07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 31, 2008

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருக்கும்.........

அன்பின் சக பதிவர்களே

ஒரு வார காலமாக அருமை நண்பர் ஸ்ரீ ஏழு அருமையான பதிவுகள் இட்டு விடை பெற்றிருக்கிறார். பல புதிய வலைப்பூக்களை அறிமுகப் படுத்தி பல பதிவர்களை அடையாளம் காட்டி விடை பெற்றிருக்கிறார். காதல், கவிதை என கலக்கி விட்டுச் சென்றிருக்கிறார்.

அவருக்கு வலைச் சரம் சார்பினில் நல்வாழ்த்துகளைக் கூறி விடை அளிக்கிறேன்.

அடுத்து செப்டம்பர் முதல் நாள் முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க அருமை நண்பர் முருகானந்தம் சுப்பிரமணியன் அன்புடன் இணக்கம் தெரிவித்திருக்கிறார்.

கைலாஷி என்ற சு.முருகானந்தம் சென்னையில் வசிப்பவர். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்து, சென்னையிலேயே ஒரு பெரிய நிறுவனத்தில் பணி புரிபவர். நரசிம்மர், நடராசர், நவராத்ரி நாயகி, திருமயிலை, வைகுந்த ஏகாதசி, காரைக்காலம்மையார், திருப்பாவை, திருவெம்பாவை எனப் பல பூக்கள் மூலம் பக்தியைப் பரப்புகிறார். அனைத்துப் பூக்களும் படித்துப் பயன் தரத் தக்கன.

பல ஆன்மீக வலைப்பூக்களை வைத்திருக்கும் அன்பு நண்பர் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று அருமையான பதிவுகளை அள்ளித் தர நல்வாழ்த்துகள். அவரை வருக வருக என வரவேற்கிறோம்.

நன்றி

சீனா

2 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வலைச்சர வாரம் சிறப்பிக்க வாழ்த்துக்கள் எஸ்.முருகானந்தம்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது