07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 10, 2008

வழியனுப்புதலும் வரவேற்பதும்

அன்பின் சக பதிவர்களே !

அருமைப் பதிவர் தமிழ் மாங்கனி அருமையான பதிவுகள் 10 போட்டிருக்கிறார். அழகான சுய அறிமுகம், அருமையான சைவ, அசைவ உணவு வகைகள் செய்வது பற்றிய சுட்டிகள், புதிய பதிவர்கள் பற்றிய சுட்டிகள், பிரபலங்களின் சுட்டிகள், நகைச்சுவைப் பதிவுகளின் சுட்டிகள், சிறு கதைகளைப் பற்றிய சுட்டிகள், சூடான இடுகைகள் பற்றிய சுட்டிகள், மூளைக்கு வேலை கொடுக்கும் சுட்டிகள், திரை விமர்சனங்கள் பற்றிய சுட்டிகள், விடை பெறும் பதிவு என பத்து பதிவுகள் இட்டு அதிக மறுமொழிகள் பெற்று மனமகிழ்வுடன் விடை பெற்றிருக்கிறார்.

அவருக்கு வலைச்சரத்தின் வாயிலாக நம் நன்றியைத் தெரிவித்து விடை அளிக்கிறோம்.
====================================================
அடுத்து 11ம் நாள் தொடங்கும் வாரத்திற்கு, அருமைத் தோழர் தணிகை என்ற தணிகாசலம் ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கிறார். அருமையான அறிமுகச் சுட்டி கொடுத்திருக்கிறார். குறும்பு, கும்மி, கலாய்ப்பு எனக் கலக்குபவர். அன்புடன் குழுமத்திலும் எழுதுகிறார். எழுத்து தான் குறும்பென்றால் - புகைப் படமும் குறும்பாய்த் தான் இருக்கிறது. ஏப்ரல் 2007 முதல் இன்று வரை சுமாராக 100 பதிவுகள் இட்டிருக்கிறார். அதில் 50க்கும் மேல் கவிதைகள். பல் வேறு வகையான பதிவுகள். சகல கலா வல்லவர்.

அவரை வருக வருக என வரவேற்கிறோம்.

சீனா - 11.08.2008

1 comment: