங்கேயும் அது போல் ஆரம்பிக்கலாமா?
முகுந்தா முகுந்தா

வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்க ஆர்வமா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!!

25 comments:

 1. நன்றி நானானி. முத்துலெட்சுமி கயல்விழியின் பல நல்ல பதிவுகளைச் சுட்டியிருப்பதற்கு. நேரம் கிட்டும் போது அல்ல, நேரத்தை ஏற்படுத்திக் கொண்டு கட்டாயம் வாசிப்பேன். அவரது ஒரு திண்ணை பதிவு என்னை ஈர்த்த ஈர்ப்புதான் எல்லோருக்கும் தெரியுமே:)!

  ReplyDelete
 2. ஆகா, அக்காவோட பதிவா இன்னிக்கு... சூப்பர் பெரு முயற்சி.. சரியான தலைப்பும்மா... :)

  ReplyDelete
 3. முத்தக்காவின் பதிவுகள் ஏற்கனவே படித்திருந்தாலும் இன்னும்மொரு ரவுண்ட் போய்ட்டுவரலாம் எனக்கு பிடித்த பதிவுகளில் இதுவும் கூட ஒன்று நிகழ்தகவின் படி :))http://sirumuyarchi.blogspot.com/2007/08/blog-post_29.html

  ReplyDelete
 4. சமீபத்தில் டில்லி போயிருந்தபோது இவர் ஞாபகம் தான் வந்தது ஆனால் இவரை சந்திக்க கால அவகாசம் கிடைக்கவில்லை.

  ReplyDelete
 5. ஒ ஓ... என்னப்பா நீங்க எனக்கெல்லாம் தனியா போட்டுக்கிட்டு..

  அது சரி வெந்தயப்பதிவு புதுப்புயல் புதுகைத்தென்றலோடதாச்சே.. :) மேலும் லிங்க்கும் தப்பா இருக்குப்பா... பாருங்க..

  ReplyDelete
 6. வடுவூர் குமார் கால அவகாசத்துடன் அடுத்தமுறை வாருங்கள் :)

  ReplyDelete
 7. செய்யுங்கள், ராமலஷ்மி!

  ReplyDelete
 8. நன்றி தமிழ்பிரியன்!
  நல்ல தலைபென்றதற்கு!

  ReplyDelete
 9. வாருங்கள்! கடகராசி நேயரே!
  உங்களுக்கு இன்று படித்ததையே
  மீண்டும் படிக்கும் யோகம் உண்டு!!

  ReplyDelete
 10. ஆஹா! ஒரு வலைப்பதிவர் சந்திப்பு
  நிகழாமல் போய்விட்டதே. அடுத்தமுறை வெற்றி நிச்சயம்!!
  வடுவூர்குமார்!

  ReplyDelete
 11. வாங்க, மைஃபிரண்ட்!
  உங்களோட சுவாரஸ்யமான மெயில்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  ReplyDelete
 12. என்ன, துள்சி!
  மேளம் அடிச்சஅடியில் கிழிஞ்சிடுச்சா?
  ரொம்ப சந்தோசம்!!!

  ReplyDelete
 13. கயல்விழி முத்துலெட்சுமி!
  நாந்தான் சொல்லிட்டெனே...சில தவறுகள் என்று. உங்க பதிவில் பாத்தேன். சுட்டுட்டேன். புதுகைத்தென்றல் டேக் இட் ஈஸி னுடுவாங்க. ஏன்னா/ நாங்க ஸேம்
  ப்ளட் ஆச்சே!

  ReplyDelete
 14. //இன்று சர்வ சாதாரண மாக பெரியவர்களாகிய நம் வலைப் பதிவர்கள் கெட்ட வார்த்தைகளை உபயோகிக்கும் நிலையைப் பார்க்கிறோம். குழந்தைகளின் தனி உலகில் மூழ்கி இன்பம் இன்பம் எங்கும் இன்பம் எனும் அவர்களின்
  கொள்கையைக் கொஞ்சம் கற்றுக் கொள்ளவேண்டும்.//

  மிகச் சரியாய் சொல்லியுருக்கிறிர்கள்

  இது இப்போ மிகத் தேவையான ஒன்று


  ண்பு போற்றுவோம்

  பாரதம் காப்போம்.

  பிதற்றல்களை தவிர்ப்போம்

  பீடுநடை போடுவோம்

  புன்னகையாய் மலர்வோம்

  பூக்களாய் மணப்போம்

  பெருமை பெறுவோம்

  பேரிகை முழங்குவோம்

  பைரவரை வணங்குவோம்

  பொறுமை வளர்ப்போம்

  போற்றி மகிழுவோம்

  பெளத்தம் போற்றுவோம்

  கோவை விஜய்
  http://pugaippezhai.blogspot.com/

  ReplyDelete
 15. //காலநிலை மாறும் - கவலை வேண்டாம்//

  காலம் மாறிக் கொண்டிருக்கிறது.

  மகளிர்க்கான கல்லூரிகள் போக இரு பாலர் படிக்கும் கல்லூரிகளின் எண்ணிக்கையும் கூடுகிறது.

  அலுவலகங்களிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமாகிறது

  வீடுகளிலும் ( நடுத்திர குடும்பங்களில் கூட) பெண் பிள்ளைகளுக்கு சலுகைகள் தொடங்கிவிட்டன

  (இன்னுமொரு உண்மை பெற்ற தாய் தந்தையரை கடைசிகாலத்தில் அன்போடு கவனிக்கும் மகன்களை விட மகள்களின் எண்ணிக்கை இதை வலுவாக்கும்)

  இன்னும் 5-10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிலமையில் நல்ல முன்னேற்றம் எதிர் பார்க்கலாம்.


  கிராமங்களில் கூட மாற்றங்கள் தெரிய ஆரம்பித்து விட்டன.

  இழப்பின் வலிகள் இல்லாத நாள்
  வரும் .

  கோவை விஜய்
  http://pugaippezhai.blogspot.com/

  ReplyDelete
 16. நாலு வண்ணத்தில் தோசை சுட்டாச்சு
  நாலு திசையெல்லம் அறிவிப்பு போட்டாச்சு

  எந்த வடிவம் கேட்டாலும் ரெடியாச்சு
  எப்படியாவது சப்பிட்டால் போதும் என்றாச்சு

  கோவை விஜய்
  http://pugaippezhai.blogspot.com/

  ReplyDelete
 17. ஆமாம் மாடர்ன் கிருஷ்ணன் இல்லையா..இன்னும் எத்தனை நாள் தான் ராதையை புல்லாங்குழல் ஊதி அழைப்பது. இப்போது தான் மொபைல் வந்து விட்டதே...."ஹலோ ராதா ஐ யம் வெயிட்டிங் ஃபார் யூ" ன்னா , "எங்கே இருக்கிறாயென்று " கேட்டு விட்டு அவளும் தேடாமல் கொள்ளாமல் நேராக வந்துவிடப்போகிறாள்...//


  நல்ல கற்பனை
  படங்கள் அருமை

  கோவை விஜய்
  http://pugaippezhai.blogspot.com/

  ReplyDelete
 18. //சாப்பிடவாங்க
  இவரது சமையல் பதிவில் வெந்தயத்தின் அருமை பெருமைகளைக் கூறி அதைக் குளிர குளிர பரிமாறியிருக்கிறார்
  குளிர்ச்சி


  குளிர்ச்சிக்கான லிங்கை சரி செய்யவும்.

  சுட்டி இயங்கவில்லை.


  மற்ற தொகுப்புகள் அருமை

  என்னை போன்ற புதிய பதி வர்களுக்கு இது மாதிரி மூத்த பதிவர்களின் தொகுப்புகள்

  நல் ஆசிரியராய்

  நல் வழிகாட்டியாய்  தொடருங்கள்

  நெஞ்சு நிறை நன்றிகள்.


  கோவை விஜய்
  http://pugaippezhai.blogspot.com/

  ReplyDelete
 19. அது நான் சொன்னதல்ல...கோவை விஜய்!
  கயல்விழி முத்துலெட்சுமி தன் பதிவிலேயே சொன்னது.

  ReplyDelete
 20. நீங்களும் சரியாகச் சொல்லிவிட்டீர்கள்!!
  கோவை விஜய்!

  ReplyDelete
 21. பெண் விடுதலை வேண்டும் என்று
  உலகம் அழியும் வரை சொல்லிக்கொண்டேயிருப்போம்.
  உங்கள் பதில் நல்லாருக்கு, கோவை விஜய்!

  ReplyDelete
 22. தோசைக்கு தொட்டுக்கொள்ள என்ன கொடுத்தார்கள்? கோவை விஜய்?

  ReplyDelete
 23. குழந்தைகளின் கற்பனையும் அதன் படங்களும் பிடித்ததால்தான் எழுதினேன், கோவை விஜய்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது