hi hi hi hi (vivek's styleல படிங்க)
அனைவருக்கும் வணக்கம்ங்கோ!! நான் தான் தமிழ்மாங்கனி. இந்த வாரத்தில் என் பதிவுகளை தான் நீங்க பாக்க போறீங்க..(யாருப்பா அங்க...தலையில அடிச்சுக்கிறது...)
முதல என்னைய பத்தி சொல்லிடுறேன்... சரி சரி அதுக்கு முன்னாடி, இந்த அறிமுகம் பதிவுல என்னைய பத்தி மேலும் சொல்ல, நான் வந்தே தீருவேன்னு ஒருத்தங்க ரொம்ப அடம்பிடிச்சாங்க. அவங்க வேறு யாரும் இல்ல.... என் மனசாட்சி தான்! ஹிஹிஹி....என் மனசாட்சியும் வந்து இருக்கு. எல்லாரும் ஜோரா ஒரு தபா கை தட்டுங்க!!
மனசாட்சி: ஹலோ வணக்கம் மக்களே!
நான்: என்னைய பத்தி அறிமுகம் செஞ்சுகிட்டு இருந்தேன். நீ அதுக்குள்ள வந்துட்டே.
மனசாட்சி: ஆமா, இவங்க பெரிய புதுமுக ஹீரோயின்! உனக்கு அறிமுகம் வேற....
நான்: ஏய் nonsense மாதிரி பேசாதே! முதல் பதிவு என்னைய பத்தி சொன்னா தான் மக்களுக்கு என்னைய பத்தி நல்லா தெரிஞ்சுப்பாங்க...
அன்பு சக பதிவர்களே, என் புனைபெயர் தான் தமிழ்மாங்கனி. இயற்பெயர், நயன் தாரா, சிம்ரன், ஜோதிகா என்று சொல்ல தான் ஆசை. இருந்தாலும், இதைவிட ஒரு அழகான பெயருக்கு சொந்தக்காரி, இயற்பெயர் காயத்ரி. சிங்கையில் பிறந்து, வளர்ந்து...
மனசாட்சி: ஏய், நிறுத்து, பிறந்த, ஒகே ஒத்துக்குறோம். வளர்ந்தியா?? ஹாஹா....வளர்ந்தேன்னு மட்டும் சொல்லாத...
நான்: ஓய், என்ன கிண்டலா? இந்த வயசுக்கு இந்த உயரம் போதும்! மனசாட்சி பேசுறத்த கண்டுக்காதீங்க.. சரி என் மேட்டருக்கு வறேன். சிங்கையில் இப்போது bsc maths 3rd yr படிக்குறேன்.
மனசாட்சி: காலேஜுக்கு போயிட்டு போயிட்டு வர, படிக்கிறீயா இல்லையான்னு எனக்கு தானே தெரியும்!
நான்: ஏய், நீ அடங்க மாட்டீயா!
மனசாட்சி: same to u!
நான்: குறுக்க குறுக்க பேசாம, என் அறிமுகத்த முடிக்கவிடுறீயா! அப்பரம்.. எங்கவிட்டேன்.. ஆ.. படிச்சுகிட்டு இருக்கேன். நான் வலைப்பூ எழுத ஆரம்பித்து 3 வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தாலும் அடிக்கடி எழுதும் பழக்கம் சமீபத்தில் தான் ஒட்டிகிச்சு!
மனசாட்சி: அத ஏன் கேட்குறீங்க மக்களே. ரொம்ப முத்திபோச்சு பைத்தியம். எத பாத்தாலும், என்கிட்ட சொல்லுவா, "இத பத்தி ப்ளாக்ல எழுதனும்". அன்னிக்கு ஒரு சின்ன புள்ளைங்க பார்க்ல சைக்கிள் ஓட்டிகிட்டு இருக்கும்போது, கீழே விழுந்துட்டா, அத பாத்துட்டும்... இதை தான் சொன்னா!! முடியல என்னால...
நான்: ஏய் மனஸ்!
மனசாட்சி: என்னது...மனஸ்சா???
நான்: ஆமா, நாங்கலாம் யூத்.. அப்படி தான் ஷாட்டா ஸ்டைலா கூப்பிடுவோம்!
மனசாட்சி: அட பாவிகளா? நீங்களாம் திருந்தவே மாட்டீங்களா?
நான்: முதன் முதலில் ஆரம்பித்தது
http://www.enpoems.blogspot.com/என் கவிதைகளை மட்டும் இந்த ப்ளாக்கில் போடலாம் என்று ஆரம்பித்தேன். ஆனா, அதுக்கு அப்பரம்... ஏதோ ஓரளவுக்கு கதை எழுத முயற்சித்தேன், திரைவிமர்சனம், அனுபவங்கள் என்று எல்லாம் கலவையும் சேர்ந்துடுச்சு! சமீபத்தில் தான் 150வது பதிவை வெற்றிகரமாக எழுதி போட்டேன். அதை படிக்க இங்கே செல்லவும்.
150வது பதிவுஎன் ப்ளாக்கில் எனக்கு பிடித்த சில பதிவுகளின் சுட்டியும் 150வது போஸ்ட் பதிவில் உள்ளது.
மனசாட்சி: நான் தாங்க எல்லாத்துக்கும் கஷ்டப்பட்டேன். ஒவ்வொரு தடவையும் எழுதும்போது 'இது நல்லா இருக்குமா? நல்லா வருமா? ஏதாச்சு தப்பா போயிடுமா? எத்தன hits வரும்? அப்படி இப்படின்னு என்னைய போட்டு கொன்னு எடுத்துடுவா! பெரிய இம்சை இவ!
நான்: ஓய் மனஸ், சும்மா உள்ள இருக்கும் உனக்கும் என்ன தெரியும், வெளி உலகத்துல வாழும் எங்களுக்கு தான் பதிவு எழுதும் கஷ்டம் புரியும்!:)))
நான்: அப்பரம், நான் எழுதிய
கலாய்த்தல் பதிவு ஒன்றை படித்துவிட்டு, மை ஃபிரண்ட்
பயமறியா பாவையர் சங்கத்துல சேர அழைப்பு வச்சாங்க. சரி அங்கயும் எழுத ஆரம்பித்தேன். ஏதோ என்னால முடிஞ்ச சேவை...
மனசாட்சி: கண்டிப்பா இந்த நாட்டுக்கு தேவையே இல்ல....
நான்: நீ சும்மாவே இருக்கமாட்டீயா. என் imageயை totalலா damage பண்ணிகிட்டு இருக்கே...
மனசாட்சி: சரி விடு விடு! இதலாம் அரசியல சகஜமப்பா... அப்பரம் தமிழ்மாங்கனி ஒரு ஜோக் வலைப்பக்கம் ஆரம்பிச்சா...
http://www.enjokes.blogspot.com/ஆனா... ஏன் அடிக்கடி ஜோக் போட மாட்டேங்குற?
நான்: நான் என்ன மனஸ் பண்றது? டைமே கிடையாது! இந்த வலைச்சாரத்தில் நல்லா எழுதனும்னு யோசிச்சு யோசிச்சு.... இதுக்கே டைம் சரியா இருக்கு!
மனசாட்சி: ஆமா...லூசுத்தனமா உன் விளையாட்டு புத்திய காட்டாம, வலைச்சாரத்தில் நல்ல பதிவா போட்டு புன்னியத்த தேடிக்கோ!
நான்: எனக்கு நல்லா வேணும் இதலாம்!! ஓகே, அப்பரம் என்னை பத்தி வேற என்ன சொல்லலாம்.....ம்ம்ம்.... சூப்பரா சமைப்பேன்! ஆமாங்க.. சூப்பரா சுடுதண்ணி
வைப்பேன்!
மனசாட்சி: அட த்தூ... வெட்கமா இல்ல உனக்கு! இப்படி சொல்ல... சமையல் குறிப்பு பத்தி எத்தனையோ பதிவு இருக்கு! அத பாத்து படிச்சு செஞ்சு பாரு!!!
நான்: ஏய் தேங்கஸ் மனஸ்!
மனசாட்சி: என்ன, சமைக்க போறீயா? வெரி குட்!
நான்: இல்ல இல்ல.... வலைச்சாரத்துல அடுத்த பதிவு என்ன போடலாம்னு தெரியல... நீ சூப்பரா ஒரு ஐடியா கொடுத்துட்டே. சமையல் வலைப்பக்கங்கள் பத்தி தான் அடுத்த பதிவு! ஐடியா கொடுத்ததற்கு நன்றி மனஸ்!
இதுக்கு தான் சொல்றது... ஆளுக்கு ஒரு மனசாட்சி வேணும்னு!!!
மனசாட்சி: நீ திருந்தவே மாட்ட போல தெரியுது!:))