07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, September 15, 2011

குரு


                                                                                குரு
தட்சிணாமூர்த்தி ஸ்லோகம்:
குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.

(ஒழுக்கத்தை மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பதால் அவர் பிரம்மாவாக கருதபடுகிறார்.
மாணவர்களிடம் உள்ள நல்ல பழக்கங்களை பாதுகாப்பதால் அவர் விஷ்ணுவாக கருதபடுகிறார்.
மாணவர்களிடம் உள்ள தீய குணங்களை அழிப்பதால் அவர் மகேஸ்வரராக கருதபடுகிறார்.
இந்த மூன்று பணிகளையும் செய்வதால் அவர் மூம் மூர்த்திகளுக்கு சமமாக போற்றபடுகிறார்.)


கணினி சம்பந்தமாகவோ மென்பொருள் சம்பந்தமாகவோ கற்க வேண்டுமென்றால் அதற்கு முறையான நேரம் அமைத்து ஒதுக்கி பணம் வாறி இறைத்து கற்க முயல்வோம்..இப்படியெல்லாம் செய்தும் முறையாக கற்று தருகிறார்களா என்றால் அது சந்தேகம் தான்... அப்படியே கற்றாலும் அது பெறும்பாலும் ஏட்டு சொறக்கா தான்...
ஆனால் கூகுள் நமக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைத்துக்கொடுத்தது தான் வலைப்பூ என்கிற பதிவுலகம் அதுவும் இலவசமாக...அதற்காக கூகுளை மனப்பூர்வமாக வணங்கலாம். இங்கே நமக்கு ஓய்வு நேரம் அமையும் போது வந்து அழகாக கற்று தெரிந்து கொள்ள கூடிய வசதி... இதனால் நேரமும் விரயம் இல்லை பணமும் விரயமில்லை..இப்படி பதிவுலக பெருமையை பேசிக்கொண்டே போகலாம்..

சங்கமயுக காலத்தில் குருகுலத்தைப் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள் 
...அப்பொழுதெல்லாம் குருவிடம் சிஷ்யனாக சேரவேண்டுமென்றால் அவ்வளவு சாதாரண விசயமல்ல ....காணிக்கை கொடுத்து பணிவுடன் குருவுக்கு பல சேவைகள் செய்தால் தான் கற்க முடியும்...


பதிவுலகிலகிலும் குருக்கள் இருக்கிறார்கள்....
வலைப்பூ சம்பந்தமாகவும், மென்பொருள் சம்பந்தமாகவும், கணினி சம்பந்தமாகவும் பதிவிட்டுக்கொண்டிருக்கும் தொழில் நுட்ப குருக்கள்... இவர்கள் பதிவுலகமே அறிந்த பிரம்மாக்கள் தான்..பிறகு எதற்கு இவர்களுக்கு அறிமுகம் என்கிறீர்களா... வலைச்சரம் மிக பிரபலமான ஒரு தளம் யாவரும் அறிந்ததே , அதில் இவர்கள் பெயர்கள் அடிக்கடி வரும்பொழுது பல புதிய நபர்களின் பார்வையில் சிதறி மேலும் இவர்கள் உச்சத்தை அடைய ஏதுவாக இருக்கும். இவர்கள் மூலம் ஏனைய விசயங்கள் கற்று வருகிறோம் பதிலுக்கு நாம் இவர்களுக்கு என்ன செய்ய போகிறோம்... ஆம் காணிக்கை செலுத்துவோம் நன்றி என்ற காணிக்கையை. எப்படி...? அவர்களது தளங்களில் விளம்பரங்கள் இருந்தால் அதை க்ளிக் செய்து, ஓட்டு பெட்டிகளில் வாக்குகள் அளித்து ,கருத்துக்களில் நன்றி சொல்லி ..மேலும் அவர்கள் சிகரத்தை அடைய ஊக்கப்படுத்துவோம் அன்பர்களே...


வாக்களிப்பு என்றதும் தான் ஞாபகத்திற்கு வருகிறது...நமது பதிவுக்கு யார் யாரெல்லாம் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை எப்படி அறிந்து கொள்வது.... பல பேருக்கும் தெரிந்த விசயம் தான் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டுமே...
முதலில் தமிழ்மணம் ஓட்டு பட்டையில் யாரெல்லாம் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை பார்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

உங்களது தளத்திற்கு சென்று மேலே படத்தில் காட்டியவாறு தமிழ்மணம் ஓட்டுபட்டையில் உள்ள கை படத்தை க்ளிக் செய்யவும்.

மேலே படத்தில் காட்டியவாறு உங்களது பதிவின் ஐடி எண்கள் வந்திருக்கும்...
(ஒவ்வொரு பதிவிற்க்கும் வெவ்வேறு ஐடி எண்கள் இருக்கும்...) 
 http://tamilmanam.net/who_voted.php?id=   
இந்த url ஐ குறித்து வைத்துக்கொள்ளுங்கள் இந்த url க்கு பின்னால் 
அந்த பதிவின் ஐடி எண்களை காப்பி எடுத்து பேஸ்ட் செய்யவும்

 http://tamilmanam.net/who_voted.php?id=1057784   

அதை அட்ரஸ் பாரில் இட்டு ENTER ஐ தட்டுங்கள்...


இது போல் வாக்களித்தவர்கள் லிஸ்ட் தெரியும்.அவ்வளவு தான்..
(இனி நாம் ஓட்டு போட்ட விசயத்தை கருத்து பெட்டிகளில் தெரிவிக்க வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன் )
----------------------------------------------------------------------------------------------------------

அடுத்து இன்ட்லியில் வாக்களித்தது யாரேன்று பார்க்கலாம் நண்பர்களே!


இன்ட்லி ஓட்டு பட்டையை கிளிக் செய்யுங்கள்....
சிகப்பு குறி காண்பிக்க பட்டwho liked என்ற எழுத்தின் மீது வைத்து கிளிக் செய்தால் யார் வாக்களித்திருக்கிறார்கள் என்பது தெரியும்... இதில் நீங்கள் இன்ட்லியில் லாக்கின் செய்யாமல் பார்க்க வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------
உலவு பட்டைய க்ளிக் செய்து சென்று சிகப்பு குறி காண்பிக்க பட்ட who voted பட்டனை கிளிக் செய்தால் யார் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம் அன்பர்களே...              
நன்றி நண்பர் நாற்று நிரூபன் அவர்கள்.
===============================================================


இன்றைய வலைச்சரத்தில் குருக்களை அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக சிஷ்யனாக நான் மிகவும் மகிச்சியுடன் பெருமைக்கொள்கிறேன்..


இவர்களது தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளுமே மிகவும் உபயோகமானவை தான்.... இருந்தாலும் நமக்கு அதிகம் பிடித்த ஒரு பதிவினை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதால் அந்த வகையில் வலைச்சரத்தில் இன்று வலம் வருகிறார்கள்... 
----------------------------------------------------------------------------------------


பதிவர்களின் உண்மையான நண்பன்-பிளாக்கர் நண்பன் திரு.அப்துல் பஷித் அவர்கள் இவரிடம் நீங்கள் ப்ளாக் சம்பந்தமாக எந்த சந்தேகமாக இருந்தாலும் பண்புடன் கேட்டால் மிக்க அன்புடன் அவருக்கு தெரியும் பட்சத்தில் மிக அழகாக தெரிவுபடுத்தும் நல் உள்ளம் படைத்த அன்பு நண்பர்.... ( புத்தகத்தை ஆர்வமாக படிக்கும் அழகு சிறுவனின் படத்தை கிளிக் செய்து அவரது வலைப்பூவிற்கு செல்லுங்கள் அன்பர்களே)
இவரது பதிவில் சமூக அக்கறை கோண்டு எழுதிய
சைபர் க்ரைம் - ஒரு பார்வை என்ற பதிவை ஒரு cute boy cell phone பேசுவது போல் இருக்கின்ற படத்தை கிளிக் செய்து படியுங்கள்.... தோழர்களே!
------------------------------------------------------------------------------------------------------
 பதிவுலகில் வந்தேமாதரம் என்ற பெயர் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள்... வந்தேமாதரம் என்று சொன்னாலே தேசிய ஒருமைப்பாடு மேலோங்கி நமது அனைவரையும் ஒன்றினைக்கும்.... அது போல் பதிவுலகில் நம்மை ஒன்றினைக்க கணினி பற்றிய புதிய செய்திகளையும், வலைப்பூ பற்றிய செய்திகளையும் நமக்கு அறிமுக படுத்தி கற்று தரும் வல்லவர் தான் நமது நண்பர் சசி குமார் அவர்கள்...

 நமது பிளாக்கில் சில நேரம் வைரஸ் வந்து அட்டாக் ஆக வாய்ப்பிருக்கிறது....
உங்கள் பிளாக்கில் வைரஸ் உள்ளதா என கண்டறிய 
நண்பர் சசிகுமாரின் புகை படத்தை கிளிக் செய்து அவரது தளத்திற்கு சென்று கண்டறியுங்கள் நண்பர்களே.


==================================================================
இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாமல் வாழமுடியாது என்கிற சூழ்நிலை உருவாகிவிட்டது... அதுவும் call  செய்து பேசுகிறமோ இல்லையோ... தொடர்ந்து sms அனுப்பிக்கொண்டே இருப்போம்...ஆனால் நம்பர் பட்டன்களில் வேகமாக் டைப் செய்து அனுப்புவது என்பது செல்போனில் சிரமமான விசயம்..அதுவே கம்ப்யூட்டர் கீ போர்டு என்றால் மிக சுலபமாக வேகமாக டைப் செய்யலாமல்லவா... அதுவும் sms எத்தனை வேண்டுமானாலும் இலவசமாக அனுப்பி ஆனந்தபடலாம்.. மரியாதைக்குறிய பொன்மலர் அவர்கள். பொன்மலர் பக்கம் என்ற வலைப்பூவில்  கணினியிலிருந்து இலவசமாக sms அனுப்ப இலவச மென்போருள் என்ற 
பதிவில் way 2 sms என்ற மென்பொருளைப்பற்றி பகிர்ந்திருக்கிறார்...  அவர்களது படத்தை கிளிக் செய்து வலைப்பூவிற்கு சென்று டவுன்லோடு செய்து ஜமாயுங்கள் அன்பர்களே...
====================================================================


தொழில் நுட்பத்தில் சகலகலா வல்லவரான சகோதரர் பிரபு கிருஷ்ணா அவர்களது பலேபிரபு என்கிற வலைப்பூவில் ..வலைப்பூவை எப்படி சொந்த டொமைனாக மாற்றுவது என்று மொத்தம் நான்கு பதிவுகளை பகிர்ந்திருக்கிறார்...வாருங்கள் நண்பர்களே பலே பிரபு என்ற படத்தை கிளிக் செய்து அவரது வலைப்பூவிற்கு சென்று தெரிந்து கொள்வோம்


===================================================================


போட்டோ ஷாப் பற்றி அழகாக தெளிவாக எளிதாக பாசத்துடன் பதிவிட்டு வருபவர் தான் நம் அனைவருக்கும் பிடித்த சித்திரம் பேசுதடி வலைப்பூவிற்கு சொந்தகாரர் அன்பு தோழர் ஸ்ரீதர் அவர்கள் ...வாருங்கள் நண்பர்களே அவரது போட்டோவைக் கிளிக் செய்து போட்டோஷாப் பற்றி கற்று வருவோம்.

போட்டோஷாப்பில் அனிமேஷன் எஃபெக்ட் பற்றி சொல்லி கற்று தந்துகொண்டிருக்கிறார்... கற்று கலக்குவோம் அன்பு நெஞ்சங்களே

================================================================
நமது வலைப்பூவிற்கு படிக்கும் வரும் அன்பர்கள் கருத்துகளை இடும் பொழுது அதை இமேஜாக இட்டு செல்லலாம் என ஆசைப்படுவார்கள்...அவர்கள் ஆசைகள் நிறைவேற்ற..நமது நீச்சல்காரன் அவர்கள் எதிர்நீச்சல் என்ற வலைப்பூவில் பின்னூட்டத்தில் படங்கள் வேண்டுமா என்ற பதிவை நம்மோடு பகிர்ந்துள்ளார் வாருங்கள் நண்பர்களை அதை தெரிந்து நமது வலைப்பூவில் நிறுவி படிக்க வரும் நண்பர்கள் குஷியாக கருத்தக்களை வண்ணங்களாக , படங்களாக இட்டு செல்ல வழிவகுப்போம்.....

=======================================================================


 பதிவுலகில் போட்டோஷாப்பிற்கு மறுபெயர் என்றாலே வேலன் அண்ணனை தான் சொல்வார்கள் ...வேலுண்டு வினையில்லை என்பது போல் வேலன் அண்ணன் துணையிருக்க போட்டோஷாப் பற்றிய அனைத்து விசயங்களையும் கற்று வரலாம் வாருங்கள்.. எனது மாய உலகில் சிலைடு ஷோ போட்டோவில் விதவிதமான டிசைன்களில் போட்டோக்களை பார்த்து இருப்பீர்கள்... அது அன்பு வேலன் அண்ணனின் தளத்திலிருந்து தான் கற்று கொண்டது... வாருங்கள் அன்பர்களே அண்ணன் தளத்திற்கு சென்று போட்டோஷாப் கற்போம்.
போட்டோவைக் கிளிக் செய்து போட்டோஷாப்பிற்கு போவோமா


======================================================================

53 comments:

 1. மிக உபயோகமான தகவல்கள், அதற்கான வலைத்தளங்கள் என நல்ல அறிமுகங்கள் தந்துள்ள‌தற்கு அன்பான நன்றி ராஜேஷ்! மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வரிசைப்படி மரியாதை தந்து ஆசிரியர் பணியை மிகச் சிறப்பாகச் செய்து வ‌ருகிறீர்கள்! அறிமுகங்கள் பெறப்பட்டவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 2. அழகான அறிமுகங்கள்...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. நன்றி ராஜேஷ். மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 4. பயனுள்ள பதிவு நண்பா
  பல நுட்பமான தகவல்களுடன்

  தலைசிறந்த பதிவர்களின் அறிமுகமும் அருமை.

  ReplyDelete
 5. இன்று எனக்கொரு புதிய விஷயத்தைக் கற்றுத்தந்த குருவே,வணக்கம். அறிமுகம் செய்யப்பட்ட எல்லாக் குருக்களுக்கும் வணக்கம்.
  “ஆசார்ய தேவோ பவ”

  ReplyDelete
 6. அறிமுகம் செய்யப்பட்ட வலைப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. ராஜேஷ்,

  கணினி “குரு” -க்களை அறிமுகப் படுத்தி அசத்தியிருக்கின்றீகள்.

  புதிய வாசகர்களுக்கும், வலைப்பதிவர்களுக்கும் நிச்சயம் பயன் தரும் !

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. வலைச்சரத்தில் என்னையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி நண்பா!

  குரு-சிஷ்யன் என்றால் நம்மிடையே ஒருவித இடைவெளி வந்துவிடும். என்றும் நண்பனாகவே இருக்க விரும்புகிறேன்.

  மற்ற பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. கணினி குருக்கள் மட்டும் தானா.. கலக்குங்க நண்பா

  ReplyDelete
 10. மிகவும் உபயோகமான தகவல்கள்... இத்தனை நாள் தமிழ்மணத்தில் ஓட்டு போட்டவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாது என நினைத்திருந்தேன்... :(

  நல்ல அறிமுகங்கள்.... வாழ்த்துகள்

  ReplyDelete
 11. நல்ல பதிவு. விசயங்களை கற்ருக் கொடுப்பதும் தெளிவு செய்வதும் குருவின் கடமை என்பதை சொல்லிவிட்டீர்கள். குரு எனவுமே ஆசிரியர்கள் பற்றிய அறிமுகம் என்று நினைத்தேன். நல்ல அறிமுகம் ராஜேஸ். பொன்மலருடைய பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். பொறுப்பான வலைப்பூவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 12. நன்றி சகோ....

  இரண்டாம் முறையாக என் மற்றொரு வலைப்பூவை நீங்கள் அறிமுகம் செய்து உள்ளீர்கள்...

  மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. //தமிழ்மணம் ஓட்டு பட்டையில் யாரெல்லாம் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை பார்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.//

  இன்றுதான் இது தெரியும். மிக்க நன்றி. நீங்களும் கலக்குங்கள்.

  ReplyDelete
 14. நீஈஈஈஈளமான அறிமுகங்கள்..
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. மாயா.... பல விஷயங்களைச் சுருக்கமாகச் சொல்லிட்டீங்க... வாழ்த்துக்கள்.

  அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  நில்லுங்க வாறன்.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  ReplyDelete
 16. ஏன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொன்னேன் என மு.கிட்னி வேர்க் பண்ணியிருக்குமே:)), வாக்களித்தோரை எப்பூடிப் பிடிப்பதென தெளிவாச் சொல்லிட்டீங்க...

  ஆனா நான் முன்பும் கேட்ட கேள்வி, ஒவ்வொன்றிலும் எப்பூடி வாக்களிப்பது என்பதுக்கு என்னும் விளக்கம் கிடைக்கேல்லையே அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).

  முதலை... மாயாவைத் தேடிச்சு... எதுக்கும் மேலூருக்குக் குறிகாரனைக் கேட்டுப் பார்க்கச் சொல்லிட்டேன்:))

  ReplyDelete
 17. குருவிர்கோர் காணிக்கை
  இது ஒரு சிறந்த பாக்கியமே நண்பரே...
  சரியாக பயன்படுத்தி இருக்கிறீர்கள்.

  அறிமுகங்கள் அழகாக.......

  ReplyDelete
 18. மாதா, பிதா, குரு..... அடுத்து தெய்வமோ?....

  வாணாம் மாயா வாணாம்... :)) இதிலேயே ஒரு வாரம் முடிஞ்சிடப்போகுது அவ்வ்வ்வ்:)))..

  நான் ரொம்ப நல்ல பொண்ணு சிக்ஸ் வயசிலிருந்தே... இனியும் அப்படியே இருக்க விட்டிடோணும் ஓக்கை:)).

  சீயா மீயா.....வ்வ்வ்...

  ReplyDelete
 19. அசத்துகிறீர்கள்,அறிமுக்ம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. வணக்கம் மச்சி,,,

  இன்றைய பதிவு குரு பற்றிய அசத்தலான பகிர்வோடு,
  ஓட்டளிப்பு, மற்றும் பதிவுலகத் தொழில்நுட்ப வல்லுனர்களின் அறிமுகத்தினையும் தாங்கி வந்துள்ளது..

  அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. மனோ சாமிநாதன் said...
  மிக உபயோகமான தகவல்கள், அதற்கான வலைத்தளங்கள் என நல்ல அறிமுகங்கள் தந்துள்ள‌தற்கு அன்பான நன்றி ராஜேஷ்! மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வரிசைப்படி மரியாதை தந்து ஆசிரியர் பணியை மிகச் சிறப்பாகச் செய்து வ‌ருகிறீர்கள்! அறிமுகங்கள் பெறப்பட்டவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்!!//

  தங்களது கருத்துக்களுக்கும் வாழ்த்துக்கும் மனம்கனிந்த நன்றிகள்

  ReplyDelete
 22. சே.குமார் said...
  அழகான அறிமுகங்கள்...
  வாழ்த்துக்கள்.//

  நண்பரின் வாழ்த்துக்கு நன்றிகள்

  ReplyDelete
 23. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  பயனுள்ள அறிமுகங்கள்

  நன்றி நண்பா

  ReplyDelete
 24. வரவேற்கிறேன் தோழி..வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 25. முனைவர்.இரா.குணசீலன் said...
  பயனுள்ள பதிவு நண்பா
  பல நுட்பமான தகவல்களுடன்

  தலைசிறந்த பதிவர்களின் அறிமுகமும் அருமை.//

  வாங்க நண்பரே! கருத்துக்கு மனம்கனிந்த நன்றி

  ReplyDelete
 26. சென்னை பித்தன் said...
  இன்று எனக்கொரு புதிய விஷயத்தைக் கற்றுத்தந்த குருவே,வணக்கம். அறிமுகம் செய்யப்பட்ட எல்லாக் குருக்களுக்கும் வணக்கம்.
  “ஆசார்ய தேவோ பவ”//

  வணக்கம் அன்பரே! கருத்துக்கும் ஆசிர்வாதத்திற்கும் நன்றி

  ReplyDelete
 27. முனைவர்.இரா.குணசீலன் said...
  அறிமுகம் செய்யப்பட்ட வலைப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றி நண்பரே!

  ReplyDelete
 28. பெரிய மலைகளுக்கு நடுவே இந்தப் பொடியனையும் அறிமுகம் செய்தற்கு நன்றிகள்

  ReplyDelete
 29. சத்ரியன் said...
  ராஜேஷ்,

  கணினி “குரு” -க்களை அறிமுகப் படுத்தி அசத்தியிருக்கின்றீகள்.

  புதிய வாசகர்களுக்கும், வலைப்பதிவர்களுக்கும் நிச்சயம் பயன் தரும் !

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

  நண்பரே! தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனப்பூர்வமான நன்றி

  ReplyDelete
 30. Abdul Basith said...
  வலைச்சரத்தில் என்னையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி நண்பா!

  குரு-சிஷ்யன் என்றால் நம்மிடையே ஒருவித இடைவெளி வந்துவிடும். என்றும் நண்பனாகவே இருக்க விரும்புகிறேன்.

  மற்ற பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!//

  நண்பரின் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மனம்கனிந்த நன்றி

  ReplyDelete
 31. suryajeeva said...
  கணினி குருக்கள் மட்டும் தானா.. கலக்குங்க நண்பா//

  கணினி தொழில்நுட்ப சம்பந்தமாக பதிவும் அதைப்பற்றிய பதிவர்களை மட்டுமே அறிமுக படுத்த நினைத்தேன் நண்பரே! நீங்கள் எதிர்பார்த்த குருக்கள் நாளை அரங்கேற்றப்படுவார்கள்

  ReplyDelete
 32. வெங்கட் நாகராஜ் said...
  மிகவும் உபயோகமான தகவல்கள்... இத்தனை நாள் தமிழ்மணத்தில் ஓட்டு போட்டவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாது என நினைத்திருந்தேன்... :(

  நல்ல அறிமுகங்கள்.... வாழ்த்துகள்//

  நண்பரின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 33. சாகம்பரி said...
  நல்ல பதிவு. விசயங்களை கற்ருக் கொடுப்பதும் தெளிவு செய்வதும் குருவின் கடமை என்பதை சொல்லிவிட்டீர்கள். குரு எனவுமே ஆசிரியர்கள் பற்றிய அறிமுகம் என்று நினைத்தேன். நல்ல அறிமுகம் ராஜேஸ். பொன்மலருடைய பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். பொறுப்பான வலைப்பூவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.//

  வாங்க தங்களது கருத்துக்கு மனப்பூர்வமான நன்றி

  ReplyDelete
 34. Prabu Krishna said...
  நன்றி சகோ....

  இரண்டாம் முறையாக என் மற்றொரு வலைப்பூவை நீங்கள் அறிமுகம் செய்து உள்ளீர்கள்...

  மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.//

  வரவேற்கிறேன் நண்பா வாழ்த்துக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 35. Prabu Krishna said...
  //தமிழ்மணம் ஓட்டு பட்டையில் யாரெல்லாம் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை பார்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.//

  இன்றுதான் இது தெரியும். மிக்க நன்றி. நீங்களும் கலக்குங்கள்.//

  நல்லது நண்பா..வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 36. இந்திரா said...
  நீஈஈஈஈளமான அறிமுகங்கள்..
  வாழ்த்துக்கள்//

  தோழியின் வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றி

  ReplyDelete
 37. athira said...
  மாயா.... பல விஷயங்களைச் சுருக்கமாகச் சொல்லிட்டீங்க... வாழ்த்துக்கள்.

  அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  நில்லுங்க வாறன்.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).//

  வாழ்த்துகளுக்கு நன்றி ஆதிஸ்ஸ்ஸ் மியாவ்... நின்னுட்டுருக்கேன் வாங்கோ...

  ReplyDelete
 38. athira said...
  ஏன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொன்னேன் என மு.கிட்னி வேர்க் பண்ணியிருக்குமே:)), வாக்களித்தோரை எப்பூடிப் பிடிப்பதென தெளிவாச் சொல்லிட்டீங்க...

  ஆனா நான் முன்பும் கேட்ட கேள்வி, ஒவ்வொன்றிலும் எப்பூடி வாக்களிப்பது என்பதுக்கு என்னும் விளக்கம் கிடைக்கேல்லையே அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).

  முதலை... மாயாவைத் தேடிச்சு... எதுக்கும் மேலூருக்குக் குறிகாரனைக் கேட்டுப் பார்க்கச் சொல்லிட்டேன்:))
  //

  மியாவ் ஓட்டு போடுவது எப்படின்னு ஒரு பதிவ ரெடி பண்ணிர வேண்டியதான்....அவ்வ்வ்வ் முதலை தேடிச்சா... ஆஹா மேலுர் குறிகாரன் நம்ம இருக்குற எடத்த சரியா கனிச்சு சொல்றதுக்கு முன்னாடி ... அவனுக்கு கோட்டர் வாங்கி கொடுத்து மேலுர் குடிகாரனா மாத்திட வேண்டியதான்

  ReplyDelete
 39. மகேந்திரன் said...
  குருவிர்கோர் காணிக்கை
  இது ஒரு சிறந்த பாக்கியமே நண்பரே...
  சரியாக பயன்படுத்தி இருக்கிறீர்கள்.

  அறிமுகங்கள் அழகாக.......//

  கண்டிப்பாக நண்பரே... கருத்துக்கு மனம்கனிந்த நன்றி

  ReplyDelete
 40. athira said...
  மாதா, பிதா, குரு..... அடுத்து தெய்வமோ?....

  வாணாம் மாயா வாணாம்... :)) இதிலேயே ஒரு வாரம் முடிஞ்சிடப்போகுது அவ்வ்வ்வ்:)))..

  நான் ரொம்ப நல்ல பொண்ணு சிக்ஸ் வயசிலிருந்தே... இனியும் அப்படியே இருக்க விட்டிடோணும் ஓக்கை:)).

  சீயா மீயா.....வ்வ்வ்...//

  என்னப்பண்றது மீயா... கான்செப்ட தொட்டாச்சு ஃபினிசிங் கரெக்டா முடிச்சுடுவேன்னு நினைக்கிறேன் அன்பு நண்பர்கள் அறிமுகங்கோளோடு...அப்படியேல்லம்இருக்க விட முடியாதுங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 41. shanmugavel said...
  அசத்துகிறீர்கள்,அறிமுக்ம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 42. நிரூபன் said...
  வணக்கம் மச்சி,,,

  இன்றைய பதிவு குரு பற்றிய அசத்தலான பகிர்வோடு,
  ஓட்டளிப்பு, மற்றும் பதிவுலகத் தொழில்நுட்ப வல்லுனர்களின் அறிமுகத்தினையும் தாங்கி வந்துள்ளது..

  அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.//

  நீங்களும் ஒரு தொழில்நுட்ப பதிவர் தான் பாஸ்... அதை நன்றி கார்டில் தெரிவிச்சிருக்கேன் பாருங்க...வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றிகள்

  ReplyDelete
 43. நீச்சல்காரன் said...
  பெரிய மலைகளுக்கு நடுவே இந்தப் பொடியனையும் அறிமுகம் செய்தற்கு நன்றிகள்//

  நீங்களும் மலை தான் நண்பரே! வரவேற்கிறேன் நன்றி

  ReplyDelete
 44. அறிமுகத்திற்கு நன்றி...
  கணணி இங்கயே கற்று கொள்ளலாம்...
  நல்ல தகவல்கள்

  ReplyDelete
 45. அழகான பயனுள்ள அறிமுகங்கள்

  நன்றி சகோ

  ReplyDelete
 46. சின்னதூரல் said...
  அறிமுகத்திற்கு நன்றி...
  கணணி இங்கயே கற்று கொள்ளலாம்...
  நல்ல தகவல்கள்//

  இங்கயே கற்று கொள்ளலாம்... நன்றி

  ReplyDelete
 47. M.R said...
  அழகான பயனுள்ள அறிமுகங்கள்

  நன்றி சகோ//

  நன்றி சகோ

  ReplyDelete
 48. முதல் வரியை பார்ததும் சத்யராஜ் பட பாட்டுதான் நினைவுக்கு வந்துச்சி ..

  நமக்கும் குருவுக்கும் ஏக ராசி ஹி...ஹி... டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி :-))))

  அருமையான பதிவு வாழ்த்துக்கள் பாஸ் :-)))

  ReplyDelete
 49. அம்மா அப்பாவுக்கு பின்னர் தெய்வமாய் நாம் நினைத்து நன்றியுடன் வணங்க வேண்டியது குருவை தான் என்று ஆணித்தரமாக அழுத்தமாக சொல்லி இருக்கீங்க ராஜேஷ்..

  அதிலும் குருவை நாம் நினைவில் வைத்துக்கொள்ள அருமையாக குருகுலம் முதலில் தொடங்கி இன்றைய காலக்கட்டத்தில் நமக்கு அன்புடன் சொல்லி தரும் எல்லோரையுமே குரு ஸ்தானத்தில் வைத்து அன்புடன் நினைவு கூர்ந்தது அருமைப்பா...

  ஏன் குருவுக்கு இத்தனை முக்கியத்துவம் தருகிறோம் ? பிள்ளைகளை நல்லமுறையில் வளர்க்கும் பொறுப்பு தாய் தந்தையர்க்கு எத்தனை அதிகம் இருக்கோ அதே பொறுப்பு நம்மை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் உண்டு... என்றோ கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களை நாம் அன்புடன் நினைவு கூற வைத்த மிக அருமையான பகிர்வுப்பா.....

  அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் பகுதியில் சித்திரம் பேசுதடி ஸ்ரீதர், வேலன் இருவரையும் நான் அறிவேன் மிக அருமையான வலைப்பூ இருவருடையதும்.. இப்ப நீங்க அறிமுகப்படுத்திய இன்னும் பல நண்பர்களின் வலைப்பூக்களும் கண்டிப்பாக போய் பார்ப்பேன்...அதற்கான வாய்ப்பை நல்கியமைக்கு உங்களுக்கு என் அன்பு நன்றிகள்பா...

  சிறப்புடன் குருவை பகிர்ந்தமைக்கு அன்பு வாழ்த்துகள்பா..

  அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்....

  ReplyDelete
 50. ஜெய்லானி said...
  முதல் வரியை பார்ததும் சத்யராஜ் பட பாட்டுதான் நினைவுக்கு வந்துச்சி ..

  நமக்கும் குருவுக்கும் ஏக ராசி ஹி...ஹி... டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி :-))))

  அருமையான பதிவு வாழ்த்துக்கள் பாஸ் :-)))//

  மிக்க நன்றி பாஸ் :-)

  ReplyDelete
 51. மஞ்சுபாஷிணி said...
  அம்மா அப்பாவுக்கு பின்னர் தெய்வமாய் நாம் நினைத்து நன்றியுடன் வணங்க வேண்டியது குருவை தான் என்று ஆணித்தரமாக அழுத்தமாக சொல்லி இருக்கீங்க ராஜேஷ்..

  அதிலும் குருவை நாம் நினைவில் வைத்துக்கொள்ள அருமையாக குருகுலம் முதலில் தொடங்கி இன்றைய காலக்கட்டத்தில் நமக்கு அன்புடன் சொல்லி தரும் எல்லோரையுமே குரு ஸ்தானத்தில் வைத்து அன்புடன் நினைவு கூர்ந்தது அருமைப்பா...

  ஏன் குருவுக்கு இத்தனை முக்கியத்துவம் தருகிறோம் ? பிள்ளைகளை நல்லமுறையில் வளர்க்கும் பொறுப்பு தாய் தந்தையர்க்கு எத்தனை அதிகம் இருக்கோ அதே பொறுப்பு நம்மை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் உண்டு... என்றோ கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களை நாம் அன்புடன் நினைவு கூற வைத்த மிக அருமையான பகிர்வுப்பா.....

  அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் பகுதியில் சித்திரம் பேசுதடி ஸ்ரீதர், வேலன் இருவரையும் நான் அறிவேன் மிக அருமையான வலைப்பூ இருவருடையதும்.. இப்ப நீங்க அறிமுகப்படுத்திய இன்னும் பல நண்பர்களின் வலைப்பூக்களும் கண்டிப்பாக போய் பார்ப்பேன்...அதற்கான வாய்ப்பை நல்கியமைக்கு உங்களுக்கு என் அன்பு நன்றிகள்பா...

  சிறப்புடன் குருவை பகிர்ந்தமைக்கு அன்பு வாழ்த்துகள்பா..

  அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்....//

  தங்களது ஒவ்வொரு விரிவான பின்னூட்டத்தக்கும் இதயம் கனிந்த நன்றிகள் மேடம்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது