07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 10, 2008

கனவு நிறைவேறி கம்பெடுத்துட்டேன்..

கனவு நிறைவேறி கம்பெடுத்துட்டேனுங்க..அட ஆமாங்க நான் வாத்தியாராயிட்டேன்.யாருடா இது திடீர்னு வந்து வாத்தியாராயிட்டேன்னு கூவுறான்னு நீங்கல்லாம் முழிக்கறது எனக்கு தெரியுது..ஒரு வருசத்துக்கும் மேல வலையெழுதினாலும் அதிகமா பிரபலமில்லாத வலைஎன்னோடது தான்..

என்னடா ஆளே தெரியலைங்கறோம்.இவன் வலையை பத்தி பேசிட்டிருக்கான்னு நினைக்கறீங்களா..என்னோட பேர் தணிகை (எ) தணிகாசலம்.ஊர்சென்னை.வயசு சொல்லணுமா? முந்தைய பதிவர் வயசையெல்லாம் சீனா ஐயா சொன்னதால நானும் 23 ன்னு சொல்லிகிறேன்.தணிகாசலம்(எ) தணிகை என்னோட விரிவான அறிமுகம் அன்புடனுக்காக எழுதியது..இங்கபோன நான் இன்னாரு எப்படி பட்டவன்னு தெரியும்..

படிச்சது பன்னிரெண்டாவது தான்..அதோட கருகி போன என்னோட வாத்தியார் கனவு இன்னைக்கு தான்ய்யா நிறைவேறிச்சு..அதைய நிறைவேத்தி வெச்ச என் சின்ன???????? நண்பர் சீனா ஐயாவுக்கு முதல்ல வணக்கமுங்க& நன்றியும் கூட;-))))))

அப்புறம் என்ன இது வரைக்கும் சூப்பரா எழுதின, கலாய்ச்ச,கும்முன எல்லா பதிவர்களுக்கு வணக்கமுங்க..


வ்ளோ எழுதணும்னு தோணுது. ஆனாஎன்ன எழுதறதுன்னு தெரியலை..காலேஜிக்கு முதல் முதலா போன பயம் இன்னைக்கு இங்க எழுதும் போது வருது..ராகிங் பண்ணுவீங்களாப்பா???

என்னை பத்தின மொக்கை(சத்தியமா மொக்கை தான்னு நிஜமா நல்லவன் சொல்றது கேக்குது)போதும்னு நினைக்கிறேன்.


என் வலையை பத்தி சொல்லணும்னா லாட்டரி சீட்டை பொறுக்கி விளையாடும் போது அதுல இருந்த லாட்டரி அடிச்சா எப்படியிருக்கும்.. அப்படி தாங்க எதேச்சையா ஒரு வலைபக்கத்தை படிக்கும் போது தெரியாம சைன் இன் கிளிக் பண்ணி அதுல வந்த கிரியேட் ஆப்ட்சன் ல போய் எனக்குன்னு ஒரு வலை உருவாகிச்சு. கணினியை பத்தின அறிவு முழுசா இல்லாம தமிழ் குழுமங்களில் எழுதுவதை அப்படியே இங்க வெட்டி ஒட்டிடுவேன்..மத்தபடி என் வலைக்கு அதிகமா யாரும் வரூவதில்லை..எதுவாயிருந்தாலும் குழுமத்தோட நின்னுடும்..


இந்த வெற்றுகாகிதத்தின் எண்ணகுவியல்கள் தான் என்னோட வலை.இங்க கவிதைன்னு சில கொலைகளும் கதைன்ன்னு சில கொடுமைகளூம் இருக்கும்..அதிகமா சுயம் தேடியவைகளாகவோ இல்ல புலம்பல்களாகவோ தான் ....

என்னோட கவிதையில் தனிமைகள் .. கதையில் என் கனவு தேவதை ..இது ரொம்ப பிடிக்கும்..


டேய் விட்டுட்டு அடுத்த பதிவாச்சும் படிக்கற மாதிரி போடுடான்னு எல்லாரும் முட்டிக்கிறீங்கன்னு என் பட்சி வந்து சொல்றதால இதோட போதும்னு விட்டுட்டு அடுத்த பதிவு என்ன போடலாம்னு யோசிச்சுகிட்டே உங்க மறுமொழிஎனக்கும் வரணும் னு இப்பவே நன்றி சொல்லி ஜீட் விட்டுக்கறேன்..

25 comments:

  1. அன்பின் சக பதிவர்களே !!

    இன்று சில தவிர்க்க இயலாத காரணங்களினால், இன்னும் வரவேற்பும் வழியனுப்புதலும் - ப்திவு போடப்படவில்லை. இவ்வார ஆசிரியர் தணிகையும் இன்று பதிவுகள் போட இயலவில்லை. வரைவுப்பதிவு போட்டு வைத்திருந்தார். அதை பதிந்து விட்டேன். நாளை முதல் கலக்குவார்

    நல்வாழ்த்துகள் தணிகைக்கு

    ReplyDelete
  2. அட! அன்புடன் & கம்புடன் வர்றீங்களா?

    நல்வரவு.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாங்க தணிகை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. ஆகா! தணிகை, இந்த வாரம் நீங்க தான் வலைச்சர ஆசிரியரா? கலக்குங்க....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அன்பினிய திரு. தணிகை,

    வாழ்த்துக்கள். துளசி அம்மாவே வரவேற்ற பின் நான் என்ன சொல்லி வரவேற்க?! ஆதலால் அம்மாவின் பக்கத்தில் நின்று கொண்டு புன்னகை வணக்கமிட்டு மகிழ்கிறேன். இறைவன் உங்களை ஆசீர்வதிக்க என் இனிய பிரார்த்தனை செய்கிறேன்.

    அன்புடன்
    என் சுரேஷ்

    ReplyDelete
  7. /////////என்னை பத்தின மொக்கை(சத்தியமா மொக்கை தான்னு நிஜமா நல்லவன் சொல்றது கேக்குது)போதும்னு நினைக்கிறேன்.////////

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்....தணிகா!

    ReplyDelete
  9. //கனவு நிறைவேறி கம்பெடுத்துட்டேனுங்க//

    நான் கைல கொஞ்சம் குண்டூசி நெறிஞ்சி முள்ளு கண்ணாடி தூளு எல்லாம் வச்சிருக்கேன்.....கம்பை கைலயே வச்சிகிட்டா நானும் பேசாம ஒழுங்கா படிக்கிற மாதிரி நடிச்சிட்டு போய்டுவேன்:)

    ReplyDelete
  10. ///யாருடா இது திடீர்னு வந்து வாத்தியாராயிட்டேன்னு கூவுறான்னு நீங்கல்லாம் முழிக்கறது எனக்கு தெரியுது..//

    ஆமா நீங்க வாத்தியாரா இல்ல முனிவரா முக்காலமும் தெரியும் போல:)

    ReplyDelete
  11. //ஒரு வருசத்துக்கும் மேல வலையெழுதினாலும் அதிகமா பிரபலமில்லாத வலைஎன்னோடது தான்..//

    பிற பலம் இருக்கிறதால பிரபலம் ஆகலை போல:)

    ReplyDelete
  12. ///என்னடா ஆளே தெரியலைங்கறோம்.இவன் வலையை பத்தி பேசிட்டிருக்கான்னு நினைக்கறீங்களா..என்னோட பேர் தணிகை (எ) தணிகாசலம்///

    அட நம்ம தணிகா( சீனா சார் இப்படித்தான் சொன்னாருங்க)

    ReplyDelete
  13. ///படிச்சது பன்னிரெண்டாவது தான்..அதோட கருகி போன என்னோட வாத்தியார் கனவு இன்னைக்கு தான்ய்யா நிறைவேறிச்சு..அதைய நிறைவேத்தி வெச்ச என் சின்ன???????? நண்பர் சீனா ஐயாவுக்கு முதல்ல வணக்கமுங்க& நன்றியும் கூட;-)))))) ///


    ஆஹா சீனா சின்ன நண்பரா? அப்ப பெரியசாமி ன்னு சீனா சாருக்கு பேரு வச்சி இருந்தாங்கன்னா பேனா ன்னு சொல்லி பெரிய நண்பர் ஆக்கி இருப்பீங்க போலேயே:)

    ReplyDelete
  14. //அப்புறம் என்ன இது வரைக்கும் சூப்பரா எழுதின, கலாய்ச்ச,கும்முன எல்லா பதிவர்களுக்கு வணக்கமுங்க..//


    இங்கயே வணக்கம் சொல்லிட்டு இருந்தா எப்படி? அப்படியே ஒரு எட்டு எல்லார் பதிவு பக்கமும் போயிட்டு வாங்கப்பு:)

    ReplyDelete
  15. //எவ்ளோ எழுதணும்னு தோணுது. ஆனாஎன்ன எழுதறதுன்னு தெரியலை..//

    அட ஒரு பதிவருக்கு உள்ள தகுதியே இது தான்னு சொல்லுறாங்க..:)

    ReplyDelete
  16. //படிச்சது பன்னிரெண்டாவது தான்..//

    //காலேஜிக்கு முதல் முதலா போன பயம் இன்னைக்கு இங்க எழுதும் போது வருது.//

    ஹலோ தெளிவா சொல்லுங்க....பன்னிரெண்டாவது வரைக்கும் தான் படிச்சேன்னு சொல்லுறீங்க. அப்புறம் காலேஜுக்கு எதுக்கு போனீங்க?

    ReplyDelete
  17. உங்க சின்ன நண்பர் முன்பொரு முறை உங்களின் பதிவு லிங்க் கொடுத்தார்... பதிவுகள் படித்திருக்கிறேன்.....பின்னூட்டம் இட்டதில்லை....வாழ்த்துக்கள்....கலக்குங்க!

    ReplyDelete
  18. வாங்க சார் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  19. இங்கயும் ஒரு வாட்டி கூவிக்கிறேன் வாழ்த்துக்கள் தணிகை

    ReplyDelete
  20. /
    இங்க கவிதைன்னு சில கொலைகளும் கதைன்ன்னு சில கொடுமைகளூம் இருக்கும்..
    /

    இப்பிடி உண்மைய ஒத்துக்கறதுக்கும் ஒரு பெரிய மனசு வேணும் தம்பி

    :))))))

    ReplyDelete
  21. அன்புடன்ல பாத்திருக்கேன்.

    ReplyDelete
  22. /
    எவ்ளோ எழுதணும்னு தோணுது. ஆனாஎன்ன எழுதறதுன்னு தெரியலை..
    /

    சேம் பிளட்

    ReplyDelete
  23. /
    டேய் விட்டுட்டு அடுத்த பதிவாச்சும் படிக்கற மாதிரி போடுடான்னு எல்லாரும் முட்டிக்கிறீங்கன்னு என் பட்சி வந்து சொல்றதால
    /

    கம்யூனிகேஷன் ஏகத்துக்கு வளந்துருச்சிப்பா இன்னா ஸ்பீடு இன்னா ஸ்பீடு

    :))))

    ReplyDelete
  24. படிச்சது பன்னிரெண்டாவது தான்..//

    //காலேஜிக்கு முதல் முதலா போன பயம் இன்னைக்கு இங்க எழுதும் போது வருது.//

    ஹலோ தெளிவா சொல்லுங்க....பன்னிரெண்டாவது வரைக்கும் தான் படிச்சேன்னு சொல்லுறீங்க. அப்புறம் காலேஜுக்கு எதுக்கு போனீங்க?//

    அது வந்து சார்....நான் காலேஜ் ஜாயிண்ட் பண்ணதென்னமோ உண்மைதான்..ஒரு மாசத்துக்கு மேல அங்கன போகலை...

    அப்ப நான் படிச்சது பிளஸ் டூ தானே???..

    காலேஜ்க்கு முதல் நாள் போனதும் உண்மை தானே.....

    வாழ்த்துக்கு நன்றி தல..

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் கூறிய

    சீனா சார்,

    துளசி அம்மா,

    திகழ்மிளிர்,

    தமிழ்ப்பிரியன்,

    பிரேம் குமார் அண்ணாச்சி,

    சுரேஷ் அண்ணா,

    தமிழன்,

    மங்களூர் சிவா,

    இன்னும் பின்னூட்டம் போடம மனசுக்குள்ளயே வாழ்த்தும் மத்த நண்பர்களுக்கும் நன்றிங்கோ

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது