07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ராஜேஷ். Show all posts
Showing posts with label ராஜேஷ். Show all posts

Sunday, September 18, 2011

கலவை

என்னங்க சன்டேல ஜாலி மூடு இல்லாம இருக்கீங்களா....

கோபத்தை கோபமாக விரட்டுங்க..

வாங்க டீ சாபிட்டுக்கிட்டே சிப்ஸ் எடுத்துக்குங்க .... சாரி டிப்ஸ் எடுத்துக்குங்க..

ஒருவருக்கு தன் மீது சுயமாகவே வரும் கோபம் கால் பங்கு என்றால், மூன்றாம் நபரால் தூண்டப்பட்டு வருவது முக்கால் பங்கு கோபம். பகைமை சூழலுக்கு இடம் கொடுக்காமல், பிறர் தூண்டுதலுக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.

கோபம் வருகிற சூழல் ஏற்பட்டால், அந்த இடத்தை விட்டு நகர்வது சிறந்த வழி.

ஒருவர் கோபப்படுத்தும்போது, அந்த கணக்கில் நிகழந்த சம்பவத்தை உடனே மறந்து விடுங்கள். எப்போதோ ஒரு காலத்தில் அவர் நமக்கு ஏதாவது நன்மை செய்திருப்பாரோ.... அதை இப்போது நினைத்துப் பார்க்கலாம்.

தூங்கி எழுந்ததும் , இன்னைக்கு முழுக்க யார்கிட்டயும் நான் கோபப்பட மாட்டேன். என ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்.

என்னங்க...கோபம் இன்னும் போகலையா...
அப்ப இந்த காமெடிய படிங்க

ஆசிரியர் : "மற்றவர்களுக்குப் புரியாத மாதிரி பேசறவன் முட்டாள்!
மாணவன் : "புரியலை சார்"
****
மாணவன் : உன் வகுப்புல சுமாரா எத்தன பேர் படிக்கிறாங்க?
மாணவன் : எல்லாருமே சுமாரதான் படிப்போம்!

என்னங்க ...இன்னும் கோபம் தீரலையா.... இந்த காணொளிலிய பாருங்க...ஏற்கனவே பல முறை பார்த்திருப்பீங்க ..இருந்தாலும் இன்னொரு மொற பாருங்க.....



சரி வாங்க சிரிச்சுக்கிட்டே இன்றைய வலைச்சர அறிமுக பதிவர்களை சென்று சந்திக்கலாம்....

ஏதோ சமைத்து ... நமக்கு வேண்டா விருந்தாளிக்கு கொடுத்து ஓட வைப்போம்..

உண்மையில் சமையலை சிறப்பாக செய்வது என்பது எளிது அல்ல ... அதை எளிதாக செய்வது எப்படி என இவர்களிடம் கற்று நமக்கு பிடித்தமானவர்களுக்கு சமைத்து கொடுக்கலாம்... வாருங்கள்


என் சமையல் பக்கம் சகோ கீதா அவர்களின் வலைப்பூ http://kaathodupesava.blogspot.com/


welcome to mahi's space  சகோ mahi அவரிகளின் வலைப்பூ http://mahikitchen.blogspot.com/


ராதாஸ் கிச்சன் சகோ ராதாராணி அவர்களின் வலைப்பூ
http://radhaskitchen-1.blogspot.com/


சமையல் அட்டகாசங்கள் சகோ jaleela kamal அவர்களின் வலைப்பூ http://samaiyalattakaasam.blogspot.com/


என் சமையலறையில்  சகோ தெய்வசுகந்தி அவர்களின் வலைப்பூ http://suganthiskitchen.blogspot.com/


என் சமையல் அறையில் சகோ கீதா ஆக்சல் அவர்களின் வலைப்பூ http://geethaachalrecipe.blogspot.com/


vanathy's சகோ வாணி என்கிற வானதிஅவர்களின்
http://vanathys.blogspot.com/2011/07/blog-post_23.html

சமைத்து அசத்தலாம்  சகோ asiya omar அவர்களின் 
வலைப்பூ  http://asiyaomar.blogspot.com/
============================================

திருச்சிராப்பள்ளியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா.மரியாதைக்குரிய நமது அன்பர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது VAI. GOPALAKRISHNAN என்ற வலைப்பூவில் ஊரைச்சொல்லவா..பேரைசொல்லவா என்ற பதிவில் திருச்சிராப்பள்ளியைப் பற்றி பகிர்ந்திருக்கிறார்..வாருங்கள் திருச்சியை சுற்றி வருவோம்.


நண்டு @ நொரண்டு வலைப்பூவின் சொந்தகாரர் நம்ம சகோதரர் வழக்கறிஞர் ராஜசேகரன் அவர்கள் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை நம்மோடு பகிர்ந்து வருகிறார்...


இவர் பேர் கேட்டால் தான் மிரளுவார்கள்..ஆனால் நகைச்சுவை உணர்வுடன் சமூக சிந்தனைகளையும் அனுபவ நிகழ்வுகளையும் எழுதி வாங்க வாங்க நம்புங்கோ நானும் பதிவருங்க என அழைக்கிறார்..
நம்ம மாம்ஸ் காட்டான்


 நமது சகோ  அந்நியன் 2 வலைப்பூவிற்கு செல்வோம்
{ஒருறொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார் என்றும் ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.(அல்குர்ஆன் 5:32)  .. } இந்த வலைப்பூவில் சமூக சிந்தனைகளையும், நகைச்சுவையும் நம்முடன் பகிர்ந்திருக்கிறார்.


நாட்டு நடப்புகளை சமூக சிந்தனைகளுடன் நம்மிடையே உரிமையுடன் பகிர்ந்து கொள்ளும் நம் சகோ பாரத் பாரதி அவர்களின் 

நட்பிற்கு முகங்கள் முக்கியமில்லை. ஏதோ ஒரு கருத்தில் உடன்பாடிருந்தால் அல்லது ஒரு சிறுவிடயத்தில் எம்மிடயே சிறு புரிந்துணர்வு ஏற்பட்டால் அந்தச் சிறு புள்ளியொன்றே நம் நட்பின் ஆரம்பமாகட்டும். சுயசிந்தனையும் பகுத்தறிவும் மிக்கதோரு நம்மவர் சமுதாயம் நோக்கிய தேடலில்...... நிறைய வாசிப்பது புதிய இடங்களிற்குப் பிரயாணங்கள் செய்வதனால் புதிய அனுபவங்கள், பலதரப்பட்ட கலாச்சாரங்களை, மக்களை புரிந்துகொள்வது. மக்கள் சிந்தனையைத் தூண்டும் எழுத்து பேச்சு செயல் என அரசியல் முதல் சமையல்கட்டுவரை அனைத்துவிடயங்களும் சங்கமிக்கும் கலவையாக மசால மசாலா நம்ம அம்பலத்தார் அவர்கள் இருக்கிறார்


கணினி ,மென்பொருள், பிளாக் சம்பந்தமாக பதிவிடும் சகோ MANSU அவர்களின் கணினி மஞ்சம்


எந்த வித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை அதிகரிப்பது எப்படி ? என நம்ம கூதற்காற்று வலைப்பூவின் சொந்தகாரர் சகோதரர் மதுரன் அவர்கள் சொல்லியிருக்கிறார்...


 சமூக சிந்தனை கருத்துக்களையும்., பிளாக் சம்பந்தமாக தொழில் நுட்ப  பதிவுளும் பகிர்ந்துகொண்டிருக்கிறார் சகோ சதீஸ் அவர்கள்... இவரது வலைப்பூ வைரை சதீஷ்


மனித நேயம் கொண்ட தமிழருக்காக அரவணைப்போம் என சமூக சிந்தனையுடன் பதிவிடும்
 சகோ ம.தி. சுதா அவர்களின் தளம் தான் மதியோடை.. 

எதை எழுத வேண்டும் எனபது தீர்மானிப்பது பதிவுலகமே என சொல்கிறார்...
யாதும் ஊரே வலைப்பூவின் சொந்தகாரர் சகோ raazi அவர்கள்...


பேரு ஐடியாமணி, அப்பா பேரு தங்கமணி, அம்மா பேரு முத்துமணி, அண்ணன் பேரு ரங்கமணி, தங்கச்சி பேரு ருக்குமணி! நாங்க எல்லாருமே மணியான ஆளுங்க! நோ மணி, நோ ஹனின்னு பாட்டு இருக்குதே! அது நம்மளப்பத்திதான்!  என்று லேட்டஸ்ட்டா வந்து பட்டைய கிளப்பிக்கொண்டிருக்கிறார்...
நம்ம ஐடியா மணி Dip.in.Mk,Blol,Msc,Frc,Rmkv,Bmw


.என்னை நன்றாக இறைவனன் படைத்தனன்; தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு என ... நம்ம சகோ ராஜா MVS அவர்கள்.. சொல்லியபடியே சிறப்பாக 
செய்கிறார்...


மண் மணம் கமழும் ஒரு சிற்றூர் இவரது பிறப்பிடம்.. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் உகந்த நாயகன் குடிக்காடு இவரது சொந்த ஊர்..தற்பொழுது சென்னை மாநகரில் இருந்து கொண்டு பாடல்,சமூக சிந்தனைகள், நகைச்சுவை என பலவேற்பட்ட பதிவுகளை நம்முடன் பகிர்ந்து கோண்டிருக்கிறார்.. 
கரைசேரா அலை வலைப்பூவின் சொந்தகாரர் நம்ம சகோ அரசன் அவர்கள்.


 கிரிக்கெட் பற்றிய பதிவுகளை பாலாவின் பக்கங்கள் என்ற வலைப்பூவில் பட்டைய கிளப்பிய படி பகிர்ந்து வருகிறார் நமது சகோ பாலா அவர்கள்... வாருங்கள் பாராட்டலாம்.


நடிகர் சந்தானம் அவர்களைப் பற்றி REAL SANTHAANAM FANZ ஆகிய இவர் அகாதுகா அப்பாடக்க்ர்ஸ் என்ற வலைப்பூவில் நம்மோடு நகைச்சுவை உணர்வுடன் பதிவுகளை பகிர்ந்து கலக்கி வருகின்றார்..


எல்லா துரைகள் சம்பந்தமாக பதிவிட்டு கலக்கிகொண்டிருக்கிறார் 
நம்ம சகோ ஆகுலன். அவர்களின் ஆகுலன் கனவுகள்(A+) 


தாய் தமிழில் எழுதுவதை வரமாக வாய்க்கப்பெற்ற தமிழர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமைகொண்டு பதிவுகளை கிறுக்கல்கள் வலைப்பூவிற்கு உரிமையாளர் சகோ சே.குமார் அவர்கள் எழுதி வருகிறார்


சந்தித்ததும் சிந்தித்ததும் நம்மிடையே பகிர்ந்து வருகிறார்...venkatnagaraj வலைப்பூவில் சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்கள்.


வழித்துளிகள்:


''பெயரில் என்ன இருக்கிறது? ரோஜா என்று நாம் அழைப்பதை வேறு எந்தப் பெயரால் அழைத்தாலும் அது இனிமையாகத்தான் மனம் வீசும்"
                                                - ஷேக்ஸ்பியரின் சிந்தனை முத்துக்களிலிருந்து...

உன்னை தாழ்த்தி பேசும்போது ஊமையாய் இரு!

உன்னை உயர்த்தி பேசும்போது செவிடனாய் இரு!

தன் மீது விழும் ஒவ்வொரு அடியும் தன்னை ஒரு சிற்பம் ஆக்கும் என்று கல்லுக்கு தெரியாது.
=========================================================================

வாய்ப்பிற்கு நன்றி கூறி, வாழ்த்தியும், பின்னூட்டமிட்டும் உற்சாகப்படுத்திய உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கத்தைச் சொல்லி இப்பணியிலிருந்து இன்றுடன் விடைபெறுகிறேன்.


நாளை முதல் புதிதாய் பொறுப்பேற்க இருக்கும் நண்பருக்கு அன்பு வாழ்த்துக்கள். 

மேலும் வாசிக்க...

Saturday, September 17, 2011

நட்பு

                                                          நண்பேன்டா!

நல்லெண்ணமே நட்பின் அடித்தளம்.
நல்லெண்ணத்தை பிறர் மனங் குளிர வெளியிடுங்கள்.
உங்களைப் பற்றிய நல்ல எண்ணத்தைப் பிறர் மனதில் உருவாக்க
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அன்பான அணுகு முறையைக் கையாளுவதே. அன்பு பூக்கும் விழிகள் உங்களிடம் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி யாருடைய இதயக் கதவுகளை வேண்டுமானாலும் உங்களால் திறக்க முடியும். முயலுங்கள். வெற்றி கிடைக்கும்.



சிலர் தொட்டதற்கெல்லாம் எதை எடுத்தாலும் பிறரைக் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித் தன்மை இருக்கிறது என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள்.

ஒவ்வொருவரும் எப்படி இருக்கிறார்களோ அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி விருப்பு, வெறுப்பு இருக்கிறது. நீங்கள் நினைத்த படி உங்களாலயே இருக்க முடியாத போது மற்றவர்களால் எப்ப்டி இருக்க முடியும்? இதை சிந்தித்து பாருங்கள்.ஒவ்வொருவரும் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற தனித்தன்மைக்குத் தக்கவாறு அவருடன் பழகுங்கள். அவரிடம் உங்களின் எதிர்பார்ப்பையும் அவருடைய இயல்புக்குத் தக்கவாறு அமைத்துக்கொள்ளுங்கள்.



நேரில் புதிய நட்பு அமையும் போது ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பரஸ்பரமாகி பழகும்போது அந்த நட்பு காலத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளது...
ஆனால் பதிவுலகில் நண்பர்களாக பழகிய நாம் எப்படி ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வது. அப்படி தெரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முத்தான வாய்ப்பாக அமைந்தது தான் முத்தான மூன்று முடிச்சு தொடர்....அப்படி என்னோடு தொடர்பாக அமைந்த நட்புகளில் சில அன்பு பதிவர்கள்....
*** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** ***
அன்பு உலகம் வலைப்பூவின் சொந்தக்காரர் அன்பு சகோ M.Ramesh அவர்கள்... அவர் சகலகலா வல்லவராக பதிவுலகில் பங்கு சந்தை, மருத்துவம் என பல உபயோகமான பதிவுகளை பகிர்ந்துகொண்டு வருகிறார்... அவரின் மூன்று முடிச்சு தொடராக மூன்றின் ரகசியத்தில் அவரைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கலக்கலான காகித பூக்கள் வலைப்பூவின் சொந்தக்காரர் தோழி ஏஞ்சலின் அவர்கள்..ஆங்கில வலைப்பூ papercrafts  ம் இவருடையுதே..  அருமையான விசயங்களை அழகாக பகிரும் திறமை உள்ள இவரைப் பற்றி அறிய மூன்று முடிச்சுகள் .


தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற வலைப்பூவிற்கு சொந்தக்காரர் நமது அன்பு சகோதரர் திரு. ரமணி அவர்கள்.. இன்று சாமி கும்பிடுவதில் எவ்வளவு முட்டாள் தனமாக நடந்துகொள்கிறோம் எனற செய்தியை பழநி முருகனும் நானும் என்ற பதிவில் கடவுள் அழகு முருகனிடம் உரையாடுவது போல் இவர் பகிர்ந்த விதம் உண்மையான நிலையை விளக்குகிறது. இந்த அருமையான அன்பருடன் நட்பு முடிச்சு ஏற்பட்ட தொடர் முத்தான மூன்று முடிச்சு

உப்பு மடச் சந்தி என்ற வலைபூவில் கதை பேச வாங்கோ என்று அழைக்கும் நமது சகோ ஹேமா அவர்கள் இவர் ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை பதிவில் உருக்கமாக பகிர்ந்து வருகிறார்... இவரது இன்னொரு வலைப்பூ வானம் வெளித்த பின்னும் என்ற தளத்தில் சமூகத்தில் நடந்த கொடுமைகளை கவிதையாக தந்து நமது மனதை தொட செய்கிறார். இவரைப்பற்றி அறிய மாய உலகம் தேடவிட்ட மூன்றுகள் .



தமிழை நேசிப்பவர்கள் வாசிப்பதற்காக தமிழ் வாசி என்ற வலைப்பூவில் பட்டைய கிளப்பும் பதிவுகளை பகிர்ந்து பரவசப்படுத்துபவர் தான் நம்ம நண்பர் பிரகாஷ் அவர்கள்.. இவர் பிரபல பதிவர்களை எக்ஸ்க்ளூசிவ் பேட்டி எடுத்து அவர்களை பற்றி பல பேருக்கு அறிய செய்பவர்.. இவருடன் இன்றும் தொடரும் நட்புக்கு காரணமாக அமைந்து மூணுக்கு மூணாக தொடர்.



பதிவுலகில் படத்திற்கு திரைவிமர்சனம் எழுதி பார்த்தீர்ப்பீர்கள்..போஸ்டருக்கே விமர்சனம் எழுதி அசத்தியவர் தான் பதிவுல நாயகன் நமது நண்பர் நாற்று நிரூபன் அவர்கள்..நாற்று என்ற தளத்தில்
பட்டைய கிளப்ப போகும் போஸ்டர் விமர்சனம்.  அதே போல் F.M ல்ஆர்ஜேவுடன் பேசி பாட்டுக் கேட்டிருப்பீர்கள் ஆனால் பதிவுலகில் கேட்டிருக்கிறீர்களா... கேளுங்கள் பதிவுலகில் முதன் முறையாக நேரடி ஒலிபரப்பு- ப்ளாக்கர் எப். எம்! ம்ம்ம் மன்னிக்க பார்த்து ரசியுங்கள்.


பதிவுலகில் பூனை என்று ஞாபகம் வந்தாலே இவரது வலைப்பூவாகத்தான் இருக்கும்.. எவ்வளவோ மனப்பிரச்சனைக்கிடையில் இவரது வலைப்பூவில் நுழைந்து பதிவுகளையும், அதில் அன்பர்கள் இடும் கருத்துகளையும் படித்தால் தானாகவே சிரிக்க ஆரம்பித்து விடுவோம்... எதையும் இலகுவாக எடுத்துக்கொண்டு நகைச்சுவை உணர்வுடன் எதார்த்தமான விசயங்களை பகிரும் நல் உள்ளத்துக்கு சொந்தக்காரர் அன்பு தோழி அதிரா அவர்கள்... அவரது
என் பக்கம் என்ற வலைப்பூவிற்கு சென்று மாயாவும் “லேடி” முதலையும்:)) யுடன் உரையாட தேம்ஸில் குதியுங்கள்.


 நண்பர் கோகுல் அவர்களது கோகுல் மனதில் என்ற வலைப்பூவில் அன்பே சிவம் பாணியில் தொடங்கிய ஒரு பயணம் என்ற அவரது எதார்த்தமான பயணத்தை அழகாக பகிர்ந்திருந்தார். அதே சமயத்தில் சமுகத்தில் நடக்கும் அவலங்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக பதிவுகளை கொடுப்பதில் இவர் வல்லவர்.


எதார்த்தமான விசயங்களை நகைச்சுவையான நடையில் பதிவுகளை எழுதுவதில் வல்லவர் இந்திராவின் கிறுக்கல்கள் வலைப்பூவின் சொந்தகாரர் தோழி இந்திரா அவர்கள். நான் இந்திரா இம்சிக்கிறேன் படிக்காதிங்க என்று அவர் பாசத்துடன் சொன்னாலும் பதிவர்கள் நேசத்துடன் படிப்பார்கள். நீங்களே சொல்லுங்க நான் பல்பு வாங்கினேனா என்று கேக்கிறார்.. 

==================================================================
***  *** ***  ***  ***  ***  ***  ***  ***  ***  ***  ***  ***  ***  ***  ***  ***  ***  ***
==================================================================

வலைப்பதிவில் பதிவு எழுதும் பலருக்கும் நமது பதிவுகள் பத்திரிக்கைகளில் வந்தால் நல்லாருக்குமே... எப்படி அனுப்புவது. எந்த பத்திரிக்கைக்கு அனுப்புவது என்ற குழப்பம் இருக்கும். அந்த குழப்பத்தை தீர்க்கும் விதமாக மேடம் தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் அவரது சும்மா என்ற வலைப்பூவில் இணைய இதழ்கள்..,பத்திரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்புவது எப்படி என்று பகிர்ந்திருக்கிறார்.. படித்து தெரிந்து உங்களது படைப்புகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி புகழ் பெறுங்கள் நண்பர்களே.


பிரபல எழுத்தாளர் மரியாதைக்குரிய மேடம் வித்யாசுப்ரமணியம் அவர்களது வலைப்பூ கதையின் கதை முன்னுரை எழுதுவது அப்படி ஒன்றும் சுலபமான விஷயமல்ல. என்னைக் கேட்டால் நாவல் எழுதுவதை விட கடினமானது முகவுரை எழுதுவதுதான் என்கிறார்..கதைக்கு முன்னுரை, முகவுரை மிகவும் முக்கியம் என்கிறார்.
1984 ஆம் ஆண்டு மங்கையர் மலரில் 'முதல் கோணல்' நெடுங்கதை மூலம் எழுத்துலக பிரவேசம். அதன் பிறகு அனைத்து இதழ்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல்கள். 27 வருட எழுத்துலக பயணத்தில் கிடைத்த விருதுகள்: தென்னங்காற்று - அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது வனத்தில் ஒரு மான் - தமிழக அரசு விருது ஆகாயம் அருகில் வரும் - பாரத ஸ்டேட் வங்கி முதல் பரிசும் விருதும் கண்ணிலே அன்பிருந்தால் - கோவை லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது இரண்டு சிறுகதைகளுக்கு இலக்கிய சிந்தனை விருது பல சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு 'Beyond the frontier' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது.
இவரைப்பற்றி எனது கருத்து:
"அன்புக்கு பஞ்சமில்லை" என்ற இவர் எழுதிய கதையில் இவர் சொல்லியிருந்த வரிகளும் அந்த கதையும் என் மனதை மிகவும் கொள்ளை கொண்டது... அந்த வரிகள் : யோசிச்சு பார்த்தா ஒரு உண்மை புரியும். எதுவுமே தியாகம் இல்ல. யாருமே யாருக்குமே எதையும் நோக்கம் இல்லாம விட்டுக்கொடுக்கிறது இல்ல. விட்டுக் கொடுக்கிறதெல்லாம் வட்டியோடு திரும்ப பெறத்தான். தன்னலத்தோடு கூடின பாசத்துக்குத் தான் பாதி பேர் அடிமையாய் இருக்கோம்.
என் வாழ்க்கையில் சில நிமட தெளிய வைத்த கதையாசிரியர்... நன்றி மேடம்.
==================================================================================


மதிப்பிற்குரிய ஐயா புலவர் சா.இராமாநுசம் அவர்களது கவிதைகள் என்ற வலைப்பூவில் சமூக சிந்தனைகள் தூண்டும் விதமாகவும், ஈழத்தில் நடந்த, நடக்கும் கொடுமைகளையும் இலக்கிய வடிவில் கவிதைகளாக கொடுத்து சிந்திக்கவைக்கிறார் நமது புலவர் ஐயா. தமிழின் அருமை இவரது கவிதையில் கலக்கலாக பிரதிபலிப்பதே இவரது திறமைக்கு சான்று.


வேர்களைத்தேடி வலைப்பதிவின் சொந்தக்காரர் அன்பு நண்பர் முனைவர் இரா.குணசீலன் அவர்கள்..இவர் இலக்கிய தமிழைப்பற்றி அழகிய நடையில் பகிர்ந்து வருகிறார்.. இன்னும் பல வருடங்களில் இலக்கியம் பற்றிய தேடல் என்றாலே இவர் பெயர் தான் முதன்மையில் பேசப்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.


சகோ வேதா.இலங்காதிலகம் அவர்கள் வேதாவின் வலை என்ற வலைப்பூவில் சிந்தனைச்சாரல் என்ற தொடர் பதிவுகளை இலக்கிய நடையில் நமக்கு ஊட்டி சிந்திக்கவைக்கிறார்... இவரது அருமையான படைப்புகள் இவரது வலைப்பூவிற்கு தொடர்ந்து நம்மை அழைத்துச்செல்லும் என்பது உண்மை.


 எந்த கெட்ட பழக்கமும் ஒரு வியாதி தான், அந்த வியாதி தீருவதற்கான மருந்து மனதிடமும், விடாமுயற்சியும் தான் என்றுMADURAGAVI என்ற வலைபூவில்  குடி குடியை கெடுக்கும் என்ற பதிவில் நம்முடன் பகிர்ந்திருக்கிறார் சகோ RAMVI அவர்கள்.இவர் பதிவுகள் மிக தெளிவாகவும் சிந்திக்க வைக்க கூடியதாகவும் எழுதுவதில் சிறந்தவர்.


======================================================================
நமது லக்ஷ்மி அம்மா அவர்கள் குறை ஒன்றுமில்லை என்ற வலைப்பூவில் மெட்ராஸ் நல்ல மேட்ராஸ் என்ற அவரது பயணபதிவு அனுபவங்களை தொடராக எழுதி நம்முடன் அருமையாக பகிர்ந்துகோண்டிருக்கிறார். வாருங்கள் நாமும் அவரோட பதிவுகளில் பயணம் செய்வோம். தொடர் பதிவு எழுதி வருவது என்பது சாதரண விசயமல்ல.. பதிவர்கள வருகை குறைய வாய்புண்டு ஆனால் இவர்களது எழுத்து திறமையால் பதிவர்களின் வருகை அதிகரித்துக்கொண்டு தானிருக்கிறது.


அதே போல் சகோதரர் செங்கோவி அவர்கள் மன்மத லீலைகள் எனது கிழிந்த டைரியிலிருந்து என்ற உண்மை தொடரை மிகவும் சுவராஷ்யமாகவும் விறுவிறுப்புடன் கிட்டதட்ட 48  தொடர் வெற்றிகரமாக எழுதி நம்முடன் பகிர்ந்திருக்கிறார். இது சாதராண விசயமே அல்ல அநேகமாக பதிவுலகில் இத்தனை தொடர் வெற்றிகரமாக நகர்த்தி கொண்டு செல்பவர் இவராகத்தான் இருக்க முடியும்.




பதிவுலக நம்ம மாம்ஸ் விக்கியுலகம் அவர்கள் விக்கியின் அகட விகடங்கள் என்ற வலைப்பூவில் குட்டிச்சுவர் என்ற தொடரை எழுத ஆரம்பித்து பகிர்ந்து பட்டைய கிளப்பி பரவசபடுத்திக் கோண்டிருக்கிறார்.
வித்தியாசமான கலக்கலான காணொளிகள் என்றாலே இவர் வலைப்பூ உத்திரவாதம்.




சகோ ஜெய்லானி அவர்கள் அவரது வலைப்பூவில் ஒரு...... டைரி....... என்ற தொடர் பதிவில் நண்பர்கள் பல்பு வாங்கின விசயத்தை எழுதுகிறார்...படித்தால் வயிறு புண்ணாகிவிடும் அப்படி நகைச்சுவை உணர்வுடன் எழுதி அசத்தியிருக்கிறார்...


=====================================================================
ஆசிரியர் இமா அவர்கள் இது இமாவின் உலகம் என்ற வலைப்பூவில் சமூக சிந்தனையுடன் கூடிய பதிவுகளை பகிர்ந்து வருகிறார்... அவரது நல் உள்ளம் பிரதிபலிக்கும் விதமாக சின்ன பாதங்கள் என்ற பதிவை பகிர்ந்திருக்கிறார். படியுங்கள் அவரது நல் உள்ளம் நம்மையும் சிந்திக்க வைக்கும்.




நமது சகோ செம்பகம் விடிவெள்ளி அவர்கள் செம்பகம் என்ற வலைப்பூவில் ஈழத்தில் நமது சகோதர சகோதரிகள் பட்ட இன்னலகளை கவிதை வடிவில் பகிர்ந்து வருகிறார் .. வாருங்கள் நண்பர்களே பகிர்வோம்.




கடம்பவன குயில் அவர்கள் கடம்பவன பூங்கா என்ற வலைப்பூவில் எளிய நடையில் அருமையான கவிதைகளை அழகாக கலக்கலாக பதிவிட்டு வருகிறார்... அதுமட்டுமல்ல சமூக சிந்தனைகளையும் கட்டுரைகளாக பதிவிட்டு வருகிறார். தானத்தில் சிறந்த தானம் ? எது என படியுங்கள் நண்பர்களே.


சிந்து சமவெளி நாகரீகத்தை பற்றி யாழினி அவர்கள் யாழ் இனிது என்ற வலைப்புவில் மிக பிரமாதமாக படங்களுடன் விவரித்திருக்கிறார்.. ஒரு முறை இவரது வலைப்பூவிற்கு சென்றால் இந்த வலைப்பூவின் தீவிர ரசிகராகிவிடுவீர்கள்.


 சின்ன தூரல் என்ற வலைப்பூவில் நீ யார் ?என்ற காலத்தை பற்றிய கவிதையை கலக்கலாக பகிர்ந்திருக்கிறார் தோழி சின்ன தூரல்..சமீபகாலமாக எழுதி வருகிறார் சென்று படித்து உங்களது ஆதரவை தாருங்கள் நண்பர்களே

மேலும் வாசிக்க...

Friday, September 16, 2011

தெய்வம்

எல்லா புகழும் இறைவனுக்கே

  பகவத் கீதை
நீ எனை எதுவாக நினைத்து வழிபடுகிறாயோ 
நான் அதுவாகவே மாறி உனக்கு அருள் புரிவேன். 
கடவுள் கொடுக்குறதை யாராலயும் தடுக்க முடியாது
கடவுள் தடுக்குறதை யாராலயும் கொடுக்க முடியாது
                                            
நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்
பிறர் இன்னல் அடைவதைக் கண்டு நீ சிரிக்காதே. 
அதில் மகிழ்ச்சியும் அடையாதே. ஏனேன்றால் 
அவனுக்கு நல்ல நிலையை ஏற்படுத்தி இறைவன் 
உன்னை சோதனையில் மூழ்க வைப்பான். 
நீ மற்றவர்களை திட்டினால் 
இறைவனின் சாபம் உன் மீது உண்டாகும். 
உமது நெருங்கிய நண்பரிடம் 
பொய்யை உண்மை என்று கூறி நம்ப வைப்பது மாபெரும் மோசடியாகும்.

இயேசு சொன்னார், 
செபிக்கும்போது கதவைத் தாழிட்டு விண்ணகத் தந்தையிடம் செபம் செய். மறைவாய் இருக்கும் செபமே இறைவனுக்கு நிறைவாய் இருக்கும் செபம். எனவே மனதைத் திற கதவைப் பூட்டு. இதுவே செபிக்கும் வழி. என்றார் இயேசு. நமக்குத் தேவை மனிதரின் மரியாதையா,இறைவனின் இணையற்ற கருணையா ? மனிதனின் அங்கீகாரமெனில் வித விதமான அங்கிகளுடன் வீதிகளில் கூச்சலிடலாம். இறைவனின் இரக்கமெனில் அடைபட்ட அறைகளில் மனதைத் திறக்கலாம்.
====================================================================

பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே, 
தெய்வ அருளுக்கு பாத்திரமாகி விடுவோம்.
மனதில் தூய்மையான எண்ணம் வேண்டும். 
பயமான, கபடமான, குற்றமான,
பகைமையான எண்ணங்களை அகற்ற வேண்டும். 
அவ்வாறு செய்தால், நம் உடல் முழுவதும்

தெய்வீகத்தன்மை பரவத் தொடங்கும்.                   
============================================================== 
இன்றைய வலைச்சரத்தில் எனக்கு தெரிந்த...
ஆன்மீகத்தைப் பற்றிய பதிவுகள் பகிரும் பதிவர்கள் உலா வருகிறார்கள்

இவர்களது வலைப்பூக்களுக்கு சென்றாலே கோவிலுக்கு சென்றது போல் மணம் சாந்தமடைந்து தெய்வீகத்தன்மை ஏற்படும்.
=======================================================================


இனிய பண்புள்ள இயல்பான குணமுள்ள இதய சுத்தியுடன்
குருவருளை நாடி வாழ்கின்ற நமது தோழியின் வலைப்பூ
சித்தர்கள் இராச்சியம் இந்த வலைப்பூ சென்று தரிசித்து விட்டு வரலாம் அன்பர்களே.இவரது ஆன்மீகம் என்ற வலைப்பூவில்
பிறருக்கு நீ என்ன செய்கிறாயோ அது தான் உனக்கு எதிரொலிக்கும்
என்று அருமையாக எடுத்துரைக்கிறார்.
                                 ****************************

இவரது பதிவுகளில் கோயில்களின் படங்களும் அதற்கான விளக்கங்களும் பார்த்து படிக்கும் போது கோவிலின் நுழைவாயிலிருந்து கருவரை வரை சென்று தெயவங்களை நேரில் சென்று தரிசித்துவிட்டு வந்த பிரமையை ஏற்படுத்துவது போல் பிரமிப்பை ஏற்படுத்துவார் நமது சகோ இராஜராஜேஸ்வரி அவர்களது மணிராஜ் வலைப்பூவிற்கு சென்றுஆனந்தமாய் அருளும் ஆறுபடைவீடு முருகன் தரிசியுங்கள்.
                                         ***************************


நமது சகோதரர் ஹைதர் அலி அவர்களின் வலையுகம்  என்ற வலைப்பூவிற்க்கு சென்று
சென்று அறிமுக புத்தகத்தினை பற்றி தெரிந்து கொள்ளலாம் நண்பர்களே
                                             *************************

இயேசுபிதாவை பற்றியும் அவரின் மகிமைகளையும் 
இந்த உலகுக்கு எடுத்து காட்ட விரும்பும் 
சகோதரி தமிழ்மகள் அவர்களின் இயேசு தரிசனம்  வலைப்பூவிற்கு சென்று தரிசனம் பெறலாம் வாருங்கள்
                                        ***************************
பெற்ற தாயினும் தொன்னூற்றொன்பது மடங்கு கருணை மிக்கவன் அல்லாஹ்; தாய்ப்பறவை தன் குஞ்சுகளிடத்தில் காட்டுகின்ற அன்பைவிட ஆயிரம் மடங்கு அன்பை நம்மீது பொழிபவன் அல்லாஹ். 
முத்தான துவாக்கள்  வலைப்பதிவில் மதிப்புமிக்க 
Jaleela Kamal அவர்களின் பதிவை சென்று படியுங்கள் அன்பர்களே.

    அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் யார்க்கும் அரியானை அடியேன் காண்பான் அலற்றுவன் இதனில் மிக்கோர் அயர்வுண்டே! என்று கூறும் சகோதரர் குமரன் அவர்களது வலைப்பூ ஸ்தோரமாலா வலைப்பூவிற்கு சென்று தரிசிக்கலாம் வாருங்கள்

                                                **************************
    சிவன் அருள் என்று பெயருள்ள நம்மவர் சிவமே சிவமயம் என்ற வலைப்பூவிற்கு சென்று வணங்கலாம் வாருங்கள்.
                                               ***************************

    வழிபடும் கடவுள்:சிவன்(பரம்பொருள்); வழிபடும் குரு: அகத்தியர்; வழிபடும் நூல்: பெரிய ஞானகோவை; தியான மார்க்கம்: ஞானம் என்று சகோ சக்ராவர்த்தி ஐயா அவர்களது சிவசித்தர்கள் வலைப்பூவிற்கு சென்று தரிசிக்கலாம் வாருங்கள்.
                                       ************************************ 


           நண்பரது நிகழ்காலத்தில் (அறிவே தெய்வம் ) என்கிற வலைப்பூவில் சென்று தரிசிக்கலாம் வாருங்கள்
                                         ***********************************


    வலைச்சரத்தில் நாளை நட்பு என்ற தலைப்பில் எனது அன்பு நண்பர்கள் அனைவரும் வலம் வருவார்கள் என அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்...

    மேலும் வாசிக்க...

    Thursday, September 15, 2011

    குரு


                                                                                    குரு
    தட்சிணாமூர்த்தி ஸ்லோகம்:
    குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு
    குரு தேவோ மஹேஸ்வரஹ
    குரு சாட்சாத் பரப்ரம்மா
    தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.

    (ஒழுக்கத்தை மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பதால் அவர் பிரம்மாவாக கருதபடுகிறார்.
    மாணவர்களிடம் உள்ள நல்ல பழக்கங்களை பாதுகாப்பதால் அவர் விஷ்ணுவாக கருதபடுகிறார்.
    மாணவர்களிடம் உள்ள தீய குணங்களை அழிப்பதால் அவர் மகேஸ்வரராக கருதபடுகிறார்.
    இந்த மூன்று பணிகளையும் செய்வதால் அவர் மூம் மூர்த்திகளுக்கு சமமாக போற்றபடுகிறார்.)


    கணினி சம்பந்தமாகவோ மென்பொருள் சம்பந்தமாகவோ கற்க வேண்டுமென்றால் அதற்கு முறையான நேரம் அமைத்து ஒதுக்கி பணம் வாறி இறைத்து கற்க முயல்வோம்..இப்படியெல்லாம் செய்தும் முறையாக கற்று தருகிறார்களா என்றால் அது சந்தேகம் தான்... அப்படியே கற்றாலும் அது பெறும்பாலும் ஏட்டு சொறக்கா தான்...
    ஆனால் கூகுள் நமக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைத்துக்கொடுத்தது தான் வலைப்பூ என்கிற பதிவுலகம் அதுவும் இலவசமாக...அதற்காக கூகுளை மனப்பூர்வமாக வணங்கலாம். இங்கே நமக்கு ஓய்வு நேரம் அமையும் போது வந்து அழகாக கற்று தெரிந்து கொள்ள கூடிய வசதி... இதனால் நேரமும் விரயம் இல்லை பணமும் விரயமில்லை..இப்படி பதிவுலக பெருமையை பேசிக்கொண்டே போகலாம்..

    சங்கமயுக காலத்தில் குருகுலத்தைப் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள் 
    ...அப்பொழுதெல்லாம் குருவிடம் சிஷ்யனாக சேரவேண்டுமென்றால் அவ்வளவு சாதாரண விசயமல்ல ....காணிக்கை கொடுத்து பணிவுடன் குருவுக்கு பல சேவைகள் செய்தால் தான் கற்க முடியும்...


    பதிவுலகிலகிலும் குருக்கள் இருக்கிறார்கள்....
    வலைப்பூ சம்பந்தமாகவும், மென்பொருள் சம்பந்தமாகவும், கணினி சம்பந்தமாகவும் பதிவிட்டுக்கொண்டிருக்கும் தொழில் நுட்ப குருக்கள்... இவர்கள் பதிவுலகமே அறிந்த பிரம்மாக்கள் தான்..பிறகு எதற்கு இவர்களுக்கு அறிமுகம் என்கிறீர்களா... வலைச்சரம் மிக பிரபலமான ஒரு தளம் யாவரும் அறிந்ததே , அதில் இவர்கள் பெயர்கள் அடிக்கடி வரும்பொழுது பல புதிய நபர்களின் பார்வையில் சிதறி மேலும் இவர்கள் உச்சத்தை அடைய ஏதுவாக இருக்கும். இவர்கள் மூலம் ஏனைய விசயங்கள் கற்று வருகிறோம் பதிலுக்கு நாம் இவர்களுக்கு என்ன செய்ய போகிறோம்... ஆம் காணிக்கை செலுத்துவோம் நன்றி என்ற காணிக்கையை. எப்படி...? அவர்களது தளங்களில் விளம்பரங்கள் இருந்தால் அதை க்ளிக் செய்து, ஓட்டு பெட்டிகளில் வாக்குகள் அளித்து ,கருத்துக்களில் நன்றி சொல்லி ..மேலும் அவர்கள் சிகரத்தை அடைய ஊக்கப்படுத்துவோம் அன்பர்களே...


    வாக்களிப்பு என்றதும் தான் ஞாபகத்திற்கு வருகிறது...நமது பதிவுக்கு யார் யாரெல்லாம் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை எப்படி அறிந்து கொள்வது.... பல பேருக்கும் தெரிந்த விசயம் தான் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டுமே...
    முதலில் தமிழ்மணம் ஓட்டு பட்டையில் யாரெல்லாம் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை பார்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.









    உங்களது தளத்திற்கு சென்று மேலே படத்தில் காட்டியவாறு தமிழ்மணம் ஓட்டுபட்டையில் உள்ள கை படத்தை க்ளிக் செய்யவும்.

    மேலே படத்தில் காட்டியவாறு உங்களது பதிவின் ஐடி எண்கள் வந்திருக்கும்...
    (ஒவ்வொரு பதிவிற்க்கும் வெவ்வேறு ஐடி எண்கள் இருக்கும்...) 
     http://tamilmanam.net/who_voted.php?id=   
    இந்த url ஐ குறித்து வைத்துக்கொள்ளுங்கள் இந்த url க்கு பின்னால் 
    அந்த பதிவின் ஐடி எண்களை காப்பி எடுத்து பேஸ்ட் செய்யவும்

     http://tamilmanam.net/who_voted.php?id=1057784   





    அதை அட்ரஸ் பாரில் இட்டு ENTER ஐ தட்டுங்கள்...


    இது போல் வாக்களித்தவர்கள் லிஸ்ட் தெரியும்.அவ்வளவு தான்..
    (இனி நாம் ஓட்டு போட்ட விசயத்தை கருத்து பெட்டிகளில் தெரிவிக்க வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன் )
    ----------------------------------------------------------------------------------------------------------

    அடுத்து இன்ட்லியில் வாக்களித்தது யாரேன்று பார்க்கலாம் நண்பர்களே!


    இன்ட்லி ஓட்டு பட்டையை கிளிக் செய்யுங்கள்....
    சிகப்பு குறி காண்பிக்க பட்டwho liked என்ற எழுத்தின் மீது வைத்து கிளிக் செய்தால் யார் வாக்களித்திருக்கிறார்கள் என்பது தெரியும்... இதில் நீங்கள் இன்ட்லியில் லாக்கின் செய்யாமல் பார்க்க வேண்டும்.
    ---------------------------------------------------------------------------------------------------------
    உலவு பட்டைய க்ளிக் செய்து சென்று சிகப்பு குறி காண்பிக்க பட்ட who voted பட்டனை கிளிக் செய்தால் யார் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம் அன்பர்களே...              
    நன்றி நண்பர் நாற்று நிரூபன் அவர்கள்.
    ===============================================================


    இன்றைய வலைச்சரத்தில் குருக்களை அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக சிஷ்யனாக நான் மிகவும் மகிச்சியுடன் பெருமைக்கொள்கிறேன்..


    இவர்களது தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளுமே மிகவும் உபயோகமானவை தான்.... இருந்தாலும் நமக்கு அதிகம் பிடித்த ஒரு பதிவினை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதால் அந்த வகையில் வலைச்சரத்தில் இன்று வலம் வருகிறார்கள்... 
    ----------------------------------------------------------------------------------------


    பதிவர்களின் உண்மையான நண்பன்-பிளாக்கர் நண்பன் திரு.அப்துல் பஷித் அவர்கள் இவரிடம் நீங்கள் ப்ளாக் சம்பந்தமாக எந்த சந்தேகமாக இருந்தாலும் பண்புடன் கேட்டால் மிக்க அன்புடன் அவருக்கு தெரியும் பட்சத்தில் மிக அழகாக தெரிவுபடுத்தும் நல் உள்ளம் படைத்த அன்பு நண்பர்.... ( புத்தகத்தை ஆர்வமாக படிக்கும் அழகு சிறுவனின் படத்தை கிளிக் செய்து அவரது வலைப்பூவிற்கு செல்லுங்கள் அன்பர்களே)
    இவரது பதிவில் சமூக அக்கறை கோண்டு எழுதிய
    சைபர் க்ரைம் - ஒரு பார்வை என்ற பதிவை ஒரு cute boy cell phone பேசுவது போல் இருக்கின்ற படத்தை கிளிக் செய்து படியுங்கள்.... தோழர்களே!
    ------------------------------------------------------------------------------------------------------
     பதிவுலகில் வந்தேமாதரம் என்ற பெயர் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள்... வந்தேமாதரம் என்று சொன்னாலே தேசிய ஒருமைப்பாடு மேலோங்கி நமது அனைவரையும் ஒன்றினைக்கும்.... அது போல் பதிவுலகில் நம்மை ஒன்றினைக்க கணினி பற்றிய புதிய செய்திகளையும், வலைப்பூ பற்றிய செய்திகளையும் நமக்கு அறிமுக படுத்தி கற்று தரும் வல்லவர் தான் நமது நண்பர் சசி குமார் அவர்கள்...

     நமது பிளாக்கில் சில நேரம் வைரஸ் வந்து அட்டாக் ஆக வாய்ப்பிருக்கிறது....
    உங்கள் பிளாக்கில் வைரஸ் உள்ளதா என கண்டறிய 
    நண்பர் சசிகுமாரின் புகை படத்தை கிளிக் செய்து அவரது தளத்திற்கு சென்று கண்டறியுங்கள் நண்பர்களே.


    ==================================================================
    இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாமல் வாழமுடியாது என்கிற சூழ்நிலை உருவாகிவிட்டது... அதுவும் call  செய்து பேசுகிறமோ இல்லையோ... தொடர்ந்து sms அனுப்பிக்கொண்டே இருப்போம்...ஆனால் நம்பர் பட்டன்களில் வேகமாக் டைப் செய்து அனுப்புவது என்பது செல்போனில் சிரமமான விசயம்..அதுவே கம்ப்யூட்டர் கீ போர்டு என்றால் மிக சுலபமாக வேகமாக டைப் செய்யலாமல்லவா... அதுவும் sms எத்தனை வேண்டுமானாலும் இலவசமாக அனுப்பி ஆனந்தபடலாம்.. மரியாதைக்குறிய பொன்மலர் அவர்கள். பொன்மலர் பக்கம் என்ற வலைப்பூவில்  கணினியிலிருந்து இலவசமாக sms அனுப்ப இலவச மென்போருள் என்ற 
    பதிவில் way 2 sms என்ற மென்பொருளைப்பற்றி பகிர்ந்திருக்கிறார்...  அவர்களது படத்தை கிளிக் செய்து வலைப்பூவிற்கு சென்று டவுன்லோடு செய்து ஜமாயுங்கள் அன்பர்களே...
    ====================================================================


    தொழில் நுட்பத்தில் சகலகலா வல்லவரான சகோதரர் பிரபு கிருஷ்ணா அவர்களது பலேபிரபு என்கிற வலைப்பூவில் ..வலைப்பூவை எப்படி சொந்த டொமைனாக மாற்றுவது என்று மொத்தம் நான்கு பதிவுகளை பகிர்ந்திருக்கிறார்...வாருங்கள் நண்பர்களே பலே பிரபு என்ற படத்தை கிளிக் செய்து அவரது வலைப்பூவிற்கு சென்று தெரிந்து கொள்வோம்


    ===================================================================


    போட்டோ ஷாப் பற்றி அழகாக தெளிவாக எளிதாக பாசத்துடன் பதிவிட்டு வருபவர் தான் நம் அனைவருக்கும் பிடித்த சித்திரம் பேசுதடி வலைப்பூவிற்கு சொந்தகாரர் அன்பு தோழர் ஸ்ரீதர் அவர்கள் ...வாருங்கள் நண்பர்களே அவரது போட்டோவைக் கிளிக் செய்து போட்டோஷாப் பற்றி கற்று வருவோம்.

    போட்டோஷாப்பில் அனிமேஷன் எஃபெக்ட் பற்றி சொல்லி கற்று தந்துகொண்டிருக்கிறார்... கற்று கலக்குவோம் அன்பு நெஞ்சங்களே

    ================================================================
    நமது வலைப்பூவிற்கு படிக்கும் வரும் அன்பர்கள் கருத்துகளை இடும் பொழுது அதை இமேஜாக இட்டு செல்லலாம் என ஆசைப்படுவார்கள்...அவர்கள் ஆசைகள் நிறைவேற்ற..நமது நீச்சல்காரன் அவர்கள் எதிர்நீச்சல் என்ற வலைப்பூவில் பின்னூட்டத்தில் படங்கள் வேண்டுமா என்ற பதிவை நம்மோடு பகிர்ந்துள்ளார் வாருங்கள் நண்பர்களை அதை தெரிந்து நமது வலைப்பூவில் நிறுவி படிக்க வரும் நண்பர்கள் குஷியாக கருத்தக்களை வண்ணங்களாக , படங்களாக இட்டு செல்ல வழிவகுப்போம்.....

    =======================================================================


     பதிவுலகில் போட்டோஷாப்பிற்கு மறுபெயர் என்றாலே வேலன் அண்ணனை தான் சொல்வார்கள் ...வேலுண்டு வினையில்லை என்பது போல் வேலன் அண்ணன் துணையிருக்க போட்டோஷாப் பற்றிய அனைத்து விசயங்களையும் கற்று வரலாம் வாருங்கள்.. எனது மாய உலகில் சிலைடு ஷோ போட்டோவில் விதவிதமான டிசைன்களில் போட்டோக்களை பார்த்து இருப்பீர்கள்... அது அன்பு வேலன் அண்ணனின் தளத்திலிருந்து தான் கற்று கொண்டது... வாருங்கள் அன்பர்களே அண்ணன் தளத்திற்கு சென்று போட்டோஷாப் கற்போம்.
    போட்டோவைக் கிளிக் செய்து போட்டோஷாப்பிற்கு போவோமா


    ======================================================================
    மேலும் வாசிக்க...

    தமிழ் மணத்தில் - தற்பொழுது