சில பூக்கள்
பொதுவாக மற்றவர் நம்மை பார்க்கின்றார்கள் எனத் தெரிந்தால் நாம் நாமாக இருப்பதில்லை. உதாரணமும் சொல்லத் தேவையில்லை நீங்களே அதை உணர்ந்திருப்பீர். உலகின் எந்த மூலையில் உள்ள குழந்தையின் முகம் அழகாகத் தெரிவதன் காரணம் அது தான். அதற்கு அடுத்தவர் பார்க்கின்றார்கள் என்கிற அச்சமில்லை, பொய்யாக நடிக்க வேண்டிய நிர்பந்தமுமில்லை. முதன்முதலாக குழந்தை தான் கிறுக்கிய சில கோடுகளை ஓவியமெனச்சொல்லி தலைக்கு மேல் தூக்கிக் காட்டுவதன் அழகு எத்தனை பேர் கவனித்திருக்கிறீர்? அப்படி காட்டியும் பாராட்டப்படாததால் அழகான ஓவியங்கள் மக்கிப்போகும் கடைசி கணம் வரை வெறும் கோடுகளாகவே பார்க்கப்படுகின்றன. அந்த ஓவியன் கண்கள் கூட அதே கோணத்தில் தான் அவைகளைப் பார்க்கின்றன. மற்றவரை பற்றி எனக்குத் தெரியவில்லை. நான் எழுதத் துவங்கிய போது எடுத்துக்கொண்ட சுதந்திரம் எனக்கிப்போதில்லை என உணர்கின்றேன். அது எனக்கு நானே போட்டுக்கொண்ட விலங்கு. தன் சுயத்தை இழக்காமல் அழகாக எழுதும் சிலரின் வலைப்பூக்களை அறிமுகப்படுத்துகிறேன். இதில் சில தமிழ்மணத்தில் சேராத வலைப்பூக்கள்.
*
தமிழ் ராஜா,
வெற்றிடம் எனத்தன் வலைப்பூவை இவர் சொன்னாலும் அதில் எந்த வித அசெளகரியமில்லாமல் பொழுதை கழிக்கலாம்.
*
பூபேஷ்,
இவரின் வலைப்பூ ஒரு கருப்பு வானவில் என்பேன். அதன் வர்ணங்கள் இவர் எடுத்துக்கையாளும் கருத்தில் இருக்கின்றன. ஒரு பரந்த சிந்தனைக்குச் சொந்தக்காரர் பூபேஷ்.
*
உதய்,
பல தரப்பட்ட விஷயங்கள் கொண்டு எழுதும் ஒரு நல்ல கவிஞர். தன்னை அவ்வளவாக வெளிக்காட்டிக்கொள்ளாத ஒரு தன்னடக்கவாதி என்பேன்.மழைச்சிறகுகள் பொறுத்திக்கொண்டு பறந்து கொண்டிருக்கும் ஒரு சக்கரவாகப்பறவை. ஜோடி போட்டுக்கொண்டு சிறிது தூரம் பறந்து பாருங்கள்.
*
காவியன்,
கசங்கிய காகிதங்கள் என்கிற தலைப்பில் வலைப்பூ எழுதி வருகிறார்.
"ஒரு பெளர்ணமி நிலவுக்குள்
32 நட்சத்திரங்கள் நீ சிரிக்கும்போது."
இது போன்று சின்ன சின்ன வரிகள் கொண்டு கவிதைகள் பல எழுதியுள்ளார்.
*
விஷ்ணு,
நிஜமாகும் நிழல்கள் என்னைப்பொறுத்தவரை நிழலும் நிஜம் தான். தொட்டு உணர முடியாததால் அதை பொய் எனக்கூறுவதில் உடன்பாடில்லை. வெளிட்சத்தை யுத்தமிட்டு ஜெயித்த ஒரு பொருளுக்கு கிடைத்த பரிசு தான் நிழல் என்பேன். என்னைப் போலவே சித்தாந்தம் கொண்டவர் தான் போல விஷ்ணுவும்.
*
வழக்கமாக ஒரு சில பதிவுகளை குறிப்பிட்டு பதிவிடுவார்கள். ஆனால் இதில் வலைப்பு முகவரி மட்டுமே தந்துள்ளேன். பதிவுகளின் எண்ணிக்கை குறைவே. சாவகாசமாக அலசிப் படியுங்கள். பிடித்திருந்தால் தட்டிக்கொடுங்கள். யாருக்குத் தெரியும் உங்களின் பின்னூட்டத்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாக அவர்கள் எழுத ஆரம்பிக்கலாம்.
மேலே சொன்ன பலரை எனக்குத் தெரியாது. நான் அவர்களை பற்றி சொன்ன தகவல்களில் அவர்களுக்கு ஏதேனும் மாற்றுக்கருத்து இருந்தால் அவர்கள் என்னை மன்னிப்பாராக.
நன்றிகள்,
-ஸ்ரீ.
|
|
Me the first..!! ;)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//தன் சுயத்தை இழக்காமல் அழகாக எழுதும் சிலரின் வலைப்பூக்களை அறிமுகப்படுத்துகிறேன்.//
ReplyDeleteஇந்த வரிகள் நல்லாருக்கு...கூடவே இந்த வலைப் பூக்களும் நல்லாருக்கு.good.... keep it up!
அன்புடன் அருணா
மாறுபட்ட சிந்தனை - நல்வாழ்த்துகள் ஸ்ரீ
ReplyDeleteகசங்கிய காகிதங்கள், வெற்றிடம் இரண்டும் வாசித்துப் பார்த்திருக்கிறேன் ஆனால் அடிக்கடி சென்றதில்லை மறு முறை நினைவூட்டியதற்கும் புதிய அறிமுகங்களுக்கும் நன்றி...
ReplyDeleteஇந்த பக்கங்களைப் படித்ததில்லை.....
ReplyDeleteஇடுகையின் தலைப்புக்கு :(
அறிமுகமே இல்லாத எனை
ReplyDeleteஅடையாளமும் காட்டிய
அன்பு உள்ளம் ஸ்ரீ அவர்களுக்கு
எனது நன்றியுடன் வணக்கங்கள் ..
//என்னைப்பொறுத்தவரை நிழலும் நிஜம் தான். தொட்டு உணர முடியாததால் அதை பொய் எனக்கூறுவதில் உடன்பாடில்லை. வெளிட்சத்தை யுத்தமிட்டு ஜெயித்த ஒரு பொருளுக்கு கிடைத்த பரிசு தான் நிழல் என்பேன். என்னைப் போலவே சித்தாந்தம் கொண்டவர் தான் போல விஷ்ணுவும்.//
எழுதுபவரின் மனதை அவர்கள் எழுத்துக்களை வைத்து படித்திருக்கும் உங்களை என்னவென்பேன் ..அபார திறமை ...என்னை பற்றிய உங்கள் கணிப்பு மிக சரியே ..
நேரம் கிடைக்கையில் எனது வலைத்தளங்கள் வருகை தரவும் உங்கள் மேலான ஆலோசனைகளையும் தந்து எனை நல்வழிகாட்ட வேண்டுகிறேன் ...
அன்புடன்
என்றும்
இனிய தோழனாக
விஷ்ணு ...
@ sri
ReplyDelete//Me the first..!! ;)//
இங்கயுமா? :)
@aruna
//இந்த வரிகள் நல்லாருக்கு...கூடவே இந்த வலைப் பூக்களும் நல்லாருக்கு.good.... keep it up!
அன்புடன் அருணா//
நன்றி கா.
@ cheena (சீனா)
//மாறுபட்ட சிந்தனை - நல்வாழ்த்துகள் ஸ்ரீ//
ஏதோ ஒரு சின்ன முயற்சி சீனா. உங்களால் சாத்தியமானது நன்றி.
@ தமிழன்...
//கசங்கிய காகிதங்கள், வெற்றிடம் இரண்டும் வாசித்துப் பார்த்திருக்கிறேன் ஆனால் அடிக்கடி சென்றதில்லை மறு முறை நினைவூட்டியதற்கும் புதிய அறிமுகங்களுக்கும் நன்றி...//
ஓ அப்படியா பெரிய வாசிப்பு வட்டம் உங்களுக்கு தமிழன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க
@ தமிழ் பிரியன்
//இந்த பக்கங்களைப் படித்ததில்லை.....
இடுகையின் தலைப்புக்கு :(//
இவையில் சில தமிழ்மணத்தில் இணைக்கப்படாதவை படித்திருக்க வாய்ப்பில்லை தோழரே! இடுகை தலைப்பு தப்பா வெச்சிட்டேனோ? :(
@ vishnu... said...
//அறிமுகமே இல்லாத எனை
அடையாளமும் காட்டிய
அன்பு உள்ளம் ஸ்ரீ அவர்களுக்கு
எனது நன்றியுடன் வணக்கங்கள் ..//
இதுக்கெதற்கு நன்றி நிறைய அழகாக எழுதுங்கள் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
//எழுதுபவரின் மனதை அவர்கள் எழுத்துக்களை வைத்து படித்திருக்கும் உங்களை என்னவென்பேன் ..அபார திறமை ...என்னை பற்றிய உங்கள் கணிப்பு மிக சரியே ..//
:D
//நேரம் கிடைக்கையில் எனது வலைத்தளங்கள் வருகை தரவும் உங்கள் மேலான ஆலோசனைகளையும் தந்து எனை நல்வழிகாட்ட வேண்டுகிறேன் ...
அன்புடன்
என்றும்
இனிய தோழனாக
விஷ்ணு ...//
நிச்சயம் வருகிறேன் தோழரே அலுவலகத்தில் வலைப்பூக்களுக்கு தடை இருப்பதால் அடிக்கடி மற்றவர் பக்கங்களுக்கு வர முடியாத நிலை. நிச்சயமாக அவகாசம் கிடைக்கும் போது வருகிறேன். நன்றி