தெரியாத....தெரிந்த.....கண்டுபுடிச்ச பதிவர்கள்
சகாதேவன்
நிறைய பதிவுகள் போட்டிருக்கிறார். ஆனால் தமிழ்மணத்தில் அதிகம் வலம் வராத பதிவர்.
க்விஸ் போட்டிகள் நடத்துவதில் வல்லவர். வெகு விரைவில் தமிழ்மணத்தில் நடமாடி
தனக்கென உள்ள இடத்தைப் பிடிப்பார்.
கல்யாணவீடுகளில் பரிமாறப்படும் உணவு வகைகள் எவ்வாறேல்லாம் வீணாக்கப்படுகின்றன.
அதை எப்படி சரிசெய்யலாம்? என்று அக்கறையோடு சொல்கிறார், படியுங்கள்
உன் இலையில் மிளகாய், கரிவேப்பிலை, முருங்கைக்காய் தோல் ஆகியவைதான் இருக்கலாம். வேறு எதுவும் மிச்சம் வைக்கக்கூடாது
வீணாக்காதே
பழைய லாங்ப்ளே ரெக்கார்டுகளை சிடிக்களாகவோ நம் கணினியில் இறக்கவோ முடியும் என்பதை கேட்கும் போது எவ்வளவு சந்தோசமாயிருக்கிறது!!!பழைய ரெக்கார்டுகளை
தேடுங்கள
ப்ளே
YOU ARE REGULARLY IRREGULAR!! தலைப்பே நல்லாருக்கில்ல?
தன்னோட தலைமையாசிரியரைப் பற்றி நினைவு கூர்ந்திருக்கிறார். அதோடு அப்பதிவில்
சினிமா க்விஸும் வைத்திருக்கிறார். அங்கு போய் கண்டுபிடியுங்கள்!
ரெகுலர்
நேருவை பற்றிய நமக்குத் தெரியாத புதுத் தகவலொன்றைத் தருகிறார். இப்படிப் பட்ட தலைவர்கள் இனி எப்போது கிடைப்பார்கள்? என்று ஏங்க வைக்கிறார்.
ரோஜாவின்ராஜா
கோமா
வலையுலகத்தில் திடீரென நுழைந்து மடமடவென்று பதிவுகள் இட்டு ஒரு நல்ல இடத்தை பிடித்திருக்கும் பதிவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையவர். வினாயகர், முருகன், ஆஞ்சநேயர்
மற்றும் நான் வணங்கும் அந்த ஆதிபராசக்தி மேலும் போற்றிகள் எழுதியவர்.
நல்ல நகைச்சுவையுணர்வும் தத்துவ சிந்தனையும் கொண்டவர்.
முருகனையும் ஔவையாரையும் செல்லமாக மோதவிட்டு ஒரு நகைச்சுவைப் பதிவைப் பாருங்கள்.
சுட்டதா சுடாததா
இவருடைய ஹ..ஹா..ஹாஸ்யம் பகுதியிலிருந்து சில சரவெடிகள்
ஹஹ்ஹஹ்ஹா
கொக்கா
அறுவை
ராமலஷ்மியின் முத்துச் சரம்
உங்களுக்கெல்லாம் நன்கு பரிச்சயமானவர். சீனா மாதிரி பின்னூட்டங்களால் பிரபலமானவர்.
எந்த பதிவின் போஸ்ட் எ கமெண்ட் -க்குப்போனாலும் அங்கே நமக்கு முன்னே இருப்பார்.
இவரது 'திண்ணை' பதிவு வலையுலகத்தையே ஒரு கலக்கு கலக்கிவிட்டது. நல்ல தமிழில்
அழகான சுவையான கவிதைகள் பல எழுதியிருக்கிறார், நல்ல கருத்துக்களையும் பின்னி.
2003-ல் எழுதிய இக்கவிதை எக்காலத்துக்கும் பொருந்தும்.கல்வியை வியாபரமாக்கி மாணவர்களின் எதிர்காலத்தை தங்களது சுயநலத்துக்காக அடகு வைத்துள்ள அவலநிலையை
தோலுறித்திருக்கிறார்
வியாபாரக்கல்வி
அதே போல் முதன்முதலாக பள்ளிக்குச் சேர வரும் குழந்தைகளுக்கு தேவையில்லாமல்
இண்டர்வியூ, பொதிக்கழுதை மாதிரி புத்தக மூட்டை....யாரோட பொட்டியை நிரப்ப இவையெல்லாம். எல்கேஜி படிக்கும் ஒரு குழந்தை சுமந்து கொண்டு வரும் 'பேக்பாக்'-ஐப்
பார்த்தால் பாவமாயிருக்கும்.
எல்கேஜி
மக்களை, குறிப்பாக பெண்களை அடிமையாக்கி வரும் டிவி தொடர்களை....அதிலேயே
வீழ்ந்துகிடக்கும் அவலத்தை தன் கவிதையால் சாடுகிறார். உறைக்குமா?
டிவிசீரியல்
ஞானவெட்டியான்
இவர் இப்போது வலையுலகத்திலேயே இல்லை போலும். தேடினேன் கிடைக்கவில்லை.
நான் தமிழ்மணம் படிக்க ஆரம்பித்த புதிதில் என்னைக் கவர்ந்த பதிவர்களில் ஒருவர்.
இவர் தரமிறக்கித் தந்திருக்கும் பாடல்களில்.....குறிப்பாக பழம் பாடல்களை கேட்டுக்கொண்டேயிருப்பேன். நந்தனார் படத்தில் எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடிய
'என்னப்பனல்லவா..என் தாயுமல்லவா..பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா..'
பாடலை திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டேயிருப்பேன். ஃபுல் வால்யூமில்! ரங்கமணி
திட்டுவார்...'பக்கத்து (அடுத்தவீட்டு)சுவரில் 'டொக்டொக்'என்று சத்தம் கேக்கும்..குறை!'
என்று. ஆம்! இருந்தது கலிபோர்னியாவில் அல்லவா? அந்த சூழ்நிலையில் இப்பாட்டு
வித்தியாசமாய் ஒலிக்கும்.
இப்போதான்(3/8/08..11:15 PM)கண்டுபுடிச்சேன்..கண்டுபுடிச்சேன்....ஞானவெட்டியானைக் கண்டுபுடிச்சேன்!!!வேறொரு
பெயரில்.
இங்க வாங்க
அதே போல் பழைய நல்ல நல்ல பாடல்களை 'திரையிசை' என்ற பதிவில் நாம் கேட்கும் விதம் தரவிறக்கம் செய்து தருகிறார்.
என் பதிவில் பின்னோட்டமிட்ட சிவமுருகனின் பதிவுக்கு எதேச்சையாக போன போது, அங்கே
கிடைத்தார் ஞானவெட்டியான்! நன்றி சிவமுருகன்!
|
|
நல்ல பதிவர்கள் - நல்ல பதிவுகள்
ReplyDeleteஆமாம் ராமலக்ஷ்மி காணாமல் போனவர்கள் பட்டியலிலா ?
ம்ம்ம்ம்ம்
மீ த பர்ஸ்டா
ReplyDeleteஆகா
ராமலக்ஷ்மி - ப்டித்து ரசித்து மறு மொழி இட்டேன்
என்னை வலையுலகிற்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
ReplyDeleteசீனா அவர்கள் நான்கு பதிவுகளைப் படித்து
பின்னூட்டம் விட்டார்கள்.
ராமலஷ்மி காணாமல் போனவரா?
ReplyDeleteஎன்ன சீனா? நாந்தான் வரிசைப்படுத்தியிருக்கிறேனே/
ஞானவெட்டியாந்தான் காணாமல் போனவர்.
இப்ப பிரியுதா?
ராமலஷ்மி பதிவுகளைப் படித்ததில்லையா? சீனா!
ReplyDeleteநீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்!!
ReplyDeleteசகாதேவன்!!
சீனாவின் சுறுசுறுப்பு வலையுலகமே
அறிந்ததே!!
நானானி
ReplyDeleteராமலக்ஷ்மியின் பல பதிவுகளைப் படித்திருக்கிறேன். மீதம் உள்ளவற்றையும் படித்து விடுகிறேன்.
கட்டாயம் படியுங்கள்! சீனா!
ReplyDeleteகாணாமல் போன ஞானவெட்டியானை
ReplyDeleteகண்டுபிடிக்கக் காரணமான சிவமுருகனுக்கு நன்றிகள்!!
இவர் பதிவுக்குப் போன போது அங்கு
ஞானவெட்டியான் கிடைத்தார்.
வேறு பெயரில் எழுதிக்கொண்டிருக்கிறார்.
சகாதேவன் புதிய அறிமுகம் அருமை. கோமா, ராமலஷ்மி இருவர் பதிவுகளும் ஏற்கனவே அறிமுகமுள்ளது.
ReplyDeleteசுட்டிகள் அருமை.
நன்றி நானானி!
ReplyDeleteசகாதேவனின் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகி என்கிற முறையில் அவரிடம் நான் வைக்கும் கோரிக்கை, அவர் தமிழ் மணத்தில் வலம் வந்து தனது தனித்துவம் வாய்ந்த பதிவுகள் பலரையும் சென்றடையச் செய்யுமாறு வழி வகுக்க வேண்டுமென்பதே!
கோமா அவர்களினபல பதிவுகளை திண்ணை இணைய தளத்திலேயே படித்து ரசித்திருக்கிறேன். அவரது பல நல்ல பதிவுகளுக்குச் சுட்டிகள் தந்திருக்கும் விதம் அருமை.
தாங்கள் ரசித்த ஞான வெட்டியான் எங்கே எங்கே என விடாமுயற்சியுடன் தேடி நடுநிசி நெருங்குகையில் கண்டும் பிடித்து சுட்டியும் தந்து விட்டீர்கள்.நன்றி. பாராட்டுக்கள்.
மறுபடியும் என் நன்றி எனது பதிவுகளைச் சுட்டியிருப்பதற்கு.
ReplyDeleteகோகுலன், ஆயில்யன், போன வாரம் தமிழ் பிரியன் ஆகியோரைத் தொடர்ந்து தாங்கள் சற்று விரிவாகவே எடுத்துரைத்துள்ளீர்கள் என்னைப் பற்றி. தமிழ் பிரியனிடம் சொன்ன அதே வார்த்தைகளைச் சொல்கிறேன்: இத்தகைய ஊக்கம் "இன்னும் நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியைத் தருகிறது."
தங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசியும் ஊக்கமும் தொடர வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.
மங்களூர் சிவா! பாராடுகளுக்கு நன்றிகள்!!!
ReplyDeleteஏதோ என்னாலானது.
ஆமாம்! ராமலஷ்மி!
ReplyDeleteநான் பழைய பாடல்களுக்கு அடிமை.
அந்த ஆர்வம்தான் ஞானவெட்டியானை
நடப்பு வலையுலகத்துக்கு காட்டலாம் என்று தேடினேன். நல்லவேளை!
கண்டுபிடித்துவிட்டேன். அவர் பதிவுக்ப்போய் பாருங்கள்...சித்தர் பாடல்கள் போன்ற பல பொக்கிஷங்கள்
கிடைக்கும்.
நீங்களுக் வரவேற்கப்படுகிறீர்கள்!!
ReplyDeleteராமலஷ்மி!