07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, August 12, 2008

பொத்துக்கிட்டு ஊத்ததுங்க வானம்...நீங்க போர்த்திகிட்டு கூட வர வேணும்...

நானும் தான் வாத்தியாராயிட்ட ஜோருல ஜீப்பரா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு கண்ணாடிஒன்னை மாட்டிக்கிட்டு வகுப்பெடுக்கலாம்னு வந்தாக்கா தினமும் வந்து மீத பர்ஸ்ட் மீத செகண்டு ன்னு சொல்லற பயபுள்ளைங்க கூட ஆளை காணோம்..எங்க போயிருப்பாங்கன்னு யோசிச்சு யோசிச்சு மண்டை காய்ஞ்சு போயி சரி வகுப்புக்கு வந்த ரெண்டு பேருக்காச்சும் பாடம் நடத்தலாம்னு முடிவு பண்ணி என்ன தலைப்புல இன்னைக்கு பாடம் எடுக்கலாம்னு யோசிச்சேன்..

அடிக்கடி வந்து அலப்பறை பண்ணாலும் மனசுக்கு இதமா இருக்க இந்த மழை ஞாபகத்துக்கு வந்து தொலைச்சுடுச்சு..சரிப்பா இன்னைக்கு வகுப்புல மழையை பத்தி பார்ப்போம்...

முதல்ல மழைன்னு நினைக்கும் போதே மனசுல நிக்குறது மழைக்காதலன் சார்லஸ்தாங்க...இவர் மழையை ரசிப்பதற்கு சொல்லும் காரணங்களே கவிதையாய் தான் இருக்கிறது..மழைக்காதலன்னு சொல்லி அழகான காதல் கவிதைகளை நமக்கு தருகிறார்.. நீ -3 ன்னு இருக்கும் இந்த கவிதையில்
//உன்னைப் பற்றிஎழுதலாம் என்றுநினைத்துவார்த்தைகள் தேடுகின்றேன்...அனைத்துமே உன்னைச்சிறுமைப் படுத்துகின்றனபுள்ளியோடு முடிந்து போகிறதுகவிதை... //

அவ்ளோ அழகா பெண்மையை வர்ணிக்கிறாருங்க...புள்ளி வெச்சு கவிதை எழுதறாருங்க.....

அடுத்தது கொல்லிமலையில இருந்தே நேரா நம்ம கணினிதிரைக்கு சாரலை கொண்டு வந்து சேர்க்கும் ஜே கே...கடந்த ஒரு வருடத்துக்கு முன்னாடியிலிருந்து இவரோட கவிதைக்கு நான் ரசிகன்..நான் கணினியில் தமிழை பார்த்த கணம் இவரோட கவிதைகள் தான்..என்னோட வலை உருவாக காரணமும் இவரோட வலைபக்கம் தான்...ஆனா இப்பவெல்லாம் இவர் கவிதை எழுதறதையே விட்டுட்டார்னு நினைக்கிறேன்.அதிகமா கவிதைகள் வருவதே இல்ல...அந்த அழகிய நினைவுகள் என்று ஆரம்பிக்கும் இந்த கவிதை...காதலை அழகாய் சொல்லிசெல்லும்.....

அடுத்தது நம்ம எழில் பாரதி....கண்ணாடி மழைன்னு வலைப்பூவில் மனதில் பிரதிபலிப்புகள் என்ற வாசகத்தோடே பிரதிபலிக்கிறார்..கவிதைகளை...அழகான கவிதைகள் எல்லாமே ...கடைசியாய் வந்த சில்மிஷ காதல்னு அருமையான புகைப்படங்களையும் அதை பிரதிபலிக்கும் வரிகள் என நம்மையும் கவிதையில்(காதலில்) நீந்த வைக்கிறார்,....

சரி சரி...எல்லாரும் ரொம்ப நேரம் மழையில நனைந்து இருக்கீங்க..அப்புறம் இந்த வாத்தியார் பயலால தான் ஜலதோஷம்னு நாளைக்கு லீவ் எடுத்துட போறீங்க..தலைய துவட்டிக்கிட்டு ரெடியா இருங்க..அடுத்த பதிவோட நானும் வருகிறேன்....

10 comments:

  1. சரி சரி...எல்லாரும் ரொம்ப நேரம் மழையில நனைந்து இருக்கீங்க..அப்புறம் இந்த வாத்தியார் பயலால தான் ஜலதோஷம்னு நாளைக்கு லீவ் எடுத்துட போறீங்க..தலைய துவட்டிக்கிட்டு ரெடியா இருங்க..அடுத்த பதிவோட நானும் வருகிறேன்....


    இங்க இன்னைக்கு வெயில் தான் அடிக்குது.அதான் நான் முன்னாடி வந்துட்டேன்.

    ReplyDelete
  2. me the firstu//

    நீங்க மட்டும் தான் இருக்கீங்க இன்னைக்கு கிளாஸ்ல...

    ;-(

    ReplyDelete
  3. இங்க இன்னைக்கு வெயில் தான் அடிக்குது.அதான் நான் முன்னாடி வந்துட்டேன்.//

    அட ஆமாங்க..மழையை பத்தி எழுதினேன் இன்னைக்கு வெயில் மண்டைய பொளக்குது...

    ReplyDelete
  4. சுகி சிவம் ஒருமுறை புதுகையில் நடந்த மாரியம்மன் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்தார். (பக்கத்து வீதி கோயில்) அதனால் 2 வீதிகளில் மைக் செட் கட்டியிருந்த படியால் வீட்டு திண்ணையில் உட்கார்ந்தே கேட்டுக்கொண்டிருந்தோம்.

    அறிமுகப் படுத்தியவர், கூட்டமே இல்லைன்னு நினைச்சுக்காதீங்க, அவங்கவுங்க வீட்டு வாசல்ல உட்கார்ந்து கேட்டுகிட்டுத்தான் இருப்பாங்கன்னு சொல்ல,
    அதற்கு சுகி சிவம், இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு? இங்கயாவது வீட்டு வாசல்ல உட்கார்ந்திருக்காங்க, நான் டீவியில பேசும்போது கேமராமேன், நிகழ்ச்சி அமைப்பாளர் தானே இருப்பாங்கன்னு சொன்னார்.

    பின்னூட்டம் வரலைன்னு பாக்காம் சும்மா போட்டுத்தாக்குங்க.

    டார்கெட் செட் பண்ணிட்டு போய்கிட்டே இருங்க.

    ReplyDelete
  5. //டார்கெட் செட் பண்ணிட்டு போய்கிட்டே இருங்க.
    //

    ரெடி ஸ்டார்ட் மூஜிக்......


    அட்ரா அட்ரா நாக்குமூக்கா நாக்குமூக்க நாக்கு முக்கா நாக்குமுக்க்கா...

    ReplyDelete
  6. தலை துவட்டறதுக்கு துண்டு யாரு கொடுப்பா ?

    ReplyDelete
  7. //cheena (சீனா) said...
    தலை துவட்டறதுக்கு துண்டு யாரு கொடுப்பா ?

    //

    துண்டு தானே கொடுத்துட்டா போச்சு

    ReplyDelete
  8. தணிகை!பின்னூட்டத்தப் பற்றி எல்லாம் கவலை வேண்டாம். நான் கூட தினமும் உங்க பதிவைப் படிக்கிரேன். ஆனால் நேரமின்மையால் பின்னூட்டம் இட முடிவதில்லை. பின்னூட்டம் வராததால யாரும் படிக்கலன்னு நினைக்க வேண்டாம். அட இந்த பதிவகூட முந்தாநாள் மாலை படித்து இன்று காலைதான் பின்னூட்டம் இட முடிகிறது.:)

    ReplyDelete
  9. தணிகை!பின்னூட்டத்தப் பற்றி எல்லாம் கவலை வேண்டாம். நான் கூட தினமும் உங்க பதிவைப் படிக்கிரேன். ஆனால் கொஞ்ச முன்ன பின்ன ஆகுது படிக்க உடனடியா முடியறதில்ல பணிச்சுமையால (யாரங்க சிரிக்கிறது!?!?)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது