07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 8, 2008

பிரித்து கிழித்து துவைத்து

என்ன துணி துவைக்க போறீங்களா தலைப்ப படிச்சவுடனே... வேட் வேட்! நான் துணி துவைக்கறது பத்தி சொல்லவரல... நம்மில் பதிவு எழுதும் பலர் செய்யும் ஒன்னு தான் இந்த 'பிரித்து கிழித்து துவைத்து'.....



புரியலையா?



திரைவிமர்சனங்களை பத்தி தான் சொல்றேன். படத்தை பார்த்துவிட்டு அதை பிரித்து, கிழித்து, துவைத்து...ஒரு வழியா ஆக்கிடுவோம்! சில நேரத்துல ரொம்ம்பப சிரிப்பா இருக்கும். இப்படிகூட விமர்சனம் செய்யலாமான்னு? நான் படம் பார்க்க செல்வதற்கு முன் தமிழ்மணத்தில் சினிமா பக்கத்திற்கு சென்று முதலில் பதிவர்களின் விமர்சனங்களை படித்துவிடுவேன். அவங்க சொல்லியிருக்கிற காமெடியான விஷயங்களை நினைத்து பல முறை சிரித்துள்ளேன், படத்தில் எப்போது வரும் என்றும் எதிர்பார்ப்பேன்.



நானும் ஒரு காலத்தில் திரைவிமர்சனம் என்ற பெயரில் ஏதோ ஒன்றை எழுதியவள் தான்! சும்மா கதை நல்லா இருக்கு, திரைக்கதை பரவாயில்ல அப்படின்னு ரொம்மப சாதாரணமா எழுதினேன். ஆனா, படிப்பவர்களுக்கு கதையை தெரிந்த கொள்வதைவிட வேறு ஏதேனும் புதுசா தெரிந்து கொள்ள தான் ஆசைப்படுவார்கள். எது நல்லா இருக்கு, நல்லா இல்ல என்பதை சுருக்கமா சொல்லிவிட ஒரு திறமை வேண்டும். அப்படிப்பட்ட ஒரு பதிவு தான் http://kusumbuonly.blogspot.com/2007/10/blog-post_14.html





குறிப்பா, விஜய், அஜித், சிம்பு, ரித்தீஷ் (அவர்கள் ரசிகர்கள் கோவிக்க வேண்டாம்) படங்கள் வந்தால் நம்மில் பலர் குஷியாகிவிடுவோம்! காரணம் ப்ளாக்கில் எழுத ஒரு சூப்பர் காமெடி பதிவு ரெடியாகிடும் என்ற சந்தோஷத்தில்! இப்போது பெரிய பட்ஜெட் படங்களும் அதில் அடங்கும்( குசேலன், தசாவதாரம்). தசாவதாரம் வந்த காலத்தில் ஒரு வாரம் வேற எத பத்தியும் தமிழ்மணத்தில் காணும்...இதே பேச்சு தான்! இப்போ குசேலன்.. குசேலன் திரைவிமர்சனங்களில் எனக்கு பிடித்தது

http://veerasundar.blogspot.com/2008/08/blog-post_03.html



இந்த விமர்சனத்தை எழுதிய வீரசுந்தர் இன்னொரு படத்திற்காக விமர்சனம் எழுதியிருந்தார்! படித்துவிட்டு, சிரித்து சிரித்து வயிறு புண்ணா போச்சு! http://veerasundar.blogspot.com/2008/07/blog-post_08.html

சிலர் வெறும் 'பிரித்து' எழுதும் வகையை சேர்ந்தவர்கள்! கிழிப்பது, துவைப்பது போன்றவற்றை அதிகமா செய்வதில்லை! சொல்ல வந்ததை நச்சென்று சொல்லிவிட்டு போய்கிட்டே இருப்பாங்க...basically, ரொம்ம்பப நல்லவர்கள்!!
http://pathividukiren.blogspot.com/2008/08/blog-post.html

சத்யப்ரியனின் 'உன்னாலே உன்னாலே' படத்தின் விமர்சனத்தை படித்து ரசித்தேன். நக்கல் விமர்சனங்களை எந்த அளவுக்கு ரசித்து படிப்பேனோ அதே அளவு, இது போன்ற விமர்சனங்களையும் ரசித்து படித்தேன். மனதில் பட்டதை வெளிப்படுத்த ஒரு திறமை வேண்டும். அது போன்ற பதிவுகளை எழுதுபவர்களின் தமிழையும் ரசிப்பேன். http://sathyapriyan.blogspot.com/2007/05/blog-post.html

3 comments:

  1. இப்போது பிரித்து கிழித்து துவைத்து காயவும் போட்ட படம் குசேலன்.

    ReplyDelete
  2. எனது பதிவிற்கு சுட்டி அளித்தமைக்கு நன்றி. அது தங்களுக்கு பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் சுட்டிய மற்ற பதிவுகளையும் படித்து விடுகிறேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது