07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 25, 2008

கவிதைன்னா சும்மாவா?

கவிதைகள் என்பது போதை என்னைப் பொறுத்தவரை. சில கவிதைகளை உங்களுக்காக சேகரித்துள்ளேன். வாசிக்க நிறைய கவிதைகள் இருப்பதால் நான் ஏதும் அறிமுகமோ கருத்தோ கொடுக்கவில்லை.

*

ப்ரேம் குமார் நிறைய கவிதைகள் எழுதி இருந்தாலும் சின்ன சோகம் புகுத்தி எழுதிய பதிவு உரக்க சொன்னதில்லை நீ. எனக்குப்பிடித்த கவிதை உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் என்கிற நம்பிக்கையில் உங்கள் முன்னே.

*

இவரை காமெடியன்னு ஒரு புரளி கிளப்பி விட்டிருக்காங்க பிளாக்வுட்ல ஆனா "இவரு கல்லெடுத்து அடிச்சா ஒடயிற மிரரு இல்லைங்க‌ டெரரு...... டெரரு...... டெரரு". யார சொல்றேன்னு தெரியுதா? சமீபகாலமா உள்ளுக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த பின்நவனீத்துவ கவிஞர பெளடரெல்லாம் அடிச்சி, திருஷ்டி பொட்டு வெச்சி, வெளில‌ இப்போ நடமாட விட்டிருக்காருங்க ஓரெழுத்து பதிவர்.இவருக்கு அமெரிக்காவுல இப்போ "வாழும் வள்ளுவரே வளரும் பாரதியாரே" அப்டின்னு போஸ்டர் அடிச்சு, சிக்னலுக்கு சிக்னல் பிட் நோட்டீசும் குடுக்குறதா கேள்வி.அந்த ஓரெழுத்து பதிவர் நான் இல்லைன்னா வேற யாரு இவரு தான். அவரின் யாதுமாகி என்னுள்... கவிதை என‌க்கு பிடிச்ச ஒரு பதிவு.

கசக்கி எறியப்பட்ட
காகிதங்களுக்கு நடுவே
கண்ணீர் விட்டபடி
உன்னை அலங்கரிக்க முடியா சாபத்தில்
நிராகரிக்கப்பட்ட வரிகள்...

இப்படி செதுக்கி இருந்தார் வார்த்தைகளை.

*

குட்டி செல்வன் என்பவர் மீது வெகுநாட்களாக ஒரு சின்ன பொறாமையும் ஆச்சர்யமும் க்லந்த ஒரு விதமான உணர்வுண்டு எனக்கு. அழகான தளம் வைத்திருக்கிறார். கண்ணை பறிகாத வண்ணங்கள் படிக்கத்தூண்டும். பெரிய கவிதைகள் எனக்கு அவ்வளவாக எழுத வராது. இவர் நேர்த்தியாக இப்படிப்பட்ட பதிவுகளை இடுவார். எனக்கு அவர் இடும் அனைத்து பதிவுகளும் பிடிக்கும் ஆனால் உங்களுக்காக ஒரு பதிவு.

இனி நீ ம‌ட்டும் நானில்லை!

*

சதீஷ் நல்ல கவிதை எழுதுவார். மாதம் ஒரு பதிவு வெளியிட்டாலும் அது அற்புதமாக இருக்கும். அப்படிப்பட்டவரிடமிருந்து ஒரு கனமான கவிதை தொலைத்த மெளனங்கள்.

*

சிதறிக் கிடந்த சொற்களை சேர்த்ததில்...! என்று ஆரம்பித்து நல்லதொரு தொகுப்பை வாசித்தேன் தமிழனின் வலையில்.

*

சரவணக்குமாரின் ஒரு நேசம் முடிவுற்றது... என்ற பதிவு கொஞ்சம் சோகம் தந்தாலும் ரசிக்கத்தக்க ஒரு பதிவு.

*

நாடோடி இலக்கியனின் காதல் சொன்ன கணங்கள் கண் முன்னே காதலை நிறுத்தும் ஒரு பதிவு.

*


இது ஒரு மாதிரி போனாலும் பெண்கள் எழுதும் கவிதைகள் அழகே தனி தான் அதனால் எந்த கவிதைகளை சொல்வது என தெரியாமல் குழம்பி அவர்கள் எழுதிய எல்லாக்கவிதைகளையும் சுட்டியுள்ளேன்.

Sri

நாணல்

எழில்பாரதி

திவ்யா

தமிழ் மாங்கனி

*

ரொம்ப பெரிய பதிவா போயிடுச்சு கவிதைகள்ன்னு வந்த உடனே எதை விடுவது எனதெரியாமல் எல்லா கவிதைகளையும் முன்னே வைத்துவிட்டேன். நேரம் கிடைக்கும் போது பொறுமையாக படியுங்கள்.

நாளை சந்திப்போம்...

நன்றிகள்
-ஸ்ரீ.

8 comments:

  1. ஒய் திஸ் மர்டர் வெறி??

    ReplyDelete
  2. நன்றி அண்ணா..!! ;))

    ReplyDelete
  3. @ ஜி

    எல்லாம் காரணமா தான் ஜி.

    @ Sri

    இட்ஸ் ஓக்கே :)

    ReplyDelete
  4. அட....கவிஞர்கள் லிஸ்டல சேர்த்துட்டீங்களா??
    ரொம்ப நன்றி ஸ்ரீ!!

    ReplyDelete
  5. @ divya said...

    பின்ன எல்லாருமே ஒரே விஷயத்தை தான் சொல்லுவாங்க நாம வேற ஆங்கில்ல இருந்து சொல்லுவோமேன்னு தான் :)

    ReplyDelete
  6. இத்தனை பேரு மத்தில நானுமா...?


    நன்றி அண்ணன்...:)

    ReplyDelete
  7. @ தமிழன்

    ஆமாம் ஆமாம்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது