எல்லாம் பெரிய விஷயங்கள்தான்; எல்லோரும் உயர்வானவர்கள்தான். மனிதர்களுக்கு அன்பு என்கிற பெரிய வஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. மனிதனை நெருங்குகிறதுக்கு எவ்விதத் தடையுமில்லை. எவ்வளோ இழந்தாலும் பெறுகிறதற்கும் எதாவது இருந்து கொண்டேதான் இருக்கிறதென்று நினைக்கிறேன். ஸ்ரீ சுந்தர ராமசாமி சொன்னது மாதிரி, ‘எதையாவது இழந்துதான் எதையாவது பெறுகிறோம்’ என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப்படுகிறது. கலை, மனம் சம்பந்தப்பட்டது; ரசனை பூர்வமானது; உண்மையோடு நெருங்கிய சம்பந்தமுள்ளது. நல்ல கலைஞன் ஜனங்களிடம் பொய்சொல்ல மாட்டான். கலைக்கு பொய் ஆகாது.- வண்ணநிலவன்
கடம்பவனத்திலிருந்து பதிவுகளைத் தொடர்கிறேன். முதலில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான வண்ணநிலவனைக் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய அவர்அப்படித்தான் என்னும் கட்டுரை வாசித்துப்பாருங்கள். நீங்களும் வண்ணநிலவனின் தீவிர வாசகனாகிவிடுவீர்கள். வண்ணதாசனின் அகமும் புறமும்வாசித்துப்பாருங்கள். தாமிரபரணியின் ஈரம் உங்கள் மீதும் பரவட்டும். முறையான கழிப்பறை வசதிகள் இல்லாமலிருக்கும் கல்விக்கூடங்களைப் பற்றி நாஞ்சில்நாடன் எழுதிய கட்டுரை பல கல்விநிலையங்களைத் திருந்த வைத்தது. கடலோரகிராமத்துமக்களின் கதைகளை எழுதிய தோப்பில் முகமது மீரானின் தளத்தையும் வாசித்து பாருங்கள். அவரின் ஆளுமை தெரியும்.
கவிஞரும் சமூகசேவகியுமானசக்திஜோதியின்தளத்தையும், சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதிவரும்விஜயலட்சுமியின்தளத்தையும் வாசித்துப்பாருங்கள். இதுவரை குறிப்பிட்ட ஆறுபேருடைய எழுத்தையும் பதிந்து வரும் சுல்தான் அவர்களுக்கு நன்றிகள் பல.அறிவுமதி, யுகபாரதி, தமிழச்சிதங்கப்பாண்டியன் போன்ற கவிஞர்களின் கவிதைகளையும் கட்டுரைகளையும் வாசித்துப்பாருங்கள். கவிதை மீதான உங்கள் காதலும் அதிகரிக்கும்.
புத்தகங்களுக்கான சிலிக்கான் செல்ஃப்என்னும்தளத்தில்தற்போதுஜெயமோகனின்விஷ்ணுபுரம்குறித்ததொடர்பதிவுவந்துகொண்டிருக்கிறது. கூட்டாஞ்சோறுதளத்தில்நல்லபதிவுகள்பலஅணிவகுத்துநிற்கின்றன.
விழியன் எடுக்கும் நிழற்படங்களைப்பார்க்கும் போது எனக்குப் பொறாமையாய் இருக்கிறது. நல்ல பதிவுகளைத் தொடர்ந்து எழுதிவரும் நற்றமிழன் தற்போது கூடங்குளம் அணுஉலைக்கெதிராக எழுதிவரும் பதிவுகள் முக்கியமானவை. பன்றிக்காய்ச்சலுக்குக்கூட மருந்துண்டு, ஐ.பி.எல் கிரிக்கெட் கிறுக்கிற்கு மருந்தில்லை என்னும் புரட்சிகரமாணவர்இயக்கத்தின் தளத்தைப் பாருங்கள். கிரிக்கெட் தவிர மற்ற நல்ல விளையாட்டுகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
மனசை மேம்படுத்த மந்திரச்சாவி என்னும் தொடர் எழுதிவரும் எழுத்தாளர் நாகூர்ரூமியின் தளத்தை வாசியுங்கள். நெகிழ்வூட்டும் நினைவுகளைப் பதிந்து வரும் ஆருத்ரா தரிசனம்தளத்தில் சைக்கிள்குறித்த நினைவுகளை வாசித்து பாருங்கள். நீங்கள் சுஜாதாவின் வாசகரா? அப்பொழுது பாலஹனுமன்தளத்தைப் பாருங்கள். முன்பெல்லாம் பாட்டுப்புத்தகங்களை வாங்கி வைத்து சினிமாப்பாடல்களைப் பாடிக்கொண்டிருப்போம். உங்களுக்கு பிடித்த தமிழ்ப்பாடல்வரிகளைவானம்பாடியோடு சேர்ந்து பாடுங்கள். இயற்கை உணவு உண்டு நோயற்ற வாழ விரும்புபவர்கள் இந்தப் பதிவை வாசியுங்கள். சமையல்குறிப்புகளை வாசிக்க இத்தளத்தை காணுங்கள். வனம்என்னும் இதழை வாசித்துப்பாருங்கள்.
இவன்தான் பாலா புத்தகம் தன்னை மாற்றியதை குறித்து ஆம்பல் எழுதியுள்ளதைப்படியுங்கள். மதுரையைச் சேர்ந்த கவிஞர் இரா.ரவியின் ஹைக்கூ கவிதைகளை வாசித்துப்பாருங்கள். ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களமான தூமைஎனும் தளத்தை வாசித்துப்பாருங்கள். மதுரை வடக்குமாசிவீதிக்கும் செல்லூருக்கும் உள்ள தொடர்பை அறிய கட்டியங்காரன் சொல்வதைப் படியுங்கள்.
இணையதளங்கள் குறித்த அதிக தகவல்களைப் படிக்க சைபர்சிம்மன் தளத்தையும், தமிழை விரும்பும்தமிழாள்பக்கத்தையும், சிபிச்செல்வனின் இலக்கியசுற்றம்தளத்தையும், அரவான் குறித்து அருமையான பதிவு எழுதியவித்யாசாகரின்தளத்தையும், ஆனந்தவிகடனில்வந்தஅறிவழகனின் சிறுகதையையும், பாண்டித்துரை, ராம்மலர், நடைவழிக்குறிப்புகள் தளத்தையும் பாருங்கள்.இன்றென்ன முழுவதும் வேர்டுபிரஸ் பதிவுகளாக இருக்கிறதென்று பார்க்கிறீர்களா? இந்தப் பதிவை வாசித்துப் பாருங்கள். தமிழில் உள்ள நிறைய வலைப்பதிவுகளின் முகவரிகொடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை தவிர எல்லாநாட்களும நூலகம் இருக்கும் நாம் செல்கிறோமா? நம்முடைய வாசிப்பையும், எழுத்தையும், நம்மையும் செதுக்கிக்கொள்ள கீழ்உள்ள தளங்களையாவது அடிக்கடி வாசிக்கலாமே.
நல்லெண்ணமே நட்பின் அடித்தளம்.
நல்லெண்ணத்தை பிறர் மனங் குளிர வெளியிடுங்கள்.
உங்களைப் பற்றிய நல்ல எண்ணத்தைப் பிறர் மனதில் உருவாக்க
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அன்பான அணுகு முறையைக் கையாளுவதே. அன்பு பூக்கும் விழிகள் உங்களிடம் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி யாருடைய இதயக் கதவுகளை வேண்டுமானாலும் உங்களால் திறக்க முடியும். முயலுங்கள். வெற்றி கிடைக்கும்.
சிலர் தொட்டதற்கெல்லாம் எதை எடுத்தாலும் பிறரைக் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித் தன்மை இருக்கிறது என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள்.
ஒவ்வொருவரும் எப்படி இருக்கிறார்களோ அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி விருப்பு, வெறுப்பு இருக்கிறது. நீங்கள் நினைத்த படி உங்களாலயே இருக்க முடியாத போது மற்றவர்களால் எப்ப்டி இருக்க முடியும்? இதை சிந்தித்து பாருங்கள்.ஒவ்வொருவரும் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற தனித்தன்மைக்குத் தக்கவாறு அவருடன் பழகுங்கள். அவரிடம் உங்களின் எதிர்பார்ப்பையும் அவருடைய இயல்புக்குத் தக்கவாறு அமைத்துக்கொள்ளுங்கள்.
நேரில் புதிய நட்பு அமையும் போது ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பரஸ்பரமாகி பழகும்போது அந்த நட்பு காலத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளது...
ஆனால் பதிவுலகில் நண்பர்களாக பழகிய நாம் எப்படி ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வது. அப்படி தெரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முத்தான வாய்ப்பாக அமைந்தது தான் முத்தான மூன்று முடிச்சு தொடர்....அப்படி என்னோடு தொடர்பாக அமைந்த நட்புகளில் சில அன்பு பதிவர்கள்.... *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** அன்பு உலகம் வலைப்பூவின் சொந்தக்காரர் அன்பு சகோ M.Ramesh அவர்கள்... அவர் சகலகலா வல்லவராக பதிவுலகில் பங்கு சந்தை, மருத்துவம் என பல உபயோகமான பதிவுகளை பகிர்ந்துகொண்டு வருகிறார்... அவரின் மூன்று முடிச்சு தொடராக மூன்றின் ரகசியத்தில் அவரைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
கலக்கலானகாகித பூக்கள்வலைப்பூவின் சொந்தக்காரர் தோழி ஏஞ்சலின் அவர்கள்..ஆங்கில வலைப்பூ papercrafts ம் இவருடையுதே.. அருமையான விசயங்களை அழகாக பகிரும் திறமை உள்ள இவரைப் பற்றி அறிய மூன்று முடிச்சுகள் .
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற வலைப்பூவிற்கு சொந்தக்காரர் நமது அன்பு சகோதரர் திரு. ரமணி அவர்கள்.. இன்று சாமி கும்பிடுவதில் எவ்வளவு முட்டாள் தனமாக நடந்துகொள்கிறோம் எனற செய்தியை பழநி முருகனும் நானும்என்ற பதிவில் கடவுள் அழகு முருகனிடம் உரையாடுவது போல் இவர் பகிர்ந்த விதம் உண்மையான நிலையை விளக்குகிறது. இந்த அருமையான அன்பருடன் நட்பு முடிச்சு ஏற்பட்ட தொடர் முத்தான மூன்று முடிச்சு
உப்பு மடச் சந்தி என்ற வலைபூவில் கதை பேச வாங்கோ என்று அழைக்கும் நமது சகோ ஹேமாஅவர்கள் இவர் ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை பதிவில் உருக்கமாக பகிர்ந்து வருகிறார்... இவரது இன்னொரு வலைப்பூ வானம் வெளித்த பின்னும் என்ற தளத்தில் சமூகத்தில் நடந்த கொடுமைகளை கவிதையாக தந்து நமது மனதை தொட செய்கிறார். இவரைப்பற்றி அறிய மாய உலகம் தேடவிட்ட மூன்றுகள் .
தமிழை நேசிப்பவர்கள் வாசிப்பதற்காக தமிழ் வாசி என்ற வலைப்பூவில் பட்டைய கிளப்பும் பதிவுகளை பகிர்ந்து பரவசப்படுத்துபவர் தான் நம்ம நண்பர் பிரகாஷ்அவர்கள்.. இவர் பிரபல பதிவர்களை எக்ஸ்க்ளூசிவ் பேட்டி எடுத்து அவர்களை பற்றி பல பேருக்கு அறிய செய்பவர்.. இவருடன் இன்றும் தொடரும் நட்புக்கு காரணமாக அமைந்து மூணுக்கு மூணாகதொடர்.
பதிவுலகில் பூனை என்று ஞாபகம் வந்தாலே இவரது வலைப்பூவாகத்தான் இருக்கும்.. எவ்வளவோ மனப்பிரச்சனைக்கிடையில் இவரது வலைப்பூவில் நுழைந்து பதிவுகளையும், அதில் அன்பர்கள் இடும் கருத்துகளையும் படித்தால் தானாகவே சிரிக்க ஆரம்பித்து விடுவோம்... எதையும் இலகுவாக எடுத்துக்கொண்டு நகைச்சுவை உணர்வுடன் எதார்த்தமான விசயங்களை பகிரும் நல் உள்ளத்துக்கு சொந்தக்காரர் அன்பு தோழிஅதிரா அவர்கள்... அவரது என் பக்கம் என்ற வலைப்பூவிற்கு சென்று மாயாவும் “லேடி” முதலையும்:)) யுடன் உரையாட தேம்ஸில் குதியுங்கள்.
நண்பர் கோகுல்அவர்களது கோகுல் மனதில் என்ற வலைப்பூவில் அன்பே சிவம் பாணியில் தொடங்கிய ஒரு பயணம்என்ற அவரது எதார்த்தமான பயணத்தை அழகாக பகிர்ந்திருந்தார்.அதே சமயத்தில் சமுகத்தில் நடக்கும் அவலங்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக பதிவுகளை கொடுப்பதில் இவர் வல்லவர்.
எதார்த்தமான விசயங்களை நகைச்சுவையான நடையில் பதிவுகளை எழுதுவதில் வல்லவர் இந்திராவின் கிறுக்கல்கள் வலைப்பூவின் சொந்தகாரர் தோழி இந்திராஅவர்கள். நான் இந்திரா இம்சிக்கிறேன் படிக்காதிங்க என்று அவர் பாசத்துடன் சொன்னாலும் பதிவர்கள் நேசத்துடன் படிப்பார்கள். நீங்களே சொல்லுங்க நான் பல்பு வாங்கினேனா என்று கேக்கிறார்..
வலைப்பதிவில் பதிவு எழுதும் பலருக்கும் நமது பதிவுகள் பத்திரிக்கைகளில் வந்தால் நல்லாருக்குமே... எப்படி அனுப்புவது. எந்த பத்திரிக்கைக்கு அனுப்புவது என்ற குழப்பம் இருக்கும். அந்த குழப்பத்தை தீர்க்கும் விதமாக மேடம் தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் அவரது சும்மா என்ற வலைப்பூவில் இணைய இதழ்கள்..,பத்திரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்புவது எப்படி என்று பகிர்ந்திருக்கிறார்.. படித்து தெரிந்து உங்களது படைப்புகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி புகழ் பெறுங்கள் நண்பர்களே.
பிரபல எழுத்தாளர் மரியாதைக்குரிய மேடம் வித்யாசுப்ரமணியம்அவர்களது வலைப்பூ கதையின் கதை முன்னுரை எழுதுவது அப்படி ஒன்றும் சுலபமான விஷயமல்ல. என்னைக் கேட்டால் நாவல் எழுதுவதை விட கடினமானது முகவுரை எழுதுவதுதான் என்கிறார்..கதைக்கு முன்னுரை, முகவுரை மிகவும் முக்கியம் என்கிறார். 1984 ஆம் ஆண்டு மங்கையர் மலரில் 'முதல் கோணல்' நெடுங்கதை மூலம் எழுத்துலக பிரவேசம். அதன் பிறகு அனைத்து இதழ்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல்கள். 27 வருட எழுத்துலக பயணத்தில் கிடைத்த விருதுகள்: தென்னங்காற்று - அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது வனத்தில் ஒரு மான் - தமிழக அரசு விருது ஆகாயம் அருகில் வரும் - பாரத ஸ்டேட் வங்கி முதல் பரிசும் விருதும் கண்ணிலே அன்பிருந்தால் - கோவை லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது இரண்டு சிறுகதைகளுக்கு இலக்கிய சிந்தனை விருது பல சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு 'Beyond the frontier' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இவரைப்பற்றி எனது கருத்து: "அன்புக்கு பஞ்சமில்லை" என்ற இவர் எழுதிய கதையில் இவர் சொல்லியிருந்த வரிகளும் அந்த கதையும் என் மனதை மிகவும் கொள்ளை கொண்டது... அந்த வரிகள் : யோசிச்சு பார்த்தா ஒரு உண்மை புரியும். எதுவுமே தியாகம் இல்ல. யாருமே யாருக்குமே எதையும் நோக்கம் இல்லாம விட்டுக்கொடுக்கிறது இல்ல. விட்டுக் கொடுக்கிறதெல்லாம் வட்டியோடு திரும்ப பெறத்தான். தன்னலத்தோடு கூடின பாசத்துக்குத் தான் பாதி பேர் அடிமையாய் இருக்கோம். என் வாழ்க்கையில் சில நிமட தெளிய வைத்த கதையாசிரியர்... நன்றி மேடம். ==================================================================================
மதிப்பிற்குரிய ஐயா புலவர் சா.இராமாநுசம் அவர்களது கவிதைகள் என்ற வலைப்பூவில் சமூக சிந்தனைகள் தூண்டும் விதமாகவும், ஈழத்தில் நடந்த, நடக்கும் கொடுமைகளையும் இலக்கிய வடிவில் கவிதைகளாக கொடுத்து சிந்திக்கவைக்கிறார் நமது புலவர் ஐயா. தமிழின் அருமை இவரது கவிதையில் கலக்கலாக பிரதிபலிப்பதே இவரது திறமைக்கு சான்று.
வேர்களைத்தேடி வலைப்பதிவின் சொந்தக்காரர் அன்பு நண்பர் முனைவர் இரா.குணசீலன் அவர்கள்..இவர் இலக்கிய தமிழைப்பற்றி அழகிய நடையில் பகிர்ந்து வருகிறார்.. இன்னும் பல வருடங்களில் இலக்கியம் பற்றிய தேடல் என்றாலே இவர் பெயர் தான் முதன்மையில் பேசப்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
சகோ வேதா.இலங்காதிலகம்அவர்கள் வேதாவின் வலை என்ற வலைப்பூவில் சிந்தனைச்சாரல் என்ற தொடர் பதிவுகளை இலக்கிய நடையில் நமக்கு ஊட்டி சிந்திக்கவைக்கிறார்... இவரது அருமையான படைப்புகள் இவரது வலைப்பூவிற்கு தொடர்ந்து நம்மை அழைத்துச்செல்லும் என்பது உண்மை.
எந்த கெட்ட பழக்கமும் ஒரு வியாதி தான், அந்த வியாதி தீருவதற்கான மருந்து மனதிடமும், விடாமுயற்சியும் தான் என்றுMADURAGAVIஎன்ற வலைபூவில் குடி குடியை கெடுக்கும் என்ற பதிவில் நம்முடன் பகிர்ந்திருக்கிறார் சகோRAMVI அவர்கள்.இவர் பதிவுகள் மிக தெளிவாகவும் சிந்திக்க வைக்க கூடியதாகவும் எழுதுவதில் சிறந்தவர்.
====================================================================== நமது லக்ஷ்மிஅம்மா அவர்கள்குறை ஒன்றுமில்லை என்ற வலைப்பூவில் மெட்ராஸ் நல்ல மேட்ராஸ் என்ற அவரது பயணபதிவு அனுபவங்களை தொடராக எழுதி நம்முடன் அருமையாக பகிர்ந்துகோண்டிருக்கிறார். வாருங்கள் நாமும் அவரோட பதிவுகளில் பயணம் செய்வோம். தொடர் பதிவு எழுதி வருவது என்பது சாதரண விசயமல்ல.. பதிவர்கள வருகை குறைய வாய்புண்டு ஆனால் இவர்களது எழுத்து திறமையால் பதிவர்களின் வருகை அதிகரித்துக்கொண்டு தானிருக்கிறது.
அதே போல் சகோதரர் செங்கோவி அவர்கள் மன்மத லீலைகள் எனது கிழிந்த டைரியிலிருந்து என்ற உண்மை தொடரை மிகவும் சுவராஷ்யமாகவும் விறுவிறுப்புடன் கிட்டதட்ட 48 தொடர் வெற்றிகரமாக எழுதி நம்முடன் பகிர்ந்திருக்கிறார். இது சாதராண விசயமே அல்ல அநேகமாக பதிவுலகில் இத்தனை தொடர் வெற்றிகரமாக நகர்த்தி கொண்டு செல்பவர் இவராகத்தான் இருக்க முடியும்.
பதிவுலக நம்ம மாம்ஸ் விக்கியுலகம் அவர்கள் விக்கியின் அகட விகடங்கள் என்ற வலைப்பூவில் குட்டிச்சுவர் என்ற தொடரை எழுத ஆரம்பித்து பகிர்ந்து பட்டைய கிளப்பி பரவசபடுத்திக் கோண்டிருக்கிறார். வித்தியாசமான கலக்கலான காணொளிகள் என்றாலே இவர் வலைப்பூ உத்திரவாதம்.
சகோ ஜெய்லானி அவர்கள் அவரது வலைப்பூவில் ஒரு...... டைரி....... என்ற தொடர் பதிவில் நண்பர்கள் பல்பு வாங்கின விசயத்தை எழுதுகிறார்...படித்தால் வயிறு புண்ணாகிவிடும் அப்படி நகைச்சுவை உணர்வுடன் எழுதி அசத்தியிருக்கிறார்...
===================================================================== ஆசிரியர் இமாஅவர்கள் இது இமாவின் உலகம்என்ற வலைப்பூவில் சமூக சிந்தனையுடன் கூடிய பதிவுகளை பகிர்ந்து வருகிறார்... அவரது நல் உள்ளம் பிரதிபலிக்கும் விதமாக சின்ன பாதங்கள் என்ற பதிவை பகிர்ந்திருக்கிறார். படியுங்கள் அவரது நல் உள்ளம் நம்மையும் சிந்திக்க வைக்கும்.
நமது சகோ செம்பகம் விடிவெள்ளிஅவர்கள் செம்பகம் என்ற வலைப்பூவில் ஈழத்தில் நமது சகோதர சகோதரிகள் பட்ட இன்னலகளை கவிதை வடிவில் பகிர்ந்து வருகிறார் .. வாருங்கள் நண்பர்களே பகிர்வோம்.
கடம்பவன குயில் அவர்கள் கடம்பவன பூங்கா என்ற வலைப்பூவில் எளிய நடையில் அருமையான கவிதைகளை அழகாக கலக்கலாக பதிவிட்டு வருகிறார்... அதுமட்டுமல்ல சமூக சிந்தனைகளையும் கட்டுரைகளாக பதிவிட்டு வருகிறார். தானத்தில் சிறந்த தானம் ?எது என படியுங்கள் நண்பர்களே.
சிந்து சமவெளி நாகரீகத்தை பற்றி யாழினிஅவர்கள் யாழ் இனிது என்ற வலைப்புவில் மிக பிரமாதமாக படங்களுடன் விவரித்திருக்கிறார்.. ஒரு முறை இவரது வலைப்பூவிற்கு சென்றால் இந்த வலைப்பூவின் தீவிர ரசிகராகிவிடுவீர்கள்.
சின்ன தூரல் என்ற வலைப்பூவில் நீ யார் ?என்ற காலத்தை பற்றிய கவிதையை கலக்கலாக பகிர்ந்திருக்கிறார் தோழி சின்ன தூரல்..சமீபகாலமாக எழுதி வருகிறார் சென்று படித்து உங்களது ஆதரவை தாருங்கள் நண்பர்களே